Published:Updated:

வாத்தியார் மவன்! - வாசகரின் Nostalgic பகிர்வு #MyVikatan

Representational Image
Representational Image ( Vikatan Team )

நான் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு, 'வாத்தியார்' என்று சொன்னால் பிடிக்காது.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

இவ்வுலகத்தில் அனைவருக்கும் ஓர் அடையாளம் உண்டு. அந்த அடையாளம் என்பது பெரும்பாலும் நம் படிப்பு, தொழில், குணம் சார்ந்ததாக இருக்கும் அல்லது இடம் சார்ந்ததாகவும், ஊர் பெயர் வைத்தும், சில நிகழ்வுகள் தொடர்பாகவும் ஒருவரின் செய்கையின் பேரிலும் அடையாளப்படுத்தப்படும். அது, பெயருடன் சேர்ந்தும் அடைமொழியுடன் உறவு சார்ந்தும் விளிக்கப்படும்.

Representational Image
Representational Image
Vikatan Team

எங்கள் கிராமத்தைச் சேர்ந்த அவ்வாறான சில அடையாளங்களை இங்கே உங்களுக்கு அறிமுகப்படுத்துவதே இந்தப் பதிவு.

என்னுடைய அடையாளம் என்பது, என் அப்பா மற்றும் என் அம்மா. எங்கள் வீடு எப்பொழுதும் வாத்தியார் வீடு அல்லது டீச்சர் வீடு என்றே அழைக்கப்படும். எங்கள் வீடு, ஓர் இடக் குறியீடாகவும் (landmark) பயன்படுத்தப்பட்டது.

எங்களை ஊரில் உள்ள அனைவரும் "என்னப்பா வாத்தியார் மவனா நீ" என்று என்னையும் என் சகோதரரையும், "என்னம்மா வாத்தியார் மவளா நீ" என்று என் சகோதரிகளையும் அடையாளப் படுத்துவார்கள்.

நாங்களும் எங்களை யாராவது கேட்டால் வாத்தியார் பையன் அல்லது வாத்தியார் பொண்ணு என்றே அறிமுகப்படுத்திக் கொள்வோம். எங்களுடைய பெயர் பெரும்பாலும் யாருக்கும் தெரிந்திருக்காது ஒரு சிலரைத் தவிர. பெயர் தெரிந்தாலும், பெயரைக் கூறிவிட்டு உடனே வாத்தியார் பையன் அல்லது வாத்தியார் பொண்ணு என்றே சொல்வார்கள்.

அது என்ன வாத்தியார்?

குஸ்தி மற்றும் சிலம்பம் போன்ற தற்காப்புக் கலைகளை கற்றுக் கொடுக்கும் குருவை வாத்தியார் என்று அழைப்பார்கள்.

ஆனால், கிராமத்தில் கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியரையும் வாத்தியார் என்றே சொல்லுவார்கள்.

Representational Image
Representational Image

நான் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு, 'வாத்தியார்' என்று சொன்னால் பிடிக்காது. அவர், அவருடைய வீட்டுக்கு முன்னாள் ஒரு விளம்பரப் பலகையில் இவ்வாறாக எழுதி வைத்திருந்தார். எனக்கு சரியாக நினைவில்லை. ஆனால், அதன் சாராம்சம் இதுதான்...

``கல்வி கற்பிக்கும் ஆசிரியரை வாத்தியார் என்று

பேசுபவன் காட்டுமிராண்டி.

எழுதுபவன் எழுத்தறிவில்லாதவன்.

கூப்பிடுபவன் முட்டாள்.’’

மேற்சொன்ன ஆசிரியரைப் பற்றி தனியாக ஒரு பதிவு போடவேண்டும். அது, பிற்பாடு வேறொரு சமயம் வரும்.

என் அப்பா, எங்கள் ஊரின் முதல் அரசாங்க ஆசிரியர். அவர் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் ஓரிரு வருடங்கள் நீங்கலாக எங்களுடைய பக்கத்து ஊரில் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர். இன்று அவர் எங்களிடையே இருந்து மறைந்தாலும், அவருடைய பிள்ளைகளாகவே இன்றும் நாங்கள் அறியப்படுகிறோம்.

நங்கள் மட்டுமல்ல எங்களுடைய பிள்ளைகளும் வாத்தியார் பேரக்குழந்தைகளாகவே அடையாளப்படுத்தப்படுகிறார்கள்.

இதுபோலவே போஸ்ட் மாஸ்டர் வீடு என்று ஒன்று உண்டு. அவர்தான் எங்கள் ஊரின் முதல் போஸ்ட் மாஸ்டர். இன்றும் அவருடைய பிள்ளைகளும் பேரக்குழந்தைகளும் போஸ்ட் மாஸ்டர் வீட்டு குழந்தைகளாகவே அறியப்படுகிறார்கள்.

Representational Image
Representational Image

என்னுடைய பெரியப்பாவை அனைவரும் பிரசிடென்ட் என்று சொல்வார்கள். அவருடைய வீட்டை இன்றும் பிரசிடென்ட் வீடு என்றே சொல்கிறார்கள். ஏனென்றால், அவர்தான் எங்கள் ஊரின் முதன் பஞ்சாயத்து பிரசிடென்ட்.

அதன் பின்னர், பலரும் அந்தப் பதவிகளில் அமர்ந்திருந்தாலும் அந்த முதல் முறை என்பதே அனைவருக்கும் அடையாளமாகி விடுகிறது.

ஒரு திரைப்படத்தில் வருவது போல், நிலவில் முதலில் கால் வைத்தது யாரோ அவர் பெயர் அனைவருக்கும் நினைவிருக்கும். இரண்டாவது கால் வைத்தவரை யாருக்கும் நினைவிருக்காது என்று ஒரு வசனம் வரும். அது, நிலவுக்கு சென்றது போல் பெரிய சாதனை ஆனாலும், ஒரு சிறிய கிராமத்தின் ஆசிரியர் ஆனாலும் ஒன்றுதான் என்பது நிதர்சனமான உண்மை.

அதன் பின்னர், எங்கள் ஊரில் நான் முதல் software engineer ஆனபிறகும் என் அண்ணா எங்கள் ஊரில் முதல் instrumentation engineer ஆனா பிறகும், எங்கள் ஊரில் எங்களுடைய அடையாளம் வாத்தியார் பிள்ளைகள் என்பதே.

மீண்டும் சந்திப்போம்!

-ஆனந்தகுமார் முத்துசாமி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு