Published:Updated:

டாக்டர். ஊசீஸ்வரனும் விசித்திர நோயாளியும்! | சிறுகதை |My Vikatan

Representational Image

எனக்கு "ஐஸ்" வைத்து, தாஜா பண்ணி. அவன் தாயின் வற்புறுத்தலையும் மீறி.. என்னை ஊசி போடாமல் தடுத்து விடுவான். அவனுக்கு மட்டும் இன்றுவரை! ஆனானப்பட்ட இந்த ஊசீஸ்வரன் ஊசியே போட்டதில்லை என்றால், அவன் எவ்வளவு கெட்டிக்காரன் என்று நீங்களே தெரிந்து கொள்ளலாம்.

டாக்டர். ஊசீஸ்வரனும் விசித்திர நோயாளியும்! | சிறுகதை |My Vikatan

எனக்கு "ஐஸ்" வைத்து, தாஜா பண்ணி. அவன் தாயின் வற்புறுத்தலையும் மீறி.. என்னை ஊசி போடாமல் தடுத்து விடுவான். அவனுக்கு மட்டும் இன்றுவரை! ஆனானப்பட்ட இந்த ஊசீஸ்வரன் ஊசியே போட்டதில்லை என்றால், அவன் எவ்வளவு கெட்டிக்காரன் என்று நீங்களே தெரிந்து கொள்ளலாம்.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

"சார் சார்! கிளினிக்க மூடாதிங்க சார்!"என்ற அபய குரல் கேட்டு , சற்றே நிதானித்தேன்.

நான் வழக்கமாக கிளினிக் மூடும் நேரம் இரவு 9மணி.. இன்று ஏதோ அத்தி பூத்தார்போல் ஓரிரு பேஷண்ட்டுகள் அதிகப்படியாக வந்திருந்ததால், மணி 9.30யாகி விட! என் ஆஸ்தான உதவியாளர் "உமா" அவர்கள், சிலபல செயற்கை கொட்டாவிகளின் மூலம், தனக்கு நேரமாகிவிட்டதை சூசகமாக வெளிப்படுத்த, நானும் "நீ வீட்டுக்கு போம்மா நான் பாத்துக்கிறேன்" என்று அவளை அனுப்பிவிட்டு, நானும் கிளம்ப தயாரானபோதுதான், "சிவா"அபய குரல் கொடுத்தான்!


தயங்கி தயங்கி உள்ளே நுழைந்து "குட் மார்நிங் சார்!" என கூற

"குட் நைட்டுன்னு சொல்லுப்பா" என்று கூறி இடிஇடி என சிரித்தேன். அவன் அந்த ஹாஸ்யத்தில் பங்கு கொள்ளாமல், ஏதோ ஒரு மன அழுத்தத்தில் புன்னகைத்தவாறு "சாப்டாச்சா சார்!" என்றான்.. "சாப்பாடா? நான் இன்னும் வீட்டுக்கு கிளம்பவே இல்லையேப்பா!

என்ன ஏதாவது பிராப்ளமா? உடம்பு கிடம்பு சரியில்லையா?" என கேட்டேன்!

அவ்வளவுதான்...

அவன் உடனே ஒரு சிறு குழந்தை மிட்டாய் கடைக்கு செல்லும்போது அப்பனின் கரம் பற்றுவதை போல், என் விரல்களை கெட்டியாக பற்றிக்கொண்டு.. "சார் நான் சில நாட்களாக அனுபவிக்கும் மரண அவஸ்தையை உங்களிடம் சொல்லியே தீர வேண்டும்!"என்றான். "சிறு வயது முதலே,

என்னை நன்கு அறிந்த தங்களிடம் மனம் திறந்து பேச விரும்புகிறேன். பிளீஸ் சார். ஹெல்ப் மீ" என கூறும்போது அவன் கண்கள் பனித்து இருப்பதை காண முடிந்தது! அவனை புறம் தள்ளி கிளம்ப என் மனம் மறுத்ததால். "சரி தம்பி கவலைப்படாதே, தைரியமாக சொல்" என்றேன்!

அவன் சொல்லப்போகும்,

விசித்திர வினோதங்களை

கேட்கும் முன்,

இதோ அவனை பற்றிய

ஒரு சிறு குறிப்பு.

சிவா மிகவும் கெட்டிக்கார பையன்.

அவன் சிறுவனாய் , ஜுரம் என்று என்னிடம் வரும்போதெல்லாம்,

எனக்கு "ஐஸ்" வைத்து, தாஜா பண்ணி. அவன் தாயின் வற்புறுத்தலையும் மீறி.. என்னை ஊசி போடாமல் தடுத்து விடுவான். அவனுக்கு மட்டும் இன்றுவரை! ஆனானப்பட்ட இந்த ஊசீஸ்வரன் ஊசியே போட்டதில்லை என்றால், அவன் எவ்வளவு கெட்டிக்காரன் என்று நீங்களே தெரிந்து கொள்ளலாம்.


அவன் இப்போது சென்னையில், மிக பிரபலமான அரசு பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் பட்டம் பெற்ற "கோல்ட் மெடல்" வாங்கிய இளம் பட்டதாரி! பல பன்னாட்டு நிறுவனங்கள் மிக பெரிய ஊதியத்துடன் வேலை தர, காத்திருக்கும் சிறந்த இன்ஜினியர்!

வசீகர தோற்றம் கொண்ட வாலிபன்! மிகவும் அமைதியான பயந்த சுபாவம் கொண்ட அறிவாளி !

Representational Image
Representational Image

சரி! வாருங்கள் அவன் என்ன கூறுகிறான் என கேட்போம்!

"சார்! நான் "மின்னலைகள்" பற்றி நிறைய ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதி உள்ளேன்! குறிப்பாக நம்

காது, கண் போன்ற புலன்களில் இருந்து தோன்றும் "தூண்டுறு மின்திறன்" (evoked potentials)பற்றி இப்போது நான், சீரிய முறையில் ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வருகிறேன்!" என கூற நானும்"உண்மைதான் சிவா! அது மூளையின் பல நோய்களை கண்டறிய உதவும் என்பதை நானும் அறிவேன்" என்றேன்!


"சார்! இரண்டு மூன்று தினங்களுக்கு முன்னர், பின்னிரவில் நான் நல்ல தூக்கத்தில் இருந்தபோது எனக்கு ஒரு கனவு வந்தது! அதில் என்னை ஒரு முரட்டு நாய் துரத்த, நான் வேகமாய் தலைதெறிக்க ஓடுகிறேன்! ஒரு கட்டத்தில் நான் முட்டு சந்தில் மாட்டிக்கொள்ள, நாய் என்னை கடித்து குதற வெறித்தனமாய் நெருங்கியபோது, நான் அதன் கண்களை நேருக்குநேர் உற்று நோக்கினேன்! அந்த ஒரு நொடியில் என் "அட்ரீனல் சுரப்பியின்"அதீத தூண்டுதலால், மூளையில் இரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு,என் கண்ணிலிருந்து

"விழி தூண்டுறு மின்திறன்" (visuval evoked potential) எனும் அதீத சக்தி அலைகள் உருவாகிறது. நான் அந்த அலைகளை விழிகளால் கூர்மை படுத்தி அதன் இதயத்தில் செலுத்திய, ஒரே ஷணத்தில் அந்த நாயின் இதயம் செயல் இழந்து அது பொத்தென கிழே விழுந்து

மரணிக்கிறது" என்று கூறி முடிக்கும் போது அவன் உடல் முழுதும் வியர்வையில் நனைந்து இருந்தது!

அவன் விழிகளில் ஒரு அமானுஷ்ய பிரகாசம் தெரிந்தது!

நான் அவனுக்கு ,

"ஃப்ரிட்ஜ்"ஐ திறந்து ஐஸ் வாட்டர் கொடுத்து சாந்தப்படுத்தினேன்!

அவன் சில வினாடிகளில் நார்மல் ஆகி "சாரி சார்! நான் ஓவரா எமோஷனல் ஆகிட்டேன்!" என கூறி புன்னகைத்தான்.

நான் மெல்ல அவன் தோளை ஆதரவுடன் அழுத்தி"சிவா இதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது!

நான் காணும் கனவுகளில் கூட பலமுறை, பிணம் எழுந்து சிரித்து மீண்டும் படுத்து கொள்ள, சுற்றி இருப்பவர்கள் அதை கண்டு கொள்ளாமல், வெகு இயல்பாக அதற்கு இறுதி ஊர்வலம் நடத்துவர்!

மலையின் உச்சியில இருந்து நான் பள்ளத்தில் விழுந்து இரத்த வெள்ளத்தில் வீட்டுக்கு சிரித்தடியே நடந்து செல்வேன்! இப்படி நானும் பல கனவுகள் கண்டு வியர்த்து கொட்டி, பிறகு தூக்கமே வராமல் விடியும் வரை கொட்ட கொட்ட விழித்து இருந்திருக்கிறேன்!கனவுகளில் இதெல்லாம் சர்வ சாதாரணமாக நடக்கும் ஒன்றுதானே! அதை நீ ஏன் இவ்வளவு சீரியசாக எடுத்துக்கொண்டு இப்படி பயப்படுகிறாய்" என கூறி அவனை சமாதான படுத்த முயன்றேன்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அவனோ என் சால்ஜாப்புக்கு எல்லாம் தலையாட்டிவிட்டு! சற்றுநேரம் மௌனம் காத்தான்.

பின்பு மெல்லிய குரலில் "சார்! இன்று மதியம் நான் "பைக்கில்" ஒரு நிசப்தமான தெருவில் வந்து கொண்டு இருந்தபோது,

கனவில் நடந்தது போல்,

ஒரு தெரு நாய் கொலை வெறியுடன் நிஜத்திலேயே என்னை துரத்த, ஒரு கட்டத்தில அதன்மேல் எனக்கு வெறுப்பு உண்டாகி, பைக்கை நிறுத்தி, என் விழிகளால் கோபத்துடன் ,அதன் மார்பு கூட்டை உற்று நோக்க ,அது அடுத்த நொடியில் சுருண்டு விழுந்து செத்து போச்சி சார்! நல்ல வேளை தெருவில் ஜன நடமாட்டம் ஏதும் இல்லை! கோபம் மேலிட்ட அந்த ஒரு நிமிடத்தில் என் மூளையில் ஏதோ ஒரு இரசாயன மாற்றம் நிகழ்ந்து, அந்த அதீத சக்தி வாய்ந்த

"தூண்டுறு மின்திறன்" உருவாவதை என்னால் உணர முடிந்தது சார்! ஆனால் அது உருவான பிறகு அதை தடுத்து கட்டுப்படுத்த என்னால் முடியவே இல்லை சார்! அநியாயத்துக்கு அதை

கொன்னுட்டேன். பாவம் சார்

அந்த நாய்.

எனக்கு ரொம்ப பயம்மா இருக்கு சார்! என்னால் கட்டு படுத்த முடியாத இந்த அதீத சக்தியால் நான் கொலை குற்றவாளி ஆகிவிடுவேனோ? என்ற பயம் என்னை ஆட்கொண்டு சித்ரவதை செய்யுது சார்!

எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல சார். நான் ஒரு ஈ எறும்புக்கு கூட தீங்கு நினைக்காதவன் சார்! என்னை பத்தி உங்களுக்கு நல்லாவே தெரியும் சார்!" என கூறும்போது அவன் குரல் உடைந்து ஓவென தேம்பி தேம்பி அழ ஆரம்பித்து விட்டான்!

அவன் அழுது முடியும் வரை காத்திருந்தேன்! (அழுகை கவலைகளின் சிறந்த வடிகால் என்பதால்) பிறகு மெல்ல அவனிடம்"சிவா! இந்த

"தூண்டுரு மின்விசை" என்பது மிகமிக குறைவான "வோல்டேஜ்" உடையது அன்றோ! அதனால் எப்படி ஒரு இதயத்தை நிறுத்த முடியும்?

சரி,அந்த நாய் செத்துவிட்டது என்று உனக்கு எப்படி தெரியும்?அது மயக்கம் போட்டு கூட விழுந்திருக்கலாம் அல்லவா?" என்று வினவ..

அவன் நிமிர்ந்து உட்கார்ந்து

"உண்மைதான் சார்! ஆனால் என்னுள் ஏற்படும் மின்சக்தி மிக அதீதமாக உள்ளதன் காரணம் என்னவென்று எனக்கே புரியவில்லை சார்.

நான் இறங்கி போய் நாயை உலுக்கி பார்த்தேன் சார்! மூச்சும் நின்று போய் இருந்தது. அதுக்கு நிச்சயமாக உயிர் இல்லை சார்" என்றான்!

Representational Image
Representational Image

எனக்கு ஒரே குழப்பமாகி விட்டது. இருந்தாலும் சமாளித்து கொண்டு"சிவா நீ எதற்கும் பயப்படாத! இது ஒரு வகையான "வலிப்பு" வியாதியை சேர்ந்தது என நினைக்கிறேன்? இப்போதைக்கு உனக்கு தூக்க மாத்திரை தருகிறேன்! இரவு நன்றாக தூங்கு! நாளை என் உற்ற நண்பனான நரம்பியல் மருத்துவரிடம் உன்னை அனுப்பி வைக்கிறேன்! அவர் உன்னை முற்றிலும் குணம் ஆக்கி விடுவார் கவலைப்படாதே!"என ஆறுதல் கூறி வழி அனுப்பினேன்!

அவன் சென்றபிறகு.. அவனை பற்றி யோசித்தேன்! இது ஒரு வகையான "மனநோயாகத்தான்" இருக்கும்.. அவன் கூறுவது அனைத்தும்,

நிஜம்போல் தோன்றும் ,

கற்பனையாகத்தான் எனக்கு பட்டது.

ஆனால் அவன் விழிகளில் தோன்றிய அமானுஷ்ய பிரகாசமும் அவன் "தூண்டுறு மின்விசை"(evoked potential) பற்றி விளக்கிய வியாக்யானமும்" இது நடக்கும் சாத்தியக்கூறுகள் உண்டோ?" என என்னை நானே கேட்டுக்கொள்ள வைத்தது.

என் ஆழ்மனம் ஏனோ? அவன் கூறுவது அனைத்தும் நூற்றுக்கு நூறு உண்மை என நம்பியது!

ஆனாலும் ஒரு மருத்துவனாய், என்னால் அதை முற்றிலுமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை!

என் மின்னணு கணினி நண்பர்களிடம் இதை பற்றி விவாதித்த வேண்டும் என்று முடிவு செய்தேன்.அன்று நான் கிளினிக் மூடும் போது நள்ளிரவு 12மணியை தாண்டி இருந்தது!

அடுத்த ஓரிரு நாட்கள் அவனை மிகவும் எதிர்பார்த்தேன். ஆனால் அவன் வரவே இல்லை!

மூன்றாம் நாள் காலை

"தினத்தந்தி" நாளிதழில்

கொட்டை எழுத்துக்களில்...

"வாய்த்தகராறு முற்றி, நண்பனை மர்மமான முறையில் கொன்ற , பிரபல அரசு இன்ஜினீயரிங் கல்லூரி பட்டதாரி தலைமறைவு! சென்னையில் பட்டப்பகலில்

பயங்கரம்! போலீஸ் அவனை

வலைவீசி தேடி வருகிறது!"

என்று... முதல் பக்கத்தில் வந்த செய்தியை கண்டு வியப்பின் உச்சத்தில் மலைத்து போய், நின்றேன்!

(முற்றும்)

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.