வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
லொக்கு லொக்கு என்று இரும்பி கொண்டு சுவாமிநாதன் மாமா தனது அறையில். யாரையும் அழைக்கும் சக்திகூட உடலிலும் குரலிலும் இல்லாமல் படுத்திருந்தார். இரண்டு பிள்ளைகள், மருமகள்கள் இருந்தும் அந்த அறையை போய் அடிக்கடி பார்ப்பதில்லை.
சுவாமிநாதன் மாமாவின் மனைவி நான்கு வருடங்களுக்கு முன்பு இதயநோய் காரணமாக இறந்து விட்டார். இருவரும் அந்த காலத்தில் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இருவரும் எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்வார்கள் மரணத்தை தவிர.

சுவாமிநாதன் மாமா பேச ஆரம்பித்தால் நிறுத்தவே மாட்டார், கொஞ்சம் லொட லொட டைப். கல்பனா மாமி இறந்தத்தில் இருந்து யாரிடமும் அவ்வளவாக பேசுவதில்லை. மிகவும் அமைதியாகிவிட்டார்.
கல்பனா மாமியுடன் வாழ்ந்த நாற்பத்தி இரண்டு வருடங்களை மனதிற்குள்ளே அசைபோட்டுக்கொண்டு காலத்தை ஒட்டி வருகிறார். சுவாமிநாதன் மாமாவின் பிள்ளைகள் அவர்கள் வேலையை பார்த்து கொண்டு, காலை அலுவலகம் சென்றால் இரவுதான் திரும்புவார்கள். அவர்களது மனைவிகளும் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்கிறார்கள்.
சுவாமிநாதன் மாமா ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். அரசு பணியிலிருந்து ஒய்வு பெற்றவர். அவருக்கென்று சொந்தமாக இருப்பது இப்போது வசிக்கும் வீடுதான். வியர்வையை சிந்தி சொந்த உழைப்பில் கட்டியது.
இரண்டு பிள்ளைகளும் கூட்டு குடும்பமாக இந்த வீட்டில்தான் வசிக்கிறார்கள். கல்பனா மாமி இருந்தவரை ,சுவாமிநாதன் மாமாவிற்கு காலையில் இருந்து இரவு படுக்க போகும்வரை என்ன தேவையோ எல்லாமே கேட்காமலே கிடைக்கும். இப்போது காபி கேட்டாலும் ஒருமணி நேரம் கழித்துதான் வரும். வீட்டிலே ஒரு வயதான ஜீவன் இருப்பதே அவர்களுக்கு மறந்தது போல.

பசித்தால் கூட அவர்கள் கொடுக்கும் போதுதான் சாப்பிட வேண்டிய நிலைமை. வருகின்ற பென்ஷன் கூட மகன்கள் எடுத்து கொள்கிறார்கள்.
சுவாமிநாதன் மாமா இன்றும் காதலித்து கொண்டிருப்பது கல்பனா மாமியைதான். தினமும் சுவாமிநாதன் மாமா கனவில் கல்பனா மாமி வந்து அவருடன் பேசிகொண்டுருப்பதாய் சொல்லுவார். அவருடைய நண்பரிடத்தில் அவள் இருந்தவரை என்னையும் சேர்த்து பார்த்துக்கொள்வாள், இப்போது என்னையே என்னால் பார்த்துக்கொள்ள முடியவில்லை என்று ஏக்கத்தோடு சொல்வதுண்டு.
ஒன்று நீ போகும்போதே என்னையும் கூட்டிக்கொண்டு போயிருக்க வேண்டும். இல்லை நான் முதலில் சென்றிருக்க வேண்டும். இரண்டும் இல்லாமல் நடைபிணமாய் ஒரு வாழ்க்கை என்று தனது மன குமுறலை சொல்லுவார் தனது பால்ய நண்பன் சேதுவிடம்.

ஒரு நாள் மகன்கள், மருமகள்கள் வேலைக்கு சென்று விட்டனர். பேரப்பிள்ளைகளும் பள்ளிக்கு சென்று விட, அவர் மட்டும் எப்போதும்போல தனியாக வீட்டில் இருந்தார். படுக்கையில் படுத்திருந்த சுவாமிநாதன் மாமா திடீரென்று எழுந்து அமர்ந்தபடி உட்கார்ந்தார். முகத்திலே அப்படி ஒரு ஆனந்தம். "வந்து விட்டாயா" "வந்து விட்டாயா" என்று கேட்டப்படியே எழுந்திருக்க முயற்சித்தார்.
கனவிலே வந்தது வேறு யாருமில்லை அவரது மனைவி. இனி நீங்கள் தனியாக இங்கே அவஸ்தை பட வேண்டாம். என்னிடம் வந்து விடுங்கள் என கல்பனா மாமி சொல்வதுபோல சுவாமிநாதன் மாமாவுக்கு உள்மனது சொல்லி இருக்கும் போல.
குழந்தைகள் சுற்றுலா போகலாம் என்று சொன்னால் எப்படி சந்தோஷப்படுவார்களோ, அதே சந்தோஷம் சுவாமிநாதன் மாமாவின் முகத்திலும் தெரிந்தது. தன் கல்பனாவை பார்க்கப்போகிறோம் என்ற சந்தோஷம்தான் அது.

மெதுவாக எழுந்து நடக்க முடியாமல் நடந்து சாமியறைக்கு சென்று ஏதோ வேண்டிக்கொண்டார். பின்பு ஒரு பெட்டியை திறந்து அதிலே இருந்த தன் மனைவி போட்டோவை எடுத்து பார்த்துக்கொண்டே இருந்தார். கண்களின் வழியே கொஞ்சம் கண்ணீர் கசிய, அங்கிருந்து அவருடைய அறைக்கு சென்று படுத்துக்கொண்டார்.
மாலையில் அனைவரும் வீட்டுக்கு வந்து அவரவர் வேலையை பார்த்துக்கொண்டிருக்க, சுவாமிநாதன் மாமாவின் அறை நிசப்பதமாக இருந்தது. மருமகள் சாப்பாடு கொடுக்க உள்ளே சென்று ஒரே கூச்சல் போட்டாள். "சீக்கிரம் வாங்க" "சீக்கிரம் வாங்கனு". எல்லாரும் ஓடிப்போய் பார்க்க சுவாமிநாதன் உயிர் பிரிந்திருந்தது. முகத்தில் புன்னகையுடன், அவர் நெஞ்சில் கல்பனா போட்டோவை வைத்துக்கொண்டு, உயிர் பிரியும்போதும் சேர்ந்தே இருந்தாள் கல்பனா மாமி.
****
அன்புடன் 🙏
ஸ்ரீராம் பாலமோகன்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.