Published:Updated:

குதிரை வண்டி பயணமும் பிரஞ்சு கட்டிட கலையும்! |கனடா டைரீஸ் |My Vikatan

Montreal

மொண்ட்ரியால் நகரத்திற்கு நுழையும் முன்பே நமது தமிழ் கடவுள் முருகனுக்கு ஒரு ஆலயம் எழுப்பி உள்ளார்கள். முருகனை தரிசித்து விட்டு தான் நாங்கள் அனைவரும் மொண்ட்ரியால் நகரத்துக்குள் சென்றோம் .

குதிரை வண்டி பயணமும் பிரஞ்சு கட்டிட கலையும்! |கனடா டைரீஸ் |My Vikatan

மொண்ட்ரியால் நகரத்திற்கு நுழையும் முன்பே நமது தமிழ் கடவுள் முருகனுக்கு ஒரு ஆலயம் எழுப்பி உள்ளார்கள். முருகனை தரிசித்து விட்டு தான் நாங்கள் அனைவரும் மொண்ட்ரியால் நகரத்துக்குள் சென்றோம் .

Published:Updated:
Montreal

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

கனடாவில் மக்கள் வாழ விரும்பும் நகரங்களில் மொண்ட்ரியால் ஒன்று.

இது பழமையான நகரம் மட்டும் அன்றி, மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது. டொராண்டோவில் இருந்து மொண்ட்ரியால் செல்லும் போது நெடுஞ்சாலைகளில் அடிக்கடி தென்படும் ON -Route என்ற பிளாசாவில் சாப்பாடு, காபி, பெட்ரோல் என அனைத்து வசதிகளும் உண்டு. தெலுங்கு, கன்னடம் என பிற மாநில இந்திய நண்பர்களும் எங்களுடன் பயணித்ததால், அவர்களின் விருப்பப்படி அடிக்கடி வாகனத்தை ON-Route பிளாசாக்களில் நிறுத்தி ஓய்வு எடுத்துக் கொண்டே சென்றோம்.

Montreal
Montreal

மொண்ட்ரியால் இருக்கும் கியூபெக் மாகாணம் பிரஞ்சு குடியேற்றமாக இருந்தது. அங்கு நுழையும் போதே ஆங்கில எழுத்துக்கள் மறைந்து, பிரஞ்சு எழுத்துக்கள் பளிச்சென பொறிக்க பட்டுள்ளதை நாம் காணலாம்.

வழியெங்கும் Speed control police ம் அதிகமாக இருந்தார்கள். எனவே காரில் செல்பவர்கள் வேகத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.

Mount Royal என்ற குன்றின் பெயர் காலப்போக்கில் மொண்ட்ரியால் என மாறி விட்டதாக கூறுகிறார்கள். இங்குள்ள முக்கியமான சுற்றுலா தலங்களில் Notre dame basilica, St Joseph Oratory போன்ற தேவாலயங்களும், Biodome போன்ற இயற்கை பூங்காவும் அடக்கம். குளிர் காலத்தில் இங்கு மற்ற நகரங்களை விட குளிர் அதிகமாக இருப்பதால் அனைவரும் கோடை காலத்தில் தான் வர விரும்புவார்கள். நானும் கோடை காலத்தில் தான் அங்கு சுற்றுலா சென்றேன்.

மொண்ட்ரியால் நகரத்திற்கு நுழையும் முன்பே நமது தமிழ் கடவுள் முருகனுக்கு ஒரு ஆலயம் எழுப்பி உள்ளார்கள். முருகனை தரிசித்து விட்டு தான் நாங்கள் அனைவரும் மொண்ட்ரியால் நகரத்துக்குள் சென்றோம் . முருகன் கோவில் சென்றது மனதிற்கு அமைதியை தந்தது. அங்கு அர்ச்சகரிடம் தமிழில் பேசிய போது

அங்கு சஷ்டி, பங்குனி உத்திரம் போன்ற விழாக்கள் சிறப்பான முறையில் நமது வழக்கப்படி ஒவ்வொரு வருடமும் நடைபெறுவதாக கூறினார். இங்கும் தமிழகத்தை போலவே பக்தர்கள் காவடி எடுத்து, அலகு குத்தி முருகனுக்கு நேர்த்திக்கடன் செய்வதாகவும் அர்ச்சகர் கூறினார். ஆலயம் ஆகம விதிப்படி கட்டப்பட்டுள்ளதாக கூறி, ஒவ்வொரு சன்னிதிக்கும் எங்கள் அனைவரையும் அழைத்து சென்று அவர் கொடுத்த விளக்கங்கள் கேட்ட போது நாம் இருப்பது மொண்ட்ரியாலா மருதமலையா என்ற ஆச்சிரியமூட்டும் எண்ணம் நமக்கு ஏற்பட தவறுவதே இல்லை எனலாம்.

மொண்ட்ரியால் நகரம் சென்றடைந்த மறுநாள் நான் முதலில் St. Joseph oratory என்ற தேவாலயத்திற்கு தான் சென்றேன். இது ஒரு குன்றின் மேல் அமைந்துள்ள அழகிய தேவாலயமாகும். மூன்று தளங்களாக அமைக்கப்பட்டுள்ள

இந்த தேவாலயத்தில் முதல் தளத்தில் அதிக மக்கள் வழிபாடு செய்ய வசதி உள்ளது. இரண்டாவது தளத்தில் மெழுகுவர்த்தி

ஏற்றி வழிபட ஏற்பாடு செய்திருக்கிறார்கள். மூன்றாவது தளத்தில் தேவாலயத்தை நிர்மானித்த பாதிரியார் சிலை தத்ரூபமாக வடிவமைத்து அசத்தியிருக்கிறார்கள். அவர் உயிரோடு இருப்பது போல் தோன்ற வைத்திருக்கிறார்கள்.

Saint-Joseph's Oratory
Saint-Joseph's Oratory

இந்த தேவாலயத்தில் இருந்து பார்க்கும் போது மொண்ட்ரியால்  நகரமே சிறிதாக தெரிகிறது. இரவில் கண்களை கூச  செய்யும் அளவு இன்னும் அருமையாக இருக்கும். 

மொண்ட்ரியாலின் இன்னொரு பிரபல தேவாலயம் Notre dame basilica. தேவாயலத்தில் வெளியே குதிரை வண்டிக்காரர்கள் நம்மை அன்புடன் வரவேற்று, குதிரையில் அமரச் செய்து மொண்ட்ரியால் Old city முழுதும் சுற்றி காட்டினார்கள். பிரஞ்சு கட்டிட கலையை குதிரை வண்டியில் அமர்ந்து கொண்டு கண்டு களித்தது புதுவிதமான அனுபவமாக இருந்தது. குதிரையில் சவாரி முடிந்து இறங்கியபின் Old port என்ற இடத்திற்கு சென்றேன். இங்கு ரோட்டோரம் இசை கலைஞர்களும் ஏனைய கலைஞர்களும் எவரையும் பொருட்படுத்தாமல் தங்கள் திறமைகளை வெளிபடுத்திய காட்சி என்னை மெய் சிலிர்க்க வைத்தது.

Biodome, Olympic stadium
Biodome, Olympic stadium

இவை அனைத்தும் பார்த்த பிறகு மொண்ட்ரியால் ஒலிம்பிக் மைதானத்தையும் காண எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த மைதானம் டோனட்( Doughnut - கனடாவின் இனிப்பு வடை) வடிவில் அமைந்துள்ளது. உயரத்திற்கு அழைத்து சென்று அந்த மைதானத்தை காண்பிக்கிறார்கள். கனடாவில் நடந்த ஒரே ஒலிம்பிக் போட்டி இங்கு தான் 1976 ல் நடந்தது. இந்த மைதானத்தின் கீழே தான் Biodome இருந்தது. அங்குள்ள பென்குயின்களை பார்த்த போது அதிசயமாக தோன்றியது. நம்மால் அண்டார்டிகா எல்லாம் போக முடியாது. அதனால் இங்கேயே பென்குயின்களை பார்த்து கொள்ள வேண்டியது தான் என மனதில் நினைத்து கொண்டேன்.

என்னதான் 3-4 நாட்கள் ஊர் சுற்றுவதற்கு மொண்ட்ரியால் நன்றாக இருந்தாலும், வாழ்வதற்கு டொராண்டோ தான் சரியாக இருக்கும் என எங்களுடன் வந்த பிற மாநில நண்பர்கள் சிலர் கருத்து தெரிவித்தார்கள். இந்த கருத்தை விவாதித்துக்கொண்டே டொராண்டோ வை நோக்கி பயணிக்க ஆரம்பித்தோம்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.