Published:Updated:

கதிர்வேலன் காதல்! | சிறுகதை | My Vikatan

Representational Image

உடனே கதிர்வேலனின் முகம் மாறியது... இத பாரு பிரவீன்... எனக்கு இந்த காதல் எல்லாம் பிடிக்காது. இருந்தாலும், வேறு பொய்க்காரணம் சொல்லி லீவு கேட்காமல், நீ உண்மையை சொல்லியதால் உனக்கு லீவு தரேன் என்று சொல்ல, மகிழ்ச்சியுடன் நன்றி சார் என்றான் பிரவீன்.

கதிர்வேலன் காதல்! | சிறுகதை | My Vikatan

உடனே கதிர்வேலனின் முகம் மாறியது... இத பாரு பிரவீன்... எனக்கு இந்த காதல் எல்லாம் பிடிக்காது. இருந்தாலும், வேறு பொய்க்காரணம் சொல்லி லீவு கேட்காமல், நீ உண்மையை சொல்லியதால் உனக்கு லீவு தரேன் என்று சொல்ல, மகிழ்ச்சியுடன் நன்றி சார் என்றான் பிரவீன்.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

தனியார் வங்கி மேலாளர் கதிர்வேலன், கடமையில் கண்டிப்பானவர் என்று பெயரெடுத்தவர். ஆனால் சில மாதங்களுக்கு முன், அவரிடம் ஜூனியராக சேர்ந்த பிரவீனிடம் மட்டும் கொஞ்சம் பரிவுடன் இருக்கிறார் என்று அலுவலகத்தில் பேச்சுண்டு. பிரவீன்... சுறுசுறுப்பான இளைஞன்.

சொல்லும் வேலையை கச்சிதமாக முடிப்பவன். அதனால் அவனை அவருக்கு பிடித்திருக்கிறது போலும்... மாலை... அலுவலகம் முடியும் நேரம். பிரவீன் கதிர்வேலன் அருகே வந்து நின்றான்.

சார்..என்றான்.

என்ன பிரவீன்?என்றார் கதிர்வேலன்.

திங்கட்கிழமை லீவு வேணும் சார் என்றான் தயங்கியபடியே...

என்ன திங்கட்கிழமையா?. வாரத்தின் முதல்நாள் ஆயிற்றே... வேலை அதிகமாக இருக்கும் என்று உனக்கு தெரியாதா? என்று கேட்டார்.

தெரியும் சார். ஆனால் திங்கட்கிழமை காதலர் தினம். அன்று என் காதலியிடம் என் காதலை சொல்லப் போகிறேன். இதுவரை நாங்கள் நண்பர்களாய் இருக்கின்றோம். அன்றுதான் நான் சொல்லலாம் என்று இருக்கின்றேன் என்றான் தைரியமாக.

உடனே கதிர்வேலனின் முகம் மாறியது... இத பாரு பிரவீன்... எனக்கு இந்த காதல் எல்லாம் பிடிக்காது. இருந்தாலும், வேறு பொய்க்காரணம் சொல்லி லீவு கேட்காமல், நீ உண்மையை சொல்லியதால் உனக்கு லீவு தரேன் என்று சொல்ல, மகிழ்ச்சியுடன் நன்றி சார் என்றான் பிரவீன்.

சார் உங்களுக்கு காதல்னா பிடிக்காதா? அதான் சார் உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகல.. என்று பிரவீன் கூற..

சற்று முகம் மாறி புன்னகைத்தார் கதிர்வேலன்.

Representational Image
Representational Image

அலுவலகமே அவரை ஆச்சரியத்துடன் பார்த்தது. ஏனெனில் அவர் சிரிப்பதே அபூர்வம். பின்பு அலுவலகம் முடிந்து அனைவரும் வீட்டிற்கு சென்றனர். இரவு படுக்கையில் தூக்கம் வராமல் சிந்தனையில் இருந்தார் கதிர்வேலன். பிரவீன்.. மாலை பேசியதை.. நினைத்து பார்த்து பழைய நினைவுகளுக்குள் மூழ்கினார் கதிர்வேலன்.

பல வருடங்களுக்கு முன்...

அரசினர் உயர்நிலைப் பள்ளி. பன்னிரெண்டாம் வகுப்பு. கதிர் மற்றும் ரூபஸ் நண்பர்கள். கதிர் வீட்டு தெரு முனையில் ஷெரின் வீடு. ஷெரின்... தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தாள். அன்றைய தினத்துக்கு... அவள்தான் அந்த ஏரியாவில் அழகி. அவள் மீது கதிருக்கு சில நாட்களாக விருப்பம் இருந்தது. காலையில் அவள் வீட்டிலிருந்து பள்ளி கிளம்பும் நேரம் பார்த்து சரியாக இவனும் கிளம்பி போவான். நாட்கள் செல்லச் செல்ல இவன் தொடர்ந்து வருவதைப் பார்த்த ஷெரின்... பின்பு அவளும் அவனைப் பார்க்கத் தொடங்கினாள்.

இன்றைய நிலை போல அன்று டெலிபோன், செல்போன்கள் கிடையாது. அதனால் ஷெரினிடம் பேச முடியாமல் தவித்தான் கதிர். வெளியில் பேசலாம் என்றால் அனைவரும் பார்ப்பார்களே, பிறகு வீட்டில் சொல்லி விடுவார்களே... என்ற பயம் அவனுக்கு. என்ன செய்வது என்று யோசித்தான். சட்டென்று அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. ரூபஸ்சும், ஷெரினும் குடும்ப நண்பர்கள் ஆயிற்றே... உடனே ரூபஸ்சை தேடி போனான்.

விஷயத்தைக் கூறி தனக்கு உதவும்படி கேட்டான். முதலில் மறுத்த ரூபஸ் பின்பு நண்பனுக்காக உதவி செய்ய ஒப்புக்கொண்டான். முதல் முயற்சியாக கடிதம் ஒன்றை எழுதினான் கதிர். அது என்னமோ... காதல் வந்த மறுகணமே ஆண்கள் கவிஞர்கள் ஆகிவிடுகிறார்கள். நான்கு வரிகளில் கவிதை ஒன்று எழுதி... கவிதை என்றுதான் நினைத்துக் கொள்ள வேண்டும்... அந்த சமயத்தில் என்ன கிறுக்கினாலும் அது கவிதைதானே... ஒருவழியாக கடிதம் தயார் செய்து ரூபஸ் இடம் கொடுத்து ஷெரினிடம் கொடுக்கச் சொன்னான். அதை வாங்கி சென்று அவளிடம் கொடுத்தான் ரூபஸ். பின்பு இரண்டு நாட்களுக்குப் பிறகு ஷெரின் தான் எழுதிய கடிதத்தை கொடுக்க அதைக் கொண்டுபோய் கதிர் இடம் கொடுத்தான் ரூபஸ். கொஞ்ச நாட்களில் இருவருக்கும் தபால்காரராக மாறி போனான் ரூபஸ்.

ஒரு கடிதத்தில், மறுநாள் மாலை சினிமாவிற்கு போவதாக எழுதி இருந்தாள் ஷெரின். அவள் வருவதற்கு முன்பே தியேட்டரில் போய் நின்றான் கதிர். அவள் குடும்பத்தோடு வந்திருந்தாள். தியேட்டரில்... படம் பார்த்த நேரத்தை விட இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் பார்த்த நேரமே அதிகம். அவள் சர்ச் போகும் நேரம் பார்த்து இவனும் அங்கே எதிரில் போய் நிற்பான். விரைவில் ஒரு நாள் சந்திக்க வேண்டும் என கடிதம் எழுதினான். அவளும் சரி என்று பதில் அனுப்பினாள். இந்த சூழ்நிலையில், சற்றும் எதிர்பாராத ஒரு சம்பவம் கதிர் வகுப்பில் நடந்தது. அறிவியல் ஆசிரியர் கதிரிடம் ஒரு பொறுப்பை ஒப்படைத்திருந்தார். அது... இறுதித் தேர்வு நெருங்கி விட்டபடியால், வகுப்பின் அனைத்து மாணவர்களின் ரெக்கார்ட் நோட் வாங்கி சரிபார்த்து வைக்குமாறு சொல்லி இருந்தார். ஆசிரியர் ஒப்படைக்க சொன்ன நாளன்று... அனைத்து மாணவர்களும் நோட் கொடுத்துவிட ... நான்கு பேர் மட்டும் கொடுக்கவில்லை. அதாவது எழுதி முடிக்கவில்லை. அந்த நான்கு பேரில் ரூபஸ் ஒருவன். இப்ப என்ன செய்வது என்று புரியாமல் கதிர் விழித்துக் கொண்டிருக்கும் பொழுதே... ஆசிரியர் வகுப்பறைக்குள் நுழைந்தார். என்ன கதிர்... எல்லோரும் கொடுத்து விட்டார்களா? என்று கேட்டார். வேறு வழியில்லாமல் நான்கு பேர் மட்டும் முடிக்கவில்லை சார் என கதிர் சொல்ல... கோபத்தில் 4 பேரையும் அனைவர் முன்பே வெளுத்து வாங்கினார் ஆசிரியர்.

