Published:Updated:

இருவரி சிலேடை உண்மைகள்! - Nano கதைகள் #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

இரு தலைப்புகளுக்கும் பொருந்தும்படி அமைந்த சில சிலேடை உண்மைகள்....

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

ஒரு சொல் அல்லது சொற்றொடர் பல பொருள்படும்படி அமைவது தமிழில் "சிலேடை" என்று வழங்கப்படும்.

இதோ இரு தலைப்புகளுக்கும் பொருந்தும்படி அமைந்த சில சிலேடை உண்மைகள்....

வதந்தி - வைரஸ்:

ஒரு மனிதனிடமிருந்து மற்றொரு மனிதனுக்கு மிக வேகமாகப் பரவும் இயல்புடையது.

Representational Image
Representational Image
Pixabay

அறிவு - குப்பை:

தொடர்ந்து கூட்டிக்கொண்டே இருந்தால் வெகு சீக்கிரம் நாடு சுத்தமாகி விடும்.

கல்வி - காதல்:

அறிவும், நினைவும் வெவ்வேறானவை என்னும் பாடத்தைக் கற்க மனிதனுக்கு நெடுநாள் ஆகிறது.

நாணயம் - உண்மை:

கண்ணுக்குத் தெரிவது,தெரியாதது என எப்போதுமே இரண்டு பக்கங்களைக் கொண்டது.

கருத்து சுதந்திரம் - கானல் நீர்:

இருக்கிறது என நம்பி மனிதன் தொடர்ந்து ஏமாந்து கொண்டே இருக்கும் மாயைகளுள் ஒன்று.

Representational Image
Representational Image
Pixabay

அம்பு - தோல்வி:

பின்னோக்கி இழுக்க இழுக்க இலக்கை விரைவாகச் சென்றடையும் உத்வேகம் கிடைக்கிறது.

காதுகள் - சிந்தனை:

ஒரு மனிதனைச் சமநிலைப்படுத்துவதில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.

ஆறு - மனிதன்:

தனக்கான பாதையைத் தானே உருவாக்கும்போது அடைய வேண்டிய இலக்கு மிக எளிதாகி விடுகிறது.

ரௌடி - தாயம்:

ஒவ்வொருவரையும் வெட்டித் தள்ளும்போது உண்டாகும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

Representational Image
Representational Image
Pixabay

பறவை - தேசாந்திரி:

தான் இளைப்பாறும் இடத்தை மட்டுமே உலகம் என ஒரு போதும் நம்புவதில்லை.

- அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு