Published:Updated:

இருவரி சிலேடை... Nano கதைகள்! - வாசகர் பகிர்வு#MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

இங்கு இரு தலைப்புகளுக்கும் பொருந்தும்படி அமைந்த சில சிலேடை உண்மைகள்..

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

ஒரு சொற்றொடர் பல பொருள்படும்படி அமைவது தமிழில் "சிலேடை" என்று கூறப்படும்.

இதோ இங்கு இரு தலைப்புகளுக்கும் பொருந்தும்படி அமைந்த சில சிலேடை உண்மைகள்....

Representational Image
Representational Image

மனைவி - போன்:

விழித்திருக்கும் நேரமெல்லாம் உள்ளங்கையில் வைத்துத் தாங்கினான்!

புலம்பெயர்வு - புல்லினம்:

இழந்த வாழ்வைத் தேடி இலக்கை நோக்கித் தொடர்ந்த நெடும் பயணம்!

பசி - நோய்:

மூன்று நாள்களாக சாப்பிட முடியாதது அவனுக்கு மிகுந்த சிரமமாய் இருந்தது!

Representational Image
Representational Image
Pixabay

ஜனநாயகம் - தனியுரிமை:

இன்னும் உலகில் இருக்கிறது என்று நம்பி மனிதன் ஏமாந்துகொண்டே இருக்கும் மாயை!

இலக்கியம் - தத்துவம்:

சாமான்ய மனிதனுக்குப் புரிந்து விடாமல் இருப்பதே மிகச்சிறந்த படைப்பு என்பதற்கு அடையாளமாய் இருக்கிறது!

போலீஸ் - நோய்:

தாக்குதலுக்குப் பயந்து மனிதர்கள் அனைவரும் முகக்கவசம் அணிகின்றனர்!

கம்யூனிசம் - கொரோனா :

பாசிட்டிவ்கள் அதிகம் இருப்பதே சிவப்பு நிறம் என்பதை உலகம் அனுபவத்தில் கற்றுக்கொண்டது!

Representational Image
Representational Image
Pixabay

கடன் - வெட்டுக்கிளி:

இலட்சக்கணக்கில் பல்கிப் பெருகியதால் செய்வதறியாது கண்ணீர் வடித்தார் விவசாயி.

மீம்ஸ் - மீல்ஸ்:

லாக்டௌன் காரணமாய் தினந்தோறும் புதுப்புது வெரைட்டியாய் வந்து குவிந்தது!

சம்பளம் - இ.எம்.ஐ:

ஊரடங்கு காரணமாய் மூன்று மாதங்களுக்குத் தள்ளி வைக்கப்பட்டது!

-அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு