Published:Updated:

செஞ்சீனத்தில் ஒரு நாள்! | அனுபவ பகிர்வு| My Vikatan

Representational Image ( Photo by Yifei Wong on Unsplash )

விடுதியை வந்தடைந்த பின் , மீண்டும் பழைய பல்லவி வாகன ஓட்டியிடம் இருந்து, அதே மூன்று மடங்கு வாடகை கேட்டு. இந்த முறை , நான் அவரை விடுதியின் வரவேற்பாளரிடம் அழைத்து சென்றேன்.

செஞ்சீனத்தில் ஒரு நாள்! | அனுபவ பகிர்வு| My Vikatan

விடுதியை வந்தடைந்த பின் , மீண்டும் பழைய பல்லவி வாகன ஓட்டியிடம் இருந்து, அதே மூன்று மடங்கு வாடகை கேட்டு. இந்த முறை , நான் அவரை விடுதியின் வரவேற்பாளரிடம் அழைத்து சென்றேன்.

Published:Updated:
Representational Image ( Photo by Yifei Wong on Unsplash )

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

அது 2011 ஆண்டு. ஆம்! கிட்டதட்ட பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் நான் சீனா சென்றபோது ஏற்பட்ட அனுபவம்.

கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவின் தலைநகரான நைரோபியில் இருந்து புறப்பட்டு துபாய் வழியாக சீனாவின் ஷாங்காய் நகருக்கு விமான பயணம். இரவு இரண்டு மணிக்கு ஷாங்காய் விமான நிலையம் சென்றடைந்தோம் . உலகின் அதிகமான மக்கள் தொகை கொண்ட நாட்டின் , அதுவும் ஷாங்காய் விமான நிலையம் மக்கள் நடமாட்டமின்றி எங்களை மட்டும் வரவேற்பது போல் இருந்தது. விமானநிலையத்தின், வெளியேயும் மக்கள் கூட்டம் இல்லை. செஞ்சீனம் என்பதன் அர்த்தம் புரிவது போல் இருந்தது.

எங்களை அழைத்துச் செல்ல , ஒரு சீன இளம்பெண் வந்தது , எங்களை மேலும் வியப்பில் ஆழ்த்தியது. அகண்ட நெடுஞ்சாலையில் அடக்கமாய் சென்றுக்கொண்டிருந்த வாகனங்களின் வரிசையில் ஒரு ஒழுங்கை காண முடிந்தது. இரவு நேரங்களிலும் சாலை சந்திப்பில் எதிர்சாரியில் வாகனங்களே இல்லாவிடினும், பச்சை விளக்கிற்காக காத்திருக்கும் வாகன ஓட்டியின் பொறுமை எனக்கு பிடித்திருந்தது. ஒருவாறாக தங்கும் விடுதியை வந்தடைந்து அந்த பெண்ணிடம் நன்றி சொல்லி அறையில் தஞ்சமடைந்தோம்.

Representational Image
Representational Image
Photo by Jerry Bao on Unsplash

மறுநாள் காலை நான்ஜிங் செல்ல வாடகை காரில் ரயில் நிலையம் நோக்கி பயணித்தோம். அதிவேக ரயிலில் ஏறி ஒரு மணி நேரத்தில் நான்ஜிங் சென்றடைந்தோம்.

வேலை நிமித்தமாக பல தொழிற்சாலைகளை சுற்றி பார்த்து விட்டு , இரவு பதினோரு மணி அதிவேக ரயிலில் புறப்பட்டேன். ரயிலின் வேகம் 255 கிலோமீட்டர் வரை காட்டியது எலக்ட்ரானிக் பலகைகள். வரும் இடங்கள் மற்றும் ரயில் ஊர்தியின் வேகம் ஆகியவற்றை காட்டி கொண்டிருந்தன. ரயில் ஊர்தி அந்த நடு இரவிலும் நிரம்பி வழிந்தது. பெரும்பான்மையான இளைஞர் பட்டாளம் கையடக்க கணிணியில் விளையாடியபடி இருந்தனர்.

ஒருவாறாக ஷாங்காய் ரயில் நிலையத்தில் இறங்கினேன். ரயில் நிலையத்தின் வெளி வாசலில் வெள்ளை சீருடை அணிந்த வாகன ஓட்டிகளின் கூட்டத்தை காணமுடிந்தது. டாக்ஸி ! டாக்ஸி ! எனக்கூவியபடி, இரவையும் இரைச்சலாக்கி கொண்டிருந்தனர்.

செஞ்சீனத்தின் வெள்ளை சீருடை வாகன ஓட்டிகளின் மீது இனம்புரியாத மரியாதை வந்தது. நான் ஒரு வெள்ளை சீருடையை நெருங்கி, நான் தங்கியிருந்த விடுதியின் முகவரி அட்டையை காட்டினேன். அந்த விடுதியை சென்றடைய , காலையில் வரும்போது கொடுத்த வாடகைப்போன்று மூன்று மடங்கு கேட்டார். நான் இரவு நேரம் என்பதால் ஒன்றரை மடங்கு வாடகை தர சம்மதித்தேன். இருப்பினும் வண்டியில் அமர்ந்தபின்னும் தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் மீண்டும் அதே மூன்று மடங்கு வாடகையை கேட்டார். நானும் விடுவதாயில்லை. இரவு நேரம் என்பதால் ஒன்றரை மடங்கே தருவேன் என அடம்பிடித்தேன்.

Representational Image
Representational Image

விடுதியை வந்தடைந்த பின் , மீண்டும் பழைய பல்லவி வாகன ஓட்டியிடம் இருந்து, அதே மூன்று மடங்கு வாடகை கேட்டு. இந்த முறை , நான் அவரை விடுதியின் வரவேற்பாளரிடம் அழைத்து சென்றேன். அவர் பெண் வரவேற்பாளர். முதலில் சீன மொழியில் வாகன ஓட்டி சொல்வதை கேட்டார். பின் என்னிடம் இரவு நேரம் என்பதால் அவருக்கு அதிகப்படியான வாடகையை தரவேண்டும் என்றார். நானும் அவரிடம் காலையில் கொடுத்த வாகன வாடகைக்கு ஒன்றரை மடங்கு தருவதாக ஒப்புக்கொண்டே வாகனத்தில் ஏறியதும் கூறினேன். எனது தரப்பு உண்மையை புரிந்து கொண்ட வரவேற்பாளர், வாகன ஓட்டியின் பக்கம் திரும்பி ஒன்றரை மடங்கு வாடகையை பெற்றுக்கொண்டு கிளம்பச்சொன்னார். வாகன ஓட்டி மறுபடியும் சீன மொழியில் வாதாட ஆரம்பிக்க, அந்தப் பெண் வரவேற்பாளர் ‘போலிஸ்’ என்ற வார்த்தையை உபயோகிக்க கொடுத்த பணத்தை வாங்கிக்கொண்டு பறந்து விட்டார்.

எனது உரிமை செஞ்சீனத்தில் உறதி செய்யப்பட்டதில் திருப்தியாய் இருந்தது.

அனுபவங்கள் தொடரும்

சரோவை

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.