Published:Updated:

மருட்சி! - சிறுகதை

Representational Image

கார்த்திக், அவள் அப்பா படுத்திருந்த கம்பிளியை தூக்கி எறிந்தான், ஒரு நொடி பயந்த கார்த்திக், வேகமாக bike எடுத்து கொண்டு நிஷா பின்னால் தொடர, தண்ணீரின் தேக்கம் அதிகம்.. நிஷாவோ பயத்தில் தட்டு தடுமாறி ஓடிக்கொண்டே, கால் இடறி கீழே விழுந்தாள்.

மருட்சி! - சிறுகதை

கார்த்திக், அவள் அப்பா படுத்திருந்த கம்பிளியை தூக்கி எறிந்தான், ஒரு நொடி பயந்த கார்த்திக், வேகமாக bike எடுத்து கொண்டு நிஷா பின்னால் தொடர, தண்ணீரின் தேக்கம் அதிகம்.. நிஷாவோ பயத்தில் தட்டு தடுமாறி ஓடிக்கொண்டே, கால் இடறி கீழே விழுந்தாள்.

Published:Updated:
Representational Image

நள்ளிரவு இரண்டு மணி,

ஆங்கங்கே, விளக்குகள் மின் கம்பத்தில் மினுமினுத்தன.. காற்றின் வேகம் சற்று கூடவே, சிறு தூறலாக இருந்த மழை, சட்டென்று வேகம் எடுக்க, இதற்கு மேல் வண்டியை ஓட்ட முடியாமல், தடுமாறி கொண்டே, அருகே இருக்கும் shed போட்டு கவர் செய்த பஸ் ஸ்டாண்ட் மேட்டில் வண்டியை ஏற்றிவிட்டு ஹெல்மெட் கழற்றி, தலையை ஆட்டி கொண்டே சுற்றும், முற்றும் பார்த்து விட்டு பஸ் ஸ்டாண்டில் இருந்த சிமென்டில் கட்டப்பட்டிருந்த இருக்கையில் கார்த்திக் அமர்ந்து கொண்டு, இருட்டில், தனிமையின் வெறுமையை உணர்ந்த படி மழையை பார்த்து கொண்டிருந்தான்..

திடீரென்று ஒரு குழந்தையின் குரல்..

தேம்பி தேம்பி அழுது கொண்டே,

``அப்பா பசிக்குதுப்பா, ரொம்ப பசிக்குது ..

வீட்டுக்கு எப்ப போவோம், ரொம்ப குளிரிதுப்பா..

அம்மா எங்க போனாங்க.. ஏன் நாம்ப இங்க இருக்கோம் ப்பா,

வீட்டுக்கு போலாமே.

அங்கே,

எனக்கு புடிச்ச டெட்டி பொம்மை,

அப்பறம் கலர் கலர் பால்ஸ் எல்லாம் இருக்கு..

அப்பா, கால் வலிக்குது பா.

ரொம்ப தூரமா நடந்தோம்ல.

தண்ணி யாச்சு வேணும்ப்பா..

ரொம்ப தாகமாருக்கு..

உங்களக்கு பக்கத்துல ஒரு நாய் நின்னுகிட்டு என்னையே பாக்குது,

ரொம்ப பயமாருக்கு அப்பா..

எனக்கு பாத்ரூம் போனும்ப்பா.. பயமா இருக்கு இங்க இருக்கவே.. வாங்கப்பா போலாம்….’’ என்று அழுது கொண்டே, எட்டு வயது நிரம்பிய நிஷா, கிழிந்த அந்த கம்பளியில் அப்பாவை கட்டிப்பிடித்து, அந்த சிமெண்ட் கல்லில் படுத்து கொண்டு இருந்தால்.

Representational Image
Representational Image

``அப்பா,

மழை பெருசா வருதா.. நம்ம பக்கத்துல ஒரு அண்ணா, நம்மலேயே பாக்கறாரு அப்பா. கிட்ட வராரு அப்பா..

அப்பா, அப்பா சீக்கிரமா எந்திரிப்பா, என்ன மொறைக்கறாங்க..

எனக்கு பயமா இருக்கு.’’

உடனே,

கார்த்திக், மெதுவாக நிஷாவின் அருகே சென்று.. ``பயப்படாத.. உன் பேரு என்ன பாப்பா, அப்பா எந்திரக்கலயா, அப்பா எங்க காணூம்.. நான் help பண்ணவா.. எதுனா சாப்டியா.. உங்களக்கு வீடு இருக்கா.. இங்க என்ன பண்றீங்க தனியா..’’

கார்த்திக் அருகே நெருங்க நெருங்க, அந்த இடத்தை விட்டு வேகமாக ஓடினாள் நிஷா.

``அப்பா, அப்பா, சீக்கிரமா எந்திரிங்க அப்பா, என்ன தொரத்துறாங்க. .உங்களக்கு எல்லாமே நான் தான அப்பா.. ஏன் அப்பா, எந்திரிக்க மாட்டேங்கற.. வா அப்பா…’’

என்று கத்தி கொண்டே நிஷா ஓட..

கார்த்திக், அவள் அப்பா படுத்திருந்த கம்பிளியை தூக்கி எறிந்தான், ஒரு நொடி பயந்த கார்த்திக், வேகமாக bike எடுத்து கொண்டு நிஷா பின்னால் தொடர,

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தண்ணீரின் தேக்கம் அதிகம்.. நிஷாவோ பயத்தில் தட்டு தடுமாறி ஓடிக்கொண்டே, கால் இடறி கீழே விழுந்தாள். சாலையில் ஓடும் தண்ணீரில், குழிகள் தெரியவில்லை. தடுக்கி விழுந்து, அங்கே இருந்த கற்கள் அவள் தலையில், உதட்டில், அடி வயிற்று பகுதியில், முழங்கையில் ரத்த காயங்கள்..

அப்பா என்று தன் அடிவயிற்றில் ஒரு வித சத்தத்துடன் கத்திகொண்டே, தெருவில் தவழுந்து கொண்டே போக,

கார்த்திக், அவள் அருகில் பைக்கில் இருந்தப்படியே, ``ஏய், பாப்பா நில்லு’’ என்று பின் தொடர, நிஷாவோ தவழுந்து கொண்டே, அருகில் இருந்த குப்பை தொட்டியில் குதித்து ஒளிந்து கொள்கிறாள்.. தன் வாயை, அவள் கையால் மூடி கொண்டே.

``அப்பா,

எங்க அப்பா இருக்க..

என்னாச்சு அப்பா உனக்கு..

வா அப்பா..’’ என்று அடக்க முடியாமல் அழுகிறாள்..

headlight வேகமா அடித்து கொண்டே, அருகில் இருக்கும் சிறு சிறு தெருக்களில் சென்று தேடி கொண்டே போக, எங்கும் தென் படவில்லை..

கார்த்திக், மெதுவாக அதே பஸ் ஸ்டாண்ட் அருகில் வந்து நின்று கொண்டு, பைக் off செய்து விட்டு, அமைதியாக bike ஸ்டாண்ட் போட்டு விட்டு, சத்தமில்லாமல், மெதுவாக இறங்கி அங்கேயும், இங்கேயும் நிஷாவை தேடி கொண்டே இருந்தான்.

குப்பை தொட்டியில் இருக்கும் நிஷாவோ, கார்த்திக் அங்கே இல்லை என்று நினைத்து கொண்டு, மெதுவாக எட்டி பார்க்க, தலையை தூக்கியதும்,

அங்கே வேகமா சில தெரு நாய்கள் குப்பை தொட்டியை நோக்கி ஓடி வர, பதறி அடித்து கொண்டு, பயத்தில் தடுமாறி எகிறி குதித்தும், இன்னும் ஏக பட்ட அடிகள்.. அப்பா என்று கத்தி கொண்டே, விழ..

அவளை கண்டதும் கார்த்திக், அருகில் ஓட..

நிஷா தவழுந்து கொண்டே,

``அண்ணா அண்ணா விற்றுங்க அண்ணா..

என்ன தொரத்தாதீங்க,

எங்க அப்பா வந்தாரு நீங்க அவ்ளோதான்..

அப்பா, எங்க அப்பா இருக்க..

எனக்கு பயமா இருக்கு அப்பா..

வா அப்பா..’’ என்று தேம்பி தேம்பி அழுது கொண்டே அந்த குப்பை தொட்டியின் வெளிய சிதறி கிடக்கும் குப்பையில் தவழுந்து கொண்டே போனாள்..

Representational Image
Representational Image

அங்கே ஒரு லாரியின் headlight வெளிச்சம், கண்டதும்..

சட்டென்று, கண் விழிக்கிறாள் நிஷா..

பஸ் ஸ்டாண்டில் ஏக பட்ட மக்களின் கூட்டம்

தள்ளு வண்டி கடையில் tiffin சாப்பிட ஏக பட்ட கூட்டம்.

டீ கடையில் அலை மோதும் கூட்டம்,

அங்கே சூடாக போட்ட மெதுவடையும், போண்டாவை சாப்பிட..

வேகமா திரும்பும் பஸ், whistle அடித்து கொண்டே கண்டக்டர் கூட்டம் பல இடங்களில்.

மெதுவாக, அவள் எந்திரிச்சு தன் கிழிந்த கம்பிளியை மடித்து விட்டு,

அப்பா பசிக்குது அப்பா..

சாப்பிட போலாமா..

ஆஆஆ, கை, கால் எல்லாம் வலிக்குது அப்பா,

நேத்து ராத்திரி ஏக பட்ட அடி..

இங்க பாருங்க..

நிஷாவின், கை, கால், அடிவயிறு, உதட்டில், தலையில், நெற்றியில் ஏகப்பட்ட காயங்கள், நேற்று இரவு அவள் தொரத்தப்பட்டதும், கீழே விழுந்ததும் நிஜம்,

ஆனால், விடிந்தவுடன் மறுபடியும் அதே கம்பிளிக்குள்..

எந்திரிங்க அப்பா, எவ்ளோ நேரம் தூங்குவீங்க..

அப்பா அப்பா.. என்று சொல்லி கொண்டே, அருகே இருக்கும் டீ கடைக்கு சென்றதும்..

அங்கே master ,

என்னமா, தூங்குனியா இல்லையா.. புதுசா ஒரு இன்ஸ்பெக்டர் அங்கிள் வராங்க, உன்ன பத்தி சொல்லியிருக்கேன், கண்டிப்பா உதவி கிடைக்கும், நான் பேசுறேன்.. இந்த டீ சாப்பிடு..

மாமா, அப்பாக்கு டீ வேணும்.. அப்பாக்கு பசிக்கும்.. அப்பாவும் சாப்பிடவேயில்ல..

நீ குடிடா, அப்பாக்கு நான் போய் தரேன்..என்று சொன்னதும். மெதுவாக கடையின் ஓரத்தில் இருக்கும் மின் கம்பத்தின் தரையில் அமர்ந்து மெதுவாக டி குடிக்க.. அங்கே, சாதாரண நடுத்தர பைக்கில், இன்ஸ்பெக்டர் வந்த இறங்கியதும்..

டீ கடை மாஸ்டர் வேகமாக ஓடி வந்து..

அய்யா, வணக்கம்.. நான் சொன்ன பொண்ணு இது தாங்க.. எதுனா உதவி கிடைச்ச நல்ல இருக்கும்.. சின்ன பொண்ணு வேற. என்ன நடக்குதுனே தெரில அய்யா..

மாஸ்டர் பேச பேச,

இன்ஸ்பெக்டர் மெதுவாக கீழே குனிந்து..

ஹ்ம்ம்ம் கனைத்து கொண்டே.. பாப்பா, உன் பேரு என்ன..என்று கேட்டதும், தலை நிமிர்ந்து பார்த்து நிஷா,

சார் என்று சொல்லும் போது, ஒரு பயம் அவளை தொற்றி கொண்டது..

டீ தடுமாறி அவள் கால் மீது கொட்டியதும்.

.ஆஆஆஆ...என்று கத்தி கொண்டே, ஒரு நொடி மின் கம்பத்தில் உறைந்து நிற்க..

உடனே, இன்ஸ்பெக்டர் பார்த்து பாப்பா,

மேல கொட்டிக்காத..

யோவ், குழந்தைக்கு டீ தரப்போ சூடவா தருவ..

அறிவுகெட்டவனே என்று டீ மாஸ்ட்டரை இன்ஸ்பெக்டர் திட்டுவிட்டு,

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தன் bike side mirror வழியாக, நிஷாவை பார்த்து கொண்டே பைக் ஸ்டார்ட் செய்த்து, கியர் போட்டு கொண்டே, மெதுவாக நகர.

ஒரு நிமிடம் கலங்கி நின்றாள் நிஷா..

அப்பொழுது தான் முகம் தெரிகிறது, இன்ஸ்பெக்டர் வேற யாரும் இல்லை, கார்த்திக். ஆனால், நேற்று இரவு நடந்தது ஏதும் தெரியாமல், அவளை பார்த்து கொண்டே போக...

நேற்று துரத்திய நாய், அவள் தரையில் சிந்திய டீயை நக்கி கொண்டே, அவள் அருகில்.

இன்னொரு புறம், டி மாஸ்டர்

என்ன பாப்பா., ஏன் பயம்…

முன்னாடியே இவரை தெரியுமா.. .என்று பேசிக்கொண்டே. தலையை தடவ.. சட்டென்று விலகி..

அப்பா என்று கத்தி கொண்டே, அதே பெஞ்ச் அருகில் சென்று,

அப்பாவுடன் இருந்த கம்பிளியில் ஒளிந்து கொள்கிறாள் நிஷா..

அந்த நாயும் அவளை பின் தொடர்ந்து அதே பெஞ்ச் அருகில் படுத்து கொள்கிறது..

இன்ஸ்பெக்டர் கார்த்திக், அந்த பஸ் ஸ்டாண்டில் இருக்கும் கடைகளில், நிஷாவை பற்றி விசாரணை ஆரம்பிக்க..

.நேரம் போய் கொண்டே இருந்தது.. எந்த பயனும் இல்லை.

சாயங்காலம் 7 மணிக்கு மேல் ஆகியும், அந்த இடத்தை விட்டு நகரவில்லை.. பக்கத்தில் இருக்கும், பல தெருக்களில் முடிந்த வரை தேடிவிட்டு... மறுபடியும், நிஷா இருக்கும் இடத்திற்கு, அப்படியே எதிர் முனையில் அவள் செய்வதையே பார்த்து கொண்டு இருந்தார் இன்ஸ்பெக்ட்டர் கார்த்திக்.

என்ன நடந்திருக்கும், ஒரு வேலை பாலியல் வன்கொடுமை பன்னிருப்பாங்களா,

துணில ரத்த கறை இருக்கு,

Representational Image
Representational Image

அது ஆனா அது துரத்தரப்போ, கீழ விழுந்து அடி பற்றுக்குமா, இல்ல

அவளே எங்கேயாவது அடி பட்டுக்கிட்டாளா.

அவங்க அப்பா ஏன், அந்த கம்பளிக்குளேந்து வெளில வரல.

இங்க எப்படி வந்தாங்க..

அங்க நாயே காணூம்., தொரத்துது…

அப்பாவை காணூம், பேசறா..

டீ மாஸ்டர் காணூம், டீ கேக்குறா.

குப்பை தொட்டி இல்ல,

அங்க வந்துதான் அடி பட்டிருக்கு,

மழை வரல, ஆனா, குழில விழுந்துருக்கா....

