Published:Updated:

நாணயம்! | குறுங்கதை

Representational Image ( Photo by Shivendu Shukla on Unsplash )

ஒரு நாள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது திடீரென்று புரைக்கேற, அவசரமாகப் பாட்டிலைத் திறந்தவர் அதில் தண்ணீர் இன்றித் திணற, அதை எதார்த்தமாகப் பார்த்துவிட்ட அந்த வீட்டு சுப்பையா, லோட்டாவில் தண்ணீர் எடுத்து ஓடி வந்து உதவ...

நாணயம்! | குறுங்கதை

ஒரு நாள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது திடீரென்று புரைக்கேற, அவசரமாகப் பாட்டிலைத் திறந்தவர் அதில் தண்ணீர் இன்றித் திணற, அதை எதார்த்தமாகப் பார்த்துவிட்ட அந்த வீட்டு சுப்பையா, லோட்டாவில் தண்ணீர் எடுத்து ஓடி வந்து உதவ...

Published:Updated:
Representational Image ( Photo by Shivendu Shukla on Unsplash )

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

அந்தப் பொரிக் கடலைக்காரரை கொரோனா காலத்தில் காணவில்லை. முன்பெல்லாம் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை மதியத்திலும் அவருடைய பழைய டி.வி.எஸ்,அவர்கள் வீட்டு வாசலில் சரியாக வந்து நின்று விடும். எசஃஅந்த வீட்டுக்காரர்கள் அவரிடம் வியாபாரம் செய்கிறார்களோ இல்லையோ,அவர்கள் வீட்டு வாசலில் நிற்கும் வேப்ப மர நிழலுக்காக கடலைக்காரர் வந்து விடுவார்.

முன்னர் ஒரு பழைய சைக்கிளில் தனது பொரி, கடலையுருண்டை, பொரியுருண்டை, வேர்க்கடலை, அப்பளப்பூ, மணத்தக்காளி வற்றல், கமர்கட், என்று பலவித ஐட்டங்களுடன், அடிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தெருக்களில் சுற்றித் திரிந்து விட்டு, மத்தியான உணவு வேளையில் வேப்ப மரத்து நிழலுக்கு வந்து விடுவார்.

Neem Tree
Neem Tree
Murali.K

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தனது சைக்கிளின் கேரியரில் உள்ள கள்ளிப்பெட்டியின் மீது போட்டிருக்கும் பிளாஸ்டிக் கவர் மீது மதிய உணவுப் பொட்டலத்தைப் பிரித்து வைத்து, நின்ற படியே சாப்பிட்டு விட்டு, ஹான்ட் பாரில் தொங்கும் அழுத்தமான பையிலிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்துக் குடித்துவிட்டு, ஓரமாகக் கிடக்கும் கருங்கல் மீது சற்றே உட்கார்ந்து ஓய்வெடுப்பார்.

அப்படி ஒரு நாள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது திடீரென்று புரைக்கேற, அவசரமாகப் பாட்டிலைத் திறந்தவர் அதில் தண்ணீர் இன்றித் திணற, அதை எதார்த்தமாகப் பார்த்துவிட்ட அந்த வீட்டு சுப்பையா, லோட்டாவில் தண்ணீர் எடுத்து ஓடி வந்து உதவ, அதனை வாங்கிக் குடித்த கடலைக் காரரின் கண்களில் நன்றி பளிச்சிட்டது. அதன்பிறகு வாரா வாரம்,பொரி,கடலை பர்பி என்று கடலைக்காரரின் நலங்கருதி, ஏதாவது வாங்குவதைச் சுப்பையாவும் அவர் மனைவியும் வழக்கமாக்கிக் கொண்டனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கடலைக்காரருக்கு இரண்டு மகள்கள் என்பதும், அவர்களைக் கரை சேர்க்கவே பாடு படுவதாகவும் அவர் சொல்லியதாகச் சுப்பையாவின் மனைவி சொல்லிக்கொண்டிருந்ததைக் கேட்ட சுப்பையா, வாரந்தோறும் சுமார் 200 ரூபாய்க்கு அவரிடம் ஏதாவது வாங்கச் சொல்லித் தன் மனைவி சுந்தராம்பாளிடம் சொல்லி வைத்தார். சில சமயங்களில் ரூ 5-10 அதிகமானால் அதை ரவுண்டாக்கிக் குறைத்துக்கொள்ள கடலைக்காரர் முயன்றாலும் அதனை ஒத்துக் கொள்ளக் கூடாதென்றும்,கணவனும் மனைவியும் சேர்ந்தே முடிவு செய்திருந்தார்கள்.

இந்த நிலையில் கொரோனா தலையெடுக்க, எல்லா வழக்கமான நிகழ்வுகளிலும் வந்தது மாற்றம். வாசலுக்குப் பொருள் கொண்டு வந்து விற்கும் எவரையும் காணவில்லை. தெருக்கள் வெறிச்சோடின. வீட்டுக்காரர்கள்கூட வெளியில் நிற்பதில்லை. எவரும் வெளியில் செல்வதில்லை. அலுவலகங்கள் மூடப்பட்டன.போக்கு வரத்து வாகனங்கள் முடங்கின.

கொரோனா
கொரோனா
pexels

மக்களின் இயல்பு நிலைக்கு இரும்புத்திரை போடப்பட்டது. கை குலுக்கிக் கூடி விளையாடும் கொள்கைகளுக்கு மூடு விழா நடத்துமாறு அரசே ஆணை பிறப்பித்தது. கட்டிப்பிடி வைத்தியங்களுக்குக் கட்டாய விடுமுறை விடப்பட்டது!

`தனித்திரு! தக்க மாஸ்க் போட்டிரு! அடிக்கடி கைகளைக் கழுவும் பழக்கத்திற்கு அடிமையாய் இரு!’ என்றே சொல்லி, ஓட்டுக்குள் ஒடுங்கும் நத்தையாய், உலக மக்கள் வீட்டிற்குள் ஒடுங்கிப் போனார்கள். ஒன்றாவது அலை பயத்தை ஏற்படுத்திப்போக, இரண்டாவது அலையில்தான் ஏகமாய் மக்கள் மடிந்து போனார்கள்.

ஒரே வீட்டில் தாய்,மகன்,மருமகள் என்று மூன்று பேரும், அடுத்தடுத்த நாட்களில் இறந்த சோகம் அந்த நகரையே வாட்டியது! இறந்த மனைவிக்கு இறுதிச் சடங்கு செய்ய முடியாத கணவர்களும், கணவரைப்பறி கொடுத்த கற்புக்கரசிகள் அவர்களைக் கட்டிப்பிடித்துக் கூட அழ முடியாத அவலங்களும் அகிலத்தில் அதிகமாய் அரங்கேறின.மருத்துவ மனைகள் நிரம்பி வழிய,மருத்துவர்கள் ஓய்வின்றி உழைக்க,மரண பயத்தில் மக்கள் நடமாட,உலகம் சூனியத்தை நோக்கிப் பயணப்பட… நாடுகள் அனைத்தும் பொருளாதாரத்தில் பின்னோக்கிப் பயணிக்க ஆரம்பித்தன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சுப்பையாவும் சுந்தராம்பாளும் வெளி நாட்டில் இருக்கும் மருமகளின் பிரசவத்திற்கு உதவுவதற்காகப் படுபிரயத்தனம் செய்து விசாவும், விமான டிக்கட்டும் வாங்கியும், விமானங்கள் இயக்கப்படாததால் மருமகளைத் தனியாக விட்டு விட்டு, இங்கு தவித்துக் கிடந்தார்கள். சரி! மகளின் பிரசவத்திற்கு முன் கூட்டியே செல்லலாம் என்று அமெரிக்கா சென்று, அங்கிருந்து குறித்த நேரத்தில் திரும்ப முடியாமல் திக்கு முக்காடிப் போனார்கள். ’எக்ஸ்டென்ஷன்’, அது,இதுவென்று அலைய வேண்டிப் போயிற்று!

கடந்த 20 ஆண்டுகளில் உலகம் இரு பெரும் துயரங்களைப் பார்த்து விட்டது. 2004ல் சுனாமி புரட்டிப்போட்ட உலகத்தை, 2019ல் கொரோனா பந்தாடி விட்டது. முன்னது ஒரே நாளில் உலகை உலுக்கிப்போட, பின்னதுவோ மூன்று வருடங்களாகத் தொடர்ந்து மனித உயிர்களுடன் விளையாடி வருகிறது.

சுனாமி
சுனாமி

பட்டி மன்றங்களும்,வழக்காடு மன்றங்களும் நடத்துபவர்கள்,’மனிதர்களைப் பெரிதும் அலைக் கழித்தது சுனாமியா? கொரோனாவா?’என்ற தலைப்பில் அவற்றை நடத்தலாம்!

இயற்கைச் சீற்றங்கள் எல்லாவற்றுக்கும் இடைஞ்சலாய் அமைந்து விடும். நம்மைக் கூட சுப்பையா-சுந்தராம்பாளை விட்டு விட்டு எங்கேயோ இழுத்து வந்து விட்டது பார்த்தீர்களா? வெளியில் சென்றதால் வீடு களையிழந்து போக, கொரோனா வரவால் வேப்ப மர நிழலும் அனாதையாயிற்று! ஒரு வழியாக எல்லாம் முடிந்து அவர்கள் வீடு வந்து சேர்ந்தாலும், ஆன் லைனில் ஆர்டர் செய்து அத்தனையையும் வாங்கிக் கொண்டு, மொட்டை மாடியில் ’வாக்’ போய்க் கொண்டு, உலகம் விரிந்து கிடந்தாலும், வாழ்க்கை சுருங்கி விட்டது.

மெல்ல இயல்பு நிலை திரும்ப ஆரம்பித்ததும், வேப்ப மர நிழலுக்கு மவுசு கூடி விட்டது. பக்கத்திலுள்ள வீடுகளின் ‘டூ வீலர்கள்’ வேப்பமர நிழலைத் தஞ்சம் அடைந்தன. வருவோரும், போவோரும் சில நிமிடங்கள் நின்று ஆசுவாசப் படுத்திக்கொண்டனர். சுப்பையா, வீட்டு ஜன்னல் வழியே,செவ்வாய்க் கிழமைகளில், கடலைக்காரர் வருகிறாராவென்று பார்த்துக் கொண்டேயிருந்தார். இப்படியே சில நாட்கள் கழிய, அன்று மதியம் கடலைக்காரர் வர, சுப்பையா புளகாங்கிதம் அடைந்தார்.

அவசரமாக வெளியே வந்தவர், கடலைக் காரரிடம் குசலம் விசாரித்து விட்டு சுந்தராம்பாளையும் கூப்பிட்டு, வியாபாரம் செய்யச் சொல்லி விட்டு உள்ளே சென்றவர், நீண்ட நேரமாக வெளியே வரவில்லை! சுமார் 200 ரூபாய்க்கு, வேப்ப மர நிழலிலேயே வியாபாரம் முடிந்து போக ,சுப்பையா வீட்டை விட்டு வெளியே வரத்தான் நீண்ட நேரமாயிற்று! புது 200 ரூபாய் நோட்டைக் கடலைக் காரரிடம் கொடுத்து விட்டு உள்ளே வந்தார்!

Neem Tree
Neem Tree
Murali.K

சுந்தராம்பாளோ ’என்னங்க! இந்த 200 ரூபாத் தாளையா இவ்வளவு நேரம் தேடினீங்க?நான் எத்தனை தடவைதான் கூப்பிடறது?எனக்கே உங்களைக் கூப்பிட்டு அலுத்துப் போச்சுங்க!’

‘உண்மைதான் சுந்தரா! உன் குரல்லயே அது தெரிசஞ்சுது. என்ன செய்யச் சொல்ற? கையில வந்த நோட்டெல்லாம் ஒரே அழுக்காவும், ஓரம் கிழிஞ்சதாவும்,கசங்கிப் போனதாவும் இருந்துச்சு! இது மாதிரி சின்ன வியாபாரிங்ககிட்ட அந்த மாதிரி நோட்டைத் தள்ளி விட்டா,அவங்ககிட்ட அதை வாங்கறவங்க மறுத்துட்டா…பாவம்! அவங்க என்ன செய்வாங்க?

பெரிய குடும்பம்னா…சிக்கலாப் போயிடுமே!அந்தப் பாவம் நம்மளத்தானே சேரும்! அதான்! நல்ல நோட்டாப் பாத்து எடுத்துக்கிட்டு வர லேட்டாயிடிச்சு!பாத்துக்க சுந்தரா!கீரைக்கார அம்மா , தயிர்க்கார அம்மா,காய்கறிப் பாட்டி,கடலைக்காரருன்னு தெருவுல வர்ற எவரிடத்திலயும் பழைய நோட்டைக் கொடுத்துப் பாவத்தை இனி நாம சேர்க்கக் கூடாது! அவங்க சந்தோஷமா இருக்க நம்மளால ஆனதைச் செய்யணும்! அதுதானே போற வழிக்குப் புண்ணியம்!அதிலயும் கொரோனா காலத்துக்குப் பிறகு அவங்க வாழ்க்கையில ஓரளவுக்காவது உற்சாகத்தைக் கொண்டு வரணும்னா இதையெல்லாம் நம்ம மாதிரி இருக்கறவங்க செஞ்சே ஆகணும்!’என்று ஆணித்தரமாகத் தன் கணவன் கூறியதை ஆமோதித்தபடி வேர்க்கடலை பாக்கட்டைப் பிரித்தாள் சுந்தராம்பாள்!நாணயத்தைக் காப்பதில் நாணயத்தின் பங்கை விளக்கிய தன் கணவனை எண்ணிப் பெருமைப்பட்டாள் அவள்!

-ரெ.ஆத்மநாதன்,

கூடுவாஞ்சேரி.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism