Published:Updated:

`மதுப்பிரியர்' மாதிரியே எதற்கெல்லாம் எப்படி பெயர் மாத்தலாம்...! - வாசகரின் கற்பனை #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

"குடிகாரர்" என்பதை "மதுப்பிரியர்" என்று சொல்வதைப் போல் இந்த வார்த்தைகளையும் இப்படி சொல்லலாமே...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

லாக்டௌன் காலத்தில் `குடிகாரர்' என்பது `மதுப்பிரியர்' எனப் பெயர் மாற்றம் ஆகியுள்ளது. இதைப்போன்று வேறு எதற்கெல்லாம் எப்படி பெயர் மாற்றலாம்:

சோம்பேறி - ஓய்வு விரும்பி.

வேலையை விட ஓய்வை விரும்பிச் செய்வதால்.

ஏ.டி.எம் - சுய கொடையாளர்.

நம்முடைய பணத்தை 40 முறை எண்ணி நமக்கே கொடுப்பதால்.

Representational Image
Representational Image
Zhang Kenny / Unsplash

மோசடியாளன் - பொய் மிகையாளி.

உண்மையை ஊறுகாய் அளவு கூட பயன்படுத்த விரும்பாததால்.

செயின் ஸ்மோக்கர் - புகை அதீதர்.

அதீத புகையில் அளவுகடந்த இன்பம் அடைவதால்.

திருடன் - குற்றப்பிரியர்.

குற்றங்கள் செய்வதில் எல்லையில்லா ஆர்வம் உள்ளதால்.

குடி நோயாளி - மது ஆர்வலர்.

தினந்தினம் ரசித்து, ருசித்து மதுவுக்கு அடிமை ஆவதால்.

Representational Image
Representational Image
Pixabay

காதலன் - பிணைப்பாளன்.

காதலியுடன் தனது பிணைப்பை உறுதிப்படுத்த தொடர்ந்து முயல்வதால்.

நண்பன் - இணைப்பாளன்.

எந்நேரமும் நண்பனுடன் இணைந்தே இருந்து நட்பை ஊட்டி வளர்ப்பதால்.

போராளி - கொள்கைப் பிரியர்.

தன் கொள்கை சரியோ தவறோ, ஆனால் கொண்ட கொள்கை மீது பிரியமாக இருப்பதால்.

ஊழல்வாதி - கொள்ளைப் பிரியர்.

மக்கள் பணத்தின் மீது அளவு கடந்த பிரியம் கொண்டு இருப்பதால்.

Representational Image
Representational Image
Christian Dubovan on Unsplash

டொனேசன் - விருப்பக் கட்டணம்.

விரும்பினாலும், விரும்பா விட்டாலும் கட்டாயம் கட்டவேண்டி இருப்பதால்.

நெட்டிசன் - இணைய விரும்பி

இணையதளத்தின் மீது ஈடு இணையில்லாத காதல் கொண்டதால்.

ஆன்மிகவாதி - பக்திப் பிரியர்.

இறை பக்தியின் மீது வானளவு பிரியம் கொண்டிருப்பதால்.

இணையதளம் - தகவல் குவியகம்.

ஒரே இடத்தில் மலைபோன்று தகவல்களைக் குவித்து வைத்திருப்பதால்.

Representational Image
Representational Image
Nandhu Kumar on Unsplash

விவசாயி - உணவுக் கொடையாளர்.

உலக மக்கள் அனைவருக்கும் உணவினை உவந்து அளிப்பதால்.

காதலி - உணர்வுக் கொடையாளி.

மென்மையான உணர்வுகளை ஆண்களுக்கு அவ்வப்போது அளிப்பதால்.

தனிக் குடித்தனம் - சுய தனிமைப்படுத்தல்.

பிறர் கட்டாயமின்றிக் குடும்பம் குடும்பமாகத் தனிமைப்படுத்திக் கொள்வதால்.

சினிமா ரசிகர் - கனவு விரும்பி.

தனது ஆதர்ஷ நாயகனுடன் எந்நேரமும் கனவுலகில் சஞ்சாரிக்க விரும்புவதால்.

Representational Image
Representational Image
Pixabay

கோபக்காரர் - உணர்ச்சி மிகையாளர்.

உடனுக்குடன் தனது உணர்ச்சிகளை மிகையாக வெளிப்படுத்தி விடுவதால்.

கலவரம் - மிகைச் சண்டை.

குழுக்கள் இடையே பெரிய அளவில் சண்டை உண்டாவதால்

போராட்டம் - கொள்கைச் சண்டை.

தன்னுடைய கொள்கைக்காக வலிந்து போரிடுவதால்.

ஊர்வலம் - மெது நடை.

நடக்கும் அனைவரும் பொதுவாகவே

மெதுவாக நடப்பதால்.

Representational Image
Representational Image
Pixabay

சிக்கனம் - குறை செலவு.

செலவுகள் தொடர்ந்து குறைந்துகொண்டே போவதால்.

கடன் - மிகை பொறுப்பு.

தன்னால் இயன்ற அளவைவிடப் பொறுப்புகள் கூடுவதால்.

வராக்கடன் - பொறுப்பு துறப்பு.

வசூலிக்க வேண்டிய பொறுப்பை வங்கிகள் துறந்துவிடுவதால்.

தியாகி - தேச உணர்வாளர்.

தேசம் மீது உள்ளார்ந்த நேச உணர்வு கொண்டதால்.

Representational Image
Representational Image
Pixabay

தலைவர் - மிகு சிந்தனையாளர்.

புதுமையாகவும், தன் தொண்டர்களுக்குப் புரிந்து விடாதபடியும் சிந்திப்பதால்.

மருத்துவர் - நலம் விரும்பி.

மக்களின் உடல் நலமாக இருக்க விரும்புவதால்.

ஆசிரியர் - அறிவு விளம்பி.

அறிவுச் செல்வத்தை அள்ளி அள்ளி வழங்குவதால்.

நேர்மையாளர் - மிகை அதீதர்.

தனது வாழ்க்கையில் அதீதம் உண்மையைக் கடைப்பிடிப்பதால்.

உண்ணாவிரதம் - அமைதிச் சண்டை.

பந்தலின் அடியில் கொலைப் பசியோடு அமைதியாக அமர்ந்து இருப்பதால்.

Representational Image
Representational Image
Pixabay

படைப்பாளி - கனவு விளம்பி.

தனது கனவுகளை பிறர் ரசிக்கக்கூடிய அளவில் வெளிப்படுத்துவதால்.

வட்டிக்காரர் - குறை கொடுப்பாளர்.

எப்போதுமே நாம் எதிர்பார்ப்பதை விடக் குறைவாகவே பணம் கொடுப்பதால்.

பிக் பாக்கெட் - அறியா எடுப்பாளர்.

எங்கு பணம் வைத்திருந்தாலும் யாரும் அறியாதவாறு எடுத்துவிடுவதால்.

- அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு