Published:Updated:

வாழ்க்கை..! - இருவரி Nano கதைகள் #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

இரு வரிக் கதைகளும் கதைகளை முழுமையாக்கும் தலைப்பும்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

வாழ்க்கை:

மழை தூறும் மாலை ரயிலில் இறங்கும்போது கிடைக்கும் ஜன்னலோர இருக்கை போன்றே பலருக்கும் அமைகிறது.

குழந்தை வளர்ப்பு:

பொம்மை விளையாட்டில் குழந்தைகளிடம் பொம்மைகள் ஒருபோதும் அடிவாங்குவது கிடையாது.

Representational Image
Representational Image
Pixabay

சமூக வலைதளங்கள்:

யாரோ ஒருவருக்கு நம் இருத்தலைத் தொடர்ந்து நிரூபித்துக்கொண்டேதான் இருக்கின்றன.

கோபம்:

உண்மையின் பிம்பங்கள் கொதிக்கும் நீரில் தெரிவதற்குச் சாத்தியம் இல்லை என்பது நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மை.

ஊழல்:

சதுரங்க விளையாட்டிலும்கூட மந்திரிகள் தாம் விரும்பும் தூரத்துக்கு குறுக்கு வழியில் வேகமாகச் செல்ல முடிகிறது.

உறவுப்போலி:

முகமூடிகளைச் சிறப்பாகப் பயன்படுத்தும் உறவுகளில் ஒருபோதும் கருத்து வேறுபாடுகள் தோன்றுவதில்லை.

Representational Image
Representational Image

உறக்கம்:

வேலை எதுவும் இல்லாதவனின் பகல்கள், நோயாளியின் இரவுகளுக்குச் சற்றும் சளைத்தவை அல்ல.

வேலை:

கொஞ்சம் படித்தவன் தன் ஊரைத் துறக்கிறான். நிறைய படித்தவன் தன் நாட்டைத் துறக்கிறான்.

அன்பு:

மனிதர்கள் விருப்பத்துடன் வலிந்து ஏற்க விரும்பும் கட்டுப்பாடுகள் ஏதுமற்ற அடிமைத்தனம்.

Representational Image
Representational Image
Pixabay

டிஜிட்டல் உலகம்:

விழித்திருக்கும் நேரமெல்லாம் விரல்கள் மட்டும் நிற்காமல் பேசிக்கொண்டே இருக்கின்றன.

- அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு