உறக்கம் என்பது உயிர்களனைத்திற்கும் கிடைக்கப்பெற்ற உன்னதமான நிலை அது. அதுவும் அந்த காலை வேளையில் ஒரு முழிப்பு வந்ததற்க்கு பிறகும் அந்த தலையணையை கட்டியணைத்துக் கொண்டு தூங்குவதென்பது அலாதியான ஓன்று. அந்த நேரத்தில் இடையூறு செய்பவர்களனைவருக்கும் கும்பிபாகமே (எண்ணெய்ச்சட்டி தண்டனை) குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
அந்த அலாதியான சுகத்தை அனுபவித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் "அய்யோ அய்யோ உன் கண்கள் அய்யய்யோ" என்ற பாடலுடன் அலறியது அவனுடைய தொலைபேசி. இந்த நேரத்துல யார்ரானு கடுப்பாகி கையிலெடுத்தான் சசி.
மொபைல் டிஸ்பிளேயில் வந்த பெயரை பார்த்ததும் இனம்புரியாத மகிழ்ச்சி அவனுள். அழைத்தது அவளல்லவா!
"ஹே என்ன திடீர்ன்னு காலைலே கால் பண்ணிருக்க மாமன் நெனப்பு வந்துருச்சா?
ம்ம்ம் உன் மூஞ்சி ! உன்ன மீட் பண்ணணும். நாம மீட் பண்ற காஃப்பி ஷாப் வந்துரு என்றால்.
ஹே என்னப்பா ஓரே சர்ப்ரைஸ் மேல சர்ப்ரைஸா குடுக்குற என்றான் சசி.
ஆமா ஆமா நீ சீக்கிரம் வந்து சேரு என்று கடிந்து விட்டு கட் செய்தாள் அந்த பெண்

சட்டென்று எழுந்து சகல வேலையையும் முடித்துவிட்டு எந்த சட்டை போடுவது என சண்டையிட்டுக் கொண்டிருந்தான்.
இவையனைத்தையும் போர்வைக்குள் இருந்து எட்டிபார்த்த கார்த்தி " மச்சான் எங்க போற இவ்ளோ வேகமா கெளம்பி ?
எங்கயோ போறேன் மூடிட்டு பட்றா என்றான் சசி.
ஓஹோ அப்டியா சரி என்றுவிட்டு போர்வையில் மறைந்தான் கார்த்தி.
ப்ளு ஜீன்ஸும் ப்ளாக் சர்ட்டும் அணிந்தான் சசி.
அதிகபட்ச ஆண்களின் ஆகச்சிறந்த உடையே அதுதான். அதில் அவன் மட்டும் விதிவிலக்கா என்ன!
" மச்சான் வரேன்டா ”, என்று விட்டு அந்த பல்சர் பைக்குக்கு உயிர்கொடுத்தான்.
டேய்டேய்டேய்,,,எனகத்திக்கொண்டு வாயில் கவ்விய கைலியுடன் கார்த்தி வெளியே வந்தான் அவன் கண்படும் தூரத்திலிருந்து மறைந்தான் சசி.
"போடி போ என்னைய வா மூடிட்டு படுக்கசொல்ற’’ என கூறிக்கொண்டு உள்ளே சென்றான் கார்த்தி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS"காதலித்துபார் உண்மையில்
கைதுசெய்யலாம் காற்றையும்
காதலித்து பார் நண்பனே
வாழ தோன்றும் நாளையும்
தேவதைகளின் ஆசிதானே
காதலென்று கூறுகின்றேன்" என யுவன், சசியின் காதில் ஹெட்போன் வாயிலாக கூறிக்கொண்டிருந்தார்.
அந்த பல்சர் பைக் பறந்துகொண்டிருந்தது. முதன்முதலில் அவளைப் பார்த்த அந்த பெட்ரோல் பங்கை ஒரு குறுநகையோடு பார்வையிட்டுச் சென்றான். பல்சர் பைக் முன்னோக்கி செல்ல அவன் நினைவுகள் பின்னோக்கி சென்று கொண்டிருந்தன.
***********
அன்று ஆஃபிஸில் சற்று அதிகமாக வேலை இருந்ததால் சீக்கிரமாகவே கிளம்பி பைக்கில் சென்று கொண்டிருந்தான். அடைமழை பெய்ந்து ஓய்ந்த காலை வேளை அது . அன்றைய விடியலே சற்று அழகாக இருந்தது. கதிரவனும், காகங்களும் தன் பணியைத் தொடங்கின. பெட்ரோல் நிரப்ப அந்த பங்கிற்க்குள் சல்லென்று நுழைந்தான் சசி.
எதிரில் ஸ்கூட்டியில் வந்த அவள் தன் ஸ்கூட்டியில் ஹேண்ட் பிரேக் இருந்தும் தனது கால்களினாலே பெட்ரோல் பம்ப் முன் வண்டியை நிறுத்தினால். வரிசையில் நின்றிருந்த சசி எதிர்பாராத விதமாக அவளைப் பார்த்தான்.

"காதோரத்தில் சுருண்ட முடி, பார்வையிலே பற்ற வைக்கும் கண்கள், சிரிப்பினால் சிறைதள்ளும் கன்னக்குழி.
அதரங்களுக்கு(உதடுகள்) அருகிலே அவ்வளவு அழகான மச்சம்.
தன்னசைவுகளுக்கெல்லாம் தாளம்போடும் ஜிமிக்கி.
நச்சென மின்னும் நாசியில் ஒரு மூக்குத்தி.
அந்த கருமையான கூந்தலருவியில் நீராடும் மல்லிகைப்பூ."
சந்தனநிரத்தில்(கேரள சேலை)ஒரு சேலை கட்டிய சோலை அவள்.
வார்த்தைகளால் வர்ணித்தும் தீர்க்க முடியாத வனப்பு வாய்ந்தவள்.
இவையனைத்தையும் மெய்மறந்து அவளை பார்த்துக்கொண்டிருந்தான் சசி. " முன்னாடி வாங்க’’ என குரல் வந்ததும் தன் இயல்புநிலைக்கு திரும்பினான் 5 லிட்டர் பெட்ரோல் நிரப்பி விட்டு சற்று நகர்ந்தான் ( பதற வேண்டாம் சசி பெட்ரோல் போடும்போது லிட்டர் ரூ 65 தான்.)
அவள் அந்தப்பக்கம் இருந்த வள்ளியக்காவிடம் எதோ சிரித்து சிரித்து பேசிக்கொண்டிருந்தாள். அவள் சிரிக்கும்போது விழுந்த கன்னக்குழியழகை இவன் ரசித்துக்கொண்டிருந்தான். சட்டென்று அங்கிருந்து கிளம்பினாள் அவள். கவலையுடன் இவனும் கிளம்ப தயாரானான். தம்பி சசி எப்படி இருக்க என வள்ளி அக்காவிடம் இருந்து குரல் வந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
வள்ளி அக்கா, அந்த பெட்ரோல் பங்கில் வேலை செய்பவர், அனைவரிடத்திலும் அன்பாக பழகுபவர், சசியின் ஊரை சேர்ந்தவர் என்பதாலோ என்னவோ மிகவும் அக்கறையுடன் பழகுவார். அவனிடம்,
" சசி எப்படி இருக்க பா ?’’
`` நல்லா இருக்கேன் கா" என்றுவிட்டு ஒரு புன்முறுவல் செய்துவிட்டு பறந்தான்.
ஈவ்னிங் ரூம் வந்த பிறகும் அவளது நினைவாகவே இருந்தான். அந்த கன்னக்குழியழகில் விழுந்தவன் எழவேயில்லை. பின்பு அவளைப் பார்க்கவே முடியவில்லை. ஒருவிதமான பித்து நிலையையடைந்தான். இவனுடைய நடவடிக்கையைப் பார்த்த கார்த்தி ,
``டேய் என்னடா ஒரு வாரமா ஆளூ ஒரு டைப்பா இருக்க என்ன மேட்டரு?’’
