Published:Updated:

ஆனந்தி! - குறுங்கதை

Representational Image

இன்னும் சற்று நேரம் போனால் இருட்டிவிடும். மக்கள் நடமாட்டம் குறைந்துவிடும். அப்பொழுது நம் கடலில் இறங்கி விடலாம் என்று நினைத்தவளாய் அருகில் நிற்க வைக்கப்பட்டிருந்த ஒரு விசைப்படகு அருகில் அதன் மேல் சாய்ந்தவாறு மணலில் அமர்ந்தாள்.

ஆனந்தி! - குறுங்கதை

இன்னும் சற்று நேரம் போனால் இருட்டிவிடும். மக்கள் நடமாட்டம் குறைந்துவிடும். அப்பொழுது நம் கடலில் இறங்கி விடலாம் என்று நினைத்தவளாய் அருகில் நிற்க வைக்கப்பட்டிருந்த ஒரு விசைப்படகு அருகில் அதன் மேல் சாய்ந்தவாறு மணலில் அமர்ந்தாள்.

Published:Updated:
Representational Image

மாலை நேரம்.மெரினா கடற்கரை பேருந்து நிலையம். எங்கிருந்தோ வந்த பேருந்து ஒன்று அங்கு வந்து நிற்க அதில் இருந்து இறங்கினாள் ஆனந்தி. பேருந்து புறப்பட்டு சென்றது. மெல்ல மெல்ல கடற்கரையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் அவள். இனி அழுதால் கண்களில் கண்ணீர் வர வாய்ப்பு இல்லை என்ற அளவிற்கு அழுது முடித்து விட்டிருந்தாள்.

பெயரளவுக்கு மட்டுமே இப்பொழுது அவளிடம் ஆனந்தம் இருக்கின்றது. பெயரில் இருக்கும் ஆனந்தம் இப்பொழுது அவள் வாழ்க்கையில் இல்லாமல் போனது. நடந்து போய்க் கொண்டிருந்தாள். சிறிது தூரத்தில் இடையில் கிளி ஜோசியர் ஒருவர் குறுக்கிட்டார்.

``ஜோசியம் பாக்கலாமா? ஜோசியம்...'' எனக்கேட்டார். அவர் கையில் வைத்திருந்த கூண்டில் சிறகுகள் அறுந்த நிலையில் இருந்த கிளி ஒன்று அவளை பரிதாபமாக பார்த்தது. இப்போதைய நிலையில் இவளும் சிறகுகள் இழந்த பறவைதான்.

``சொல்லுமா... ஜோசியம் பாக்குறியா? என்று மீண்டும் கேட்டார் கிளி ஜோசியர்.

மெரினா
மெரினா

இன்னும் சிறிது நேரத்தில் சாகப் போகிற எனக்கு ஜோசியம் பார்த்து என்ன பயன்? என்று மனதில் நினைத்துக்கொண்டு பதிலேதும் கூறாமல் நமட்டு சிரிப்புடன் நடந்தாள். வேறு ஒருவரை தேடி போனார் கிளி ஜோசியர்.

கடற்கரையின் அருகில் வந்துவிட்டாள். அங்கு சில இளைஞர்கள் கடல் அலையில் விளையாடிக்கொண்டிருந்தனர். அதனருகில் வலது கையால் தந்தையையும் இடது கையால் தாயையும் பற்றிக்கொண்டு கடல் அலையில் பரவசத்துடன் நின்று கொண்டிருந்தாள் ஒரு சிறுமி. அங்கிருப்பவர்கள் அனைவரையும் கவனித்த ஆனந்தி... இப்பொழுது நாம் கடலில் இறங்கினால் இவர்கள் அனைவரும் கத்தி கூப்பாடு போட்டு நம்மை காப்பாற்றி விடுவார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இன்னும் சற்று நேரம் போனால் இருட்டிவிடும். மக்கள் நடமாட்டம் குறைந்துவிடும். அப்பொழுது நம் கடலில் இறங்கி விடலாம் என்று நினைத்தவளாய் அருகில் நிற்க வைக்கப்பட்டிருந்த ஒரு விசைப்படகு அருகில் அதன் மேல் சாய்ந்தவாறு மணலில் அமர்ந்தாள். தன் சாவை எதிர்நோக்கியவளாய்... அவள் காத்திருக்கும் நேரத்தில் நாம் அவளின் பழைய பக்கங்களுக்கு சென்று வருவோம்.

அப்பா மின் வாரியத்தில் பணி புரிந்து கொண்டிருக்கிறார். அம்மா மற்றும் ஒரு அக்கா ஆனந்திக்கு. அக்கா திருமணம் முடிந்து தன் கணவனோடு மாமியார் வீட்டில் வசிக்கிறாள். இரண்டாவது மற்றும் கடைசி மகள் என்பதால் ஆனந்தி செல்லமாக வளர்ந்தாள். படிப்பில் படு சுட்டியான ஆனந்தி பிஎஸ்சி முடித்து எம்எஸ்சி சேரும்வரை அவள் வாழ்க்கையில் ஆனந்தத்திற்கு குறைவில்லை. எம்எஸ்சி படிக்கும் காலத்தில் தன்னுடன் படித்த ரவி முதன்முறையாக தன்னை காதலிப்பதாக சொல்லும் பொழுது உடனே அவள் ஏற்கவில்லை. நாட்கள் செல்லச் செல்ல மனம் மாறி இவளும் ரவியை காதலிக்க தொடங்கினாள்.

Representational Image
Representational Image

கல்லூரி இறுதி படிப்பு முடிந்த பின்பு ஆனந்தி வீட்டில் மாப்பிள்ளை பார்க்க தொடங்கியதால் வேறு வழியில்லாமல் தான் ரவியை காதலிப்பதாக சொல்லி விட்டாள் ஆனந்தி. இதைக்கேட்ட ஆனந்தியின் தாயும் தந்தையும் ருத்ரதாண்டவம் ஆடினர். பொதுவாக ஆனந்தியும் ரவியும் ஒரே மதம் தான் என்றாலும் ஜாதிகள் வெவ்வேறு. அதனால் அவர்கள் சம்மதிக்கவில்லை. பெற்றவர்கள் சம்மதிக்கும் வரை பொறுமை காப்போம் என்று மனதில் நினைத்துக் கொண்டிருந்தாள் ஆனந்தி. ஆனால் இவள் ரவியுடன் தனியே சென்று விடுவாளோ என்று அஞ்சிய பெற்றோர்கள் இவளுக்கு தெரியாமல் ஒரு முடிவுக்கு வந்தனர். அதன்படி சில நாட்கள் சென்ற பிறகு... அத்தை வீட்டில் ஒரு விசேஷம் நாம் போகலாம் என்று கூறி ஆனந்தியை அழைத்துக் கொண்டு பெங்களூர் சென்றனர் தாயும் தந்தையும்.

இரு நாட்களுக்குப் பிறகு நீ இங்கேயே இரு. நாங்கள் அடுத்த வாரம் வந்து உன்னை அழைத்துக் கொண்டு போகிறோம் என்று சொல்லி விட்டுச் சென்றவர்கள் சில மாதங்கள் ஆகியும் வரவில்லை. அவர்கள் சென்ற பிறகு தான் இவளது கைபேசியும் அம்மா எடுத்துக்கொண்டு போய் உள்ளதை அறிந்து கொண்டாள். தான் ஏமாற்றப் பட்டுள்ளது அறிந்து கொண்ட ஆனந்தி என்ன செய்வதென்றே தெரியாமல் விரக்தியுடன் இருந்தாள். அத்தை நன்றாகத்தான் கவனித்துக்கொண்டார். சாப்பாடு,டிவி என்று எல்லா வசதியும் இருந்தது. ஆனால் தங்க கூண்டில் அடைக்கப்பட்ட கிளிக்கு என்ன சந்தோஷம் இருக்கும்? அது சுதந்திரமாக பறக்க முடியாதே!

அதே நிலைதான் இப்போது ஆனந்திக்கு. மேலும் சில மாதங்கள் சென்றது. தூரத்து உறவுக்கார பையன் உடன் ஆனந்திக்கு திருமணம் செய்ய பேசி முடித்து உள்ளதாக அத்தை அவளிடம் கூறினார். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்தாள் ஆனந்தி. ஒரு நாள் மாப்பிள்ளை...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பெண்ணைப் பார்க்க வேண்டும் என்று கூறி அத்தை வீட்டிற்கு வந்தான். அவனிடம் தனியாக பேச வேண்டும் என்றாள் ஆனந்தி. இருவரும் பால்கனி சென்று பேசினர். மாப்பிள்ளைக்கு சமையல் தயார் செய்து கொண்டிருந்தார் அத்தை. நடந்தவற்றை அவனிடம் கண்ணீருடன் கூறி அழுதாள் ஆனந்தி. அனைத்தையும் பொறுமையுடன் கேட்டுக்கொண்டான்...

`` ஓகே ஆனந்தி... நீ ஒருவரை நினைத்துக்கொண்டு என்னோடு வாழ்வது என்பது எனக்கு சரிப்படாது. நீ ரவியை திருமணம் செய்ய முடிவெடுத்து இருக்கிறாய். நான் வேண்டுமானால் பணம் தருகிறேன். நீ இங்கு யாரிடமும் சொல்லாமல் சென்னை போய் ரவியைப் பார்த்து பேசி திருமணம் செய்து கொள். இனி உன்னை திருமணம் செய்ய எனக்கு விருப்பம் இல்லை'' என்று கூறி தன் பாக்கெட்டில் இருந்த பணத்தை ஆனந்தியிடம் கொடுத்தான். அத்தைக்கு தெரியாமல் அதை வாங்கிக்கொண்ட ஆனந்தி இரவு யாருக்கும் சொல்லாமல் தன் காதலனைத் தேடி சென்னை வந்தடைந்தாள்.

மெரினா
மெரினா

``சுண்டல் வேணுமா? சுண்டல்...’’ என்று தன்னருகில் சிறுவன் ஒருவன் கத்த சுயநினைவுக்கு வந்த ஆனந்தி சற்றும் முற்றும் பார்த்தாள். கடற்கரையில் இன்னும் கூட்டம் குறையவில்லை. மீண்டும் அமைதியாக படகில் சாய்ந்துகொண்டாள்.

நாம் தொடர்வோம்...

இன்று காலை சென்னை வந்த ஆனந்தி பழைய நட்புகள் மூலம் ரவி வேலை செய்யும் இடத்தை தெரிந்து கொண்டு அங்கு வந்து சேர்ந்தாள். திடீரென்று ஆனந்தியை பார்த்த ரவி சற்று திகைத்தான். பின்பு இருவரும் அருகில் ஓரிடத்திற்கு சென்று பேசினர். நடந்தவற்றை ரவியிடம் ஆனந்தி கூற....

``எனக்கு புரிகிறது ஆனந்தி.... நீ போன பிறகு பல தடவை உங்கள் வீட்டின் அருகில் வந்து விசாரித்தேன். ஆனால் நீ இருக்குமிடம் கடைசிவரை எனக்கு தெரியவில்லை. மாதக்கணக்கில் ஆகிவிட்டது என்பதால் உனக்கு திருமணம் முடிந்து இருக்கும் என்று நினைத்து என் மனதை தேற்றிக்கொண்டேன். நீ நன்றாக இருந்தால் சரி என்று நினைத்துக்கொண்டேன். அதனால்...’’

அவனை ஆச்சரியத்தோடு பார்த்தாள் ஆனந்தி.

``அதனால் எங்கள் வீட்டில் பார்த்த வேறொரு பெண்ணை திருமணம் செய்ய சம்மதித்து விட்டேன். நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது. அடுத்த மாதம் திருமணம்’’ என்று அதிர்ச்சித் தகவல் சொன்ன ரவி...

``நீ ஒன்னும் கவலைப்படாத ஆனந்தி... நேராக நீ வீட்டுக்குப் போ... உங்க வீட்டில் சொல்லும் பையனை திருமணம் செய்து கொள். டைம்மாச்சு நான் கிளம்புறேன்’’ என்று சொல்லிவிட்டு அவளைப் பற்றி சிறிதும் கவலையின்றி சென்றான் ரவி. அழுகையும் ஆத்திரமாக ஒரு நிமிடம் தலை சுற்றி போனது அவளுக்கு... வேறு வழி தெரியவில்லை. அருகில் இருந்த டெலிபோன் பூத் மூலம் வீட்டிற்கு போன் செய்தாள்.

போனை எடுத்துப் பேசிய அப்பா இவளின் குரலை கேட்டதும்.... ``ஓடுகாலி நாயே... நீ ஓடிப் போவாய் என்று தெரிந்துதான் உன்னை அத்தை வீட்டில் விட்டேன்... ஆனால் அங்கிருந்து கூட ஓடி விட்டாய்... உன்னால் நம் குடும்ப மானமே போச்சு.... எங்கேயாவது போய் செத்து தொலை..’’ என்று போனை வைத்து விட்டார் அப்பா. இனி உன்னை திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை என்று மாப்பிள்ளை கூறிவிட்டான்.

வீட்டில் சொன்ன பெண்ணை திருமணம் செய்து கொள்ளப்போவதாக ரவி சொல்லிவிட்டான். வீட்டிற்கு வராதே செத்துப்போ என அப்பா சொல்லிவிட்டார். இனி அவள் என்ன செய்வாள்? ஒரு முடிவோடு கடற்கரையில் தன் சாவிற்கு காத்துக் கொண்டிருக்கிறாள் ஆனந்தி. சிறிது நேரம் போனது... அங்கும் இங்கும் நோட்டமிட்டாள் ஆனந்தி. கூட்டம் சற்று குறைந்து காணப்பட்டது. இதுதான் சரியான நேரம். இனி ஒரு நிமிடம் கூட நாம் வாழ கூடாது என்று நினைத்தவள் எழுந்து நேராக கடல் அருகில் சென்றாள். கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே இறங்கினாள்.

அப்போது.... ``ஆனந்தி...’’ என்று குரல் கேட்க திரும்பிப் பார்த்தாள். அருகில் தன் மகனுடன் நின்றுகொண்டிருந்தார் கல்லூரி பேராசிரியை கீதா. அவரைப் பார்த்ததும் மேடம் என்று கத்திக்கொண்டே அவரைக் கட்டிப் பிடித்தவாறு அழுதாள் ஆனந்தி. அவளைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார் பேராசிரியை கீதா.

மெரினா
மெரினா

தன் மகனை அறையில் படுக்க வைத்து விட்டு ஹாலில் உட்கார்ந்து இருந்த ஆனந்திடம் விசாரித்தார் கீதா. நடந்தவற்றை கண்ணீருடன் கூறிய ஆனந்தி... ``இனி நான் யாருக்காக வாழ வேண்டும்? என்னை விடுங்கள் மேடம் நான் சாகப்போகிறேன்’’ என்று கதறி அழுதாள்.

``நான் என்ன தவறு செய்தேன்? ஒரு ஆணை காதலித்தேன் என்பதைத் தவிர...’’ என கேட்டாள். அனைத்தையும் கேட்ட பேராசிரியை கீதா... நடந்த எல்லாவற்றையும் மறந்து விட்டு புது வாழ்க்கையை தேடு என்று ஆறுதல் கூறினார்.

``சொல்வது சுலபம் மேடம்... அடிபட்டவருக்கு தான் அதன் வலி தெரியும்’’ என்றாள் ஆனந்தி. அதைக்கேட்ட கீதா சிரித்துக்கொண்டே... ``வலியா?... நான் அனுபவித்த வலியை விடவா?...’’

அவரை ஆச்சரியத்துடன் பார்த்தாள் ஆனந்தி.

``இதுவரை என் வாழ்க்கையில் நடந்தவற்றை நான் யாரிடமும் சொன்னதில்லை. இப்பொழுது உன்னிடம் நான் சொல்வதற்கு காரணம் உனக்கு ஏதேனும் மனமாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால்தான்....’’

என்று கூற ஆரம்பித்தார் கீதா.

``நன்கு படித்து ஆசிரியை ஆகிவிட்ட நான் வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டேன். தனியார் அலுவலகத்தில் உயர்ந்த பதவியில் இருந்த அவர்... பின்பு குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வேலையும் இழந்து வீட்டில் இருந்தார். பின்பு தன் குறையை மறைக்க என் மீது பழி போட ஆரம்பித்தான். அவன் யாரு? அவன் கூட ஏன் தினமும் போனில் பேசிக் கொண்டு இருக்கிறாய்? இவன் யாரு ஏன் இவன் கிட்ட பேசற?... என்று தினமும் குடித்து விட்டு அடிக்க ஆரம்பித்தான். அவனுக்காக வேலைக்கும் போய் தினமும் அவனிடம் அடியும் வாங்கி நரக வேதனையை அனுபவித்துக் கொண்டு வாழ்ந்தேன். இதையெல்லாம் தாங்கிக் கொண்டேன் . ஏனென்றால் என் பிள்ளைக்காக... ஒருநாள் குடித்துவிட்டு வண்டி ஓட்டிக் கொண்டு வரும் பொழுது லாரியில் மோதி அடிபட்டு இறந்து போனான் என் கணவன். இன்றும் என் மகனுக்காக நான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்’’

என்று தன் கதையை கூறினார் கீதா. ``வாழ்க்கையில் வலியை தாங்க முடியாமல் சாக வேண்டும் என்று நினைத்தால் உலகத்தில் ஒருத்தர் கூட வாழ முடியாது. நீ உனக்காக இல்லையென்றாலும் சமுதாயத்திற்காக வாழு. அதற்கு நீ என்ன செய்ய வேண்டும் என்று யோசி. இப்போது போய் உறங்கு என்று சொல்லிவிட்டு போனார் கீதா. உறங்காமல் யோசித்துக் கொண்டே இருந்தாள் ஆனந்தி. காலையில் காபியுடன் வந்த கீதா.... என்ன முடிவு செய்து இருக்கிறாய் ஆனந்தி’’ என்று கேட்டார்.

Representational Image
Representational Image
iStock

``நான் IAS எழுதப்போகிறேன் மேடம்’’ என்றாள் ஆனந்தி. அதைக்கேட்டு மகிழ்ச்சி அடைந்த கீதா ``அதற்காக உனக்கு எந்த உதவி என்றாலும் செய்ய நான் தயார்’’ என்று சொல்லி பல உதவிகளை செய்து கொடுத்தார்.

பல வருடங்களுக்குப் பிறகு.....

மாவட்ட கலெக்டர் ஆன ஆனந்தி திங்கட்கிழமை பொதுமக்களிடம் மனு வாங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு பெண்மணி இரு குழந்தைகளுடன் வந்து மனு ஒன்றை கொடுத்தார். அதை வாங்கிப் படித்தார் கலெக்டர் ஆனந்தி. அதில் தினமும் குடித்துவிட்டு தன் கணவன் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாகவும் எழுதி இருந்தது. உடனே அவள் கணவனை அழைத்து வர ஆணையிட்டார் கலெக்டர் ஆனந்தி. காவலர்கள் அந்தப் பெண்ணின் கணவனை அழைத்துக்கொண்டு வந்தனர். அவனை ஆனந்தி ஒரு நிமிடம் திகைத்து பார்த்தாள். பழைய காதலன் ரவி.... அவன் ஏதோ ஆனந்திடம் கூற வர.... அதைக் கேட்காமல் சட்டப்படி நடவடிக்கை எடுங்கள் என்று காவல் துறைக்கு உத்தரவு போட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார் கலெக்டர் ஆனந்தி.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism