Published:Updated:

மனைவிக்கு செம்ம சப்ரைஸ்! பல்லடம் டூ பாலக்காடு ஒரு நாள் சுற்றுலா பிளான்! | My Vikatan

Travel article

இப்பொது அழகான காடுகள் வழியே மீண்டும் பயணம் தொடங்கியது நீண்ட தூர பயணத்திற்கு பிறகு நாங்கள் கொழுஞ்சாம்பாறை எனும் ஊர் வந்தோம்.

மனைவிக்கு செம்ம சப்ரைஸ்! பல்லடம் டூ பாலக்காடு ஒரு நாள் சுற்றுலா பிளான்! | My Vikatan

இப்பொது அழகான காடுகள் வழியே மீண்டும் பயணம் தொடங்கியது நீண்ட தூர பயணத்திற்கு பிறகு நாங்கள் கொழுஞ்சாம்பாறை எனும் ஊர் வந்தோம்.

Published:Updated:
Travel article

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

என் மனைவியின் பிறந்தநாள் வரும் 18.11.2022 வெள்ளிகிழமை அன்று வரவிருந்தது. பிறந்தநாள் அன்று வழக்கமாக உள்ளுர் பகுதியில் உள்ள கோவில்களில் தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்புவது வழக்கம் இந்த தடவை கொஞ்சம் மாறுதலாக கேரள பாலக்காடு சென்று பிறந்தநாள் கொண்டாட முடிவு செய்தோம். பல்லடத்தில் இருந்து எங்களது இரு சக்கர வாகனத்தில் பாலக்காட்டை நானும் என் மனைவியும்(மதுபாலா) சுற்றி பார்த்துவிட்டு வருவது என முடிவானது. சுற்றுலா செல்ல போகும் நாளும் வந்தது அந்த பயணத்திற்கும் தயாரானோம் …

மனைவிக்கு செம்ம சப்ரைஸ்! பல்லடம் டூ பாலக்காடு ஒரு நாள் சுற்றுலா பிளான்! | My Vikatan

17.11.2022 - வியாழன் :-

நாளை அதிகாலை நேரத்திலே வாகனத்தில் செல்ல இருந்ததால் இரவே தேவையான அளவு பெட்ரோல் நிரப்பி கொண்டு வண்டியின் இரண்டு சக்கரங்களுக்கும் தேவையான அளவு காற்று நிரப்பி கொண்டேன். நாளை காலை உணவு கேரளாவில் உள்ள ஏதாவது ஹோட்டலில் சாப்பிட்டு கொள்ளலாம் என்ற முடிவால் அதற்க்காக எந்த ஏற்படும் செய்யவில்லை.

தண்ணிர் கொண்டு செல்ல தண்ணீர் பாட்டில், மொபைல் சார்ஜ் செய்ய பவர் பேங்க் என பயணத்திற்கு தேவையான பொருள்களை எடுத்து வைத்து கொண்டோம். வீட்டில் பவர் பேங்க் மற்றும் மொபைல் போனை நன்றாக சார்ஜ் செய்துகொண்டேன் ஏன் எனில் கூகுள் மேப் பயன்பாடு நாளை அதிகமாக இருக்கும் என்பதால்.

மேலும் மீன்குளத்தி பகவதி அம்மன் கோவில் தரிசனம் செய்ய ஆடை கட்டுப்பாடு உள்ளதால் கோவில் நிர்வாகத்தால் அனுமதிக்க பட்ட உடைகள் அணிந்து இருந்தால் மட்டும் கோவிலினுள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.

எனவே காவி வேட்டி எடுத்து வைத்துக்கொண்டேன். நாளை வண்டியில் நீண்ட தூரமும் அதிக நேரமும் பயணம் செய்ய வேண்டியது இருந்ததால் கொஞ்சம் முன்கூட்டியே தூங்க சென்றோம்.

பகவதி அம்மன்
பகவதி அம்மன்

18.11.2022 - வெள்ளி :-

அதிகாலை முன் கூட்டியே எழுந்து பயணத்திற்கு தயாரானோம் காலையில் அனைத்து வேலைகளையும் முடித்து கொண்டு வீட்டில் இருந்து 6 மணிக்கு இருவரும் வண்டி எடுத்துக்கொண்டு கிளம்பினோம் . இங்கிருந்து மீன்குளத்தி பகவதி அம்மன் கோவில் 125 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

வாகனம் பல ஊர்களையும் காடுகளையும் கடந்து சென்றது பயணத்தின் நடுவே அழகான பகுதிகளில் வாகனத்தை நிறுத்தி புகைபடங்களை எடுத்துக்கொண்டோம் பயணத்தின் பாதி தூரம் வந்ததும் வாகனத்திற்கும் எங்களுக்கும் கொஞ்சம் ஓய்வு தேவை என்பதால் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள டீ கடையில் வாகனத்தை நிறுத்தி டீ குடித்துவிட்டு ஓய்வு எடுத்து கொண்டோம். இப்பொது அழகான காடுகள் வழியே மீண்டும் பயணம் தொடங்கியது நீண்ட தூர பயணத்திற்கு பிறகு நாங்கள் கொழுஞ்சாம்பாறை எனும் ஊர் வந்தோம்.

Representational Image
Representational Image

காலை மணி 10.30 ஆகிருந்தது எனவே நாங்கள் திட்டமிட்டபடி காலை உணவை அங்கேயே உன்ன முடிவு செய்தோம். கொழுஞ்சாம்பாறையில் உள்ள ஸ்ரீ அன்னபூரண எனும் உணவகத்தில் காலை உணவை முடித்துக்கொண்டோம்.(பதிமுகம் குடிநீர்,இட்டிலி,பூரி,மசால் தோசை என சிறப்பாக இருந்தது) காலை உணவை முடித்து கொண்டு சிறிது ஓய்விற்கு பிறகு மீட்டும் பயணத்தை தொடர்தோம் கொஞ்ச தூர பயணத்தின் முடிவில் மீன்குளத்தி பகவதி அம்மன் கோவில் வந்து சேர்ந்தோம்.

மீன்குளத்தி பகவதி அம்மன் கோவில் :-

நாங்கள் கோவிலை அடைந்த நேரம் 11 .30 ஆகி இருந்தது கொஞ்சம் தாமதம் ஆகி இருந்ததால் கோவில் தரிசன நேரம் முடிந்திருக்கும் நல்ல வேலை சரியான நேரத்தில் வந்து சேர்ந்தோம் வாகனத்தை வாகன நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு கோவில் குளத்திற்கு சென்று கொண்டு வந்த காவி வேட்டியை மாற்றிக்கொண்டு தரிசனத்திற்கு தயாராகி கோவில் நுழைவு வாயிலை அடைந்தோம். ஆடை கட்டுப்பாடு சோதனை நடந்தது.

Meenkulathi Bhagavathi Temple
Meenkulathi Bhagavathi Temple

கோவில் பிரகாரத்தில் வெள்ளிக்கிழமை என்பதால் கொஞ்சம் கூட்டமாக இருந்தது நாங்கள் இருவரும் வரிசையில் நின்று கொண்டோம். சிறுது காத்திருப்பிருக்கு பிறகு மீன்குளத்தி அம்மன் தரிசனம் கிடைத்தது. தரிசனத்தை முடித்த பின் பிரசாதம் வாங்கிக்கொண்டு கோவில் பிரகாரத்தில் கொஞ்சம் நேரம் அமர்ந்திருந்தோம்.

பின் கோவிலில் இருந்து வெளியேறி கோவில் உள்ள முன் பகுதிக்கு வந்தோம். அங்கு நமக்கு உண்டாகும் கண் திரிஷ்டி விலக தேங்காய் உடைத்து வழிபட அர்ச்சனை சீட் வாங்கிக்கொண்டோம் அருகில் உள்ள கடையில் தேங்காய் வாங்கி கொண்டு கோவில் பிரகாரத்தில் இருந்த அர்ச்சகரிடம் கொடுத்து அர்ச்சனை செய்து தேங்காயை உடைத்து விட்டு கோவில் குளத்திற்கு வந்தோம் அதன் அருகில் ஓய்வு அறை இருந்தது அங்கு கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்து கொண்டோம் .சில புகைப்படங்களை எடுத்துவிட்டு அடுத்த பயண இடத்திற்கு செல்ல தயார் ஆனோம்

குறிப்பு :- மீன்குளத்தி பகவதி அம்மன் கோவில் வாரம் தோறும் ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களில் காலை 5.30 மணிமுதல் மதியம் 12 .00 வரையும் மாலை 5 .30 மணி முதல் இரவு 8 .00 மணி வரையும் மற்ற நாட்களில் காலை 5.30 மணிமுதல் மதியம் 11 .00 வரையும் மாலை 5 .30 மணி முதல் இரவு 8 .00 மணி வரையும் கோவில் தரிசனம் செய்ய முடியும்.

Meenkulathi Bhagavathi Temple
Meenkulathi Bhagavathi Temple

கோவிலில் ஆடை கட்டுப்பாடு உள்ளது, கோவில் பகுதியில் குளமும் உள்ளது .தொழில் வளம் பெருக நிறைய பேர் இங்கு வந்து தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம். கோவிலுக்கு வந்து செல்ல பேருந்து வசதி உள்ளது. முன்பொருமுறை நானும் என் நண்பனும் (ரங்கநாதன்) பேருந்தில் வந்து இங்கு வந்து தரிசனம் செய்து விட்டு சென்று உள்ளோம்.

மீண்டும் வண்டியை கிளப்பி அடுத்து இடத்திற்கு செல்ல ஆரம்பித்தோம் பாலக்காட்டில் பல பகுதிகளை கடந்து செல்லும் போது வழியில் உள்ள இடங்களை ரசித்தவாரே வாகனத்தை ஓட்டிச்சென்றோம் மதிய நேர வெயிலை பொறுப்படுத்தாமல் நீண்ட தூரம் பயணம் செய்து முடிவில் அடுத்த சுற்றி பார்க்க வேண்டிய இடத்தை அடைந்தோம்,

மலம்புழா பாம்புகள் மீட்பு மற்றும் பாதுகாப்பு மையம் :-

30 கிலோமீட்டர் பயணத்திற்கு பிறகு நங்கள் இப்பொது வந்த இடம் மலம்புழா பாம்புகள் மீட்பு மற்றும் பாதுகாப்பு மையம். மணி 1.45 ஆகி இருந்தது வாகனத்தை நிறுத்திவிட்டு பாம்புகள் காப்பகத்திற்கு சென்றோம் நுழைவு வாயிலில் இருவர்க்கும் நுழைவு கட்டணம் செலுத்திவிட்டு உள்ளே சென்றோம்.

மலம்புழா பாம்புகள் மீட்பு மற்றும் பாதுகாப்பு மையம்
மலம்புழா பாம்புகள் மீட்பு மற்றும் பாதுகாப்பு மையம்

காப்பகத்தில் பாம்புகளை விஷம் உள்ள விஷம் அற்ற என இருவகைகளாக பிரித்து தனி தனி கண்ணாடி கூண்டில் அடைத்து பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது.அதை வேடிக்கை பார்த்தவாரே இருவரும் சென்றோம்.காப்பகத்தில் சாரை பாம்பு ,நாக பாம்பு,தண்ணி பாம்பு,சுருட்டை பாம்பு,விரியன் பாம்பு,மலை பாம்பு என பல வகை பாம்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மலை பாம்புகள் அதிகம் இருந்தது பாம்புகளை பற்றி பல தகவல்களை தெரிந்து கொண்டோம். காப்பகத்தை முழுவதும் சுற்றி பார்த்த பின் கொஞ்ச நேரத்தில் காப்பகத்தில் இருந்து வெளியே வந்தோம்.

குறிப்பு :- மலம்புழா பாம்புகள் மீட்பு மற்றும் பாதுகாப்பு மையம் காலை 8.00 மணிமுதல் மாலை 6.00 மணி வரை பார்வைக்காக திறந்திருக்கும். நுழைவு கட்டணம் பெரியவர்களுக்கு 25/- ரூபாயும் சிறியவர்களுக்கு 15/- ரூபாயும் வசூலிக்க படுகிறது. வீடியோ மற்றும் புகை படம் எடுக்க அனுமதி உண்டு.காப்பகத்தில் கேரள வனத்துறை சார்பாக தேன்,சந்தன ஆயில்,டீ,பெப்பர்,மிளகு என உள்ளே விற்பனை செய்ய ஈக்கோ ஷாப் செயல்படுகிறது.

மலம்புழா பாம்புகள் மீட்பு மற்றும் பாதுகாப்பு மையம்
மலம்புழா பாம்புகள் மீட்பு மற்றும் பாதுகாப்பு மையம்

மலம்புழா அணை மற்றும் பூங்கா :-

காப்பகத்தின் அருகில் தான் அணை மற்றும் பூங்கா உள்ளது எனவே பூங்காவை சுற்றிப்பார்க்க தயார் ஆனோம்.பூங்காவின் நுழைவு வாயிலை அடைந்து இருவருக்கும் நுழைவு கட்டணம் செலுத்திவிட்டு பூங்காவை ரசிக்க உள்ளே சென்றோம். முதல் பகுதியில் பூ செடிகள் மற்றும் புல்வெளிகள் இருந்தது. குழந்தைகள் விளையாடி மகிழ அவர்களுக்கு என தனி பூங்கா உள்ளது.

பூங்கா நன்றாக பராமரிக்க பட்டுஇருந்தது..பூங்காவின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதி வரை சென்று திரும்பி வரும் வகையில் ரோப் கார் வசதி உள்ளது. ரோப் காரில் சென்று அணை மற்றும் பூங்காவின் அழகை மேல் இருந்தவாறு ரசித்து மகிழலாம். நாங்கள் மேற்கொண்டு படிகளின் வழியாக நடந்து அணையின் மேல் பகுதியிற்கு சென்றோம்.அங்கு அணை கடல் போல் காட்சி அளித்தது. நாங்கள் சுற்றி பார்க்க சென்றபோது அங்கு படகு சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

மலம்புழா அணை மற்றும் பூங்கா
மலம்புழா அணை மற்றும் பூங்கா

அணையின் கடைசி வரை சென்று திரும்பினோம் அணையின் மேல் இருந்து பூங்காவை கழகு பார்வையில் பார்த்த போது சிறப்பான காட்சியாக இருந்து. அணையின் கீழே வந்து பூங்காவின் அடுத்த பகுதிக்கு செல்ல ஆரம்பித்தோம். செல்லும் வழியில் பூங்காவின் நினைவு தூண் அமைக்கபட்டு இருந்தது அதை பார்த்து விட்டு மேலும் நடந்தோம் .

புல்வெளிகள், பூச்செடிகள் செயற்கை நீரூற்றுகள் என அனைவரையும் கவரும் வண்ணம் அழகாக அமைக்கபட்டு இருந்தது. அணையின் ஒரு பகுதியில் இரண்டு இரும்பு தொங்கு பாலம் அமைக்கப்பட்டு இருந்து அதன் வழியாக பயணித்தால் அணையின் மற்றொரு பகுதிக்கு செல்ல முடியும் அந்த பகுதியில் படகு சவாரி செய்து மகிழ படகு போக்குவரத்துக்கு வசதி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பூங்கா பறந்து விரிந்து காணப்பட்டதால் பூங்காவை சுற்றி பார்க்க கொஞ்சம் அதிக நேரம் தேவைபட்டது.

மலம்புழா
மலம்புழா

பூங்காவில் கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்துக்கொண்டு அங்கங்கே புகை படங்கள் மற்றும் வீடியோ எடுத்தோம். பூங்கா முழுவதும் சுற்றிப்பார்த்து போது நேரம் மாலைநேரத்தை நெருங்கி இருந்து. பூங்காவை சுற்றி பார்த்து முடித்த போது மணி 4 ஆனது இனி நேரத்தை வீணாக்காமல் வீடு திரும்ப முடிவு செய்தோம்.பூங்காவை விட்டு வெளியேறி முன் பகுதிக்கு வந்தோம் அங்கு தள்ளு வண்டி கடையில் வெட்டிய மாங்காய் துண்டுகளை வாங்கி சாப்பிட்டு விட்டு பூங்காவை விட்டு கிளம்பினோம்.

பூங்காவில் இருந்து பல்லடம் சென்று சேர 90 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டியிருந்தது. மாலை நேரம் என்பதால் மிதமான வேகத்தில் வண்டியை ஓட்டினேன். பாதி தூர பயணத்திற்கு பின் கிணத்துக்கடவு வந்தோம் நீண்ட தூரம் வாகனம் ஓட்டியதாலும் மாலை நேர குளிர் காற்றாலும் கொஞ்சம் ஓய்வு தேவைபட்டது எனவே வண்டியை நிறுத்தினோம் . அருகில் உள்ள பேக்கரியில் டீ மற்றும் காளான் சாப்பிட்டு முடித்து விட்டு மீண்டும் கிளம்பினோம்.

மலம்புழா
மலம்புழா

எங்கள் ஊரை சென்று சேரும் போது இரவாக இருக்கும் என்பதாலும் மற்றும் சுற்றி பார்த்த அசதி என சமைக்க முடியாத காரணத்தாலும் இரவு உணவை உணவகத்தில் வாங்கி கொண்டு வீடு செல்வது என முடிவானது எனவே காமநாயக்கன்பாளையம் வந்தோம் அங்கு ஸ்ரீபதி ரெஸ்டாரண்ட் எனும் உணவகத்தில் புரோட்டா வாங்கி பார்சல் செய்துக் கொண்டோம். இந்த வழியாக பயணம் செய்யும் போது இந்த உணவகத்தில் சாப்பிடுவது வழக்கம். பின் கொஞ்ச தூர பயணத்திற்கு பிறகு வீடு வந்து சேர்த்தோம் ஒருவழியாக பயணமும் முடிந்தது இன்றைய பிறந்தநாள் கொண்டாட்டமும் சிறப்பாக அமைத்தது.

குறிப்பு :- மலம்புழா அணையின் பார்வை நேரம் காலை 9முதல் இரவு 8 வரை (அனைத்து நாட்களும்). அணையின் நுழைவு கட்டணமாக பெரியவர்கள் 30/-ரூபாயும், சிறியவர்களுக்கு(3முதல்12வயது வரை ) 10/- ரூபாயும், நீச்சல் குளத்தில் விளையாட 75/-ரூபாயும் (ஒரு மணி நேரம்), நீச்சல் குள பகுதியில் பொருள்கள் பாதுகாக்கும் அறைக்கு 15/-ரூபாயும், புகை பட கருவிக்கு 100/-ரூபாயும்,வீடியோ கருவிக்கு 1000/- ரூபாயும் கட்டணம் வசூலிக்க படுகிறது.

மலம்புழா
மலம்புழா

பாலக்காட்டில் சுற்றி பார்த்த இடங்கள் :-

1)மீன்குளத்தி பகவதி அம்மன் கோவில் 2)பாம்புகள் மீட்பு மற்றும் பாதுகாப்பு மையம் 3)மலம்புழா அணை மற்றும் பூங்கா

பாலக்காடு சென்று வந்த பயண வழி :-

பல்லடம் – கேத்தனூர்– காமநாயக்கன்பாளையம் - செஞ்சேரி பிரிவு – வடசித்தூர் - கிணத்துக்கடவு - சொக்கனுர் –கொழுஞ்சாரம்பாறை – சித்தூர் - மீன்குளத்தி பகவதி அம்மன் கோவில்

மீன்குளத்தி பகவதி அம்மன் கோவில் – கொடுவாயூர் - சுல்தான்பெட் – பாலக்காடு – கடுக்கம்குன்ன - மலம்புழா அணை

மலம்புழா அணை - புதுசிசேரி வெஸ்ட் – கஞ்சிக்கோட் – பம்பம்பள்ளம் – வடகராபதி – சொக்கனுர் – வடசித்தூர் -கிணத்துக்கடவு - செஞ்சேரி பிரிவு - காமநாயக்கன்பாளையம் – கேத்தனூர் - பல்லடம்

இறுதியாக :-

பாலக்காட்டில் பார்க்க வேண்டிய இடங்கள் இன்னும் இருந்தாலும் மீண்டும் ஒருநாள் பயணித்து அதையும் பார்த்துவிடுவோம் என்ற நம்பிக்கையில்…. மீண்டும் ஒரு பயண கட்டுரையில் சந்திப்போம்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.