``அதெல்லாம் ஒன்னுல்ல நல்லாதாருக்கேன்’’ என்றான் சசி.
உன் மூஞ்ச பார்த்தாத தெரியுதே சொல்றா ஒழுங்கா என கார்த்தி அதட்டினான். பின்பு நடந்ததை கூறினான் சசி.
" ஏன்டா டேய் ஒரு நாள் பார்த்ததுக்கா இந்த அக்கப்போரு அதும் பேரு, ஊரு எதுமே தெரியாது இவரு பார்த்தாராம் லவ் ஆயிருச்சாம் , அநியாயம் பண்றடா நீயி’’ என்று கலாய்த்துவிட்டான். இவனும் அவன் செய்த லூட்டியில் சிரித்துவிட்டு நார்மலானான். அவன் ரூமுக்கு அருகிலிருந்த சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்றிருந்தான், அங்கே அவளை மறுபடியும் பார்த்துவிட்டான். இவனுள் ஓரே மகிழ்ச்சி, அவளிடம் எப்படியாவது அறிமுகமாகி நட்பை தொடர வேண்டுமென தவித்தான். அவளிடம் எப்படியாவது பேசிவிட வேண்டுமென முயற்சித்தான் ஆனால் தோல்வியில் முடிந்தது. வெறுப்புடன் அவனது ரூமை நோக்கி நடந்தான்.

அடுத்தநாள் காலை அவனது பணிக்கு ஆயத்தமானான் வழக்கமாக பெட்ரோல் போட பங்கிற்க்கு சென்றான்.
தம்பி சசி ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா? என்றாள் வள்ளி அக்கா. ஒன்னுமில்லப்பா இப்ப ஒரு பொண்ணு பெட்ரோல் போடும்போது இந்த கொலுச மிஸ் பண்ணிட்டு போயிருச்சு பா , மஞ்ச கலரூ யமாஹா ஃபேஸினோ வண்டில[; வந்துச்சு கொஞ்சம் குடுத்துடு’’ என்றார்.
``ஆஃபிஸ்க்கு டைம் வேற ஆயிருச்சுக்கா.’’
``நீ போறவழி தான் பா அவ மெதுவதான் போவா கொஞ்சம் ட்ரை பண்ணி பாருப்பா பாவம் அந்த பொண்ணு’’, என்றார் வள்ளியக்கா.
சரி என்று கிளம்பினான், காலை வேலை என்பதால் சற்று ட்ராபிக் அதிகமாகவே இருந்தது. அந்த ஸ்கூல் அருகில் இருந்த ட்ராஃபிக் சிக்னலில் நின்று இருந்தாள் அவள். அப்போதுதான் அவள் தன் ஒரு கால் கொலுசு தொலைந்ததை உணர்ந்தாள். கண்கள் குளமாகி தன் வண்டியை சாலை ஓரத்திற்க்கு நகர்த்தி தேடிப்பார்த்தாள். அவளுக்கு தன் அம்மாவை நினைத்து இன்னும் அழுகை ஆர்பரித்துக்கொண்டு வந்தது. சாலை என்பதால் கண்ணீரை அடக்கி கொலுசைத் தேடினால்.
சசியும் அதே ட்ராஃபிக் சிக்கனலுக்கு வந்தடைந்தான். அவனுக்குள் ஓர் எண்ணம். "எப்படி பார்த்தாலும் 100 கிராம்க்கு மேல இருக்கும் வித்தா 5000 கொறையாம கெடைக்குமே. ச்சை பாவம்டா அந்த பொண்ணு " என தன்னையே சமரசம் செய்து சாலையோரமாக திரும்பினான். சட்டென ஹெல்மெட்டை கழற்றி சற்று உற்றுநோக்கினான். அவளேதான் அன்று சூப்பர்மார்க்கெட்டில் பேசமுடியாமல் போனவள். கூட்டத்தைவிட்டு அவளின் அருகில் போனான். அவளின் செய்கையை பார்த்ததும் அந்த கொலுசுக்கு சொந்தக்காரியும் அவளேதான் என ஊர்ஜிதமானது.
``என்னங்க ஹலோ..’’
`` என்னங்க’’
`` இந்தாங்க உங்க கொலுசு’’ என அவளிடம் கொடுத்தான். அவள் அந்த கொலுசை பார்த்ததும் , பரவசத்தின் உச்சம் அடைந்தாள்.
``ரொம்ப தேங்ஸ்ங்க’’ என தன் கண்ணீரை துடைத்துக் கொண்டே சிரித்தாள். அந்த கண்ணக் குழி தரிசனம் அன்றும் அவனுக்கு கிட்டியது. அந்த கொலுசு அவனுக்கு அவளிடத்தின் தொடர்பை உருவாக்கியது.

மார்க் ஜூக்கர்பர்க்கின் மகத்தான செயலால் பல காதலர்களின் காதல் பரிமாற்றப் பாலமானது facebook . அந்த பாலத்தை சசியும் சரியாக பயன்படுத்திக்கொண்டான். காலப்போக்கில் நல்ல நண்பர்களாகினர். சசி அவ்வப்போது தன்னுடைய காதலை வெளிப்படுத்த முயற்சித்தான். ஆனால் அவளோ அதை சற்றும் பொருட்படுத்தமாட்டால்.
அன்று அவளிடம்,
" நான் உன்ன லவ் பன்றேன்னும் தெரிஞ்சும் நீ ஏன் கொஞ்சம் கூட ரியாக்ட் பன்ன மாட்ற? நான் உன்னோட லைஃப் லாங்கா உன்னோட ட்ராவல் பண்ணனும் ஃபீல் பண்றேன்.’’
``ஓ அதுக்கென்ன தாராளமா பண்ணலாமே’’ என்று அந்த கோல்ட் காஃப்பியை குடித்துக்கொண்டே கூறினாள்.’’
``சீரியஸாவா?’’
``ஆமா பட் ஓரு நல்ல ப்ரண்டா ஆ..’’
``ப்ச்ச் கல்யாணம் பன்னிட்டும் ப்ரண்ட்ஸ் ஆ இருக்கலாமே.’’
``அதுக்கு சான்ஸ் இல்ல.’’
``ஏன்?’’
``எங்க வீட்ல விடமாட்டாங்க.’’
``அப்ப உனக்கு ஓகே தானா. உங்க வீட்ல தானா பிரச்சனை. நான் வந்து பேசுறேன்.’’
``அதெல்லாம் வேணாம் நீங்க வேற கேஸ்ட் நான் வேற கேஸ்ட் ,சோ செட் ஆகாது.’’
``அப்ப நீ கேஸ்ட் பாக்குறியா?’’
``அய்யோ அப்டிலாம் இல்ல. உங்கள பிடிக்காமலயா நான் வந்து பேச போறேன், பீளிஸ் இத பத்தி பேச வேணாம் என்ன நடக்கனும்னு இருக்கோ அது நடக்கட்டும்’’ என சத்தமாக கூறி மெளனமானாள்.
அந்த ஒரு வார்த்தை சசிக்கு நம்பிக்கையளித்தது, அவனும் அதைப்பற்றி பேசமால் அந்த காஃப்பி ஷாப்பில் இருந்து கிளம்பினர். அவன் அலுவலகப் பணிக்காக அவன் சிறிது காலம் வெளியூர் சென்றிருந்தான். அந்த பயணம் முழுவதும் அவளே அவனுக்கு துணை. அவன் சென்றிருந்த அந்த 6 மாதமும் அவர்களுக்குள்ளான அன்பை இன்னும் அதிகப்படுத்தியது. அவளுக்கு என்ன ஃகிப்ட் பண்ணலாம் என யோசித்து அவளின் அழகை மேலும் அழகாக்க லாக்மி மேக்கப் கிட்டை, சர்ப்ரைஸாக அமேசான் வாயிலாக அவளது அலுவலகத்துக்கு அனுப்பினான்.
ஹே என்ன இதெல்லாம் புதுசா?
நல்லா இருக்க இல்லையா?
நல்லாதான் இருக்கு.
இனி ஓவ்வொரு டைம் நீ மேக்கப் போடும்போது என் ஞாபகம்தான் வரணும்.
பார்ரா அவ்ளோ லவ்வா? என்றாள்.
இருக்காதா பின்ன!. என்றான்.
அந்த ஆறு மாதமும் அவளுடன் அளாவலாத (பேசாத) நாளில்லை.
ஹே நான் ஊருக்கு வர்ரேன். எப்ப மீட் பண்ணலாம் ?
நீ ரீச் ஆகிட்டு சொல்லு. ஓகே.
அவளை சந்திக்கும் தருணத்திற்காக அவன் ஒவ்வொரு நாளும் கனவு கண்டான்.
கனவுகள் தரும் மகிழ்ச்சி நிஜங்களில் கிடைப்பதில்லை.
அவர்கள் எப்போதும் சந்திக்கும் அந்த காஃப்பி ஷாப்பில் வெயிட் செய்து கொண்டிருந்தான். அவளைப் பார்க்க ஆவலுடன் காத்து இருந்தான்.
அந்த ஸ்கூட்டியை மிகவும் பொறுப்புடன் பார்க் செய்துவிட்டு உள்ளே வந்து அவனைப் பார்த்து புன்முறுவல் செய்தால் அந்த கொள்ளைக்காரி. சசியின் பார்வையை முதலில் அந்த கொலுசை நோக்கித்தான் வீசினான். பின்னே அதுதானே அவனின் அதிர்ஷ்ட தேவதை.
வாங்க மேடம், உட்காருங்க எப்டி இருக்கீங்க.?
நல்லா இருக்கேன் என்று அந்த காதோரம் இருக்கின்ற முடியை கோதிக்கொண்டே அமர்ந்தாள்.
சசி அவளின் ஒவ்வொரு செயலையும் லயித்துப் போய் பார்த்துக்கொண்டே இருந்தான்.
அவள் ஏதேதோ பேசிக்கொண்டே இருந்தாள். அவனோ அவளது கண்களை மட்டும் கவனித்துக் கொண்டிருந்தான்.

ஹலோ சார் ஹாலோ என்ன பண்றீங்க நான் பேசிட்டே இருக்கேன் எந்த ரியாகஷனும் இல்ல. என்ன ட்ரீம்ஆ?
ஆமா உன்கூடத்தான்.
ம்ப்ச்ச் உனக்கு வேற வேலையில்ல பே.
சரி கோல்ட் காஃப்பி ஆர்டர் பண்ணவா?
பண்ணு என்றான் சசி.
``ஆளே மாறிட்ட ரொம்ப க்யூட் ஆ இருக்க, இப்படியே என்கூட வந்துரேன் , அடிக்ட் ஆனா மாதிரி இருக்கு. யோசிச்சு கூட பார்க்க முடில நீ இல்லாத லைஃப் நெனச்சு.’’
என ஸ்மைலிங்குடன் ஆரம்பித்து எமோஷனலாக முடித்தான். அவளிடத்திலும் ஒரு பெரும் மெளனம்.
புரிஞ்சுக்க இதெல்லாம் பிராக்டிகலா வோர்கவுட் ஆகாது, இங்க புரட்சி பண்ணி புரியவைக்க முடியாது, வீட்ல வேற வரன் பார்த்துட்டு இருக்காங்க, என்ன பண்றதுன்னே தெரியல, என்று அவளின் ஆசையை மறைமுகமாகக் கூறி முடித்தாள்.
இந்தியாவைப் பொருத்தளவில் காதல் புனிதம் , காதலர்கள் கலங்கம்.
சசிக்கு ஒருவிதமான நம்பிக்கை ஏற்பட்டது. ஹே ஒன்னும் ஃபீல் பண்ணாத நல்லதாவே நடக்கும் என்றான், இருவரும் ஒருவிதமான மகிழ்ச்சியுடன் அங்கிருந்து அன்று சென்றனர்.
அவர்களுடைய உரையாடல்கள் அதிகமாகவும் ஆழமாகவும் இருந்தது அதில் காதலைத் தாண்டி வாழ்க்கையின் எதார்தத்தையே அவர்கள் அதிகம் பரிமாறிக்கொள்வார்கள், ஒவ்வொரு உரையாடல் முடிவிலும் சசிக்கு அவளை இழக்கவேகூடாது என்ற எண்ணம் உண்டானது அவளின் பேச்சிலும் நம்பிக்கை தெரிந்தது. காதல் செய்யவும் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு தேவைதான் போல.
சட்டென்று பைக் ஆஃப் ஆனாது, அவனும் பலமுறை ஸ்டார்ட் செய்தான் ஆன் ஆகவில்லை, பைக்கில் பெட்ரோல் காலியாகிருந்தது.
கார்த்திக்கு போன் செய்தான்.
"என்ன மச்சான் வண்டி நின்னு போச்சா?”
``ஆங்ங்’ வண்டி எடுத்தா பெட்ரோல் போட மாட்டியா? ’’ என ஆரம்பித்து சப்தஸ்வரங்களையும் வாசித்து தீர்த்தான் கார்த்தியிடம் சசி.
``அட்லீஸ்ட் காலைல வண்டி எடுக்கும்போதாவது சொல்லி இருக்கலாம்லடா?’’
ஏன்டா டேய் நான் தான் சொல்லவர்ரதுக்குள்ள மூடிட்டு படுடான்னா அதான் படுத்துட்டேன் என்றான் கார்த்தி.
சரி பக்கத்துல 2 km பங்க் இருக்கு போட்டுக்க என்றான், அது எனக்கு தெரியும் நீ மூடு என்றான் சசி.
மறுபடி மொதல்ல இருந்தாடா அப்டி எங்கதான்டா போற? சொல்றா டேய் என்பதுற்குள் கட் செய்தான் சசி.
ஒருவழியாக காஃப்பி ஷாப் சென்றடைந்தான். அவளைப் பார்த்தவுடன் அவனிடமிருந்த அத்தனை களைப்பும் காணாமல் போனாது. அன்று அவள் சற்று அதிகமான அழகாகவே இருந்தாள். ஆனால் ஏதோ ஓரு சோகம் தென்பட்டது.
ஹே சாரிப்பா வண்டில பெட்ரோல் இல்ல அதான் லேட் ஆகிருச்சு.
பராவாயில்ல் இன்னைக்கு உன் ஃப்வேரைட் கேப்ஃபச்னோ ஆர்டர் பன்றேன் என்றாள். சரி இன்னிக்கு நான் எப்படி இருக்கேன் என்றாள்.
நீ எப்பவுமே அழகுதான. இன்னிக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ரா கார்ஜியஷ்ஷா இருக்க என்றான் சசி.
எல்லாம் நீ அனுப்புன மேக்கப் கிட்தான் ரொம்ப தேங்ஸ்ப்பா என்றாள்.
அன்று சற்று அதிகம் உணர்ச்சிவசமாக இருந்தாள். ஏதேதோபேசிக்கொண்டிருந்தவள் சட்டென ``சசி ஐலவ்யூ , எனக்கும் உன்ன ரொம்ப பிடிக்கும், பட் என்னால சொல்ல முடியல, என் கூட இவ்ளோ நாள் பழகி இருக்க கொஞ்சம் கூட ஓவர் அட்வாண்டேஜ் எடுத்துக்கல ரொம்ப இயல்பா இருந்த, லவ் பண்றேங்கிற பேர்ல டார்ச்சர் பண்ணல. என்னோடகேரியர் க்ரோத்க்கு முக்கியமான காரணமே நீதான்,’’ என பேசிக்கொண்டே அவளின் வெட்டிங் இன்விடேஷனை எடுத்து கண்ணீருடன் கொடுத்தாள்.

சசிக்கு ஒன்றும் புரியவில்லை அவள் என்ன கூறினாள், என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று. அவனுக்குள் ஒரு நம்பிக்கை இருந்து கொண்டே இருந்தது. அவள் தனக்கானவள்தான் என, ஆனால் அது அனைத்தும் பொய்யென அறியும்போது எப்படி அந்த உணர்வை வெளிக்காட்டவெனத் தெரியாமல் துடித்தான்.
``ஹே என்னப்பா இது? வரன் பார்த்துட்டுத்தான் இருக்காங்கன்னு சொன்ன, ஏன் என்கிட்ட சொல்லல’’ என கண்ணீருடன் கூறினான்.
என்ன என்னதான் பண்ண சொல்ற? நான்தான் அன்னைக்கே சொன்னேன்ல இதெல்லாம் வேணாம்னு, இன்னைக்கு நீ என்ன கெட்டவளாக்கிட்டல்ல.
`வீட்ல யாரு பொண்ணுங்கக்கிட்ட கேட்குறாங்க? அவங்க மனசுல என்ன இருக்குனு அப்டியே சொன்னாலும் புரிஞ்சுக்கவா போறாங்க. இன்னும் எத்தன வருசமானாலும் இங்க அவ்ளோ சீக்கிரம் எதும் மாறாது. அப்டியே வீட்ல ஒத்துகிட்டாலும் இந்த சமூகம் ஒத்துக்காது. அவ்ளோ வெசம் பரவிக்கெடக்கு.’’ அவள் அவ்வளவு ஆவேசத்துடன் பேசி சசி பார்த்தில்லை. எப்பொழுதும் இவன் பேசி அவள் அமைதியாவாள். அன்று அனைத்தும் எதிர்மறையாகவே இருந்தது. அழுதுகொண்டே கிளம்பத் தயாரானாள். முதன்முறையாக சசி அவளின் கையை பிடித்து,
“மித்ரா என்ன விட்டு போகாதடி ப்ளீஸ்டி” என்றான். அவளுக்கு அழுகை இன்னும் ஆர்பரித்தது.
சசி வேணாம் நான் கெளம்புறேன் என்று தன் கண்ணீரை துடைத்துக் கொண்டே நடந்தாள்.
சசிக்கு அவள் ஐ லவ் யூ சொன்னதை நினைத்து சந்தோஷப்படுவதா, அவளே இல்லையே என வருத்தப்படுவதா என தெரியாமல் தலையில் கை வைத்து கண்ணீருடன் அமர்ந்திருந்தான்.
தூரத்தில் ஒலித்த யுவனின் குரல்
"அழகான நேரம் அதை நீ தான் கொடுத்தாய்
அழியாத சோகம் அதையும் நீ தான் கொடுத்தாய்
கண்தூங்கும் நேரம் பார்த்து
கடவுள் வந்து போனது போல்
என் வாழ்வில் வந்தே போனாய்
ஏமாற்றம் தாங்கலையே
பெண்ணே நீ இல்லாமல்
பூலோகம் இருட்டிடுதே
போகாதே! போகாதே!”
சசியின் வலியை வருடிக்கொடுத்து வலுவிழக்க செய்து கொண்டிருந்தது.
அரசியலிலும், சினிமாவிலும் நிரந்தர எதிரி என்பது கிடையாதாம்
என்னைப்பொருத்தவரை காதலிலும் அப்படித்தான்.
காலம் உள்ளவரை காதல் செய்.
கடந்து போவது தானே சார் வாழ்க்கை .
இவண்
ஜெ. சந்தோஷ் பாலாஜி ஜெயராமன்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.