Published:Updated:

குறுகுறு விஞ்ஞானி!

Representational Image

அடங்கொப்பமவனே! அவைங்க ரெண்டு பேரும் அண்ணன் தம்பி அடிச்சிக்கிறாய்ங்க அப்புறம் சேர்ந்துப்பாய்ங்க, இவ என்னனா சிறுசுங்க மனசுல நஞ்சை விதைக்கிறாளே... டேய் அதெல்லாம் ராஜு கூட விளையாண்டா ஆனந்தி ஒன்னும் சொல்லமாட்டா போ...

குறுகுறு விஞ்ஞானி!

அடங்கொப்பமவனே! அவைங்க ரெண்டு பேரும் அண்ணன் தம்பி அடிச்சிக்கிறாய்ங்க அப்புறம் சேர்ந்துப்பாய்ங்க, இவ என்னனா சிறுசுங்க மனசுல நஞ்சை விதைக்கிறாளே... டேய் அதெல்லாம் ராஜு கூட விளையாண்டா ஆனந்தி ஒன்னும் சொல்லமாட்டா போ...

Published:Updated:
Representational Image

என்னடா இது ஞாயித்துக்கிழமை!

ஞாயித்துக் கிழமை இப்படி எல்லாம் மோசமா போகக் கூடாதே. கை வேற பரபரனு ஊறுதே என்ன பண்ணலாம்..

அவ்வழியே இடுப்பில் குடத்தை தாங்கிக் கொண்டு சலக் சலக் கென கொலுசின் ஓசையுடன் ஒருவர் நடந்து வர, அந்த கால்களின் ஓசையை முன்பே அறிந்தவனாய் கண்களை மட்டும் மேலே உயர்த்தி பார்த்தான்...

டேய் பாலாஜி! என்னடா வாசல்ல உட்கார்ந்து இப்படி கன்னத்துல கை வைச்சுட்டு யோசிச்சுட்டு இருக்க...

அப்போ வீட்டுக்குள்ள போயி கன்னத்துல கை வைச்சு உட்காரவா அத்தே...

இதெல்லாம் எங்க உருப்பட போகுது! ஏழு வயசுல இதுக்கு வாய பாரு.. எங்கடா உங்கொப்பன்...

அப்பா உள்ள தூங்கிட்டு இருக்காங்க அத்தே...

சரி சரி ஆனந்தி எங்கடா ?

அம்மா ஊருக்கு போயிருக்காங்க, பெரிய அண்ணன் கடைல இருக்கான், சின்ன அண்ணன் விளையாட போயிட்டான்... போதுமா அத்தே? உங்களுக்கு இடுப்பு வலிக்க போகுது போங்கத்தே...

டேய் பேப்புடுக்கு பெரியசாமி, ஏதோ அமைதியா யோசிச்சுட்டு இருக்கியே என்னனு கேட்க வந்தா, என்னடா உங்கொப்பன் மாதிரியே பேசி என்னைய விரட்டிட்டு இருக்க... எங்கடா உன் தம்பி கடும்புடுக்கு கந்தசாமி... அவனை கூட்டிட்டு வந்து விளையாட வேண்டிய தானே...

இல்ல இல்ல அத்தே அம்மா ராஜு (க.பு.கந்தசாமி) வீட்டுக்கு போகக் கூடாதுனு சொல்லிருக்கு... எங்கப்பா சித்தப்பா கூட சண்டை போட்டுட்டாங்களாம், அதுனால நான் அங்க போகல...

Representational Image
Representational Image

அடங்கொப்பமவனே! அவைங்க ரெண்டு பேரும் அண்ணன் தம்பி அடிச்சிக்கிறாய்ங்க அப்புறம் சேர்ந்துப்பாய்ங்க, இவ என்னனா சிறுசுங்க மனசுல நஞ்சை விதைக்கிறாளே... டேய் அதெல்லாம் ராஜு கூட விளையாண்டா ஆனந்தி ஒன்னும் சொல்லமாட்டா போ...

நீங்க முதல்ல கிளம்புங்க, அப்புறம் எங்கம்மா வந்து விளையாடுறத பார்த்தா நீங்களா அதுட்ட அடிவாங்குவீங்க... சும்மா மொக்க போட்டுட்டு...

என்னது மொக்க போடுறேனா? அடிங்கொப்பத்தா மவனே, வந்தேன் பேப்புடுக்க அத்து கைல குடுத்துறுவேன்...

ச்சீ ச்சீ அத்தே தெருவுல நின்னு என்ன பேசுறீங்க, மாமா தேடுவாறு போங்க மொதல்ல...

ஆமா உங்க மாமன் தேடி கிழிச்சாரு... என்னமோ ராக்கெட் விடப்போற மாதிரில பயபுள்ள ரொம்ப அலுத்துக்குது என்றவாறே நடையைக் கட்டினாள் அத்தை சீதா...

அதை காதில் வாங்கியவன், ஆமா ஆமாத்தே ராக்கெட் தான் விடப்போறேன். அதுல உங்களையும் கட்டி வச்சு விடுறேன் பாருங்க என்றான் பாலாஜி...

போடா போக்கத்த பயலே என்று சீதா முணுமுணுத்த சத்தம் தொலைவில் இருந்து அவனுக்கு கேட்டது...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மீண்டும் என்ன செய்யலாம் என்ற யோசனையில் பாலாஜி அமர, “க்வக் க்வக் கக்வவாக்” என்ற கோழி சத்தம் வர, அடடா ‘தம்பி’ முட்டை எதுவும் போட்டிருக்கானா என்று எழுந்து வீட்டின் எதிரே அமைந்திருக்கும் பெரியப்பாவின் மாட்டுத் தொழுவத்திற்குள் நுழைந்தான் பாலாஜி..

இவன் வேலியைத் திறந்ததும் வைக்கோலில் இருந்து கீழே பறந்தது கோழி. மெதுவாக வைக்கோலை களைத்து உள்ளே பார்த்தான். சூரிய ஒளியில் பளிச்சென்று சிரித்தது முட்டை... முட்டையை மெதுவாய் கையில் எடுத்தான் பாலாஜி... சூப்பர் டா தம்பி சூப்பர்.. எப்பவும் முட்டை போட்டா இப்படித் தான் அண்ணனை கூப்பிடனும் சரியா என்று கோழியுடன் பேசிக் கொண்டே முட்டையை எடுத்து டிரவுசர் பாக்கெட்டினுள் போட்டுக் கொண்டு வீட்டிற்கு சென்றான்..

வழியில் காலில் ஏதோ ஒன்று தட்டுப்படவே என்னவென்று அதை எடுத்துப் பார்த்தான்.

Representational Image
Representational Image

பச்சை நிற அட்டையில் ஆங்காங்கே உருளை வடிவில் சிறு சிறு இணைப்புகளும், வரிசையாக சீரியல் பல்ப் போன்ற அமைப்பும் மேலும் இரண்டு வயரும் இருந்தது அதில்.

இது என்ன போர்டா இருக்கும் என்று கையில் எடுத்து சுற்றும் முற்றும் அதைத் திருப்பி பார்த்துக் கொண்டே யோசித்தான்... சரி நமக்கும் இன்னைக்கு போர் அடிக்குதே... இதை வச்சு எதாச்சும் டெஸ்ட் பண்ணலாம் என்று அதை மற்றொரு பாக்கெட்டில் வைத்துக் கொண்டு வீட்டிற்கு புறப்பட்டான்...

வீட்டிற்குள் போனவன் முதலில் அடுப்படியினுள் போய் அரிசி பக்கெட்டை திறந்து முட்டையை உள்ளே வைத்தான். அப்பாடா இன்னைக்கு ஒரு முட்டை தோசை தேரும் என்று மனசுக்குள் பேசிக் கொண்டே ஹாலில் படுத்திருந்த தன் தந்தையை மிதித்து விடாமல் மெதுவாகத் தாண்டி அந்த புறம் சென்றான். கீழே அமர்ந்து அந்த போர்டை எடுத்தான்.

இரண்டு வயரையும் ஒரு ஒரு கையில் பிடித்துக் கொண்டு அதன் நுனியைப் பார்த்தான். ஒன்றில் செம்புக் கம்பி வெளியே தெரிந்தது, மற்றொன்றில் சரியாக வெளியில் தெரியவில்லை. உடனே பல்லால் கடித்து வயரின் மேலுறையை கிழித்து செம்புக் கம்பியை நன்றாக விரலால் முடுக்கி விட்டான். சரி மற்றொரு வயரிலும் சிறிதளவே செம்புக் கம்பி வெளியில் தெரிகிறதே என்று, அதையும் நன்றாக செம்புக் கம்பி வெளியே தெரியுமாறு தயார் செய்தான்.

தந்தை விழித்துவிடாதவாறு மெதுவாய் நடந்து தொலைக்காட்சி அருகில் சென்றான். முதலில் தொலைக்காட்சி இணைப்பை ஸ்விட்ச் போர்டில் இருந்து மெதுவாகக் கழட்டி அதைப் பெட்டியின் மேலே வைத்தான்.

பிறகு மெதுவாக பிளக் பாயிண்ட்டின் உள்ளே ஒரு ஓட்டையினுள் ஒரு வயரையும், மற்றொரு ஓட்டையினுள் இன்னொரு வயரையும் திணித்து அந்த போர்ட்டை சற்று சாய்வாய் தொங்குமாறு செய்தான். ஒரு அடி மெதுவாய் பின்னே சென்று தந்தையின் கால் மீது அவன் கால் படாதவாறு நின்றான். ஸ்விட்சை போடலாமா? வேண்டாமா? போடலாமா? வேண்டாமா என்று யோசித்துக் கொண்டே ஸ்விட்ச் அருகில் விரலை வைத்துக் கொண்டு கை நடுங்கிக் கொண்டிருந்தான்.

Representational Image
Representational Image

விக்ரம் பட ட்ரெயிலரில் ஆண்டவர் வசனம் போல் எங்கிருந்து அவனுக்கு தைரியம் வந்ததோ தெரியவில்லை “த்தா பார்த்துக்கலாம்” என்று ஸ்விட்ச் ஐ அழுத்த அடுத்த நொடி சட சடவென தீப்பொறி தெறித்து பட் பட் என்ற வெடிக்கும் சத்தம் வந்தது.

உடனே தந்தை பதறி எழ, சுதாரித்துக் கொண்ட பாலாஜி தந்தையின் கால்களைத் தாண்டி ஒரே ஓட்டமாய் வீட்டை விட்டு வெளியேறி ஓட, தூரத்தில் இருந்து ஒரு சத்தம்...

“புது வருஷம் அதுவுமா பயபுள்ள என்ன பண்ணுது பாரு... நல்லா புள்ள பெத்துறுக்கா உங்க ஆத்தா.. ''

சத்தத்தை காதில் வாங்கியும் வாங்காதவாறும் சிரித்துக் கொண்டே அங்கிருந்து ஓட்டமெடுத்து தெருவின் முக்கில் போய் நின்று கொண்டு, தந்தை வெளியே வருகிறாரா இல்லையா என்று நோட்டமிட்டார் விஞ்ஞானி...

இப்படிக்கு மகிழ்வுடன்,

சசிக்குமார் ரெத்தினம்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.