Published:Updated:

அப்படி சுவிசில் என்னதான் இருக்கிறது?| பயணக் கட்டுரை | My Vikatan

Switzerland

எந்த விமானம் என்றாலும் ,கொரோனாவுக்குப் பிறகு கட்டணத்தைத் தாறுமாறாக ஏற்றி விட்டார்கள். அதில் பெரிய மாற்றமில்லை. இந்த விமானத்தில் ஒரு நல்லது என்னவென்றால் காலையில் சென்னையில் கிளம்பி, அன்று முன்னிரவே சூரிக்(ஜூரிச்)நகரை அடைந்து விடலாம் என்பதே.

அப்படி சுவிசில் என்னதான் இருக்கிறது?| பயணக் கட்டுரை | My Vikatan

எந்த விமானம் என்றாலும் ,கொரோனாவுக்குப் பிறகு கட்டணத்தைத் தாறுமாறாக ஏற்றி விட்டார்கள். அதில் பெரிய மாற்றமில்லை. இந்த விமானத்தில் ஒரு நல்லது என்னவென்றால் காலையில் சென்னையில் கிளம்பி, அன்று முன்னிரவே சூரிக்(ஜூரிச்)நகரை அடைந்து விடலாம் என்பதே.

Published:Updated:
Switzerland

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

பூவுலகின் சொர்க்கம் என்று அழைக்கப்படும் சுவிட்சர்லாந்து நாடு,ஒரு காலத்தில் பெரும் பணக்காரர்கள் மட்டுமே செல்லக் கூடியதாக இருந்தது!ஆனால் தற்பொழுதோ,நம்மைப் போன்ற சாதாரணமானவர்களும் சென்று தங்கும் நிலையில் உள்ளதென்றால்,அதற்கு முழுதான காரணம் கல்வி ஒன்றே!படிப்பும்,விஞ்ஞான வளர்ச்சியும் சாத்தியமற்ற பலவற்றைச் சாத்தியமாக்கியிருக்கிறது என்றால் உண்மையே! இயற்கை எழிலும்,அமைதியும்,அன்பான மனிதர்களுமே சுவிசைச் சொர்க்கமாக்கி வைத்திருக்கக் காரணம் என்றால் அதில் மிகையில்லை!

‘எமிரேட்ஸ்’,’எட்டிஹாட்’,’ஏர் இந்தியா’,’லுப்தான்சா’ என்று பல நிறுவனங்களின் விமானங்களில் ஏற்கெனவே பறந்து விட்டதால், இம்முறை ‘ஒமன் ஏர்’ விமானத்தைத் தேர்வு செய்தோம். எந்த விமானம் என்றாலும் ,கொரோனாவுக்குப் பிறகு கட்டணத்தைத் தாறுமாறாக ஏற்றி விட்டார்கள். அதில் பெரிய மாற்றமில்லை. இந்த விமானத்தில் ஒரு நல்லது என்னவென்றால் காலையில் சென்னையில் கிளம்பி, அன்று முன்னிரவே சூரிக்(ஜூரிச்)நகரை அடைந்து விடலாம் என்பதே.

சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையம்

எங்கள் விமானம் சென்னை விமான நிலையத்தை விட்டுச் சரியாக 9.35 க்குக் கிளம்பியது. இத்துணூண்டு ஆட்டோவுக்கே ரிவர்ஸ் கியர் வந்து விட்டாலும், இவ்வளவு பெரிய விமானத்திற்கு இன்னும் அது வரவில்லை. இழுவை எந்திரத்தால் பின்னோக்கி இழுத்து, அப்புறந்தான் முன்னோக்கிப் பயணம்!சில நிமிடங்கள் ரன்வேயில் பயணித்த பிறகு, விமானம் வானில் ஏறியது. அன்பாக உபசரித்த பணிப் பெண்கள் கொடுத்த உணவை மறுத்து விட்டு,(அன்று பிரதோஷம் என்பதால் சூரியன் மறையும் 6 மணி வரை விரதம் )ஜூசும், டீயும் அருந்தினோம். அடிக்கடி விமானப் பயணம் என்பதால் ஜன்னல் சீட்டில் ஆர்வம் குறைந்து விட்டது. மேலும் ‘ஐஸ்ல்’ சீட் என்றால், ரெஸ்ட் ரூம் செல்வதும், எழுந்து நடப்பதும் எளிதாகி விடும் என்பதால் இப்போதெல்லாம் ப்ரிபரன்ஸ் அதற்கே.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே புகை மண்டலமாகப் படர்ந்திருக்கும் மேகக் கூட்டத்தைப் பின்னுக்குக்குத் தள்ளி மேலே சென்றதும் தெரிவதெல்லாம், அப்பழுக்கில்லாத நீல வானம் மட்டுமே! முடிவில்லாத தொலைவுக்கு நீண்டு கிடக்கும் அதனைப் பார்ப்பதே அழகென்றால், அதன் அளவிட முடியாத நீள, அகலத்தை எண்ணி மனம் வியப்பதில் வியப்பேயில்லை!

சுமார் 4 மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, விமானம் கீழே இறங்க ஆரம்பித்தது. மஸ்கட்டில் விமானம் மாற வேண்டும். மஸ்கட்டில் பசுமைக்குப் பஞ்சம் என்பது விமானத்திலிருந்து பார்க்கும்போதே தெரிந்தது. ஆப்கானிஸ்தான் போலவே அதுவும் காட்சியளித்தது.

ஏறத்தாழ இரண்டு மணி நேரம் இடைவெளி இருந்ததால் அவசரமில்லாமல் ‘செக்யூரிடி செக்’முடித்து, சூரிக் விமானம் புறப்படும் கேட்டுக்கு வந்தோம். அங்கு சில தமிழ் பேசும் நம்மவர்கள் அறிமுகமாக, கதை பேச ஆரம்பித்தோம். விமானப் பணியாளர்கள் பலர், மிடில் ஈஸ்டில் உள்ளவர்கள், நல்ல தமிழ் பேசுகிறார்கள். சிலரிடம் விசாரித்ததில், அவர்கள் சென்னையில் படித்ததாகவோ அல்லது பணியில் இருந்ததாகவோ கூறினார்கள்.

Switzerland
Switzerland

ஒமன் ஏர் சூரிக் விமானம் மதியம் 2.50 க்குக் கிளம்பிற்று.(நமக்கும் மஸ்கட்டிற்கும் 1.30 மணி நேர வித்தியாசம்-பின்னால்)சற்றேறக்குறைய ஏழு மணி நேரப்பயணம். ஜூஸ், சாப்பாடு, காபி,டீ,சான்ட் விச் என்று கொடுத்து,பசிக்காமல் பார்த்துக் கொள்கிறார்கள். இந்திய நேரப்படி ஆறு மணியைக் கடந்த பின்னர், அவர்கள் கொடுத்த வெஜ் மீலைச் சாப்பிட்டோம்.

சூரிக் விமான நிலையத்தை ஏழரை மணி வாக்கில் எங்கள் விமானம் தொட, ஐந்தரை மணிக்கு நம்மூரில் இருப்பதைப் போல் வெளிச்சமாக இருந்தது. கோடை காலத்தில் 9.30 மணி வரை சூரிய வெளிச்சம் இங்குண்டு. பல நாட்களில் டின்னர் சாப்பிட்டபிறகு நாங்கள் வாக் சென்று வருவதுண்டு.(நமக்கும் சுவிசுக்கும் 3.30 மணி நேர வித்தியாசம்-சுவிஸ் பின்னால்)

எப்பொழுதுமே விமானத்தை விட்டு இறங்கி, சம்பிரதாயங்களை (formalities)முடித்துக் கொண்டு, உடைமைகள் கோரல்(baggage claim) இடத்திற்கு வருமுன்னரே, நமது பயணப் பெட்டிகள்((suitcases) வந்து விடும்.சில தடவைகள் கன்வேயர் பெல்டிலிருந்து இறக்கப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டிருந்ததும் உண்டு. இம்முறை நாங்கள் வரவும், பெட்டிகள் வரவும் சரியாக இருந்தது. அவற்றை எடுத்துக் கொண்டு, காரில் ஏறி வீடு வந்து சேர்ந்தோம்.

சுவிசில் சூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களே கோடைக்காலம். குளிர் குறைந்து இதமான தட்ப வெப்பம் நிலவும் நேரம். இவ்வருடம் குறைந்த வெப்பநிலை 14 டிகிரியாகவும் அதிக பட்சம் 27 ஆகவும் நிலவுகிறது. நாம் உடுத்தியிருக்கும் சாதாரண ஆடைகளுடன் வாக் செல்லவோ, கடைகளுக்குப் போகவோ, நண்பர்களைச் சந்திக்கவோ முடியும்.

Switzerland
Switzerland

ஸ்வட்டர்,ஜாக்கட் இவையெல்லாம் இப்பொழுது தேவையில்லை. இரண்டொரு மாதங்கள் போனால், இவையின்றி வெளியில் செல்ல இயலாது!

அப்படி சுவிசில் என்னதான் இருக்கிறது? என்ற எண்ண ஓட்டம் இதனைப் படிக்கும் உங்களுக்கு வந்திருக்கக் கூடும்.நியாயந்தானே! உங்கள் எண்ணத்திற்குப் பதிலளிக்க வேண்டுவது எனது கடமையல்லவா? எனது அனுபவித்திலிருந்து இங்குள்ளவற்றை எழுதுகிறேன்.

- பெப்ரவரியில் ஆரம்பிக்கும் வெயில்,ஜூனையும் தாண்டித் தொடர்வதும்,குளித்து விட்டுக் குளியலறையை விட்டு வெளியே வருமுன்னே வியர்க்க ஆரம்பிப்பதும்,வழக்கத்திற்கு மாறாக ஏ.சி.,யை எப்போதும் ஓட விடுவதும் என்று இவ்வருடம் ஆதவன் நம்மை ஆட்டிப்படைத்து விட்டானே. அதிலிருந்து விடுதலை. குளித்து விட்டு ஃபேனுக்குக் கீழே நிற்பது போன்ற ஓர் உணர்வு இங்கே.

-இங்கு குளிர் காலத்திலும் கொசுத் தொல்லை இல்லை. இங்கு அவருக்கு ‘என்ட்ரி’கிடையாது. கொசுவார் தொல்லையில்லாமல், போர்த்திக் கொண்டு உறங்குவது போன்ற சுகம் உலகில் வேறேனும் உண்டா?- சொல்லுங்கள்!

-சைக்கிளிங்,வாக்கிங்,ரன்னிங் போவதற்கென்றே தனிப் பாதைகள்! 24 மணி நேரத்தில் எப்பொழுது உங்களுக்கு விருப்பமோ,அந்த நேரத்தில் நீங்கள் தைரியமாகச் செல்லலாம்-இரவு 12 மணிக்குக் கூட!

-சிறியவர் முதல் பெரியவர் வரை அத்தனை பேரும் சட்டத்தை மதித்து நடக்கிறார்கள்.சிறு சாலைகளைக் கடக்கச் சாலை ஓரத்தில் நின்றாலே போதும்.அத்தனை ஓட்டிகளும் தங்கள் வாகனத்தை நிறுத்தி வழி விடுகிறார்கள்.மனித உயிர்களை மகத்தாய் மதிக்கிறார்கள்.

Switzerland
Switzerland

- சாலைகள் அனைத்தும் மேடு,பள்ளமின்றி,மேன் ஹோல்கள் இருப்பதே தெரியாமல் நேர்த்தியாக அமைக்கப் பட்டுள்ளன.

-வெளியே கிளம்பி விட்டால், தெரிந்தவர்களோ, தெரியாதவர்களோ, ஒரு புன்முறுவலையோ, ஜெர்மனியில் வணக்கத்தையோ சொல்லி நம்மைக் கடந்து சென்றாலும், மனதில் தங்கி விடுகிறார்கள்.

-மலைகள் பனிப்போர்வையைப் போர்த்திக் கொண்டுள்ளன அல்லது பசுமையைப் போர்த்திக் கொண்டுள்ளன.

