Published:Updated:

நிதர்சனம்..! - Nano கதைகள் #MyVikatan

Representational Image
Representational Image

வாழ்வின் நிதர்சனங்களை உணர்த்தும் 10 செகண்ட் கதைகள்!

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

விந்தை:

காதல் நோயால் அவதிப்படும் பலரும் திருமணம் முடிந்ததும் குணமடைந்துவிடுகின்றனர்.

Representational Image
Representational Image

சுவையூட்டி:

இடுபொருட்களைவிட, இடும் அன்பே உணவை எப்போதும் சுவையூட்டும் என்றார் பாட்டி.

இனவெறி:

சதுரங்க விளையாட்டு முடிந்ததும் கறுப்பு வெள்ளைக் காய்கள் எப்போதும் ஒரே பெட்டியில்தான் போடப்படுகின்றன.

Representational Image
Representational Image

தற்பெருமை:

முதன் முதலில், தான் பறப்பதற்கு மனிதர்கள் கைதட்டுவதாய் நினைத்து மனதினுள் மகிழ்ந்தது தப்பிப்பிழைத்த கொசு.

புலம்பெயர்வு:

நாம் இன்னும் எவ்வளவு தூரம் நடக்க வேண்டும் என்ற மகளின் கேள்விக்கு, தலைப்புச் செய்திகளில் வரும் வரை என்றார் அப்பா.

Representational Image
Representational Image

மூட நம்பிக்கை:

விசாரணைக் கமிஷன்கள் முறையாக விசாரித்து சரியான தீர்ப்பு வழங்கும்.

அம்மா:

சிந்தனைக்கு என்று படைக்கப்பட்ட மூளை, அவ்வப்போது கருணைக்கு அடகு போய்விடுகிறது.

Representational Image
Representational Image

சினிமா:

இடைவேளையின் க்ளீஷேக்கள் இல்லாமலும் திரைப்படங்கள் எடுக்கலாம் என்று கற்றுக்கொடுத்தது ஓ.டி.டி.

வாசிப்பு:

சுயமாகச் சிந்திக்க தொடர்ந்து மூளைக்குப் பயிற்சியளித்தது புத்தகம்.

Representational Image
Representational Image

அறிவாளி:

கேள்விகள் கேட்பவன் அந்த நிமிடத்தில் மட்டுமே முட்டாளாக இருக்கிறான்!

-அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு