Published:Updated:

‘என்னைக் கொன்ற அந்த டீக்கடை!’ | குறுங்கதை | My Vikatan

Representational Image

எல்லாரும் மும்முரமாக டீ சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். சிலர் என் கையிலிருந்த புத்தகத்தைப் பார்த்தார்கள். ஆனால், யாரும் எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை.

‘என்னைக் கொன்ற அந்த டீக்கடை!’ | குறுங்கதை | My Vikatan

எல்லாரும் மும்முரமாக டீ சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். சிலர் என் கையிலிருந்த புத்தகத்தைப் பார்த்தார்கள். ஆனால், யாரும் எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

அன்று அந்த புத்தகக் கண்காட்சியில் வாங்கிய அந்த புத்தகத்தோடு,  ‘வெற்றிக் களிப்பா? பெருமிதமா? இல்லை அதை என்னவென்று சொல்வது? ஒருவித நெஞ்சு நிமிர்த்தலோடு மாலை மணி ஆறிருக்கும் சாதித்த திமிரோடு அந்த டீக் கடையை நெருங்கினேன்.

நான் கையில் வைத்திருப்பது எதோ பேச்சுப்போட்டியிலோ அல்லது வேறு எதோ சாதனைக்கோ வெகுமதியாகக் கிடைத்த புத்தகம் அல்ல.. புக் ஃபேரில் வாங்கியது. இருந்தாலும், ‘இது கையிலிருந்தால், என்னை எல்லாரும் ‘பெரிய படிப்பாளி!’  என்று நினைப்பார்களே!’ என்ற ஆழ்மன ஆசையின் வெளிப்பாடுதான் அது. 

Representational Image
Representational Image

அட்டையிலுள்ள புத்தகப் பெயர் தெரியுமாறு நாலு பேர் பார்க்க பிடித்துக் கொண்டு டீக் கடைக்குள் உள்ளே நுழைந்தேன். எல்லாரும் மும்முரமாக டீ சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். சிலர் என் கையிலிருந்த புத்தகத்தைப் பார்த்தார்கள். ஆனால், யாரும் எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை. 

டீ சப்ளை செய்யும் அந்தச் சின்னப் பையன் என் அருகே வந்தான்.

‘அண்ணா, என்ன சாப்பிடுறீங்க? பப்ஸ்’ சூடா இருக்கு தரட்டுமா?’ என்றான். அவன் பார்வை என் கையிலிருந்த புத்தகத்தின் மீது பட்டது

‘ஓ!  சேகுவேரா-வா?’. சூப்பர் புக்குணா! என்றான் கண்கள் மின்ன!.

‘நீ,  படிச்சிருக்கயா… இந்த புக்கை?!’ கேட்டேன். கேள்வியில் ஒரு நக்கல் என்னையுமறியாமல். 

அவன் உதட்டைப் பிதுக்கிவிட்டுச் சொன்னான்.  கொஞ்ச நாள் முன்னாடி ஒரு தினசரியில படக் கதையா வந்தது. நம்ம டீக்கடையில அந்தப் பேப்பர் வாங்கினாங்கங்கறதுனால அப்பவே படிச்சிட்டேன்!’ என்றான் எந்த மாற்றமுமில்லமல். 

‘நான்,  எதோ என் சொத்தையே வித்து  சேகுவேரா புத்தகம் வாங்கியதாக  நினைத்து நிமிர்த்திய கர்வமும் திமிரும்,  அந்த டீ கடை சிறுவனால் குற்றுயிரும் கொலையுயிருமாகக் குத்தப்பட்டு கொல்லப்பட்டு மரணித்துக் கொண்டிருந்தது அந்தப் பையன் உட்பட இதுவரை யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை!

                                         ****

-வளர்கவி, கோவை.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.