ஒன்னும் புரியலையே...

ஆஆஆஆ ஆஆஆஆ..கோவத்தின் உச்சத்திற்கே சென்ற கார்த்திக்.

இன்னிக்கு என்ன தான் பண்ண போறா பார்க்கலாம்..

நேரம், நெருங்க நெருங்க அருகில் இருந்த கடைகள் எல்லாம் மெதுவாக மூடப்பட்டது..

சில நேரம், கை ஏந்தி பவனில் கூட்டம், மணி 12 நெருங்கியதும், கூட்டங்கள் குறைந்தது, பாத்திரங்களை தண்ணீரில் விலக்கிவிட்டு, வண்டியை பூட்டி விட்டு, அவர்களும் கிளம்பி விட்டனர்..

நள்ளிரவு 1 மணி,

எங்கும் அமைதி, அதே பெஞ்சில், சற்றும் விலகாமல் அந்த கம்பிளிக்குள் நிஷா, அவள் அப்பா, அருகே நாய், பேச்சு சத்தம் மட்டும் கேட்டு கொண்டே இருந்தது.. மெதுவாக, அருகே சென்றதும், பேச்சு சத்தம் டக்கென்று நின்றது.,

கம்பிளியை மெதுவாக திறந்து பார்த்த நிஷா,

நம்ம பக்கத்துல ஒரு அண்ணா, நம்மலேயே பாக்கறாரு அப்பா.

கிட்ட வராரு அப்பா..

அப்பா, அப்பா சீக்கிரமா எந்திரிப்பா,

என்ன மொறைக்கறாங்க..எனக்கு பயமா இருக்கு.

உடனே, கார்த்திக்,

மெதுவாக நிஷாவின் அருகே சென்று..

பயப்படாத நிஷா. ஒன்னும் இல்ல…

என்று சொல்லிக்கொண்டே அருகில் வர,

மறுபடியும் நிஷா வேகமாக ஓட்டம் எடுக்கிறாள்..

நிஷா ஓடுவதை கண்டதும், உடனே கார்த்திக்,

அவள் அப்பா படுத்திருந்த கம்பிளியை தூக்கி எரிந்தவுடன், ஒரு நொடி கலங்கி நின்றான் கார்த்திக்..

அங்கே அப்பா இல்லை,

நிஷா ஓடும் பொழுது, puppy நீயும் சீக்கிரம் வா, அந்த அண்ணா கிட்ட நிக்காத என்று கத்தும் பொழுதில், அருகே நாயும் இல்லை...

ஓடி கொண்டு இருந்த நிஷா,

ஒரு மறைவான இடத்தில் இருந்தோ யாரோ, நிக்காத நிஷா ஓடு, ஓடு என்று சொல்ல, நிஷா அந்த இடத்தை பார்த்து, மாமா நான் போறேன்.. அவர் வராம புடிங்க என்று சொல்ல,

உடனே கார்த்திக் டக்கென்று அங்கே பார்க்க, யாரும் இல்லை...

நிஷாவை, பிடிக்க வேகமாக பின்னால் கார்த்திக் ஓட,

நிஷாவோ மழையில் ஓடி கொண்டே, கற்களும், குழிகளில் விழுந்து, மறுபடியும் அடி பட்டு கொண்டே, குப்பை தொட்டியில் சிந்திய குப்பைகளில், தவழுந்து கொண்டே போனால்.

மருட்சி! - சிறுகதை

ஆனால்,

அங்கே மழையும் இல்லை, குழியும் இல்லை, குப்பைகள் மட்டும் இருந்தது.. அங்கே கிடந்த சில குடிமகன்களின் உடைந்த bottle அவள் கைகளையும், காலும் கிழித்து கொண்டே போனது..

அங்கே, குப்பை தொட்டியை பார்த்து நாய் ஓடி வருவதை கண்டு, பயந்து கொண்டே அதற்குள் குதித்து விட்டால் நிஷா..

ஆனால், அங்கே நாய் வரவில்லை…

அதே குப்பை தொட்டி அருகே, கார்த்திக் வந்து நின்று தேடி கொண்டு இருக்க, நிஷாவோ, குப்பை தொட்டியில், தன் கையால் வாய் மூடி அழுது கொண்டு இருந்தால்.,

அப்பா, எங்கப்பா இருக்க..

என்னாச்சுப்பா உனக்கு..

வா ப்பா..

என்று அடக்க முடியாமல் அழுகிறாள்..

மறுபடியும், அதே நிகழ்வுகள் நடக்கிறது..

மெதுவாக, வெளியே எட்டி பார்க்க, நாய் துரத்த ,வெளியே குதிக்கிறாள் நிஷா.. தண்ணீரில் விழுகிறாள்... இன்னும் பலமான அடி.... ஆனால், அங்கே தண்ணி இல்லை..

கார்த்திக்கை கண்டதும், நிஷா தவழுந்து கொண்டே,

அண்ணா அண்ணா விற்றுங்க அண்ணா.. என்ன தொரத்தாதீங்க,

எங்க அப்பா வந்தாரு நீங்க அவ்ளோதான்..

அப்பா, எங்க ப்பா இருக்க..

எனக்கு பயமா இருக்குப்பா..

வா ப்பா.. என்று தேம்பி தேம்பி அழுது கொண்டே அந்த குப்பை தொட்டியின் வெளிய சிதறி கிடக்கும் குப்பையில் தவழுந்து கொண்டே போகிறாள். அங்கே

ஒரு லாரியின் headlight வெளிச்சம், கண்டதும்.

வேகமா ஓடி வந்து அவளை தூக்க,

நிஷாவோ பயத்தில் கார்திக்க்கை கன்னத்திலும், தலையிலும் அடிக்கிறாள்.

சில அடிகளுக்கு பின்னால், தனது பாக்கெட்டில் இருந்த, kerchief எடுத்து நிஷாவின் கைகளை, கட்டி விட்டு, அருகில் இருக்கும் hospital போன் செய்து, ஆம்புலன்ஸில் மயக்க மறந்து கொடுத்து, எடுத்து செல்கிறார்கள் நிஷாவை..

அவள் மயங்கி கொண்டே…

அப்பா..எங்கப்பா இருக்க..

அப்பா அப்பா.

என்று தேம்பி கொண்டே மயங்கி போனால்.

ஆம்புலன்ஸ், கதவு சார்த்த பட்டு, அந்த இடத்தை விட்டு நகர்ந்தது..

கார்த்திக், நடந்ததை மனதிற்குள் ஒட்டி பார்த்து கொண்டே, அந்த பெஞ்சயும், நிஷா சென்ற தடத்தையும் பார்த்து கொண்டே நின்றான்...

நிஷா பாதிக்கப்பட்டு இருப்பது, ஒரு வித மனநோய்.

அதாவது Child ஹாலுசினேஷன்..

ஒரு வித மன அழுத்தம்...

தனியா இருக்கற குழந்தைகளுக்கு பெரிதும் பாதிக்க படர ஒரு வித depression . யாரோ, நம்மள துரத்தர மாதிரி, நம்மள தாக்குற மாதிரி, நிறையா தோணும், அதுவே நடக்கும்...

நிஷாக்கு அதான் நடந்திருக்கு, என்னிக்கோ ஒரு நாள், இதே மழைல, இதே ரோட்ல, இவ அப்பாகூட ரோட்ல இருக்கும் போது,

மழைக்கு போதைல எவனோ இந்த பெஞ்சு பக்கம் ஒதுங்க..

இவளோட அப்பா முன்னாடியே, இல்ல அப்பா கொன்னுட்டோ,

அந்த குப்பை தொட்டி கிட்ட molest பண்ணி இருக்கனும்..

