Published:Updated:

மறு பிறவி உண்டா? - சயின்ஸ் பிக்‌ஷன் குறுங்கதை

Representational Image ( Karin Henseler from Pixabay )

“நான் அடுத்த பிறவியில் என்னவாகப் பிறப்பேன் என்ற கேள்விக்கு நான் பதில் தர வேண்டுமானால், நீ இதற்கு முன்பு என்னவாகப் பிறந்திருப்பாய்?” என் கேள்வியைக் கேட்டதும் நண்பனைக் காண முடியவில்லை.

மறு பிறவி உண்டா? - சயின்ஸ் பிக்‌ஷன் குறுங்கதை

“நான் அடுத்த பிறவியில் என்னவாகப் பிறப்பேன் என்ற கேள்விக்கு நான் பதில் தர வேண்டுமானால், நீ இதற்கு முன்பு என்னவாகப் பிறந்திருப்பாய்?” என் கேள்வியைக் கேட்டதும் நண்பனைக் காண முடியவில்லை.

Published:Updated:
Representational Image ( Karin Henseler from Pixabay )

நான் அடுத்த பிறவியில் என்னவாகப் பிறக்கப் போகிறேன்? என்ற கேள்வியை என் நண்பன் கேட்டபோது எனக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை, ஆனால் அவனிடம் என்னால் எதிர்கேள்வி கேட்க முடிந்தது.

“நான் அடுத்த பிறவியில் பிறக்கப் போவது உண்மை என்றால் எனக்கு முன்பிறவியும் இருந்திருக்க வேண்டுமே?”

ஆம் என் நண்பனிடம் கேட்டேன்,

“நான் அடுத்த பிறவியில் என்னவாகப் பிறப்பேன் என்ற கேள்விக்கு நான் பதில் தர வேண்டுமானால், நீ இதற்கு முன்பு என்னவாகப் பிறந்திருப்பாய்?” என் கேள்வியைக் கேட்டதும் நண்பனைக் காண முடியவில்லை.

Representational Image
Representational Image

பதில் தெரியாமலோ அல்லது பதில் தராமலோ ஓடிவிட்டான். ஆனால் எனக்கும் அந்தக் கேள்விக்கு விடை தேவைப்பட்டது. முன் பிறவி என்றால் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு, நான் பிறப்பதற்கு முந்தைய ஆண்டு, அல்லது நான் பிறப்பதற்கு 100 ஆண்டுகளுக்கு முன், அல்லது நான் பிறப்பதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நான் என்னவாகப் பிறந்திருப்பேன்? எனக்கான உச்சகட்ட கேள்வி இப்படித்தான் எழுந்தது,

“பிரபஞ்சம் தோன்றியதாகச் சொல்லப்படும் 1350 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நாளில் என் முன்பிறவி இருந்திருந்தால்? … நான் கற்பனை செய்து பார்த்தேன், அந்தக் கற்பனையில் நான் வெடித்துவிடுவேன் போலிருந்தேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எனக்குள் வெப்பமும் அடர்த்தியும் போட்டி போட்டு ஆதிக்கம் செலுத்தின. ஒரு மில்லி மீட்டரை விட குறுகிய கோளமாக இருந்த என்னைச் சுற்றி யார் இருப்பார்கள் என்பதை அறியக் கூடிய ஆற்றல் எனக்கு இல்லை. என்னை மிரட்டிய அடர்த்தியையும் வெப்பத்தையும் நான் வென்றெடுக்க வேண்டுமானால் என் உடல் அளவு பெரிதாக ஊதிக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்படித்தான் நான் ஊதி விரிவடையத் தொடங்கினேன். நான் விரிவடையத் தொடங்கியதும் எனக்குள் இடைவெளியும், காலமும் தோன்றின.

இன்றைக்கு எல்லோருக்கும் தெரிந்தது என்னவென்றால் நம்மைச் சுற்றி இருக்கக் கூடிய தூரத்தை நாம் அளவிட முடியாது, அதேபோல் நாம் கடக்கிற காலத்தைக் கட்டுப்படுத்த முடியாது. எனவே நான் விரிவடையத் தொடங்கியதும் அந்த வெளியையும் காலத்தையும் நான் எனக்குள் உணர்ந்தேன். இந்த வெளி மற்றும் காலத்தின் இடைபட்ட சூழலில் அணுத்துகள்களை நான் பெற்றெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இவ்வாறு நான் பெற்றெடுத்த அணுத்துகள்கள் நியூட்ரான் மற்றும் புரோட்டான்களை மட்டும் பெற்றிருந்தமையால் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் அணுக்கள் மட்டும் முதலில் தோன்றின.

Representational Image
Representational Image

எனக்குள் இருந்த அடர்த்தியும் வெப்பமும் நான் விரிவடைய விரிவடைய எனக்குள் குளிர்ச்சியைத் தரத் தொடங்கின. இவ்வாறான குளிர்ச்சியான சூழல் உருவாகும்போது நியூட்ரானும் புரோட்டானும் வெளியில் எலக்ட்ரானைக் கண்டறிந்து தங்களுக்குள் அணுக்களை உருவாக்கிக் கொண்டன. இவ்வாறு உருவான அணுக்களும், எனக்கான விரிவடைதலும் பெருகிக் கொண்டே வரவே அண்டக் கருவாக இருந்த நான் இப்போது பேரண்டமாக விரிவடையத் தொடங்கினேன்.

எனக்குள் ஏற்பட்ட குளிர்ச்சி ஆங்கேங்கே நிறைய பால்வெளிகளை உருவாக்கின. காலமும் கடந்து கொண்டே இருந்தது. ஆம், அப்படியெனில் உலகம் தோன்றியதாக அறியப்படும் 1350 கோடி ஆண்டுகளுக்கு முன்னாடி நான் பிறந்திருக்க வாய்ப்பில்லை, ஆனால் பூமி தோன்றியதாக அறியப்படும் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் நான் பிறந்திருக்கலாம், ஆனால் பூமிக்கோளம் உருவான உடனேயே மனிதர்கள் பிறக்கவில்லையே, மனிதர்கள் பிறக்காத காலத்தின் நான் எப்படி முன் ஜென்மம் எடுத்திருக்க முடியும்? எனக்குள் ஏற்பட்ட கேள்வி என்னைச் சிந்திக்க வைத்து. நிச்சயமாக எனக்கு அடுத்த பிறவி என்று ஒன்று இருக்க வாய்ப்பு இல்லை, ஏனெனில் எனக்கு முன் பிறவி என்று ஒன்று இருந்திருக்க வாய்ப்பில்லை. என் பதிலைச் சொல்ல என் நண்பனைத் தேடிப் போக முடிவு செய்தேன்.

-செந்தமிழ் சரவணன்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism