Published:Updated:

கணி! | குறுங்கதை

Representational Image

'ஒரு மணி நேரம் தான் போட்டி. ஏற்கனவே செய்தியை கேட்டுட்டு அரை மணி நேரத்தை கோட்டை விட்டுட்டேன். சாப்பிட்டுட்டுதான் பார்க்கனும்னா போட்டி. முடிஞ்சிடும் ' , வாதாடினார் ரவி.

கணி! | குறுங்கதை

'ஒரு மணி நேரம் தான் போட்டி. ஏற்கனவே செய்தியை கேட்டுட்டு அரை மணி நேரத்தை கோட்டை விட்டுட்டேன். சாப்பிட்டுட்டுதான் பார்க்கனும்னா போட்டி. முடிஞ்சிடும் ' , வாதாடினார் ரவி.

Published:Updated:
Representational Image

'பொறியியல் பொருட்களின் ஏற்றுமதி பற்றி நம் அரசினர் குழு அலச உள்ளது', கணினியிலிருந்து ஒலித்த செய்திகளை கேட்டு கொண்டிருந்தார் 90 வயது ரவி.

அருகில் வந்து அவர் தலையை மிருதுவாய் வருடினாள் கணி.

'பசிக்கலையா? நீங்க கேட்ட மசால் தோசை தயார்.'

'கொண்டு வா கணி. அந்த இணைய கண்ணாடியை மாட்டி விடு. கிரிக்கெட் போட்டி ஆரம்பிச்சிருக்கும்'. என்றார் சாய்வு நாற்காலியில் கால்களை நீட்டியவாறு.

'சாப்பிட்டிட்டு பார்க்கலாமே, ஜீரணத்துக்கு நல்லது,.' மென்மையாய் கூறிக்கொண்டே கணி ஜன்னல் கதவுகளை திறந்து விட்டாள்.

மாசில்லா கிராமிய காற்று அறையில் புத்துணர்ச்சியை பரப்பியது..

Dosa
Dosa

'ஒரு மணி நேரம் தான் போட்டி. ஏற்கனவே செய்தியை கேட்டுட்டு அரை மணி நேரத்தை கோட்டை விட்டுட்டேன். சாப்பிட்டுட்டுதான் பார்க்கனும்னா போட்டி. முடிஞ்சிடும் ' , வாதாடினார் ரவி.

விளையாட்டு அலைவரிசையை திரையில் வரவழைத்து விட்டு, தோசை சுடும் இயந்திரத்திலிருந்து மொறு மொறு தோசையை எடுத்து தட்டில் வைத்தாள் கணி.அதன் நடுவில் ஆவி பறக்கும் உருளைக்கிழங்கு மசாலை பரப்பி, தேங்காய் சட்னியுடன் ரவியிடம் வந்தாள்

'லொள் லொள்' என்று வீடு செல்ல பிராணி அழைத்தது.

' அவனுக்கும் சாப்பாடு வை. ரெண்டு பெரும் ஒண்ணா சாப்பிடறோம்.'

மாமிச பிஸ்கட்களை செல்ல பிராணி முன் வைத்துவிட்டு, ரவிக்கு தோசை ஊட்ட ஆராம்பித்தாள் கணி

போட்டியில் இந்தியா ஜெயித்ததும், ரவியும் செல்ல பிராணியும் கை அசைத்து குதூகலித்தனர்.

'சாப்பிடும் போது சாந்தம் தேவை. இல்லைனா, சாப்பாடு தொண்டைல சிக்கிக்கும்', எச்சரித்தாள் கணி.

'இறந்து போன என் சம்சாரத்தை நினைச்சு ஏங்க கூடாதுன்னுதான் உன்னை எங்கிட்ட விட்டுட்டு போனா என் பொண்ணு..சம்சாரம் மாதிரியே நீயும் என்னை சுதந்திரமா இருக்க விடமாட்டீங்கிரியே!' முகம் சுளித்தார் ரவி.

'சலிச்சுக்காதிங்க. உங்களுக்கு புடிச்ச நண்பனா என்னைய மாத்திக்க முடியும். மாத்திக்கிட்டு உங்க கூட உக்காந்து கிரிக்கெட் பாக்கட்டா?'னு கேட்ட ரோபோ -வை பார்த்து, 'சரி' ன்னு தலையாட்டிவிட்டு, அறையில் மாட்டியிருந்த புகைப்படத்தில் சிரித்த தன் பொறியாளன் மகளை நன்றியுடன் பார்த்தார் ரவி.

-மஞ்சுளா சு

பெங்களூரு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism