Published:Updated:

செய்வினைபயம்! | ஒரு பக்கக் கதை | My Vikatan

Representational Image

அந்தக் காவி வேஷ்டி கதர் சட்டை ஜாக்கி அண்ணா என்றால், தெரியாதவர்கள் யாருமிருக்க மாட்டார்கள். செய்வினை வைக்கவும், எடுக்கவும் வல்லவர் அவர் என்பதால், கடவுளைவிட, அவருக்குப் பயந்தவர்கள்தான் அந்தப் பகுதியில் அதிகம்.

செய்வினைபயம்! | ஒரு பக்கக் கதை | My Vikatan

அந்தக் காவி வேஷ்டி கதர் சட்டை ஜாக்கி அண்ணா என்றால், தெரியாதவர்கள் யாருமிருக்க மாட்டார்கள். செய்வினை வைக்கவும், எடுக்கவும் வல்லவர் அவர் என்பதால், கடவுளைவிட, அவருக்குப் பயந்தவர்கள்தான் அந்தப் பகுதியில் அதிகம்.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

அன்று செவ்வாய்க்கிழமை. பதினோரு மணியளவில் காவி வேஷ்டியும் கதர் சட்டையுமாக அவன் வீட்டுக்குள் நுழையும் அவரைப் பார்த்த பக்கத்து வீட்டுப் பெண்மணிகள் கூட, ஒரு மாதிரியாகத் தங்களுக்குள் பயம் கலந்த கண்களாலேயே பேசிக் கொண்டார்கள்.

அந்தக் காவி வேஷ்டி கதர் சட்டை ஜாக்கி அண்ணா என்றால், தெரியாதவர்கள் யாருமிருக்க மாட்டார்கள். செய்வினை வைக்கவும், எடுக்கவும் வல்லவர் அவர் என்பதால், கடவுளைவிட, அவருக்குப் பயந்தவர்கள்தான் அந்தப் பகுதியில் அதிகம்.

அவரைத் தன் வீட்டுக்குள் பார்த்ததும் பதறிப்போனாள் பர்வதம். ‘இவரை எதுக்குக் கூட்டி வந்திருக்கீங்க?!’ அதிர்ந்து போய்க் கணவரிடம் கேட்டாள்.

‘இல்ல, ஒரு ரெண்டு மாசமா என் படைப்புகள் கதை, கவிதை எதுவும் எந்தப் பத்திரிக்கையிலும் வரலை. எவனோ, எனக்குச் செய்வினை வச்சுட்டான். அதை எடுக்கத்தான் இவரைக் கூட்டி வந்திருக்கேன். எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை! தடுக்காதே! என்றான் அவள் கணவன் சந்தோஷ்.

Representational Image
Representational Image
Chirag Dave

‘அவரை முதல்ல, போகச் சொல்லுங்க!, ‘இல்லே… நானே பத்ரகாளியா மாறிடுவேன். மிரட்டினாள்!., அவள் மிரட்டலுக்குப் பயந்து, அவரை டோக்கன் அட்வான்ஸோடு அனுப்பி வைத்தான் சந்தோஷ். அவர், போனதும்,

‘ஏங்க, உங்களுக்குக் கொஞ்சமாவது புத்தி இருக்கா?! செய்வினை செய்றவன் பத்திரிக்கைல வரக்கூடாதுன்னா செய்வினை செய்வான்!? எழுதவே, வரக்கூடாதுன்னு செஞ்சு வச்சுட்டான்னு சொன்னாக் கூடப் பரவாயில்லை. பயித்தியக்காரத் தனமா பத்திரிக்கையில வராததுக்குக் காரணம், எவனோ செய்வினை செஞ்சதுன்னு பேத்தறீங்களே? உங்களை என்ன சொல்ல?! , பத்திரிக்கைல வரலைனா, ஏன் வரலைனு யோசிக்கணும்!. ஒண்ணு, உங்க படைப்பு புதுமையா இருக்கணும்., இல்லே, அது, நாலு பேருக்குப் பயனுள்ளதா இருக்கணும். அதை விட்டுட்டு, மடத்தனமா இப்படி யோசிச்சு செய்வினை எடுக்கறவனைக் கூட்டி வந்திருக்கீங்களே? அவன் பணத்தைப் பிடிங்கிட்டு விட்டாக் கூடப் பரவாயில்லை. மாறா, அக்கம் பக்கத்து வீட்டுக் காரங்களுக்கு நீங்கதான் ஏதோ, மத்தவங்களுக்குச் செய்வினை செஞ்சு வைக்கக் கூட்டி வந்திருக்கீங்கன்னு அவங்க நினைச்சுட்டா என்ன பண்றதாம்?!. போங்க, வீணான பயத்தை விரட்டி விட்டுட்டு, புத்தி சாலித்தனமா எதாவது யோசிங்க!’ என்றாள். அவன் தலைமுழுக, பாத்ரூமுக்குள் போனான்.

-வளர்கவி கோவை

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.