Published:Updated:

பன்றிக் குட்டிகள்! - குறுங்கதை

ராமசாமியின் மூத்த மகன் பிரகாஷ், கையில் மூன்று மாதங்களே ஆன பன்றிக் குட்டிகளுடன் எதிரே நின்று கொண்டிருந்தான். இதைப் பார்த்துதான் ராமசாமி அதிர்ந்து போய் உயிரற்றவர் போல் இருந்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

ராமசாமி இதை சற்றும் எதிர்பார்க்க வில்லை.


ஒரு கணம் ஆடிப்போனார்.அதிர்ந்து போனார்.


ஏன் உயிரே அற்றதுபோல் இருந்தது.


காரணம் ராமசாமியின் மூத்த மகன் பிரகாஷ், கையில் மூன்று மாதங்களே ஆன பன்றிக் குட்டிகளுடன் எதிரே நின்று கொண்டிருந்தான்.

இதைப் பார்த்துதான் ராமசாமி அதிர்ந்து போய் உயிரற்றவர் போல் இருந்தார்.


பிரகாஷ் இன்ஜினியரிங் முடித்து மூன்று வருடங்களுக்கும் மேல் ஆகி விட்டது.ஆனால் சரியான வேலை கிடைக்கவில்லை.


பார்ப்பவர்களுக்கு எல்லாம் ராமசாமியால் பதில் சொல்ல முடியவில்லை.

இன்ஜினியரிங் முடித்த பையன் "வேலை கிடைக்கல...வேலை கிடைக்கலன்னு இப்படி வெட்டியா ஊரை சுத்திகிட்டு இருக்கானே!என்று கவலை கொள்ள ஆரம்பித்தார்.

இந்த கவலை பிரகாசுக்கும் இல்லாமல் இல்லை.

சொந்தக்காரர்கள் உற்றார் உறவினர்கள் இப்படி யார் எங்கு பார்த்தாலும் "என்னப்பா பண்ற?சும்மா தான் இருக்கியா?என்று இப்படி ஏளனமாய் கேட்க ஆரம்பித்தனர்.

பிரகாஷால் இதற்கு பதில் கூற முடியவில்லை.

Pig
Pig

பிரகாஷாலே முடியாதபோது அப்பா ராமசாமியால் எப்படி எதிர்கொள்ள முடியும்.

ஆனால் எதிர்கொண்டார்.

அந்த கோபம் ராமசாமிக்கு நாளடைவில் பிரகாஷ் மேல் வெறுப்பை உண்டாக்கியது.

பின்னே இருக்காதா?எந்த அப்பா அம்மாவுக்கு தான் ஆசை இருக்காது?

பையன் படிச்சு முடிச்சு வேலைக்குப்போய் நல்லா சம்பாரிச்சு குடும்பத்தை காப்பாத்துவான்னு இல்லாமலா போகும்?


எல்லோருக்கும் உள்ள ஆசை தானே?


அதற்கு இவர்கள் மட்டும் என்ன விதி விலக்கா?


ஆனால் இவர்கள் ஆசைதான் நிராசை ஆகிவிட்டதே?


அந்த நிராசையின் வெறுப்பு தான் பிரகாஷ் மேல் கொந்தளித்தது.


"இப்படி தினமும் வெட்டியா ஊரை சுத்திகிட்டு திரியிறதுக்கு பேசாம நாலு பண்ணி வாங்கி தர்றேன் மேயுடா"என்று அந்த வெறுப்பு நாள்தோறும் பிரகாஷ் மேல் அரங்கேறியது.


ஆரம்பத்தில் இந்த பேச்சு பிரகாசுக்கு கவலையை தந்தது.


நாளடைவில் பழக்கமாகி விட்டது.


இப்பொது திட்டாமல் விட்டால் தான் புதுசு போலிருந்தது.


இப்படி நாட்கள் ஓடி கொண்டிருக்க,பிரகாசுக்கு ஒருநாள் மூளையில் பொறி தட்டியது.


அது தினமும் அப்பா திட்டும் பேச்சு.

"இப்படி தினமும் வெட்டியா ஊரை சுத்திக்கிட்டு திரியிறதுக்கு பேசாம நாலு பன்றி வாங்கி தர்றேன் மேயுடா"என்று சொல்லியது நினைவுக்கு வந்தது.

பேசாம அப்பா சொன்னதுபோல் நாலு பன்றிகளை வாங்கி மேய்ச்சா தான் என்ன? என்று தோன்றியது.

அதன் விளைவு இப்போது கையில் நாலு பன்றி குட்டிகளுடன் நின்று கொண்டிருந்தான்.

அதைப்பார்த்து தான் அப்பா அதிர்ந்துபோய் உயிரற்றவர் போல் நின்று கொண்டிருந்தார்.

பார்க்க பார்க்க அவர் அடி வயிறெல்லாம் எரிந்தது.

கடும் கோபம் அடைந்தார்.

"ஏன்டா நான் சொன்னதுக்கு வேணுமுன்னே இப்படி பன்னிக்குட்டி வாங்கிட்டு வந்து என்னை அசிங்கப்படுத்துறியா? என்று கோபம் கொப்பளிக்க திட்ட, ஊரே வேடிக்கை பார்த்தது.


"நல்லா படிக்க வச்ச பையன் இப்படி ஊரே சிரிக்க வச்சிட்டானே"என்று தினமும் உள்ளூர வேதனையில் அழுதார்.

பிரகாஷ் அதைப் பற்றியெல்லாம் கவலை கொள்ளவில்லை.


ஊரே ராமசாமியை கிண்டல் செய்தது.


இந்த கேலி கிண்டல் அவமானத்தை எல்லாம் தாண்டி பிரகாஷ் பன்றிகளை வளர்ப்பதில் தீவிரமானான்.


நாட்கள் உருண்டோடின.


இன்று பிரகாஷின் பன்றி வளர்ப்பு பெரும் நிறுவனமாக மாறி முதலீட்டை கோடிக்கணக்கில் குவித்து கொண்டிருக்கிறது.

நாள் ஒன்றுக்கு டன் கணக்கில் வெளி மாநிலங்களுக்கும்,அண்டை மாநிலங்களுக்கும் பன்றி இறைச்சிகள் ஏற்றுமதி ஆகி கொண்டிருக்கிறது.

வெளிநாடுகளுக்கும் சென்று கொண்டிருக்கிறது.

பிரகாஷின் நிறுவனத்தில் 250க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கின்றனர்.

அதுபோக வாரத்தில் ஒருநாள் படித்து வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்கள் பலருக்கும் இந்த பன்றி வளர்ப்பு சுய தொழிலை கற்று தருகிறான்.


எந்த ஊர் உலகம் கேலி கிண்டல் செய்ததோ இன்று அந்த ஊரே அவனை தலையில் வைத்து கொண்டாடுகிறது.


ஆனால் பிரகாஷ் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவன் தொழிலில் இன்னும் இன்னும் வேகமாய் இயங்கி கொண்டிருக்கிறான்.

- செந்தில் வேலாயுதம்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு