Published:Updated:

ஆப்ரிக்காவின் நேர்மை! | அனுபவ பகிர்வு | My Vikatan

ஆப்ரிக்க விமானம்

விமான நிலைய இலவச வைபை என்னிடம் போக்கு காட்டி பதினைந்து நிமிடத்திற்கொரு முறை லாக் இன் செய்ய சொன்னது..

ஆப்ரிக்காவின் நேர்மை! | அனுபவ பகிர்வு | My Vikatan

விமான நிலைய இலவச வைபை என்னிடம் போக்கு காட்டி பதினைந்து நிமிடத்திற்கொரு முறை லாக் இன் செய்ய சொன்னது..

Published:Updated:
ஆப்ரிக்க விமானம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

அன்று திங்கள்கிழமை , அக்டோபர் 3ஆம் நாள். நைஜீரியாவில் இருக்கும் நான் , வேலை விசயமாக அருகாமையில் இருக்கும் கானா நாட்டிற்கு மூன்று நாட்கள் செல்ல வேண்டியிருந்தது. கானா சிறிய மேற்கு ஆப்ரிக்க நாடு. மக்கள் தொகையில், நைஜிரியாவின் ஏழிலில் ஒரு பங்கு.

காலையில் எட்டு மணிக்கு விமான பயணம் என்பதால் , 5.45 மணிக்கு கிளம்பி லாகோஸ் விமான நிலையத்தை 6.30 மணியளவில் சென்றடைந்தேன். புதிய விமான நிலைய கட்டிடத்தில் எனக்காகவே காத்திருந்தது போல் ஒரு சிலரையே காண முடிந்தது.

விமான நிலைய சம்பிரதாயந்தகளை முடித்த பின் விமானத்திற்காக காத்திருந்தேன். நூறு ஆட்களை மட்டும் ஏந்திக்கொண்டு செல்லும் நான்கு படிகளை கொண்ட விமானத்தில் ஏறினேன். ஐன்னலோர இருக்கை. தவழ்ந்து ஓடும் மேகங்களும் , வானம் வரைந்த விலங்கு முக மேகங்களும், அசுரனின் முகங்கொண்ட மேகங்களும், வானாளாவிய மலை போன்ற மேகங்களும் என்னை புதிய நாட்டிற்கு வழி அனுப்பி கொண்டிருந்தன.

Representational Image
Representational Image

சரியாக ஒரு மணி நாற்பது நிமிட நேரத்தில் கானாவின் தலைநகரமான அக்ராவில் விமானம் தரையிறங்கியது. இங்கிருந்து குமாஸி நகருக்கு செல்ல வேண்டிய விமானப்பயணம் மதியம் ஒரு மணிக்கு என்பதால் காலை சிற்றுண்டியை உண்டபடி காலத்தை கடத்தினேன். விமான நிலைய இலவச வைபை என்னிடம் போக்கு காட்டி பதினைந்து நிமிடத்திற்கொரு முறை லாக் இன் செய்ய சொன்னது..

ஒருவாறாக குமாஸி நகருக்கு செல்ல விமான நிலைய அழைப்பு . விமான நிலைய காத்திருப்பு அறையில் இருந்து கிளம்பி பேருந்து மூலம் விமானம் இருக்கும் இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டோம். இஙகும் அதே போன்று சிறிய ரக விமானம். விமானம் ஏற வேண்டிய தருணத்தில் எனது கைபேசியை காணவில்லை. ஞாபகபடுத்தி பார்த்ததில் அதை விமான நிலைய காத்திருப்பு அறையில் இருக்கையில் வைத்து விட்டு வந்தது நினைவுக்கு வந்தது. உடனடியாக விமானத்தில் ஏறாமல் அங்கிருந்த ஒருங்கிணைப்பாளரிடம் இந்த விசயத்தை சொன்னேன். அவரும் தன் பங்கிற்கு ரேடியோவில் சிலரை அழைத்து மொபைலை கண்டறிய சொன்னார். பத்து நிமிடம் ஓடியது. மொபைல் கிடைக்கவில்லை என்ற செய்தியுடன் விமானம் கிளம்ப வேண்டிருந்ததால், விமானத்தில் ஏறி இருக்கையில் அமர்ந்தேன். மொபைலில் இருந்த அனைத்து தொடர்புகளையும் எப்படி பெறுவது என எண்ணியவாறு, கடவுளை வேண்டினேன்.

விமானம் கிளம்ப தயாரானது. என்ன ஆச்சரியம்!!!. விமான பணிப்பெண் எனது இருக்கைக்கு அருகில் வந்து, எனது மொபைலை கண்டு விட்டார்கள் என்றும், மாலை ஐந்து மணிக்கு வரும் விமானத்தில் குமாஸிக்கு வந்து விடும் என்றும் கூறினார். மனது குதூகலித்தது. நன்றி தெரிவித்தேன் விமான பணிப்பெண்ணுக்கும் , இறைவனுக்கும்.

சொன்னது போல் மாலை நேர விமானத்தில் வந்தது. எனது ஓட்டுநரின் உதவியால் இரவு சரியாக எட்டு மணிக்கு என் கையில் இருந்தது. நானும் எனது மொபைலும் பிரிந்திருந்த காலம் சரியாக ஐந்து மணி நேரங்கள்.

ஆப்ரிக்காவின் நேர்மைக்கு இதுவும் ஓர் உதாரணமாக பார்க்கிறேன்.

அன்புடன்

சரோவை

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.