Representational Image
Representational Image

அதில் ரூபஸ்சும் ஒருவன். அடிவாங்கிய வலியை விட, அனைவர் முன்பும் அவமானப்பட்டதை ரூபஸால் தாங்க முடியவில்லை. பின்பு கதிர் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் ரூபஸ் கேட்கவில்லை. தன் பெயரை சொல்லாமல் விட்டிருக்கலாம் என்றான். பின்பு இரு நாட்களாக ரூபஸ், கதிரிடம் பேசவில்லை. என்ன செய்வது, ஷெரினிடம் கடிதத்தைக் கொண்டு போய் சேர்க்க வேறு ஆள் இல்லையே... மீண்டும் ரூபஸை தேடிப்போய் பேசினான் கதிர். என்னென்னமோ பேசி சமாதானப் படுத்தினான்.

பின்பு அவனிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்து ஷெரினிடம் கொடுக்கச் சொன்னான் கதிர். அவனும் அதை வாங்கிக்கொண்டு போய் கொடுத்தான். ஆனால் இந்த முறை அவன் கொடுத்தது ஷெரினின் தாய்மாமா விடம்... (எட்டப்பனாக மாறி போனான் ரூபஸ்). அதை வாங்கிப் படித்தார் மாமா. அதில் மறுநாள் பூங்கா அருகே வருமாறு எழுதியிருந்தான் கதிர்.

மறுநாள்... முதல் முதலாக ஷெரினிடம் பேச ஆவலோடு காத்துக் கொண்டிருந்தான் கதிர். ஆனால் வந்ததோ அவளின் தாய்மாமன். அப்பொழுதுதான் ரூபஸ் தனக்கு துரோகம் செய்தது புரிந்தது அவனுக்கு. அருகில் வந்த மாமா, இன்னொரு தடவை ஷெரின் விஷயமாக வந்தால் உன்னை அடித்து துவைத்து விடுவேன் என்று மிரட்டி விட்டுப் போனார். அதன்பின்பு ஷெரின் வீட்டை விட்டு வெளியே வருவதே இல்லை.

Representational Image
Representational Image

இறுதித்தேர்வு நடக்கும் சமயத்தில் அவளின் மாமா அவளை தன் வண்டியில் அழைத்துச் சென்று வந்தார். அனைத்து தேர்வுகளும் முடிந்த பின் ஒருநாள்... வீட்டை காலி செய்து கொண்டு வேறு ஊருக்கு செல்வதற்காக கிளம்பிக் கொண்டிருந்தனர். எல்லாம் ஷெரின் தாய்மாமா ஏற்பாடு போல.. காரில் அனைவரும் எற கடைசியாக ஷெரின் ஒருமுறை இவனை பார்த்துவிட்டு உள்ளே அமர்ந்தாள். அன்றுதான் அவளை இவன் கடைசியாகப் பார்த்தது. பின்பு அவளுக்கு திருமணமாகி இரு குழந்தைகள் இருப்பதாக கேள்விப்பட்டான். ஆனால் அவளை போய் பார்க்க மன மில்லை.

மாற்றான் மனைவியாக, இரு குழந்தைகளுக்கு தாயாக அவளைப் பார்க்க இவனுக்கு விருப்பமில்லை. அவனுக்கு அன்று பார்த்த ஷெரினின் அந்த முகமே நினைவில் நிற்கிறது. அதை கலைக்க அவனுக்கு விருப்பமில்லை... இவ்வாறு முடிந்துபோனது கதிர்வேலன் காதல்.

திங்கட்கிழமை, மதியநேரம்.. கதிர்வேலனின் போன் ஒலிக்க... போன் எடுத்தார்... ஹலோ சார் பிரவீன் பேசுறேன்... என் காதலை சொல்லிட்டேன்... அவளும் ஏற்றுக்கொண்டாள் என்றான் மகிழ்ச்சியோடு... அப்படியா... வாழ்த்துக்கள் என்று கூறிவிட்டு, ஒழுங்கா நாளைக்கு ஆபீஸ் வந்து சேரு என்று சொல்லிவிட்டு போனை கட் செய்தார் கதிர்வேலன்.

எவ்வளவு மகிழ்ச்சியாக பேசுகிறேன் இவர் இப்படிச் சொல்கிறாரே.. இந்த மனுஷன் திருந்த மாட்டாரு... என்று புலம்பியபடியே போனை தன் பாக்கெட்டுக்குள் வைத்தான் பிரவீன்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.