Published:Updated:

மலர்ந்த முகமே | குறுங்கதை

Representational Image ( iStock )

இரண்டு மணி நேரம் கழித்துத் திரும்பி வந்தவள் அப்பா அந்த ப்ளஸ் டூ படிச்ச ரவியையே பார்த்துடுங்கப்பா..” என்றாள் அகிலா..

மலர்ந்த முகமே | குறுங்கதை

இரண்டு மணி நேரம் கழித்துத் திரும்பி வந்தவள் அப்பா அந்த ப்ளஸ் டூ படிச்ச ரவியையே பார்த்துடுங்கப்பா..” என்றாள் அகிலா..

Published:Updated:
Representational Image ( iStock )

அகிலாவுக்கு வந்த ஜாதகங்களில் இரண்டு ஜாதகங்கள் பொருந்தியிருந்தன. ஒருவர் ரவி, மற்றவர் ரூபன்.

ரவி ப்ளஸ் டூ, ரூபன் எம் பி ஏ. இருவரும் இருவேறு கடைகளில் சேல்ஸ் மேன் வேலை பார்க்கிறார்கள்.

“ரெண்டு பேருடைய புகைப்படங்களைப் பாத்த்துட்டு முடிவு சொல்றியா?” என்று கேட்டார் அப்பா.

புகைப்படங்களைப் பார்த்தாள், மனதில் நிறுத்திக் கொண்டாள்.. “கொஞ்சம் அவசரமா வெளீல போகணும் வந்து சொல்றேனே..” என்று தன் தம்பியோடு அவெஞ்சரில் அவசரமாகப் பயணித்தாள்.

இரண்டு மணி நேரம் கழித்துத் திரும்பி வந்தவள் அப்பா அந்த ப்ளஸ் டூ படிச்ச ரவியையே பார்த்துடுங்கப்பா..” என்றாள் அகிலா.

“எம் ஏ படிச்ச உனக்கு எம் பி ஏ படிச்சவர் பொருத்தமா இருப்பாரேடீ..” என்று கருத்து சொன்னாள் அம்மா.

Representational Image
Representational Image
Photo by Mayank Shastri on Unsplash

“படிப்பு முக்கியமில்லைம்மா. பண்புதான் குடும்ப வாழ்க்கைக்கு முக்கியம். தம்பியோட இரண்டு பேர் வேலை பார்க்கற கடைக்கும் போனேன்ப்பா.!.”

"....................................”

அதை எடுங்க.. இதை எடுங்கனு.. படுத்தி எடுத்தேன். இது சரியா வருமா? இது ஒரிஜினலா? இது போலியா..? புது ஸ்டாக்கா..? என்றெல்லாம் ஏகப்பட்ட கேள்விகள் கேட்டு தொந்தரவு பண்ணினேன்.”

“பொருள் வாங்க வந்தீங்களா? பொழுது போக்க வந்தீங்களானு கடுப்படிச்சிது எம் பி ஏ.

எல்லாத்துக்கும் பொறுப்பாவும், பொறுமையாவும் மலர்ந்த முகத்தோடும் பதில் சொல்லியது ப்ளஸ் டூ”

மலர்ந்த முகமே வாழ்க்கையின் இன்பம் என்பதை சொல்லிச் சொல்லி வளர்த்த அகிலாவின் முடிவை எண்ணி முகம் மலர்ந்தனர் பெற்றோர்களும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism