Published:Updated:

`ஆறு மாதம்; 14 உயரமான மலை உச்சிகள்..!' - உலக சாதனை படைத்த நேபாள வீரர் நிர்மல் புர்ஜா

நேபாள வீரர் நிர்மல் புர்ஜா
News
நேபாள வீரர் நிர்மல் புர்ஜா

இந்த 14 சிகரங்கள் ஒவ்வொன்றின் உயரமும் 8,000 மீட்டருக்கும் அதிகம்.

நேபாளத்தைச் சேர்ந்த நிர்மல் புர்ஜா நேற்று அதிகாலையில் மலைகள் ஏறுவதில் புதிய உலக சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். ஆறு மாதங்களில் உலகில் உள்ள 14 உயரமான சிகரங்களின் உச்சிகளுக்கு ஏறி சாதனை படைத்திருக்கிறார். இதற்கு முன்பு தென்கொரியாவை சேர்ந்த கிம் சேங் ஹோ இதே போன்று 14 சிகரங்களை ஏற ஏழு வருடம் 10 மாதம் 6 நாள்கள் எடுத்துக்கொண்டார். இந்தச் சாதனையைத்தான் முறியடித்துள்ளார் நிர்மல். இந்த 14 சிகரங்கள் ஒவ்வொன்றின் உயரமும் 8,000 மீட்டருக்கும் அதிகம்.

இதனாலேயே இந்தச் சிகரங்களை மொத்தமாக Eight-thousander என்று அழைப்பர்.
Eight-thousander மலை உச்சிகள்
Eight-thousander மலை உச்சிகள்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இமயமலை மற்றும் கரகோரம் மலை தொடர்களில் சீனா, இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் என்று நாடுகள் கடந்து இந்த வெற்றிப் பயணத்தை முடித்துள்ளார் நிர்மல்.

இதுகுறித்து நிர்மல் பேசும்போது, ``இந்த ஆறு மாதங்கள் கடுமையான மாதங்களாகவே இருந்தன. ஆனாலும், தன்னம்பிக்கை, உறுதியான உள்ளம் மற்றும் பாசிட்டிவ் சிந்தனைகள் இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை உண்மையாக்கியுள்ளது இந்த வெற்றி.

நேபாள வீரர் நிர்மல் புர்ஜா
நேபாள வீரர் நிர்மல் புர்ஜா

இந்த 14 மலைகளை ஏறும்போது, `Death Zone’ எனப்படும் குறிப்பிட்ட உயரத்தில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருக்கும். பெரும்பாலான மலையேறுபவர்கள் இந்த இடத்தில் வேகத்தைக் குறைத்துக்கொள்வர். இந்த இடத்தில் சிலர் உயிரையும் இழந்திருக்கின்றனர். அங்கு மனவலிமையுடன் இருப்பதுதான் மிகவும் சவாலாக இருந்தது" என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதற்கு முன்னர் இவர் செய்த சாதனைகளில் 17 நாள்களில் எவரெஸ்ட் உச்சியை இரு முறையும், லோட்சே மற்றும் மகலூ சிகரங்களை ஒரு முறையும் ஏறியது முக்கியமானதாகும். இவற்றையெல்லாம் சாதிக்க ஏதுவாக இருந்த இவரின் உடல் மற்றும் மனவலிமைக்குக் காரணம், கடுமையான ராணுவப் பயிற்சிதான் என்று கூறியுள்ளார். ஆம், இந்தச் சாகச பயணங்களுக்கு முன் 16 ஆண்டுகள் பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றியுள்ளார் நிர்மல். இதனால்தான் தன்னால் மற்றவர்களைவிட வேகமாக இந்த 'இமாலய' இலக்கை அடைய முடிந்தது என்கிறார்.

இது போன்ற உயர்ந்த மலைகளை ஏறுவதற்கு நிறைய செலவாகும் என்பதால், ஸ்பான்ஸர் யாரும் இல்லாமல் ஆரம்பக்காலங்களில் சில சிக்கல்களை சந்தித்துள்ளார். பின்பு பிரிட்டிஷ் வாட்ச் நிறுவனமான 'Bremont' இவருக்கு நிதி உதவி செய்திருக்கிறது.