Published:Updated:

ராஜா இசையுடன் கனடாவின் ஆயிரம் தீவுகள் பயணம்! | My Vikatan

Boldt Castle

நான் இந்த தீவை நீர் மார்க்கமாக படகு(cruise) பயணமாகவும், ஆகாய மார்க்கமாக ஹெலிகாப்டரிலும் கண்டு களித்தேன். செயின்ட் லாரன்ஸ் நதி மேலே ஹெலிகாப்டரில் இருந்து பார்த்த போது தீவுகளை ஒவ்வொன்றாய் விரல் விட்டு எண்ண முடிந்தது.

ராஜா இசையுடன் கனடாவின் ஆயிரம் தீவுகள் பயணம்! | My Vikatan

நான் இந்த தீவை நீர் மார்க்கமாக படகு(cruise) பயணமாகவும், ஆகாய மார்க்கமாக ஹெலிகாப்டரிலும் கண்டு களித்தேன். செயின்ட் லாரன்ஸ் நதி மேலே ஹெலிகாப்டரில் இருந்து பார்த்த போது தீவுகளை ஒவ்வொன்றாய் விரல் விட்டு எண்ண முடிந்தது.

Published:Updated:
Boldt Castle

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

சென்னையில் ஆயிரம் விளக்குகள் பிரசித்தம் என்பது போல கனடாவில் ஆயிரம் தீவுகள்(Thousand Islands) மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு இடமாகும். ஆயிரம் தீவுகள் என்று கூறினாலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீவுகள் தான் இருக்கின்றன. ஒரே இடத்தில் ஆயிரம் தீவுகள் என்பது நம்மை பிரமிக்க வைக்கிறது. டொரோண்டோவில் இருந்து இந்த தீவுகளுக்கு செல்ல காரில் 2 1/2 மணி நேரம் தான்.

இசைஞானி இளையராஜாவின் இன்னிசை மழையில் நனைந்து கொண்டே சென்றதால் எனக்கு ஒரு மணி நேரத்தில் வந்து விட்டதாக தோன்றியது. காரில் செல்பவர்கள் சிலர் படகை எடுத்து கொண்டு ஆயிரம் தீவுகளை நோக்கி செல்வதையும் நாம் காண முடியும். நான் இந்த தீவை நீர் மார்க்கமாக படகு(cruise) பயணமாகவும், ஆகாய மார்க்கமாக ஹெலிகாப்டரிலும் கண்டு களித்தேன். செயின்ட் லாரன்ஸ் நதி மேலே ஹெலிகாப்டரில் இருந்து பார்த்த போது தீவுகளை ஒவ்வொன்றாய் விரல் விட்டு எண்ண முடிந்தது.

Boldt Castle
Boldt Castle

நான் படகு பயணத்தில் 2-3 முறை இந்த தீவுகளை பார்த்திருக்கிறேன். ஒரு முறை கனநொக்வெ(Gananoque) என்ற ஊரிலிருந்தும், இன்னொரு முறை ராக்போர்ட் என்ற ஊரிலிருந்தும் படகு பயணம் சென்றேன். இரண்டு படகு பயணங்களும் வித்தியாசமாக இருந்தது.

படகில் அமர்ந்து நீரின் அழகையும் அங்கங்கே சிதறி கிடைக்கும் சிறிதும் பெரிதுமாக தீவுகளை கண்டுகளித்த படியே பயணம் செய்தது மிகவும் பிடித்திருந்தது.

ஆயிரம் தீவுகள்
ஆயிரம் தீவுகள்

படகு பயணத்தில் சிறிய பன்னாட்டு பாலம் ஒன்று நம் கண்ணுக்கு தென்பட தவறுவதில்லை. உலகிலேயே மிக சிறிய இந்த பாலம் தான் கனடா, அமெரிக்கா என்ற இரு நாடுகளையும் பிரிக்கவும், இணைக்கவும் செய்கிறது. கனடாவிலிருந்து நாம் செல்கையில் அங்கிள் சாம்(Uncle Sam) என்ற படகு அமெரிக்காவிலிருந்து வருவதை நாம் பார்க்க முடிகிறது.

இந்த ஆயிரம் தீவுகளில் அந்த காலத்து மன்னர்கள் பல விலை மதிப்பற்ற பொருட்கள் புதைத்து வைத்திருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஒரு சதுர அடியில் மரங்கள் இருந்தால் கூட அதை ஒரு தீவாக கருதுகிறார்கள்.

கனடாவின் ஆயிரம் தீவுகள்
கனடாவின் ஆயிரம் தீவுகள்

அதிவேகமாக சில படகுகள் நீரைக் கிழித்து கொண்டு செல்வது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இவ்வளவு வேகமாக செல்லும் இவற்றை படகு என்பதை விட மோட்டார் பைக் என கூறுவது பொருத்தமாக இருக்கும். நான் சென்ற படகில் மூன்று தளங்கள் இருந்தது. கீழ் தளத்தில் உணவகமும், மேலே இரு தளங்களில் பயணிகள் அமர்ந்து பயணம் செய்ய ஏற்பாடு செய்ததோடு இந்த தீவுகளின் வரலாற்றையும் அவர்கள் கூறியது இன்னும் சிறப்பு.

பல தீவுகளில் மனிதர்கள் வாழும் வீடுகளையும் காண முடிந்தது. ஒரு காலத்தில் இந்த தீவுகள் கேட்பாரற்று கிடந்ததாகவும் 2 டாலருக்கு விற்கப்பட்டதாகவும் கேள்விப்படுவது நம்மை இன்னும் வியப்படைய செய்கிறது. கோடையில் இளைப்பாறுவதற்காக இங்குள்ள வீடுகளில் வந்து தங்குகிறார்கள். இங்கு படகின் மூலம் தான் எங்கும் செல்ல முடியும் என்பதால், இந்த வீடுகளின் முன்பு கார்களை நிறுத்தி இருப்பது போல படகுகளை நிறுத்தியிருக்கும் காட்சி நம்மை ஆச்சரியப்பட செய்கிறது. கோடை காலத்தில் மீன் பிடிப்பதையும் விரும்பி செய்கிறார்கள்.

அடுத்து நாம் செல்லும் வழியில் தென்படும் ஒரு கோட்டையை அமெரிக்காவின் தாஜ் மஹால் எனலாம். ஜார்ஜ் போல்ட் என்னும் அமெரிக்கர் தன் அன்பு மனைவிக்காக ஒரு தீவை வாங்கி அதில் நூற்றுக்கும் மேற்பட்ட வேலையாட்களை கொண்டு வசதியான அரண்மனை போன்ற வீடு காட்டியுள்ளார். இதற்கு போல்ட் காஸில்(Boldt castle) என்று பெயர். இது அன்பின் சின்னமாக கருதப்பட்டு இதயத்தீவு(Heart Island) என அழைக்கப்படுகிறது. இதிலுள்ள 120 அறைகளும், அழகிய தோட்டமும், நீர்வீழ்ச்சியும் கண்ணை கவரும் வகையில் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் பராமரிப்பின்றி இருந்த இந்த அரண்மனையை அமெரிக்க அரசாங்கம் செப்பனிட்டு அருங்காட்சியமாக மாற்றி நம்மை போன்ற மக்கள் பார்வையிட அனுமதித்தது. போல்ட் காஸில் கட்டிடக்கலையும் இதை வடிவமைத்த நேர்த்தியும் கண்ணை கவரும் விதமாக அமைக்கப்பட்டிருந்தது நம்மை வியப்படைய செய்கிறது. போல்ட் காஸிலை நாம் படகில் இருந்தவாறே பார்வையிட்டு கொண்டே செல்லலாம். அமெரிக்க விசா இருப்பவர்கள் மட்டுமே உள்ளே சென்று வர முடியும். Immigration மற்றும் Customs check எல்லாம் முடித்து விட்டு தான் உள்ளே செல்ல அனுமதிப்பார்கள்.

வள்ளி சத்தியமூர்த்தி
வள்ளி சத்தியமூர்த்தி

படகிலிருந்து எந்த பக்கம் பார்த்தாலும் நீரின் அழகோ அழகு! இதோடு சில்லென்ற காற்றை அனுபவித்து கொண்டே பயணம் செய்ததை எழுத்தாலும் சொல்லாலும் சரியாக வருணிக்க முடியாது என்றே கூறலாம். ஆயிரம் தீவுகள் கனடாவின் சொர்க்க பூமி என கூறுவது மிகையாகாது.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.