Published:Updated:

அயர்லாந்து ஐடி வேலை டூ இயற்கை விவசாயம்! #FeelGoodStory

ஆர்கானிக் தோட்டம்

இந்தியாவில் ஒரு பட்டப் படிப்பு, அயர்லாந்தில் முதுகலை பட்டம் பெற்று கை நிறைய சம்பளத்துடன் ஒரு IT வேலை, குடும்பம் குழந்தை என்று இருந்த எனக்கு கொரோனா சூழல் சில படிப்பினைகளைக் கற்றுக் கொடுத்தது.

அயர்லாந்து ஐடி வேலை டூ இயற்கை விவசாயம்! #FeelGoodStory

இந்தியாவில் ஒரு பட்டப் படிப்பு, அயர்லாந்தில் முதுகலை பட்டம் பெற்று கை நிறைய சம்பளத்துடன் ஒரு IT வேலை, குடும்பம் குழந்தை என்று இருந்த எனக்கு கொரோனா சூழல் சில படிப்பினைகளைக் கற்றுக் கொடுத்தது.

Published:Updated:
ஆர்கானிக் தோட்டம்

எனக்கு நன்றாக நினைவில் உள்ளது. சிறு வயதில் அப்பாவுடன் வண்டியில் அமர்ந்து எங்கள் ஊரில் (குமாரபாளையம்) உள்ள காய்கறி மார்க்கெட்டிற்கு சென்று, அந்த வாரத்திற்கு தேவையான காய்கறிகளை ஒரு வழியாக பேரம் பேசி வாங்கி அப்படியே எனக்கு பிடித்த சில நொறுக்கு தின்பண்டங்கள் வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்து வாராவாரம் வெள்ளி அன்று ஒரு திரைப்படம் பார்த்த அனுபவம்.

வாங்கிய காய்கறிகளும் பெரும்பாலானவை நல்ல தரத்துடன் ருசியாகவும் இருக்கும். குறிப்பு : அவை எந்த ஒரு குளிர்சாதன பெட்டியில் வைத்தது இல்லை. எனவே நாங்களும் நல்ல ஆரோக்கியத்துடன் வளர்ந்தோம்.நாட்கள் நகர நகர வயது கூட கூட அப்பாவின் ஸ்கூட்டர் மார்க்கெட் பக்கம் செல்வது சற்று குறைய ஆரம்பித்தது. அதற்கு மாறாக நடராஜா சர்வீஸ் தான் (நடை பயணம்) என்னை பக்கத்தில் இருக்கும் மளிகை கடைக்கு அனுப்பி வீட்டிற்கு தேவையான காய்கறிகளை வாங்கி வர சொல்லி கரெக்டா காசையும் தருவார் என் அம்மா. மீதி சில்லறையில் கூட எனக்கு என்று எந்த ஒரு பாக்கெட் மணியும் வந்திரக்கூடாது என்ற ராஜா தந்திரம் (திட்டம் வகுப்பது எனது அக்கா) - என்ன ஒரு வில்லத்தனம் !

நிர்மல்குமார்
நிர்மல்குமார்

அது என்னமோ தெரியவில்லை நான் வாங்கும் காய்கறிகள் மட்டும் சீக்கிரம் சிக் (sick) ஆகிவிடும் போல. அதற்கு எனக்கு தான் அம்மாவிடம் திட்டு விழும், ``ஒழுங்கா நல்ல காய்கறியா பாத்து வாங்கி வர மாட்ட?’’ என்று..

வயது கூட கூட வகுப்புகள் மாற மாற பள்ளி கல்லூரி என ஆக கடைசியில் அடித்து புடித்து ஒரு வேலை வாங்கி சிங்கார சென்னைக்கு வந்தாயிற்று. வந்தது வந்தாச்சு சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்ற ஒரு குழப்பம். சரி இருக்கும் நாலு காய்கறி நறுக்கி போட்டு சாம்பார் வைப்போம் என்று பார்த்தால், விலைவாசி பார்த்து குறைந்தது எங்கள் சாப்பிடும் ஆசை மட்டும் அல்ல, எங்கள் பேச்சுலர் சமையல் அறையில் உள்ள காய்கறி லிஸ்டும் தான். பிறகென்ன, ரோட்டு கடை சாப்பாடு தான், அவ்வபோது கம்பெனி டீம் லஞ்ச் பீசா பர்கர் என்று காலம் நகர்ந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இப்படி இருந்த என் வாழ்க்கையில திடீரென ஒரு நாள் வெளிநாட்டில் போய் படிக்கலாமே என்ற ஆசை உதித்தது. ஆசை லட்சியம் ஆனது. சிலபல முயற்சிகளுக்கு பின்னர் ஒரு வங்கியில் லோன் தர அப்படியே அயர்லாந்துக்கு பறந்தேன்.

இந்தியாவில் ஒரு பட்டப் படிப்பு, அயர்லாந்தில் முதுகலை பட்டம் பெற்று கை நிறைய சம்பளத்துடன் ஒரு IT வேலை, குடும்பம் குழந்தை என்று இருந்த எனக்கு கொரோனா சூழல் சில படிப்பினைகளைக் கற்றுக் கொடுத்தது. ஆரோக்கியம், உணவு, சொந்த ஊர் பற்றிய என் பார்வை மாறியது. மேலும் நமது வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அய்யா அவர்களின் வழிகாட்டுதல்களின் படி சொந்த ஊரில் இயற்கை விவசாயம் செய்யும் முடிவுக்கு வந்தேன். எங்களுக்கென இருந்த நிலத்தில் "ஆர்கானிக் தோட்டம்" என்ற பெயரில் ஒரு ஒருங்கிணைந்த பண்ணை அமைத்து மருந்தில்லா விவசாயம் செய்ய முடிவு செய்து, இருந்த கொஞ்ச நஞ்ச சேமிப்பையும் போட்டு ஒரு வழியாக தோட்டம் போட்டேன்.

ஆர்கானிக் தோட்டம்
ஆர்கானிக் தோட்டம்

அதில் ஒரு 30-35 நாட்டு காய்கறி விதைகளை பயிராக்கி, 10-20 நாட்டு ரக கோழி, 4-5 குறும்புக்கார முயல்கள், 40-50 நாட்டு வாத்து, பார்த்து ரசிக்க கலர் கலராக லவ் பேர்ட்ஸ் வைத்து, தோட்டத்திற்கு வரும் விருந்தாளிக்கு விருந்து வைக்க 4-5 வாழைக்கன்னு, சும்மா கிடந்த நிலத்தை ஒரு வழியாக மனதுக்கு இதமளிக்கும் இடமாக மாற்றி விட்டோம். மேலும் என் தோட்டத்தில் முழுக்க முழுக்க 100% இயற்கை உரங்களை மட்டும் பயன்படுத்தி விளைவிக்க வேண்டும் என முடிவு செய்து, அக்கம் பக்கத்தில் கால்நடைகள் வைத்திருக்கும் நண்பர்களிடம் , மாட்டு சாணம், ஆட்டு எரு, வீட்டு சமையல் கழிவுகள் உள்ளிட்டவற்றை சேகரித்து, உரத்தை தயாரிக்கிறோம்.

ஆர்கானிக் தோட்டம்
ஆர்கானிக் தோட்டம்


மனசுக்கு நிறைவான வேலை இதுதான் என்பதை உணர்ந்து கொண்டேன். என் தோட்டம் பற்றி கேள்விப்பட்ட அக்கம்பக்கத்தினர், ஒரு கட்டு கீரை வேணும், 2 வாத்து வேணும் என்று கேட்க ஆரம்பித்துவிட்டனர். எனவே
விளைவிக்கும் காய்கறி கீரைகள் வீட்டு தேவைக்கு போக மீதம் உள்ளவை எமது பகுதியில் இருக்கும் ரியல் ஹீரோக்களின் (அரசு பஸ் டிரைவர்/கண்டக்டர்/துப்புரவு தொழிலாளர்கள்/செவிலியர் போன்ற) குடும்பத்தில் இருக்கும் கர்ப்பிணி பெண்கள்/ குழந்தைகள்/பெற்றோர்கள் போன்றோருக்கு மானிய விலையில் மற்றும் இலவசமாகவும் கொடுத்து உதவலாம் என்று தோன்றியது. என்னால் தினமும் நூறு பேருக்கு உதவி செய்ய முடியவில்லை என்றாலும், தினமும் சிலரின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஒருவரின் குடும்பத்திற்கு ஏதாவது ஒரு வகையில் உதவுகிறேன் என்ற திருப்தி ஏற்பட்டிருக்கிறது. இயற்கை விவசாயம் என் வாழ்க்கையை மாற்றிவிட்டது. மன நிறைவை கொடுக்கிறது. நாம் அனைவரும் உணவு விஷயத்தில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதே என் ஆசை.

இப்படிக்கு,
நிர்மல்குமார் மரகதம் பழனிசாமி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism