வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
சித்ரா, அந்த மைதிலி வீட்டுக்குப் போகணும்னு சொன்னதிலிருந்தே ஒரு மாதிரியாக இருந்தாள். ‘என்னனு?’ கேட்டான் விஸ்வநாதன்.
‘நமக்கெல்லாம் என்ன குழந்தைகளே பொறக்கலையா?! இல்லை, பிறந்த பச்சைக் குழந்தைகளிடம் எப்படி நடந்துக்கணும் நமக்குத் தெரியாதா என்ன?!’ என்றாள் கொஞ்சம் கேவலுடன்.
‘புரியும்படிதான் சொல்லேன்!’ என்றான் விஸ்வம்.
சித்ரா சொல்லத் தொடங்கினாள்….
‘அவள், அதான் அந்த மைதிலியைப் பாருங்க, என்னமோ புதுசா கொழந்தை பெத்துட்டாளாம்! பிலுக்கிக்கிறா…!’ எரிந்து விழுந்தாள் முழுசா விவரம் சொல்லாமல்.
‘ஏய்..! இப்ப விவரமாச் சொல்லப் போறயா இல்லையா? விசு, விஸ்வரூபம் எடுக்கப் போனான்.

‘இல்லை, அவ, ‘எப்படி,ஸ்டேடஸ் வச்சிருக்கா பாருங்க,’ காட்டினாள்…!
``என் குழந்தையைப் பார்க்க வருகிறவர்களுக்கான சில அன்புச் சட்டங்கள்…!
’’என் குழந்தையைத் தூக்கணும்னு நினைக்காதீங்க!, கேக்காதீங்க!
என் குழந்தையிடமிருந்து விலகியே இருங்கள்.
முதலில் கைகளைச் சுத்தமாக சோப்புப்போட்டு கழுவுங்கள்.
உங்களுக்கு பிடிச்சிருக்குனு ‘செண்ட்’ போன்ற வாசனை திரவியங்களை அடித்துக் கொண்டு குழந்தை அருகே வராதீர்கள்!
குழந்தையை பசிக்கவிட்டு, அதிக நேரம் உடனிருக்காதீர்கள்.
தேவையற்ற ஆலோசனை அறிவுரைகளைத் தராதீர்கள்.
குழந்தையை கண்டிப்பாக முத்தமிடாதீர்கள்.
எங்கள் அனுமதியில்லாமல் போட்டோ எடுக்காதீர்கள்!
குறைந்த நேரமே இருங்கள்! விரைந்து வீடு திரும்புங்கள்!
முதலிலேயே ஃபோன் பண்ணிக் கேட்டுவிட்டு, வாருங்கள். கேட்காமல், திடுதிப்பென்று வந்து விடாதீர்கள்’’
இவ்வளவும் இருந்த்து வாட்ஸாப்பில்…!
இப்படியாங்க வாட்ஸாப்பில் ஸ்டேட்டஸ் வைப்பாங்க…?
குழந்தையைப் போய்ப் பார்க்கணும்கற ஆசையையே கெடுத்துடுவா போலிருக்கே?! கொஞ்சம் கூட நாகரீகமில்லாம அநாகரீகமா இதென்ன ஸ்டேட்டஸ்..??! பொருமினாள் சித்ரா.!

இப்போது நன்றாகப் புரிந்தது வார்த்தையால் நேரில் சொல்ல முடியாததை வாட்ஸாப்பால் சொல்லியிருக்காள் மைதிலி!.
எல்லாரும் இப்படி நினைப்பது இயற்கைதான். குழந்தையைப் பார்க்கப் போன இடத்தில், பார்க்கப் போனவங்களைபார்த்து, மூஞ்சியைச் சுளிச்சா அப்ப, நமக்கு எப்படி இருக்கும்.?!? எரிச்சல் வராதா? ஏண்டா இவ வீட்டுக்குப் போனோம்னு நெனைக்காதா மனசு?! உறவை முறிச்சுப் போட உக்கிரம் தலை தூக்காதா? அதை எல்லாம் இந்த வாட்ஸாப் தவிர்க்கும்தான்., யோசித்தால், இவை நிச்சயம் நியாயமென்று புரியும்!

எல்லாத்துக்கும் மேலே, இப்ப, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளில் மிண்டும் கொரோனா தலைதூக்குதாமே? எச்சரிக்கை வேண்டாமா?!
எரிச்சலா இருக்கறதைவிட, எச்சரிக்கையா இருக்கலாமேன்னுதான் முன்னெச்சரிக்கையா ஸ்டேட்டஸ் வச்சிருக்கா.. பாராட்டுவியா அதை விட்டுட்டுப் புலம்பறயே..’
உனக்கும் குழந்தை பிறந்திருந்தப்போ இதெல்லாம் நீயும் சொன்னவதானே?! என்றான் விஸ்வம்.
ஓருவிஷயம், ஒத்தைக் குழந்தையா இருந்தாலே இத்தனை எச்சரிக்கை இன்னைக்குத் தேவைப்படுதே.. சில இடங்களில் ரெட்டைக் குழந்தைகள் பிறந்துடுதே.. அவற்றைப் பெற்றவள் நிலையையும் அந்தப் பிள்ளைகள் நிலையையும் கொஞ்சம் நினைச்சுப் பாரு!
நாம எல்லாருமே வாட்ச் கட்டியிருக்கோம்., உன் வாட்ச் காடும் மணி நிமிடம் , செகண்ட் எல்லாம் அப்படியே என்னுடைய வாட்ச் காட்டாது, கொஞ்சம் கொஞ்சம் நிமிட, செகண்டுகள் மாறுபடும். அதுக்காக உன் வாட்ச் தப்பு! என்னுடையதுதான் கரெக்ட்டுனு சொல்றது எப்படி நியாயமில்லையோ அதுபோலத்தான் இதுவும்.

உன் வாட்ச் நேரம் உனக்குக் கரெக்ட்! என் வாட்ச் நேரம் எனக்குக் கரெக்ட். அவ்வளவுதான். விட்டுத்தள்ளு! பொதுவா மணி மாறாது! அதுமாதிரிதான் இதுவும். என்றதும் அவள் அமைதியானாள்.
விஸ்வத்திற்கு நிம்மதி வந்தது. ஒவொருவருக்கும் ஒரு கருத்து.. சொல்லும் முறை மாறலாம். சொல்லும் செய்தி ஒண்ணுதான்!
-வளர்கவி, கோவை
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.