Published:Updated:

நித்தம் நித்தம் நெல்லுச்சோறு! - மயக்கும் மருத்துவன் 2

Representational Image
Representational Image

`செக்கு மாடு' மாதிரி சுத்திக்கிட்டே இருக்கான்' என்ற சொலவடை இத்தலைமுறை கேட்டதில்லை. ஏன் செக்கு என்றால் என்னவென்றே தெரியாது.

1978ல் வந்த இந்த பாடல், வகை வகையான மண் மனம் மணக்கும் உணவுகளை வாணியம்மா சப்பு கொட்டி கொண்டே பாடுவது காதுக்கு இனிமையாவது மட்டுமல்ல நமக்கு ருசியான மருத்துவமும் கூட..

*மருந்து* என்ற அதிகாரத்தின் கீழ் தொகுக்கப்பட்ட 10 குறள்களில், ஏழு ஈரடி வெண்பாக்கள் உணவே மருந்தென்கின்றன. அருந்தியது அற்றது போற்றி உண்டால் மருந்து வேண்டாம். பசித்து புசித்தால் நெடிதுய்க்கும். செரிமான தன்மை உள்ள உணவுகளை பசித்த பின் உண்க என வள்ளுவர் மருந்தாக நமக்கு தருவது உணவைத்தான்.

*'நெல்லு சோறு'* இது நம் பேச்சு வழக்கில் இருந்த சொல். ஏன் நெல்லு சோறு? கம்பும், கேழ்வரகும் அன்றாட உணவின் அங்கமாக இருந்த போது அறிதாக கிடைத்த அரிசி உணவு சிறப்பு விருந்தாக, பணம் படைத்தவர்களின் உணவாக கிட்டத்தட்ட 70களின் தொடக்கம் வரை தமிழகத்தில் குறிப்பாக தென் தமிழகத்தில் வழக்கத்தில் இருந்திருக்கின்றது.

Representational Image
Representational Image

அதிக வருமானம் என்ற பெயரில் ' *பசுமை புரட்சி* 'யாய் எல்லோரும் நெல் விளைவிக்க, சீக்கிரம் விளைய வேளாண்துறை வல்லுனர்கள் CR, IR வகைகளை கொண்டு வர,

நெல்லுசோறு சோறாகி,..... மூன்று வேளை உணவாகி சீக்கிரமே *' சர்க்கரை நோயாளி'* யானோம். மாப்பிள்ளை சம்பாவையும் மறந்து கைக்குத்தல் அரிசியையும் மறந்து பாலீஸ் செய்யப்பட்ட புது ரக பாசுமதிகளுக்கு அடிமையானோம். *செக்கு மாடு'* மாதிரி சுத்திக்கிட்டே இருக்கான்' என்ற சொலவடை இத்தலைமுறை கேட்டதில்லை. ஏன் செக்கு என்றால் என்னவென்றே தெரியாது. செக்கில் ஆட்டிய எள் எண்ணெய் *நல்* லெண்ணையாக தான் இருந்தது. எங்கிருந்தோ வந்த சூரியகாந்தி அது கொலஸ்ட்ரால் என்றது. இப்போதோ சூரியகாந்தியில் பொறித்த ப்ராய்லர் சாப்பிட்டு எல்லோரும் STATIN சாப்பிடுகிறோம். சின்ன வெங்காயத்தில் புற்று நோய் தடுக்கும் மூலக்கூறுகள் இருக்கின்றது. உரிக்க அலுப்பில் பெல்லாரிக்கு தாவினோம். அது வெறும் ' *வெங்காயம்* ' தான் என்கின்றது இன்றைய அறிவியல்.

பாகு இல்லாத காய் - பாகு + அல் + காய் = பாகற்காய். அறுசுவையில் கசப்பு கட்டாயம் வேண்டும். கசப்பே அறியாத இன்றைய தலைமுறை வெள்ளை சர்க்கரை கலந்த ஓவன் பிஸ்கட்டு சாப்பிட்டு 30 வயதில் இன்சுலின் தேடிக் கொண்டு இருக்கிறது. 'இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு. சுரக்காய்க்கு உப்பில்லை" எல்லாம் பழமொழி அல்ல மருத்துவம்.

Representational Image
Representational Image

நம்மை சுற்றி 100 கிலோமீட்டர் சுற்றளவில் விளைகின்ற தானியங்கள் தான் நமக்கான உணவுகள். ஓட்ஸ் சாப்பிட்டால் சர்க்கரை வராது, பார்லி கஞ்சி குடித்தால் பல்லாண்டு வாழலாம் என்பெதெல்லாம் பன்னாட்டு மார்க்கெட்டிங் சதி.

*நமது மண்ணின் உணவுகளே நமக்கு மருந்து. கம்பு, கேழ்வரகு, நிலக்கடலை அதிகம் உணவாக்கி கொள்ளலாம்.

*முட்டை தவிர வெள்ளையாக இருக்கும் அனைத்தும் நமக்கு ஒவ்வாத மெல்ல கொல்லும் விஷம்.

*அவரை, நாவல், பாகல், வெண்டை, வெந்தயம் ஆகியன சர்க்கரை நோயின் அருமருந்துகள்.

நமக்கு எந்த உணவு மாறுபாடு உணவு என்பதை அடுத்த வேளை பசி சொல்லிவிடும். அடுத்த வேளை சாப்பிட முடியாமல் செரிக்கமால் இருக்கும் எந்த உணவும் நம்மை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்.

*பழையன புகுதல் நன்று.*


"மயக்கும் மருத்துவன்"

-மரு.அருண்குமார் முத்து சுப்ரமணியன்

(MD Anaesthesiology ) UAE

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு