Published:Updated:

"ரெயின் போ" சேவல்! |சிறுகதை | My Vikatan

Representational Image

"ஏய் ஏய்! அங்க போவாத! அங்க பராந்து வரும்! இருட்ட போவுது மரியாதயா வீட்டு பக்கம் ஓடு! இல்ல,மவனே உன் கால ஒடிச்சி காக்காவுக்கு போட்டுடுவேன்!" என அந்த மூன்று மாத சேவல் குஞ்சை, சிறுமி "வேலாயி" துரத்த துரத்த, அது அசுர வேகத்தில், கைக்கு சிக்காமல் ஒடிக்கொண்டே இருந்தது.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

"ஏய் ஏய்! அங்க போவாத! அங்க பராந்து வரும்! இருட்ட போவுது

மரியாதயா வீட்டு பக்கம் ஓடு! இல்ல, மவனே உன் கால ஒடிச்சி காக்காவுக்கு போட்டுடுவேன்!" என அந்த மூன்று மாத சேவல் குஞ்சை, சிறுமி "வேலாயி" துரத்த துரத்த, அது அசுர வேகத்தில், கைக்கு சிக்காமல் ஒடிக்கொண்டே இருந்தது. அவள் களைத்துப்போய் "நீ எக்கேடு கெட்டுனா செத்து தொல"என கோவத்தில் கத்திவிட்டு, தன் சிறிய குடிசைவீட்டு திண்ணையில் மூச்சு வாங்கியபடி அமர்ந்து கொண்டாள். அடுத்த ஐந்தாவது நிமிடம், அந்த "ரெயின் போ" சேவல் குஞ்சு பவ்யமாய் வந்து அவள் மடியில் அமர்ந்து கொண்டது. "சீ போ! என்கிட்ட வந்த உன் கழுத்த முறிச்சி போட்டுடுவேன்" என பொய் கோபத்துடன் அதை வீசி எறிய, அது மீண்டும் பறந்து வந்து மடியில் அமர்ந்து, அவள் பிஞ்சு உதடுகளை தன் அலகால் வருடிகொடுக்க, அவள் அதை வாரி அணைத்து முத்தம் கொஞ்சினாள்.

வீட்டின் உள்ளிருந்த அவள் தாய்"ஏ மூதேவி, பத்து வயசாச்சி, இப்பவோ நாளைக்கோ பூப்பெய்தற வயசுல , அம்மாவுக்கு சோறாக்க ஒத்தாசை பண்றத உட்டுட்டு, தெனமும் சாய்ந்தர்த்தில அந்த கோழிகூட ஓட்ட பந்தியம் ஓடிக்கிட்டு இருக்கியே! இது உனக்கே அடுக்குமாடி" என தன் ஒரே மகளை, செல்லமாக ஏசத்தொடங்க, அவள் அதை பத்திரமாக தன் படுக்கைக்கு அருகில் இருந்த, பஞ்சாரத்துல அடைச்சிட்டு தாயிடம் ஓடினாள்!

Representational Image
Representational Image

"ரெயின்போ சேவல்"குஞ்சு, ஒரிரு மாதத்துக்கு முன், பருந்தின் பிடியிலிருந்து எப்படியோ தப்பி, குற்றுயிரும் குலை உயிருமாய்,

புழக்கடையில் வேலாயி யால் கண்டெடுக்கப்பட்டு, காப்பாற்றப்பட்டு, புனர்ஜன்மம் எடுத்த சேவல் குஞ்சு.

படிப்பில் படுசுட்டியான அவளுக்கு ஒருமுறை, இங்கிலீஷ் டீச்சர் வானவில்லுக்கு "ரெயின் போ" என சொல்லி கொடுத்ததை அப்படியே நினைவில் வைத்துக்கொண்டு,, தன் சேவல் குஞ்சின் சிறகுகள் வளர வளர, பல வண்ணங்களில் நிறம் மாறுவதை கண்டு, செல்லமாக அந்த பெயரை சூட்டினாள்! அவள் அம்மாவுக்கும் அந்த சேவல் குஞ்சை கண்டால் மிகவும் பிடிக்கும்.

நாட்கள் வேகமாக நகர்ந்தன...

இதோ ஓராண்டு முடிந்து விட்டது! "ரெயின் போ" சேவல் குஞ்சு, நன்கு வளர்ந்து அழகிய சிகப்பு கொண்டையுடன், சிகப்பு பச்சை நீலம் மஞ்சள் என பல வண்ண இறகுகளுடன், இன்று அந்த ஏரியாவுக்கே "பட்சிராஜாவாகி", பெட்டை கோழிகளை அக்கால"கமல்" போல்,கவர்ந்து ஆளுமை செலுத்தி, பவனி வருவது கண்டு வேலாயிக்கு பரம சந்தோஷம். "ரெயின்போ" என அவள் ஒரு குரல் கொடுத்தால் போதும், எங்கிருந்தாலும் உடனே அவள் முன் ஆஜராகிவிடும். அவள் வீட்டில் இருக்கும் வரை அவளிடமே சுற்றி கொண்டிருந்துவிட்டு, அவளை தினமும் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பள்ளி வரை சென்று வழி அனுப்பிவிட்டு வீடு வந்து சேரும். அவளும், தனக்கு கிடைக்கும் எல்லா தின்பண்டங்களையும் அதனுடன் பகிர்ந்து கொள்வாள். அவளை யாராவது திட்டி பேசினால் , அவர்களை குத்த முயற்சி செய்யும்! ஒருமுறை அது எங்கோ தொலைந்து போய்விட, அதை தேடித்தேடி அலைந்து,அன்ன ஆகாரமின்றி தவித்துபோனாள் வேலாயி! நல்ல வேளை அடுத்த நாள் அது, எங்கேயோ ஊர் சுற்றி விட்டு தானாகவே வீடு திரும்பி விட்டது!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

"ஏய் ஏய்! அங்க போவாத! அங்க பராந்து வரும்! இருட்ட போவுது மரியாதயா வீட்டு பக்கம் ஓடு! இல்ல,மவனே உன் கால ஒடிச்சி காக்காவுக்கு போட்டுடுவேன்!" என அந்த மூன்று மாத சேவல் குஞ்சை, சிறுமி "வேலாயி" துரத்த துரத்த, அது அசுர வேகத்தில், கைக்கு சிக்காமல் ஒடிக்கொண்டே இருந்தது. அவள் களைத்துப்போய் "நீ எக்கேடு கெட்டுனா செத்து தொல"என கோவத்தில் கத்திவிட்டு, தன் சிறிய குடிசைவீட்டு திண்ணையில் மூச்சு வாங்கியபடி அமர்ந்து கொண்டாள். அடுத்த ஐந்தாவது நிமிடம், அந்த "ரெயின் போ" சேவல் குஞ்சு பவ்யமாய் வந்து அவள் மடியில் அமர்ந்து கொண்டது. "சீ போ! என்கிட்ட வந்த உன் கழுத்த முறிச்சி போட்டுடுவேன்" என பொய் கோபத்துடன் அதை வீசி எறிய, அது மீண்டும் பறந்து வந்து மடியில் அமர்ந்து, அவள் பிஞ்சு உதடுகளை தன் அலகால் வருடிகொடுக்க, அவள் அதை வாரி அணைத்து முத்தம் கொஞ்சினாள்.

வீட்டின் உள்ளிருந்த அவள் தாய்"ஏ மூதேவி, பத்து வயசாச்சி, இப்பவோ நாளைக்கோ பூப்பெய்தற வயசுல , அம்மாவுக்கு சோறாக்க ஒத்தாசை பண்றத உட்டுட்டு, தெனமும் சாய்ந்தர்த்தில அந்த கோழிகூட ஓட்ட பந்தியம் ஓடிக்கிட்டு இருக்கியே! இது உனக்கே அடுக்குமாடி" என தன் ஒரே மகளை, செல்லமாக ஏசத்தொடங்க, அவள் அதை பத்திரமாக தன் படுக்கைக்கு அருகில் இருந்த, பஞ்சாரத்துல அடைச்சிட்டு தாயிடம் ஓடினாள்!

"ரெயின்போ சேவல்"குஞ்சு, ஒரிரு மாதத்துக்கு முன், பருந்தின் பிடியிலிருந்து எப்படியோ தப்பி, குற்றுயிரும் குலை உயிருமாய், புழக்கடையில் வேலாயி யால் கண்டெடுக்கப்பட்டு, காப்பாற்றப்பட்டு, புனர்ஜன்மம் எடுத்த சேவல் குஞ்சு.

படிப்பில் படுசுட்டியான அவளுக்கு ஒருமுறை, இங்கிலீஷ் டீச்சர் வானவில்லுக்கு "ரெயின் போ" என சொல்லி கொடுத்ததை அப்படியே நினைவில் வைத்துக்கொண்டு,, தன் சேவல் குஞ்சின் சிறகுகள் வளர வளர, பல வண்ணங்களில் நிறம் மாறுவதை கண்டு, செல்லமாக அந்த பெயரை சூட்டினாள்! அவள் அம்மாவுக்கும் அந்த சேவல் குஞ்சை கண்டால் மிகவும் பிடிக்கும்.

நாட்கள் வேகமாக நகர்ந்தன...

Representational Image
Representational Image

இதோ ஓராண்டு முடிந்து விட்டது! "ரெயின் போ" சேவல் குஞ்சு, நன்கு வளர்ந்து அழகிய சிகப்பு கொண்டையுடன், சிகப்பு பச்சை நீலம் மஞ்சள் என பல வண்ண இறகுகளுடன், இன்று அந்த ஏரியாவுக்கே "பட்சிராஜாவாகி", பெட்டை கோழிகளை அக்கால"கமல்" போல்,கவர்ந்து ஆளுமை செலுத்தி, பவனி வருவது கண்டு வேலாயிக்கு பரம சந்தோஷம். "ரெயின்போ" என அவள் ஒரு குரல் கொடுத்தால் போதும், எங்கிருந்தாலும் உடனே அவள் முன் ஆஜராகிவிடும். அவள் வீட்டில் இருக்கும் வரை அவளிடமே சுற்றி கொண்டிருந்துவிட்டு, அவளை தினமும் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பள்ளி வரை சென்று வழி அனுப்பிவிட்டு வீடு வந்து சேரும். அவளும், தனக்கு கிடைக்கும் எல்லா தின்பண்டங்களையும் அதனுடன் பகிர்ந்து கொள்வாள். அவளை யாராவது திட்டி பேசினால் , அவர்களை குத்த முயற்சி செய்யும்! ஒருமுறை அது எங்கோ தொலைந்து போய்விட, அதை தேடித்தேடி அலைந்து,அன்ன ஆகாரமின்றி தவித்துபோனாள் வேலாயி! நல்ல வேளை அடுத்த நாள் அது, எங்கேயோ ஊர் சுற்றி விட்டு தானாகவே வீடு திரும்பி விட்டது!

ஒருநாள்,...

அவள் அம்மாவின் பணக்கார தாய்மாமன், தன் மனைவியுடன், மகனின் "கல்யாண அழைப்பிதழ்" கொடுத்து அழைக்க வந்தனர். அவள் அப்பா அம்மாவுக்கோ ஏக சந்தோசம் "என்னிக்குமே வாராதவங்க இன்னிக்கி வீடு தேடி வந்திருக்கீங்க ! ரெண்டு நா , மறுப்பு சொல்லாம தங்கிட்டு போகணும்" என்று விழுந்து விழுந்து உபசரித்தனர். அவர்கள் கொண்டுவந்த பலகாரங்களை வேலாயி, சேவலுடன் பகிர்ந்து உண்டாள். அன்று சனிக்கிழமை என்பதால், மரக்கறி பதார்தத்துடன், வடை பாயசத்துடன் தடபுடலாக விருந்து உபசரணை நடந்தது,.

மதியம் தாம்பூலம் தரித்தபடியே, பேசிக்கொண்டு இருந்தபோது, அந்த மாமாவின் கண்களில் ரெயின்போ சேவல் பட்டுவிட"என்னடா அப்பா! சேவல் நம்புள்தா! ஷோக்கா கொழு கொழுன்னு இருக்கே " என அர்த்த புஷ்டியுடன் கேட்க "அதுவந்துங்க மாமா! நம்ம புள்ள வேலாயி அத ஆசையா வளக்கரா!"என கூற,"ஹும், நாட்டு கோழி திண்டு பல காலம் ஆச்சி! என்னன்னா சொல்லு அது ருசியே தனிதான்"என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்த,"அதுக்கென்ன மாமா! நாளைக்கு காலைலயே அத அடிச்சி கொழம்பு வச்சி பூடுவோம்!"என கூற, அவர் பல் இளித்தபடி" நல்லவேள, நாள்நண்ணிக்கு தான் புரட்டாசி பொறக்குது... பெருமாள் மாசம்,

கவுச்சிய கண்ணால கூட பாக்கற்து பாவம்!"என்று ஏதோ உலக மகா ஜோக் சொல்லியதுபோல "இடி இடி" என தங்கப்பல் தெரிய சிரிக்க, அவள் அப்பாவும் மரியாதைக்காக, சிரிப்பில் கலந்துகொண்டார்.

 சேவல்
சேவல்
படங்கள்: வீ.சிவக்குமார்

இதை கேட்ட அடுத்த நொடி, அவள் தனிமையில் ஓவென்று தேம்பி தேம்பி அழ தொடங்கிவிட்டாள்! அம்மாவிடம் மெல்ல "வேண்டாம்மா! அது ரொம்ப பாவம்மா! அதுக்கு எம்மேல ரொம்ப உசுருமா, அது இல்லாம என்னால இருக்க முடியாதும்மா!" என கெஞ்சி கூத்தாட "அவுக எவ்ளோ பெரிய மனுஷங்க! வெவரம் புரியாம பேசாத புள்ள, ஒங்கப்பன் காதுல கீதுல விழுந்து வைக்க போவுது! ஆத்திரத்தில அடிச்சி போடுவார் உன்னிய!ஒண்ணு இல்ல ரெண்டு கோழி குஞ்சிய புதுசா வாங்கி தர்றேன். இதேமாரி வளத்துக்குணா போச்சி" என்று ஆறுதல் கூறி தேற்ற முயன்றாள்.

ஆனால் வேலாயிக்கு, துக்கம் மேலும் மேலும் அதிகரிக்க...

எப்படியாவது அதை காப்பாற்றியே தீர வேண்டும் என உறுதி பூண்டாள். அவளுக்கு அன்ன ஆகாரமே இரங்கவில்லை.. மாலை தன் அப்பா வெட்டுகத்தியை தீட்டி, நாளைய "பலிக்கு" தயார் செய்வதை பார்த்தபோது, அவர் மேல் அளவு கடந்த வெறுப்பு ஏற்பட்டது.

"ரெயின் போ" வுக்கோ, நாளை தனக்கு நிகழப்போகும் கொடுமை பற்றி ஏதும் தெரியாததால், அது ஜாலியாக இவளுடன் விளையாட, இவளோ அதை பார்த்து பார்த்து அழுது கொண்டே இருந்தாள்!

அதை எப்படி காப்பாற்றுவது? என உபாயம் தேடித்தேடி மனம் நொந்து போனாள். கடைசியில் ஒரு ஐடியா தோன்றியது. அதன்படி இரவு அனைவரும் தூங்கியதும். சேவலுடன் யாருக்கும் தெரியாமல், சத்தம் காட்டாமல் மெல்ல புழக்கடை வழியாக வெளியேறி, கண்காணாத தூரத்தில் அது தப்பி செல்ல ஏதுவாக, விட்டுவிட ஓடினாள்.. வெகுதூரம் சென்றதும், ஓவென்று அழுதபடி அதை கட்டி அணைத்து அன்பாக தடவி கொடுத்து கீழே விட்டுவிட்டு

" ரெயின் போ செல்லமே! எங்கனா தப்பிச்சி போய் உயிர் பொழச்சிக்கோ" என கேவிக்கேவி கண்ணீர் விட்டபடி ,வீடு திரும்ப எத்தனிக்க, தன் பின்னால் இருட்டில் ஒரு பெண் உருவத்தை கண்டு கத்த வாயெடுத்தபோது "அடியே பயப்படாத கண்ணு, நான்தான் பக்கத்து வீட்டு பட்டம்மா அத்தடி"என கூற, அவள் பயம் நீங்கியது. உடனே அத்தையிடம் நடந்ததை கூற "நீ இங்க விட்டுட்டு போனா திரும்பவும் அது உம் பின்னாடியே ஊட்டுக்கு வந்துடும்! நீ கவலப்படாத கண்ணு, நாளைக்கு முச்சூடும், எங்க வீட்ல அத பத்தரமா ஒளிச்சி வச்சி பாதுகாக்கறேன்! அடுத்த நாள் புரட்டாசி பொறந்துடும்.. உன் சேவலுக்கும் எந்த குறையும் வராது" என கூறி அவள் கண்ணீரை துடைத்தாள்.

அடுத்த நாள், காலையில் அனைவரும் சேவலை தேடித்தேடி, காலொடிஞ்சி அலுத்துப்போக! அவன் மனைவியிடம் "அந்த பக்கத்து ஊட்டு சிறுக்கி மேலதான் எனக்கு சந்தேகம். எப்பப்பாத்தாலும் நம்ம சேவலயே உத்து உத்து பாத்துக்கிட்டே இருப்பா!, வா அவகிட்ட போய் விசாரிப்போம்" என கோபமாய் கூற "ஆம்பளைங்க நீங்க வரவேண்டாங்க! நான் போய் கண்டு பிடிச்சிட்டு வரேன்" என்று சேலைய வரிஞ்சி கட்டிக்கிட்டு, அவள் வீட்டில் நுழைந்த, அடுத்த நிமிஷம், நம்ம "ரெயின்போ ராசா", வெலாயி அம்மாவின் வாசனைய எப்படியோ கண்டுபிடித்து குஷியில் "கொக்கரக்கோ" என மெல்லிய கூவலை வெளிப்படுத்த,...

அந்த அத்தைக்கு சப்த நாடியும் அடங்கி வேர்த்து கொட்டியது... "இவளுக்கு நாம என்ன பதில் சொல்றது" ,என எண்ணியபடி கையை பிசைந்து கொண்டு நின்றாள்!

ஆனால் வேலாயியின் அம்மாவோ, அவள் கரங்களை மெல்ல அழுத்தி "உஷ்" என சைகை காட்டி... விழியாலேயே "பயப்படாதே, எனக்கு எல்லா உண்மையும் தெரியும்" என நயன பாஷையில் பேசிவிட்டு..

மெல்ல வெளியேறி, கணவனிடம் "அவுங்க ஊடு ஃபுல்லா தேடியாச்சி.. எங்கையும் அத காணமுங்க! பாவம் அவங்க மேல வீணா சந்தேக பட்டுட்டோம்"என கூறியபடி,

மகளின் முகம் நோக்க, அது அன்றலர்ந்த தாமரை போல் மலர்ந்து, மகிழ்ந்து இருந்தது!

தாய்மாமாவோ, கோழிக்குழம்பு விருந்து பறிபோனதால், முகம் வாடி பெருத்த ஏமாற்றத்துக்கு ஆளாகி, அசடு வழிய ,அசட்டை சிரிப்புடன் "அதான் கோழி குழம்பு இல்லேன்னு ஆயுடிச்சேப்பா! அப்ப , நாங்க பத்து மணி பஸ்சுக்கே புறப்படறோம்.. கல்யாண வேலை தலைக்கு மேலே ஏகப்பட்டது கடக்கு! கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்கூட்டியே வந்துருங்க" என்றபடி மூட்டை முடிச்சுகளுடன் கிளம்பி சென்றனர்! வேலாயி தன் புத்தக பையில் இருந்த பெருமாள் படத்தை எடுத்து கண்ணீரால் அபிஷேகம் செய்வதை, அவள் தாய் கனிவுடன் விழிநீர் பனிக்க, ஒளிந்திருந்து பார்த்தாள்!

(முற்றும்)

-மரு உடலியங்கியல் பாலா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.