Published:Updated:

டைம்பீஸ்! | சிறுகதை |My Vikatan

Representational Image

இன்று 7மணி ஆகியும் கண் விழிக்காதது கண்டு, பேரன் "மணியும்" அவன் மனைவியும், பதறித்துடித்தனர். மணி கண்ணில் நீர் பெருக "ஆயா ஆயா" என மீண்டும் உலுக்க, மெல்ல கண்திறந்த பாட்டி ஒரு சோக புன்னகையுடன் "அதெல்லாம் ஒண்ணுமில்லடா கண்ணு! லேசா ஜுரம் அடிக்குது '' என்றார்.

டைம்பீஸ்! | சிறுகதை |My Vikatan

இன்று 7மணி ஆகியும் கண் விழிக்காதது கண்டு, பேரன் "மணியும்" அவன் மனைவியும், பதறித்துடித்தனர். மணி கண்ணில் நீர் பெருக "ஆயா ஆயா" என மீண்டும் உலுக்க, மெல்ல கண்திறந்த பாட்டி ஒரு சோக புன்னகையுடன் "அதெல்லாம் ஒண்ணுமில்லடா கண்ணு! லேசா ஜுரம் அடிக்குது '' என்றார்.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

"ஆயா ஆயா! என்ன ஆச்சி உங்களுக்கு! உடம்பு கிடம்பு சரியில்லையா?" என வினவியபடி, ஆயாவை, பேரன் "மணி" உலுக்கி எழுப்ப, அவள் உடம்பு நெருப்பாய் கொதித்தது!

தினமும் காலை 5மணிக்கு "ட்ர்ர்ர்ர்ரிங்" என தொடர்ந்து ஒலிக்கும் "அலார" சத்தம் துவங்கும் முன்னரே எழுந்து, அதன் தலையில் அன்பாக தட்டி நிறுத்தும் "இட்லி ஆயா"(இயற் பெயர் அன்னம்மா)...

இன்று 7மணி ஆகியும் கண் விழிக்காதது கண்டு, பேரன் "மணியும்" அவன் மனைவியும், பதறித்துடித்தனர். மணி கண்ணில் நீர் பெருக "ஆயா ஆயா" என மீண்டும் உலுக்க, மெல்ல கண்திறந்த பாட்டி ஒரு சோக புன்னகையுடன் "அதெல்லாம் ஒண்ணுமில்லடா கண்ணு! லேசா ஜுரம் அடிக்குது .கஷாயம் வெச்சி குடிச்சா சரியாபூடும்!"என்று கூறியபடி அந்த பழைய "டைம்பீஸ் அலாரத்தை" எடுத்து அவன் கையில் கொடுத்து "இது வெள்ளக்கார துரைகிட்ட உன் தாத்தா "குசினியா" வேலபாத்தப்ப , அவர் நேர்மை, நாணயம், உழைப்பு இதெல்லாத்தயும் பாராட்டி ,அவன் நாட்டவிட்டு போசொல்ல பரிசா குடுத்தது. இன்னிவரிக்கும் அது நிக்காம, எந்த பழுதும் இல்லாம கரெக்ட்டா ஓடிக்கிட்டிருக்கு!

இத பாக்கறபோதெல்லாம் உன் தாத்தாவையே நேர்ல பாக்கற மாரி எனக்கு தோணும்! இந்தா இத பத்திரமா வச்சுக்கோ! எந்த காரணத்த கொண்டும், இத வித்துடாதடா நைனா!" என காய்ச்சலில் ஏதேதோ பிதற்ற, "ஆயா ஆயா! ஏன் ஆயா இப்டி எல்லாம் என்னென்னமோ பேசற! உனக்கு ஒண்ணும் ஆகாது ஆயா! நீ என்ன விட்டு எங்கேயும் போமாட்ட ஆயா" என கூறிய படி ஆயாவின் கையை பற்ற ...அது ஏனோ சில்லிட்டு தளர்ந்து இருந்தது!

Representational Image
Representational Image

ஊருக்கே... அன்பாக காலை உணவு தந்த, இட்லி ஆயாவின் மறைவு செய்தி கேட்டு, மீர்சாகிபேட்டையே, அவள் வாழ்ந்த சந்தா சாகிப் தெரு வீட்டில் குவிய தொடங்கியது!

பட்டாசு, தாரை, தப்பட்டை, ஒலிக்க பூமழை பொழிந்து ஊர் கூடி தேர் இழுத்ததுபோல் ஆயாவின் இறுதி ஊர்வலம் சிறப்பாய் நடந்தது!

மணியோ அன்ன ஆகாரம் இன்றி அழுது அழுது சோர்ந்துபோய், நண்பர்களை கைத்தாங்கலாக பிடித்தப்படி கிருஷ்ணாம்பேட்டை மயானத்தில் இருந்து வீடு திரும்புகையில்,..

அவன் உயிருக்கு உயிரான ஆயாவின் நினைவுகள் அவனுள் அலைமோதி அழுகையை அதிகப்படுத்தியது!

ஆம் ! தாயின் முகத்தையே கண்டிராத அவனுக்கு எல்லாமே ஆயாதான்! தன் தாயின் வயிற்றை நிறப்பி , ஏமாற்றி கைவிட்டு , மாயமான ஒரு 'கிராதகனின்' பிள்ளையாக அவன் பிறக்கும்போதே, தாயையும் இழந்து பிறந்தான். ஆம் பிரசவத்தில் ஜன்னி கண்டு அவன் தாய் மாண்டு போக! தன் ஒரே மகளின் தாங்கொணா இழப்பையும் சோகத்தையும், அந்த பச்சை மண்ணின் அழுகையை கண்டு உதறி தள்ளிவிட்டு,

மனதை தேற்றிக்கொண்டு! பேரனான குழந்தை "மணியை", ஆயா! தனி ஒரு மனுஷியாக கண்ணும் கருத்துமாய் உயிரை கொடுத்து வளர்த்து ஆளாக்கினாள். சோம்பேரியான அவனுக்கு, பரம ஏழையான தன் பங்காளி பேத்தியை அவர்கள் காலில் கையில் விழுந்து சம்மதம்வாங்கி,

ஓராண்டுக்கு முன், நல்லபடியாக கோவிலில் திருமணமும் முடித்து வைத்து,"ராசா! இனிமே நீ தனி ஆள் இல்லை! உனக்குண்ணு ஒரு பொண்டாட்டி வந்தாச்சு! என் கஷ்டத்திலியும் உன்ன எப்டியோ பிளஸ் 2 வரைக்கும் பணம் கட்டி படிக்க வெச்சிட்டேன்! நீ இனிமே சோம்பேறியாக ஊர் சுத்த கூடாது! ஆயாவ நம்பியே இருக்க கூடாது! நீ வேலவெட்டிக்கு போய் சம்பார்ச்சி உம் குடும்பத்த காப்பத்தணும்!

உன்னையும் நாலு பேர் மதிக்கிறாபடி வாழணும்! என் காலம் முடிஞ்சி போச்சி நைனா ! நான் கும்புர்ர அந்த "தீவுனூர் புள்ளியாரப்பன் உன்ன ஓகோன்னு வாழவைப்பான்" என்று ஆயா சொன்ன புத்திமதிகள் அவன் நினைவில் வந்து அவனை மேலும் சோகத்தில் ஆழ்த்தியது! ஆயா தன்னை தவிக்கவிட்டுட்டு, திடீர்னு இப்பிடி போய் விடுவாள் என்று துளியும் சிந்திக்காத, குழந்தை உள்ளம் கொண்ட அவனுக்கு, அவள் இழப்பு பேரிடியாக இருந்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நாட்கள் நகர்ந்தன, ஆயா தனக்கென விட்டு சென்ற ஒரே சொத்தான அந்த "டைம்பீஸ் அலாரத்தை"ஆயாவை பார்ப்பது போல் நினைத்து பேணி பாதுகாத்து வந்தான்!

ஆயாவின் தனிச்சுவை இட்லி, சட்னி சாம்பார் போல், இவர்களால் செய்ய முடியாததால், இட்லி வியாபாரமும் படுத்துவிட்டது! இவன் ஒரு கடையில் எடுபிடி வேலை செய்து, மனைவியுடன் வயிற்றை கழுவி வந்தான். போதா குறைக்கு மனைவியும் கர்ப்பம் ஆனதால் அவன் குடும்ப பாரம் அதிகரித்தது! அவன் மனைவி ஒரு பத்தாம் பசலி. மிகவும் சாந்தமான நல்ல பெண். கணவனை அனுசரித்து வாழ்ந்து வந்தாள்.