அப்போ, alcohol இல்ல, cocaine எதுனா கொடுத்து இருந்தா,

Representational Image
Representational Image

கண்டிப்பா அது ஹாலுசினேஷன் உருவாக காரணம் இருக்கும்.

ஏதோ ஒரு நாய், காப்பாத்த வந்துருக்கும்,

அதையும் கொன்னுருப்பாங்க..

அதே நிகழ்வு நிஷாக்கு ஓடிக்கிட்டே இருக்கு,

ராத்திரி நேரத்துல கிட்ட வந்த பயப்படறா, அவங்க அப்பாவும், அந்த நாயும் கூடவே இருக்கறத நினைக்கறா..

ஓடும் பொழுது அந்த சந்துக்குள்ள யார் கிட்டயோ பேசிட்டு போனது, அது டீ கடை மாஸ்டர்.. இவளுக்கு ஹெல்ப் பண்ண போய் அவரையும் கொன்னுருக்கலாம் இல்ல, அவரு ஹெல்ப் பண்ண, குரல் மட்டும் கொடுத்திருக்கலாம்..

ஹம்ம்ம்ம்ம்....

ஏன் இப்படி, ஆனாங்க தெரியாது, கூட இருக்கறவங்களால எந்த குழந்தைக்கு வேணா molestation நடந்துருக்கலாம், அதை வெளில சொல்ல முடியாம, உள்ளுக்குளேயே இருக்கற வலி, இந்த மாதிரி பல எண்ணங்கள் உருவாக்குது.. யார் கிட்டயும் சொல்ல முடியாத விஷயத்தை, கற்பனைல ஒரு உருவம் வெச்சுகிட்டு அவங்க கிட்ட சொல்லற மாதிரி. ஏன்னா,

இந்த மாதிரி ரோட்ல, தெருவில அனாதையா இருக்கற குழந்தைங்க நிறையா பேர், பேச, தூக்கி கொஞ்ச, விளையாட, நல்லது, கெட்டது சொல்ல ஆள் இருக்காது..

ஆனா, பேசிக்கிட்டே இருப்பாங்க, அவங்களோட கற்பனையான உலகத்துல..

யாரோ, எங்கோ பெத்து போட்டுட்டு, இந்த மாதிரி எவ்ளோ குழந்தைகள் ரோட்ல சுத்தறாங்க..

இதுக்கு தீர்வும் இல்ல, முடிவும் இல்ல.. சமூகம், அதுக்கு பழகிடுச்சு..

ஆனா, நமக்கு கண்ணனுக்கு தெரியற பல குழந்தைகள் இன்னும் வீட்டுக்குள்ள, வெளில இறுக்கமான சூழ்நிலைல, ஹாலுசினேஷன் மாதிரி சொல்ல படாத பல வலிகளோடு தான் இருக்காங்க..

அந்த நேரத்துல, குழந்தையை சமாதான படுத்த, சாப்பாடு கொடுக்க, கைல smart phone பேச, விளையாட friends இல்லாத பல குழந்தைகள் இந்த மாதிரி அவர்களுக்குள் ஒரு கற்பனையான உலகத்தை உருவாக்கி, அதுல தன்னோட அப்பா, அம்மா, நண்பர்கள் எல்லாரும் எப்படி இருக்கனும், தோணுது, அதை அப்படியே நினைச்சுக்குறாங்க. அதுவாக மாறிடறாங்க..

இங்க,

பிரச்னை ரோட்ல மட்டும் இல்ல, ஸ்கூல், காலேஜ், வீட்டுல, தெரிஞ்சவுங்க, தெரியாதவங்க…

எல்லா இடத்துலயும்..

குழந்தைகளுக்கான வன் முறைகளுக்கு,

கொஞ்சம் குரல் கொடுத்து தான் பார்க்கலாமே..

தெரிஞ்சவரைக்கும், முடிஞ்சவரைக்கும் கை கொடுக்கலாமே,

எழுத்தும், சமூக அக்கறையும்,

கல்யாணராமன் நாகராஜன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism