Published:Updated:

சூரியக் குடும்பத்தைக் கடந்துசென்ற முதல் இன்டர்ஸ்டெல்லார் வால் நட்சத்திரத்தின் புதிய ஆய்வு முடிவுகள்!

21/Borisov Comet
21/Borisov Comet ( Space Telescope Science Institute Office of Public Outreach )

மற்ற நட்சத்திரக் கூட்டத்திலிருந்து பிரிந்து வரும் பொருள்கள், நம் சூரியக் குடும்பத்தில் இருக்கும் பொருள்களின் தன்மையைவிட சற்று மாறுபட்டவையாக இருக்கும். வால் நட்சத்திரங்கள் என்பவையே, திடமான திரவப் பொருள்கள், வாயு மற்றும் பாறைகளால் ஆன பொருள்கள்தான்.

2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம், சூரியக் குடும்பத்தை '2I/Borisov' எனப் பெயரிடப்பட்டுள்ள வால் நட்சத்திரம் (Comet) கடந்து சென்றது. இதுதான் சூரியக் குடும்பத்தில் நுழைந்த முதல் இன்டர்ஸ்டெல்லார் வால் நட்சத்திரம்.

(அண்டத்தில் நட்சத்திரங்களுக்கு இடையே பயணிக்கும் பொருள்களை இன்டர்ஸ்டெல்லார் பொருள்கள் எனக் குறிப்பிடப்படுகின்றன.)

அந்த வகையில் 2I/Borisov சூரியக் குடும்பத்தில் நுழைந்த இரண்டாவது இன்டர்ஸ்டெல்லார் பொருளாகவும், முதல் இன்டர்ஸ்டெல்லார் வால் நட்சத்திரமாகவும் இருக்கிறது. இதற்கு முன்னர் 2017-ல் 400 மீட்டர் விட்டமுடைய 'Oumuamua' எனப் பெயரிடப்பட்ட சிறிய இன்டர்ஸ்டெல்லார் பொருள் ஒன்று சூரியக் குடும்பத்தைக் கடந்துசென்றது. ஆனால், தற்போது கடந்து சென்றிருக்கும் 2I/Borisov, அளவில் பூமியைவிட 14 மடங்கு பெரியது.

A comparison of two interstellar objects passing through our solar system

ஒரே நட்சத்திரக் குடும்பத்தில் உருவாகும் பொருள்களின் தன்மை பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருக்கும். மற்ற நட்சத்திரக் கூட்டத்திலிருந்து பிரிந்துவரும் பொருள்கள், நம் சூரியக் குடும்பத்தில் இருக்கும் பொருள்களின் தன்மையைவிட சற்று மாறுபட்டவையாக இருக்கும். வால் நட்சத்திரங்கள் என்பவையே, திடமான திரவப் பொருள்கள், வாயு மற்றும் பறைகளால் ஆன பொருள்கள்தான். கடந்த வருடம் ஆகஸ்ட் 30ல் முதன்முதலில் இதன் வருகை கண்டறியப்பட்டது. இந்த வால் நட்சத்திரத்தை முதலில் கண்டறிந்த அறிவியலாளர் ஃகென்னடி போரிசாவ்-வின் (Gennediy Borisov) பெயரே வால் நட்சத்திரத்திற்கும் சூட்டப்பட்டது. அதன் பெயரில் முதலில் உள்ள 2I என்பது, அது இரண்டாவது இன்டர்ஸ்டெல்லார் பொருள் என்பதைக் குறிக்கிறது.

Cognizant நிறுவனத்தை நிலைகுலைய வைத்த சைபர் அட்டாக்... வொர்க் ஃப்ரம் ஹோம் காரணமா? #CyberAttack  

அக்டோபர் இறுதியில் சூரியக் குடும்பத்தில் நுழைந்த இந்த வால் நட்சத்திரம், டிசம்பர் 8-ல் சூரியனை 2 AU தொலைவில் கடந்தது.

(AU - Astronomical unit: ஒரு AU என்பது பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயான தொலைவு. தோராயமாக 150 மில்லியன் கிலோமீட்டர்கள்)

அதைத் தொடர்ந்து அது கவனித்து வரப்பட்டது. கடந்த மார்ச் மாதம், அதில் கருச்சிதைவு ஏற்பட்டு, இந்த வால்நட்சத்திரத்திலி ருந்து சில துண்டுகள் பிரிந்தன. அதை ஆய்வுசெய்து, வால் நட்சத்திரம் எந்த மாதிரியான பொருள்களால் ஆனது எனத் தெரிவித்துள்ளனர் அறிவியலாளர்கள்.

2I/Borisov வால் நட்சத்திரம்
2I/Borisov வால் நட்சத்திரம்
Space Telescope Science Institute Office of Public Outreach

ஆய்வுகளின்படி, பூமியில் இருக்கும் உயிரினங்களுக்கு விஷமாக இருக்கும் கார்பன் மோனாக்ஸைடு வாயுவாகவும், திடமாக மாறிய திரவமாகவும் மிகுதியாக உள்ளது. இந்த அளவுக்கு கார்பன் மோனாக்ஸைடு மிகுதியான பொருள்கள் நம் சூரியக் குடும்பத்தில் இல்லை. இதுபோல ஒரு அமைப்பு இருப்பது அண்டத்திலேயே சில இடங்களில் மட்டுமே உருவாக முடியும். இதை 'இருள் சூழ்ந்த மற்றும் குளிரான இடத்தில் வந்த பனிப்பந்து' எனக் குறிப்பிட விரும்புகிறோம் என அலபாமாவின் Auburn Unviersity பேராசிரியரான டென்னில் போட்விட்ஸ் தெரிவித்துள்ளார். இவர், அந்த வால்நட்சத்திரத்தைப் பற்றிய இரண்டு ஆய்வறிக்கைக் கட்டுரைகளை எழுதியவர்களுள் ஒருவர். மேலும் அவர் தெரிவிக்கையில், வால்நட்சத்திரங்கள் என்பவை கோள்கள் உருவானபோது அதோடு சேராமல் தனித்து விடப்பட்டவையே. இதுபோல வேறு நட்சத்திரக் கூட்டத்திலிருந்து வந்த வால் நட்சத்திரங்களின் தன்மைகளை ஆராய்வது இதுவே முதல் முறை எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு