Published:Updated:

உதவிக்கு வந்தவன்! | சிறுகதை | My Vikatan

Representational Image

எத்தனையோ பேரை நான் அலட்சியப்படுத்தியிருக்கிறேன். பணத்திமிரில் வார்த்தைகளை வீசியிருக்கிறேன். எளியவர்கள் மனம் நொந்து போவதை வேடிக்கை பார்த்திருக்கிறேன். எனக்கே இப்படி ஒரு நிலைவரும் என்று எதிர்பார்க்கவில்லையே!..

உதவிக்கு வந்தவன்! | சிறுகதை | My Vikatan

எத்தனையோ பேரை நான் அலட்சியப்படுத்தியிருக்கிறேன். பணத்திமிரில் வார்த்தைகளை வீசியிருக்கிறேன். எளியவர்கள் மனம் நொந்து போவதை வேடிக்கை பார்த்திருக்கிறேன். எனக்கே இப்படி ஒரு நிலைவரும் என்று எதிர்பார்க்கவில்லையே!..

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

திருச்சி நெடுஞ்சாலையில் வேகமாக வந்து கிளைச் சாலையில் திரும்பிய அந்த கார் சட்டென்று ஒரு குலுக்கலுடன் நின்றது.

தனது செல்லில் சுவாரசியமாக பேசிக்கொண்டு வந்த காவ்யா அதிர்வில் ஃபோனை நழுவ விட்டாள்.

'என்ன ஆச்சு! ஏன் வண்டியை நிறுத்தினே?' டிரைவரை பார்த்து கேட்டுக் கொண்டே குனிந்து செல்லை எடுத்தாள்.

'காரில் ஏதோ பிரச்சினை. நகரமாட்டேங்குதும்மா'.

பயத்துடன் சொன்ன கணேசன் மீண்டும் மீண்டும் ஸ்டார்ட் செய்ய முயற்சி செய்தார்.

'அதுதான் ஓடமாட்டேங்குதே !.செல்லை எடுத்து மெக்கானிக்கை கூப்பிட வேண்டியதுதானே !'

சிடுசிடுத்தாள் அவள்.'செல்லை எடுத்து வர மறந்துட்டேன் மேடம் .'

தயங்கியபடியே வார்த்தைகளை உதிர்த்தார் அவர்.

'எப்பவும் உங்களோட இது ஒரு தொல்லை', என்றபடியே தன் செல்லில் முயற்சி செய்த காவ்யா வெகுவாக அதிர்ந்தாள். அவள் செல்லும் சுத்தமாக இணைப்பை தொலைத்திருந்தது.

திகைப்புடன் காரின் ஜன்னலை இறக்கி வெளியே பார்த்தாள் . சரியாக ஆள் நடமாட்டமே இல்லாத இடத்தில் கார் நின்றிருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக சென்ற ஆட்டோக்களை தவிர வேறு எதுவும் தென்படவில்லை. மருந்துக்கு கூட கடைகள் இல்லாத இடம்.

அவளுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. நேரம் தான் போனதே தவிர ஒன்றும் பயனில்லாமல் போகவே காரை விட்டு கீழே இறங்கினாள்.

வழியில் வரும் வண்டிகள் எதையாவது நிறுத்தி உதவி கேட்கலாம் என்று முயற்சித்தவளுக்கு நிற்காமல் போன வாகனங்களை பார்த்து அயர்வாக வந்தது.

கூடவே ஒன்றுக்கும் பயனில்லாமல் நிற்கும் கணேசனை பார்த்து மேலும் எரிச்சலானாள் அவள்.

இதற்கு முன் இருந்த டிரைவர் சௌந்தர் சாமர்த்தியமானவன். கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் அவர்களிடம் பணி புரிந்திருக்கிறான். ஒரு நாள் கூட இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டதில்லை .

வண்டி அப்படி ஒரு கண்டிஷனில் வைத்திருப்பான் . கொஞ்சம் மெகானிசமும் தெரியும். இக்கட்டில் நிற்க வைத்து பார்க்கவே மாட்டான். இவனும் இருக்கின்றானே என்று மனதுக்குள் சலித்துக் கொண்டாள்.

கணவன் படித்து படித்து சொல்லியும் அடம் பிடித்து அவனை நிறுத்தியது மனதில் உறுத்தியது.

எத்தனை முறை சொன்னான் அவன்.

'அவங்க தங்களோட கஷ்டத்தை தீர்த்துக்க வேலைக்கு வராங்க. நம்ம இஷ்டத்துக்கு கஷ்டப்படுத்த இல்லை' . 'வசதி இருந்தால் யாரை வேண்டுமானாலும் எதுவும் சொல்லுவது நல்லதில்லை.'

உதவிக்கு வந்தவன்! | சிறுகதை | My Vikatan

அடிக்கடி ஒரு பாடலின் வரிகளை சொல்லுவான்.

'இல்லை என்போர் இருக்கையிலே

இருப்பவர்கள் இல்லை என்பார்.

மடி நிறைய பொருள் இருக்கும்

மனம் நிறைய இருள் இருக்கும்.'

என்ன சொல்லி என்ன? அவள் பிடிவாதம் தானே வென்றது..

இப்போது நினைத்துப் பார்க்கையில்

மனம் கலங்கினாள் அவள்.

வேகத்தை குறைக்காமல் பாதையில் நிற்பவளை பார்த்தும் பாராதது போல் நிற்காமல் போகும் வண்டிகளும் மெல்ல சூழ்ந்து வரும் இருளும் பதைப்பை உண்டாக்கியது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எப்போதும் பிரகாஷ் கனிவுடன் நடந்து கொள்வான். ஒரு வார்த்தை அவனுக்கு தெரியப்படுத்திவிட்டால் எப்படியாவது அங்கு வந்து விடுவான் . ஆனால் எப்படி தெரியப்படுத்துவது! நேரம் போக போக என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தாள். கூடவே கண்ணீரும் போட்டி போட்டுக் கொண்டு வந்தது.

எத்தனையோ பேரை நான் அலட்சியப்படுத்தியிருக்கிறேன். பணத்திமிரில் வார்த்தைகளை வீசியிருக்கிறேன். எளியவர்கள் மனம் நொந்து போவதை வேடிக்கை பார்த்திருக்கிறேன். எனக்கே இப்படி ஒரு நிலைவரும் என்று எதிர்பார்க்கவில்லையே!..

மனம் வெதும்பினாள் அவள்.சரியான ஒரு இக்கட்டில் மாட்டியிருக்கிறோம் என்று உணர்ந்தும் ஒன்றும் செய்யமுடியாமல் தவித்துக் கொண்டிருந்த அவள் அருகில் வந்து நின்றது ஒரு பைக்

'மேடம், நான் ஒரு மெக்கானிக். வண்டிக்கு என்ன ஆச்சு!' என்றபடியே தன்னுடைய கார்டை காட்டினான் அவன்.

எதையும் பார்க்கும் நிலைமையில் அவள் இல்லை. சாதாரணமாக ஆயிரம் கேள்விகள் கேட்கும் அவள் எப்படியாவது வண்டி நகர்ந்தால் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டாள்.

அவன் காரின் உள்ளே அமர்ந்து எதையோ முடுக்கினான். பானெட்டை திறந்து ஏதோ செய்தான்.

திக்பிரமை பிடித்தவள் போல் நின்றவள் கார் ஸ்டார்ட் ஆன சப்தத்தில் சுயநினைவுக்கு வந்தாள். அந்த மெகானிக்கிடம் ஃபோனை வாங்கி கணவனுக்கு தகவல் சொன்னாள்.

'உங்களுக்கு எப்படி தெரியும்? யார் சொல்லி வந்தீர்கள்? யாருமே நிறுத்தவில்லையே' ஆதங்கத்துடன் அவள் கேட்டதற்கு

அவன் சின்ன முறுவலுடன் பதில் சொன்னான்.' இந்த வழியாக போன ஒரு ஆட்டோ டிரைவர் தான் இந்த இடம் சொல்லி உடனே போக சொன்னார். அவர் அவசரமாக ஒரு பயணியை கொண்டு விட போனதால் அவரால் உதவமுடியவில்லை என்றும் சொன்னார்.'அவள் அயர்ந்து போய் நின்றாள். இன்னும் மனித தன்மை சிலரிடம் இருக்கத்தான் செய்கிறது.அவள்மனதில் அந்த ஆட்டோ டிரைவர் விசுவரூபமாக உயர்ந்து நின்றார்.

உதவிக்கு வந்தவன்! | சிறுகதை | My Vikatan

வீடு வந்ததும் வெளியிலேயே பதட்டத்துடன் நின்ற பிரகாஷைப் பார்த்ததும் கதவை திறந்து கொண்டு வேகமாக இறங்கி வந்தாள்.

'பயந்தே போய்விட்டேன் . நேரம் வேறு ஆகி விட்டதா? . உன் செல்லுக்கும் பல முறை முயற்சி செய்தும் ஸ்விட்ச் ஆஃப் என்றே வந்தது. நல்ல வேளையாக யார் செல்லிலிருந்தோ ஃபோன் பண்ணினாய்.'

தனக்கு கொஞ்சமும் குறையாமல் அவனும் வேதனையும் கலக்கமும் அடைந்திருக்கிறான் என்று அவள் உணர்ந்தாள்.

'டிரைவரை அனுப்பிட்டு உள்ளே வாங்க' என்று சொல்லி விட்டு மெதுவாக வீட்டுக்குள் போனாள் அவள்.

நடந்ததெல்லாம் சொல்ல சொல்ல அவன் அதிர்ச்சியின் உச்சிக்கே போனான்.

'என்ன இது! இந்த டிரைவர் இப்படி பொறுப்பில்லாமல் நடந்து கொண்டிருக்கிறான்! அவனும் எரிச்சல் பட்டான்

'நல்ல வேளையாக ஒரு ஆட்டோ டிரைவர் பார்த்து ஆளை அனுப்பினாரோ ,நான் பிழைத்தேனோ', என்றவளிடம் 'யார் அந்த ஆட்டோ டிரைவர் 'நீ கூப்பிட்டு நன்றி சொன்னாயா !' வேகமாக பட படத்தவனிடம் 'என் செல்தான் சரியில்லையே ! நான் எப்படி பேசுவது! அதுதான் அவர் எங்கிருக்கிறார் என்று தெரிந்து கொண்டு நேரிலேயே போய் பார்த்தேன்.'

ஒரு நிமிடம் மெளனம் சாதித்தவள் 'அது யார் தெரியுமாங்க! நம்ம சௌந்தர் தான்' என்று கண் கலங்கினாள்.

திகைத்து போய் அவளை பார்த்தான் பிரகாஷ் ‌‌.

'என்ன சொல்றே ? சௌந்தரா !அவன் எப்படி?' குழம்பினான்.

'என்னை தனியா அந்த இடத்திலே பார்த்ததும் ரொம்ப பயந்து போயிட்டாராம். உடனே உதவிக்கு ஆள் அனுப்பிட்டார் .'

'சொல்ல மறந்துட்டேனே.! அவர் கொஞ்ச வருஷமா ஆட்டோ தான் ஓட்டுறாராம். யாரோ ஒரு புண்ணிய வான் முதல் ட்யூ கட்டி ஆட்டோ வாங்கி தந்தாராம். அதோடு நிரந்தரமாக சில வாடிக்கையும் பிடிச்சு கொடுத்திருக்கிறார். நான் நல்லா இருக்கேம்மா ' என்று சொன்னார்.'

அவள் தன் கணவன்தான் அந்த புண்ணியவான் என்று தெரியாமல் பேசிக்கொண்டே போக பிரகாஷ் சிலிர்த்து போய் நின்றான்.

'சௌந்தர் உன் நன்றிக்கடனை நல்லாவே தீர்த்து விட்டாயடா!'. வாய்க்குள் முனகியவனின் முகத்திலிருந்த திகைப்பு பிரமிப்பாகி ஆனந்தமாக மாறியதை அவள் புரியாமல் பார்த்துக் கொண்டு நின்றாள்.


-காந்திமதி உலகநாதன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.