-தூய்மையான காற்று(pollution free air),மனித வாழ்வுக்குகந்த சீதோஷ்ண நிலை(fair climate),அமைதி தவழும் சமூகம் ஆகியவையே பலரையும் இந் நாட்டிற்கு ஈர்க்கின்றன. இங்கு சிட்டிகளில் வாழ்வதைவிடக் கிராமங்களில் வாழ்வதையே அனைவரும் விரும்புகின்றனர். நமது மகாத்மா ‘இந்தியா கிராமங்களில் வாழ்கிறது’என்றார். சுவிஸ் கிராமங்கள் அதனை நிரூபிக்கின்றன.

-ஜனவரியில் நாங்கள் இங்கிருந்தபோது பூர்வாங்க வேலைகள் மட்டுமே ஆரம்பிக்கப்பட்டன. இப்பொழுது திரும்பி வந்து பார்த்தால், பாலமும், கட்டிடங்களும் வரிசை கட்டி நிற்கின்றன. நம்மூரில் பாலங்கள் கட்டுவது,டி.வி.சீரியல்கள் போல!

Switzerland
Switzerland

-மக்கட்தொகை அதிகமென்பதையும்,வளரும் நாடு என்பதையும் பலர் காரணமாகக் கூறியே நம் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள். இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் அதே பல்லவியைப் பாடிக் கொண்டிருக்கப் போகிறோம்?!உலகின் பல நாடுகள் மக்கட்தொகையை மகத்தானதாக மதித்து அதனைப் பெருக்க வழிதேடி வருகையில், உள்ளதை ஒழுங்காகப் பயன்படுத்தாமல் கோட்டை விட்டு வருகிறோம்.உலகிலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட எழுச்சி மிக்க நாடு இந்தியா என்பதை நாம் நிரூபிக்கும் காலம் வந்து விட்டது.

-சாலை ஓரங்களிலேயே மலர்கள் மலர்ந்து நம்மைக் கவர்கின்றன. பழங்கள் பழுக்கின்றன. அவற்றை இங்குள்ள மக்கள் ரசிக்கிறார்களே தவிர,அவற்றின் நிழலைக் கூடத் தொடுவதில்லை.

இவற்றையெல்லாம் உங்களுடன் பகிர்ந்து கொள்ளக் காரணம் என்னவெனில், வசதியுள்ளவர்கள் அடுத்த கோடையிலாவது ஸ்விஸ் வரத் திட்டமிடுங்கள். பணத்தைச் சேமியுங்கள்; பாஸ்போர்ட் இல்லாதவர்கள் உடனடியாக வாங்குங்கள்; விசாவுக்கு அப்ளை செய்யுங்கள்;விசா வந்ததும் எந்த ஏர்லைன்ஸ் என்பதைத் தேர்வு செய்து டிக்கட்டைப் போடுங்கள். வந்து என்ஜாய் பண்ணுங்கள் சுவிசை! ஆரோக்கியம், ஆனந்தம், அமைதி, கியாரண்டி..

சரி! வசதி படைத்தவர்கள் பறக்கலாம்;பலவற்றையும் அனுபவிக்கலாம்! எங்களைப் போன்ற சாதாரணமானவர்கள் வயிற்றுப் பாட்டுக்கே வழி தெரியாமல் அல்லாடுகையில், நீர் சொல்வதை எவ்வாறு எடுத்துக்கொள்வது என்று உங்களில் பலர் முணுமுணுப்பது எனக்குக் கேட்கிறது. கவலையை விடுங்கள்!உங்களுக்காக இங்கு நான் பார்ப்பனவற்றைப் பார்த்தபடியே எழுதுகிறேன்! தூய்மையைப் பேண இங்கு செயல்படுத்தப்படும் முறைகள், வீடுகளின் அமைப்பும் வாழ்க்கை முறையும், இங்குள்ள போக்குவரத்து முறை என்று பலவற்றையும் பார்ப்போமே!-சற்று விரிவாக!

-ரெ.ஆத்மநாதன்,

காட்டிகன்,சுவிஸ்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.