Published:Updated:

அனிதாவும், அம்மாவும்! - சிறுகதை

Representational Image

கணவன், பணம் கேட்பதற்கும், இவள் கேட்பதற்கும் நிறைய வித்தியாசங்கள். எப்படி, நூறு ரூபாய் கடன் கேட்பது ? வாழ்ந்தவன் பணம் கேட்டால் - உதவி; வாழ பணம் கேட்டால் - பிச்சை; தான் என்ன ரகம்...

அனிதாவும், அம்மாவும்! - சிறுகதை

கணவன், பணம் கேட்பதற்கும், இவள் கேட்பதற்கும் நிறைய வித்தியாசங்கள். எப்படி, நூறு ரூபாய் கடன் கேட்பது ? வாழ்ந்தவன் பணம் கேட்டால் - உதவி; வாழ பணம் கேட்டால் - பிச்சை; தான் என்ன ரகம்...

Published:Updated:
Representational Image

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

ஒரு வயது நிரம்பிய குழந்தை, அழுகை நிற்கவில்லை. கண்களில் கண்ணீரும், விழித்திரையில் ஏக்கமும், குரலில் வலியும், தழு தழுத்த மழலையில் ங்கா,ங்கா,ங்கா... என்று சொல்லி கொண்டே, அம்மாவின் மடியில்.

பசியின் அழுகை, மிகவும் கொடியது, அதிலும் பிஞ்சுகளின் அழுகை, வெறும் கண்ணீரல்ல, கோயிலில் இருக்கும் சிலைகளின் கண்களில் வரும் ரத்தம். ஏனோ, அந்த வலிகள் தெய்வத்திற்கு கேட்கவில்லை. குழந்தைகளின் வலி, அம்மாவை தவிர எளிதில் யாருக்கும் அறிவதில்லை. அந்த கதறலை, அம்மா ஏதோ ஏதோ காரணங்கள் சொல்லியும், சமாதானம் செய்தும், அதன் அழுகை நிற்கவில்லை, காரணம் அது பசியின் அழுகை.

தனது மடியில் இருந்து, அருகில் இருந்த தூளிக்கு, குழந்தையை மாற்றி விட்டு, கையில் ஒரு சிலு கிளு கிளுப்பை கொடுத்து விட்டு.. வேகமாக, சமையல் அறைக்கு சென்ற, அனிதாவின் அம்மா, ஏதோ ஏதோ தேட அங்கே ஒன்றும் இல்லை, அவசரத்திற்கு வாயில் வைக்க சக்கரை கூட இல்லை. சில அலுமினிய மற்றும் பிளாஸ்டிக் டப்பாவில் ஓட்டி கொண்ட பருப்புகளும், காஞ்சு போய் கிடந்த மாவும். ஆனால், பசியோ குழந்தைக்கு, தாய்ப்பால் சுரக்காததால், பவுடர் பால் தேவைப்பட்டது. சில நேரங்களில் காசு கொடுத்து, பல நேரங்களில் கடன் சொல்லி சமாளித்து நகர்த்தும் சூழ்நிலை.

Representational Image
Representational Image

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு புறம், குழந்தையின் அழுகை நிற்காமல் போக, அம்மாவின் உயிர் ஏன் என்னும் இருக்கிறது என்று என்னும் அளவுக்கு, வலிகள் உள்ளடக்கியது..

தேடலின் வேகம் அதிகம் ஆகியது. ஒன்றும் பலனில்லை, அங்கே உண்டியல் கண்ணில் தென்பட்டதும் ஏக சந்தோஷம், சட்டென்று முகம் வாடியது.. அது சென்ற வார கணக்கில் தீர்க்கப்பட்டது.. வெறும் தண்ணீரை மட்டும் வைத்து எப்படி நேரத்தை தள்ள, அனிதாவின் அழுகை அதிமாக, அம்மாவிற்கு, அனிதாவின் அப்பா இந்நேரம் இருந்திருந்தால், இந்த கண்ணீர் வர தொடங்கும் முன்பே நிறுத்தப்பட்டு இருக்கும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

காதல் திருமணம், அதனால் என்னவோ சொந்தங்கள் எல்லாம் தூரம். உதவிக்கு ஆள் இல்லை. அனிதாவின் அப்பாவும் இல்லை. வாழ்க்கை தொடங்கும் முன்பே, அனிதா அப்பாவின் மரணம். அவசரத்திற்கு பணம் இல்லை, உதவிக்கு ஆளும் இல்லை, கையில் கை குழந்தை, வீட்டுக்குள் சாப்பிட ஒன்றும் இல்லை. அருகில் கடன் கேட்கவோ யாருமில்லை, பொருள் வைக்க அருகில் அடகு கடை, ஆனால் வைக்க ஒன்றும் யில்லை. கையில், கழுத்தில் இருத்தது எல்லாம் ஒரு வருடத்திற்கு முன்பு வைக்க பட்டது, அனிதாவின் வருகைக்காக, ஆஸ்பத்திரிக்கு எழுத பட்ட மொய் கணக்குகள்.

இந்த எண்ணங்கள் எல்லாம், உள்ளே ஓடி கொண்டே, பல அறையகமும், அலமாரிகளும் தடம் புரண்டது, சில்லறைகள் கிடைத்தால் கூட தேவலாம். ஆனால், நேரத்திற்கு இரக்கம் தெரியாது. சில நேரங்களில் அரக்க குணம் கொண்டவன் இந்த நேரம். குழந்தை அழுகை நிற்காமல் போக, சில தூரங்களில், கணவரின் நண்பன் வீடு.

Representational Image
Representational Image

கணவன், பணம் கேட்பதற்கும், இவள் கேட்பதற்கும் நிறைய வித்தியாசங்கள். எப்படி, நூறு ரூபாய் கடன் கேட்பது ? வாழ்ந்தவன் பணம் கேட்டால் - உதவி; வாழ பணம் கேட்டால் - பிச்சை; தான் என்ன ரகம் என்றறியாது கலங்கிய கண்களோடு, அனிதாவின் அம்மா, சரி வேறு வழி யில்லை என்று நினைத்து கொண்டு. கையில் குழந்தையோடு வீட்டை விட்டு வெளியேறும் பொழுது, வீட்டு ஓனர்,

``என்ன அனிதா அம்மா, குழந்தை ஏன் இப்படி அழுகுது, சரி, அத விடுங்க.. நீங்க, ரெண்டு மாசமா வாடகை தரல, எனக்கு உங்க பிரச்னை புரியது, கையில குழந்தை வேற, எனக்கும் பணம் தேவைகள், அப்பறம் நிறைய தேவைகள் இருக்கு.. உங்களக்கு புரியும் நினைக்கிறேன்.. நான் வேணா,’’

என்று இழுக்க.. அனிதாவின் அம்மா, சட்டென்று அவரை பார்த்து,

``சார் ! உங்க பணம் ஒரு வாரத்துல தரேன், இல்லனா வீட காலி பண்ணிட்டு எங்க ஊருக்கு போறேன்’’ என்று சொல்லி கொண்டே, கதவை படார் என்று அடைத்து விட்டு குழந்தையை கையில் வைத்து கொண்டு வெளிய போனாள். அவள் சென்றதும், ஹவுஸ் ஓனர்,

``வாடகை தர வக்குயில்ல, இதுல ரோஷம் வேற..எங்க போய்டுவ, பாத்துக்கிறேன்..’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மறுபுறம், அனிதாவை கையில் எடுத்து கொண்டு, எந்த திசை என்று தெரியாது, வேகமாக நடந்தாள். அனிதா மட்டும் அல்ல, முந்தாநாள் இரவில் இருந்து, இவளும் சாப்பிடவில்லை, குடிக்க சிறுகுவலையில் தண்ணீர் மட்டும், கண்ணீரும் வறண்டது.. நடையின் வேகம் அதிகமானது, அவசரத்தில் காலில் செப்பல் போடவில்லை. வெயிலின் தாக்கம் அதிகமாக, நடக்க முடியவில்லை, குழந்தையின் அழுகை நிற்கவில்லை, பசி மயக்கம், அம்மாவிற்கும் அனிதாவிற்கும். இந்த வலி மிகவும் கொடியது, அம்மாவின் வியர்வை துளிகள், கண்ணீர் துளிகள் கலந்து வந்து கொண்டு இருந்தது, தனது முந்தானையால், அனிதாவிற்கு வெயில் அதிகம் தெரியாமல் மறைத்து கொண்டே, சமாதானம் செய்து கொண்டே வேகமாக நடக்க..

போக்குவரத்து நெரிசல்
போக்குவரத்து நெரிசல்

சட்டென்று போக்குவரத்துக்கு சமிக்ஞை. நடக்கும் பொது தெரியவில்லை, நிற்கும் போதும் முடியவில்லை, பாதங்கள் வலி அதிகமாகி கொண்டே போனது. உச்சந்தலையில் வெயில் வேற.. பசி மயக்கமும், வெயிலின் தாக்கத்தில் ஒரு மயக்கம் ஒரு சேர, தடுமாறி போனாள் அனிதாவின் அம்மா. இருந்தும், கையில் அனிதா இருப்பதால், தடுமாறி கொண்டே அருகே இருந்த, ஷேர் ஆட்டோ கம்பியை புடித்து கொண்டு சிறுது வினாடிகள் நிற்க, அங்கே இன்னும் 120 நொடிகள் ஓடி கொண்டிருந்தது.. துளியும் எதிர்பார்க்காமல், அருகில் ஏக வசனங்கள் , கோபத்தில் என் முகம் மாற, அருகே ஒரு குரல்,

``கை கால் நல்லாதானே இருக்குது, ஏன் பிச்சை எடுக்கிறாய்;’’ யோசிக்காத பதில்,

``பால் வாங்க’’ என்றாள் அந்த தாயும். அவள், கண்ணீரோடு கையில் பிஞ்சு குழந்தை அழுகை.. வெய்யிலின் சுளீர் என் முகத்தில் அறைந்தால் போல், அந்த பதில் எனக்கும் சேர்த்தோ என்று தோன்றியது.

இந்த பசி, மானம் கெட்டது, இதற்கு ரோஷம், கோபம், சுய மரியாதை, எதுவும் தெரியாது. ஒரு வேலை உணவுக்காக எவ்ளோ போராட்டம். பாவம், குழந்தை என்ன ரகம் என்று தெரியவில்லை.

சமிக்ஞை 120 முடிந்தும், traffic police நான்கு பேர் ஓடி வந்து, செல்லும் வழியை மறைத்து, சிறுது நேரம் நிற்க வைத்தனர்.. பட்டாசுகள் வெடித்தது, யாரோ அரசியல் வாதி ஊர்வலம் என்று நினைத்து கொண்டே அனிதாவும், அம்மாவும் நிற்க. அங்கே, அழகாக ஆடி கொண்டே சிறு தேர் வந்து கொண்டு இருந்தது. அரோஹரா - என்று பெரும் சத்தம். தேர் வர வர, அங்கே சிலைக்கு நம்பிக்கையில் பால் அபிஷேகம் செய்து கொண்டே வந்தனர், அதில் விழும் துளியை அள்ளிக்கொள்ள முடியாமல், ஏகப்பட்ட பிஞ்சுகளின் ஏக்கம்.

Representational Image
Representational Image

தரையில் சிறு ஆறாக ஓடியது பால். யார்க்கும் பிரயோஜனம் இல்லை. கடவுளும் இதை கேட்கவில்லை, எந்த வேதங்களும் சொல்லவில்லை. யார் சொன்னது ? யாருக்காக சொன்னது ? இதுவும் அரசியல். அங்கே விழும் சிறு துளிகளை அள்ளி கொண்டால், என் பிள்ளையின் ஒரு நாள் பசி தீருமே என்ற ஏக்கத்தோடு, அனிதாவின் முகமும், அம்மாவின் எண்ணங்களும் அந்த தரையில் பாலோட ஓடி கொண்டு போனது..

அனிதா, தன் மழலையில்.. அந்த தரையில் ஓடும் பாலை பார்த்து அம்மா, ங்கா,ங்கா,ங்கா, ங்கா, ங்கா என்று அழுது கொண்டே இருக்க, இவள் பயணம் தொடங்கியது..


எழுத்தும், கற்பனையும்

கல்யாணராமன் நாகராஜன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism