Published:Updated:

முதல் தேநீர்! | My Vikatan

Representational Image

இன்று ஒரு நாள்தானே விடுமுறை நாள் பாவம் அவளாவது நன்றாக உறங்குட்டுமே! என உள் மனது மேனகாவுக்கு அவரிடம் பரிந்துரை செய்தது..

முதல் தேநீர்! | My Vikatan

இன்று ஒரு நாள்தானே விடுமுறை நாள் பாவம் அவளாவது நன்றாக உறங்குட்டுமே! என உள் மனது மேனகாவுக்கு அவரிடம் பரிந்துரை செய்தது..

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

ஒரு ஞாயிற்றுக்கிழமை,

இன்னிக்கின்னு பார்த்து அலாரம் வைக்காமலே, இந்த பாழாப்போன முழிப்பு வந்து தொலைத்து விட்டதே.. என கண்களை கசக்கிக் கொண்டு படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தார் கனகவேல்..

அலுவலக நாட்களிலெல்லாம் காலை 6 மணிக்கு அலாரம் அடித்தும் உறக்கம் கண்களை சொருகிகொண்டு வரும் இன்று விடுமுறை தினம் ஆகவே இன்றொரு நாள் நீண்ட நேரம் உறங்கி ஓய்வெடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தார்..

பின்னர், எவ்வளவோ கண்களை மூடிப் பார்த்து முயற்சி செய்திடினும் களைந்த உறக்கம் LKG பிள்ளை பள்ளிக்குச் செல்ல முரண்டு பிடிப்பது போல் முரண்டு பிடித்துக் கொண்டு வந்தபாடில்லை..

கனவேலுக்கு அலுவலக நாட்களில் காலை எழுந்தவுடன் மனைவி மேனகா சூடான தேநீர் போட்டுக் கொடுப்பாள்..

இன்றோ! பாவம் என்ன அசதியோ தெரியவில்லை, நன்றாக போர்வையை இழுத்துப் போட்டுக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்தாள்...

வாசலில் யாரோ சைக்கிளில் மணி அடித்து விட்டுச் சென்றார்கள்...

கதவைத் திறப்பதற்குள் பால்காரர் தான் மணி அடித்துவிட்டு காம்பவுண்ட் கேட்டில் தொங்க விடப்பட்டிருந்த துணிப்பைக்குள் பால் பாக்கெட்டை திணித்து விட்டுச் சென்றிருந்தார்..

அதற்கு முன்பாகவே பேப்பர்காரர் இன்றைய தினசரியை வராண்டாவுக்குள் விட்டுச் சென்றிருந்தது தெரிந்தது.

ஒரு கையில் பால் பாக்கெட்டையும், மறுகையில் அன்றைய பேப்பரையும் எடுத்துக் கொண்டு வாசல் கதவை அடைத்துவிட்டு திரும்பினார்...

Representational Image
Representational Image

வழக்கம்போல் பால்காரரின் மணி சத்தத்திற்கு எழுந்துவிடும் மேனகா இப்போது ஏதோ நள்ளிரவு மயக்கத்தில் உறங்குவது போல் இன்னமும் நன்றாக போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு உறங்கினாள்..

எப்பொழுதும் எழுந்தவுடனே தேநீர் அருந்திவிடும் கனகவேலுக்கு இப்போது எழுந்து சில நேரமாகியும் தேநீர் அருந்தாதது வாய்க்குள் ஏதோ நமநமவென்று இருந்தது..

மேனகாவை எழுப்புவோமா! என் நினைத்த மாத்திரத்தில் ..

இன்று ஒரு நாள்தானே விடுமுறை நாள் பாவம் அவளாவது நன்றாக உறங்குட்டுமே! என உள் மனது மேனகாவுக்கு அவரிடம் பரிந்துரை செய்தது..

சரி! இன்று நாமே தேநீர் போட்டு அவளுக்கும் கொடுத்து அசத்துவோம் என மனதுக்குள் எண்ணிக் கொண்டவராக அடுக்களைக்குள் நுழைந்தார்.

பாத்திரத்திற்குள் நீரை குடி வைத்து அதனை அடுப்பில் வைத்து சிலிண்டரின் வாயை திருகி எரியூட்டினார்..

தண்ணீர் கொதிக்கும் நேரத்தில் இன்றைய முக்கிய செய்தியை சிறிது நேரம் மேய்வோம் என விழிகளை செய்தித்தாளில் மேய விட்டிருந்தார்.

அன்றைய செய்திகளின் சுவாரசியத்தில் சிறிது நேரம் மூழ்கிப் போக சூடேறிய தண்ணீர் கொப்புளங்களாக வெடித்து ஆவியை வெளித்தள்ளிக் கொண்டிருந்தது.

பின்னர் திடீரென சுதாரித்த கனகவேலு அடுப்பின் வேகத்தை குறைத்து, கைகளை கப் போர்டுக்குள் துழாவி தேயிலைப் பொடியைத் தேடுகையில் அங்கு முழுவதும் மசாலா டப்பாக்கள் மட்டுமே ஆக்கிரமித்திருந்தது..

தேயிலை பொடியை மட்டும் காணவில்லை .

அங்கிருந்து தனது துழாவும் கையை வெளியே எடுக்கையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மசாலா டப்பாக்களில் ஒரு சில கீழே விழுந்து சத்தமிட்டு புரண்டு அழுதன..

இந்த பதற்றத்தோடு அடுத்த கப் போர்டுக்குள் கை விட்டு துழாவ...

அப்பாடா! ஒருவழியாக அங்கு தனியாக ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்துக்குள் சிறைப்பட்டிருந்த தேயிலை பொடியை கண்டெடுத்து..

கொதித்துப் புரண்டு கொண்டிருக்கும் வெந்நீரின் மேனியில் இரண்டு தேக்கரண்டி எடுத்து தெளிக்க அங்கு ஏற்கனவே கொந்தளித்துக் கொண்டிருந்த சூடான தண்ணீர் தேயிலை பொடியை போட்டு பாத்திரத்திற்குள் புரட்டி எடுத்துக் கொண்டிருந்தது...

தேயிலை பொடி தூவிய சிறிது நேரத்திற்குள்ளாகவே டிகாஷன் ரெடியானது...

பின்னர் தமது ஒரு கரத்தில் உள்ள பால் பாக்கெட்டை பிரித்து அதன் தலை மீது கொட்டினார்...

இதற்கிடையில் அடுக்களையில் பாத்திரம் உருட்டும் சத்தம் கேட்டு விழித்துக் கொண்ட மேனகா பூனை புகுந்துவிட்டதாக நினைத்து அடுக்களையில் நுழைந்தபோது..

அங்கு திருதிருவென முழித்தபடி அசடு வழிந்த நிலையில் சிரித்துக் கொண்டே ...

ஹி..ஹி... ச்ச்சும்மா டீ போடலாமேன்னு வந்தேன்.. என்று அசடு வழிந்தார் கனகவேல்..

ஏங்க! என்ன எழுப்ப வேண்டியதுதானே என செல்லக் கடி கடிந்து கொண்டாள்..மேனகா..

"இல்லம்மா நீ தூங்கிட்டுருந்தே!, அதான் டிஸ்டர்ப் பண்ண வேண்டாமேன்னுட்டு.. தோ.. டீ ரெடியாயிடுச்சு... நீ பல் தேய்ச்சுட்டு முகம் கழுவிட்டு வா.. டம்ளர்ல ஊத்தி வைக்கிறேன்.. என்றார் கனகவேல்..

மனைவியின் இதயத்தில் இன்று 'குட்' வாங்கிவிட வேண்டும் என்ற ஆவலில்...

கணவனைப் பார்த்து இதழோரம் புன்முறுவல் பூத்தவளாக குளியலறை சென்றவள்...

அங்கிருந்து கணவனை அழைத்தாள்..

ஏங்க!

என்னம்மா... வேணும்.. என்றார் கனகவேல் மனைவியின் குரல் வந்த திசை நோக்கி..

ஏங்க!.. அந்த ரெண்டாவது கப் போர்டுக்குள்ள.. நேத்திக்கு வாங்குன பல்பொடி டப்பா இருக்கு கொஞ்சம் எடுத்து தரீங்களா??

அங்கே!

அடுப்பில் கொதித்துக் கொண்டிருக்கும் தேநீர் பாத்திரத்தில் பாலின் மேலாடையாக சினந்து, சிவந்து தேநீராக மாறுவதற்கு போராடிக் கொண்டிருந்தது...

மேனகா கேட்டுக் கொண்டிருக்கும் பல்பொடி..

(அடுத்து என்ன நடந்திருக்கும் என்பதை வாசகர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப கனகவேலின் நிலையை பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம்.)

எண்ணமும் எழுத்தும்..

பாகை இறையடியான்..

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.