நாட்கள் மாதங்களாக,

ஒருநாள் இரவு அவளுக்கு 'பிரசவ வலி' கண்டதால் பக்கத்தில் இருந்த அரசு மருத்துவ மனையில் சேர்த்தான் , அவன் போதாத காலம் தொடர, குழந்தை எசகுபிசகான நிலையில் கர்பப்பையில் மாட்டிக்கொள்ள, அவள் உயிர் பிழைப்பாளா? மாட்டாளா? எனும் அபாய நிலையில் கிடக்க, அவன் நண்பர்கள் " இனிமேலும் வெயிட் பண்ண வேணாண்டா மச்சான்! உடனே பெரிய தனியார் மருத்துவ மனையில் சேர்த்து வைத்தியம் செய்! இல்லேன்னா உங்கம்மா மாரி இவளும் செத்துடுவாடா", என அறிவுரை கூற, கையில் பணம் காசு இல்லாமல் என்ன செய்வது என்று அறியாமல் வருந்தியபடி , அந்த பின்னிரவில் தன் வீட்டுக்கு போய், தரையில் படுத்தபடி "கடவுள் தன்னை மீண்டும் அனாதையாய் ஆக்கிவிடுவானோ?" என்று எண்ணியபடி, தூக்கம் இன்றி தவித்தான்.

ஏதோ கெட்டகெட்ட கனவுகள் வர திடீரென கண்விழித்து, எழுந்துபோய்,

தன் ஆயாவின் படத்தின் முன் நின்று "ஆயா ஆயா " என உச்சரித்தபடி, ஓவென தேம்பி தேம்பி, நேரம் போவது தெரியாமல் அழுது கொண்டே இருந்தான்!

அப்போது பொழுது விடியும் நேரம் நெருங்க, 'டாண்ணு' சரியாக

5 மணிக்கு அலாரம் "ட்ர்ர்ர்ர்ரிங்" என நிசப்தத்தை, கிழித்து ஒலிக்க தொடங்கியது! "இதுவொரு சனியன் நேரங்காலம் தெரியாமல் சத்தம் போடுது" என ஆத்திரத்துடன் அதன் தலையில் ஓங்கி தட்ட.. அது டக்கென கிழே விழுந்து உருண்டு,அதன் ஒலியும் இயக்கமும் நின்று போய் விட்டது!

Representational Image
Representational Image

இதுவரை என்றுமே நிற்காத அந்த அலாரம், இப்போது நின்று போனதை கண்டு அவன் பயந்தே போய் விட்டான்! அவனுக்கு அது ஒரு அபசகுணம் போல் தோன்றி அவன் மனதை அல்லல் படுத்தியது!

மேலும், சாகும் தருவாயில் ஆயா, அந்த அலாரம் பற்றி சொன்ன வார்த்தைகள் அவன் மனதில் எதிரொலிக்க, அவன் மனைவியின் மரண பயம் மேலும் இறுக கவ்விக்கொண்டது. அது மீண்டும் ஓடினால்தான் தன் மனைவி உயிர் பிழைப்பாள், என உறுதியாக நம்பினான்.

அதை உடனே எடுத்து கொண்டு, தங்கள் உற்ற நண்பரான

"ஐஸ் ஹவுஸ்" கடிகாரக்கடை அப்துல்லா "பாயிடம்"ஓடி சென்றான்! அப்போதுதான் கண்விழித்த பாய், இவன் தன் நிலமையை விளக்கி அழுவதை கண்டு, பரிதாபப்பட்டார். அவனை உட்கார சொல்லி டீ கொடுத்து, வீட்டில் உள்ள ரிப்பேர் கருவிகளை கொண்டு அதை திறக்க முயன்றார்! ஆனால் அதை திறக்கவே முடியவில்லை! நூறு ஆண்டுகளுக்கு மேல் அது மூடியே கிடந்ததால் திறப்பது பெரும்பாடாக இருந்தது..

அது ஓடினால்தான் தன் மனைவி பிழைப்பாள் என்று உறுதியாக, மணி மேலும் நம்ப தொடங்கினான். அவர் காலை பிடித்து கெஞ்சி "அண்ணா! எப்டியாவது அத ஓடவச்சி என் பொண்டாட்டிய காப்பாத்துங்க, பிளீஸ்"என பைத்தியக்காரன் போல் மன்றாடினான்!

அவர் மிகவும் இரக்கப்பட்டு தன் 40ஆண்டுகால திறமை அனைத்தையும் உபயோகித்து, "அல்லா அல்லா" என இறைவனை உதவிக்கு அழைக்க,ஒரு வழியாக, அது திறந்து கொண்டது!

பாய் ,அதன் உட்பாகங்களை உற்று நோக்கி பிரமித்து மூச்சடைத்து போகிறார்! "அப்பா மணி! இது முற்றும் முழுதும் "18காரட்" தங்கத்தால் செய்யப்பட்ட மிகவும் அரிதான அக்கால விசேஷ "சுவிஸ் டைம்பீஸ்".. இதன் உட்புற ரிம்மில் விலை உயர்ந்த 11 வைர வைடூரிய கற்கள் புதைக்கபட்டுள்ளன! அதன் ஒரு வைடூரிய கல் கழன்று விழுந்து, பல் சக்கரத்தில மாட்டிக்கொண்டதால் நின்று விட்டது", என்று, கூறியபடி... பெரிய போராட்டமே நடத்தி,அந்த வைடூரய கல்லை மெல்ல அகற்றி, அதை பத்திரமாக அவன் கையில் கொடுக்க, டைம் பீஸ் மீண்டும் உயிர்பெற்று ஓட துவங்கி, 

"ட்ர்ர்ர்ர்ரிங்" என ஒலிக்கவும் தொடங்கியது!

"அப்பா மணி! நீ இன்று முதல் பெரிய கோட்டீஸ்வரன் ஆகிவிட்டாய்! உன் கையில் கொடுத்த அந்த ஒரு வைடூரிய கல்லே சில இலட்சங்கள் பெரும் ,என நினைக்கிறேன்! இனி நீ சாதாரண ஆள் இல்லை!"என அவனை அரவணைத்து  ஆசீர்வாதம் செய்து, தான் 'ஹஜ் யாத்திரை' செல்ல பல ஆண்டுகளாக சிறிது சிறிதாய் சேமித்து வைத்திருந்த பெரும் தொகையை அவன் கையில் திணித்து, அந்த டைம்பீசையும் அவனிடம் ஒப்படைத்து, 

"ஒரு உயிரை காப்பாற்ற உதவினால், அல்லா! மிகவும் மகிழ்வார்! உடனே போய் உன் மனைவியை காப்பாற்று!" என ஆசிகூறி அனுப்பி வைக்கிறார்!

பணத்துடன் தர்ம ஆஸ்பத்திரிக்குள் நுழைந்த மணியை நர்ஸ் வழிமறித்து "சார் உங்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்திருக்கறது.. 

உங்கள் அழுகையை கண்டு நம்ம சீப் டாக்டரம்மா! இந்தியா வந்திருக்கும் அவர் உற்ற நண்பரான அமெரிக்க டாக்டரின், உதவியுடன் பல நவீன உத்திகளை கையாண்டதால் , தெய்வாதீனமாக நார்மல் டெலிவரி ஆகிவிட்டது! தாய் சேய் இருவரும் நலம்.போய் பாருங்கள்"என கூறி புன்னகைத்தாள்!

ஒடோடிச்சென்று தன் பாப்பாவின்  முகத்தை ஆசையுடன் பார்த்த மணிக்கு, அச்சு அசல் தன் ஆயாவின் சிரித்த முகம் போல்தான் முழுதுமாக தெரிந்தது! 

அவன் கைப்பையில்,

அவனை கோடீஸ்வரனாக மாற்ற

தன் ஆயா தந்த "அலாரம் டைம்பீஸ்"

"டக் டக் டக்" என ,வேகமாக துடித்து கொண்டிருந்தது!

                          (முற்றும்)

-மரு உடலியங்கியல் பாலா.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.