Published:Updated:

அம்மா வீடும் லாக்டெளனும்! - வாசகி பகிர்வு #MyVikatan

Representational Image
Representational Image

எப்பொழுது வந்தாலும் ஆசை ஆசையாய் அப்பாவும் தம்பியும் ரயிலடி வந்து காத்துக்கொண்டிருப்பார்கள். ..

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

நான் முன்பெல்லாம் விளையாட்டாய் அம்மாவிடம் சொல்வது உண்டு ``எனக்கு தஞ்சை மாப்பிள்ளைதான் வேணும்.. நெனச்சப்போ உன் கழுத்தை வந்து கட்டிக்கலாம்’’ என்று. ஆனால், வாக்கப்பட்டு வந்தது சிங்கார சென்னைக்கு.

சென்னையிலிருந்து கிளம்பும்பொழுதே மனம் சிறகடிக்கத் தொடங்கும். எப்பொழுது வந்தாலும் ஆசை ஆசையாய் அப்பாவும் தம்பியும் ரயிலடி வந்து காத்துக்கொண்டிருப்பார்கள். வான் முட்டும் பிரகதீஸ்வரர் கோபுரம் கண்டு மனம் குளிரும். பிறந்த ஊரின் மண் வாசத்திலும் இதமான காற்றிலும் இதயம் குளிர்ந்துவிடும்.

Representational Image
Representational Image
Avinash Uppuluri / Unsplash

நம்மீது கொண்ட பாசம் எல்லாம் பேரக் குழந்தை மீது இரட்டிப்பாய் பொங்கும். நானும் தங்கையும் வீடு செல்ல அழகாக அம்மாயிட்ட வாத்துக் கோலமும் டைமண்ட் கேசரியின் வாசமும் நம்மை வரவேற்கும். அனைவருடனும் ஆசைதீர கதைத்துக் கொண்டே இருக்க தாத்தாவும் பாட்டியும் சுடச்சுட வடையும் சில்லென்று ஐஸ்கிரீம் வாங்கிவர களைகட்டும். அனைவரும் கதைத்தும் சிரித்தும் களைப்புர குட்டி தூக்கத்துடன் தொடங்கும் கோடை விடுமுறை.

நாளை என்ன சமையல் என்ற சிந்தனை வராத ஒரே இடம் அம்மா வீடு மட்டுமே.

ஞாயிறு காலை தூக்குச்சட்டி நிறைய நல்லியும் கறியுமாய் தம்பி வாங்கிவர சுடச்சுட மல்லி தூவி சூப் குடிக்கும்பொழுதே அம்மாவின் கை மணத்தில் வீடே மணக்கும்.

பாசமும் நேசமும் நம் வீடு மட்டுமன்றி பக்கத்து வீடு வரை உறவு மலரும். கோடை விடுமுறையில் நமக்காகவே வரும் ரம்ஜான் பண்டிகை மிகச் சிறப்பு. பிரியாணி, பால் கொழுக்கட்டை , நீர் உருண்டை, நிலாச் சோறு என உணவுப்பட்டியல் நீள்வதில் நமக்கு நாளை என்ன சமையல் என்ற சிந்தனை வராத ஒரே இடம் அம்மா வீடு மட்டுமே.

Representational Image
Representational Image

ஆனந்த தொட்டி குளியலும், குளிர குளிர இளநீரும், திகட்ட திகட்ட உணவும் ஆசை தீர உறவுகளோடு கூடி குதுகலித்து விடுமுறையும் நிறைவுறும்.

மீண்டும் ரயில் நிலையம் செல்ல வண்டி கிளம்பும் வரை சுற்றிச் சுற்றி வந்து ஏற்றிவிடும் அப்பா அம்மா முகம் வாடிவிடும். மகள்களுக்கு மட்டுமே தெரியும் அம்மா வீடு என்பது ஓர் புத்துணர்வு முகாம் என்று.

எங்குமே கிடைக்காத ஏகாந்தம் இங்கு மட்டுமே உண்டு. இப்படி உடலும் உள்ளமும் புத்துணர்வு அடையச் செய்யும் அம்மா வீடு எந்த விடுமுறைகளிலும் தவறவிட்டதில்லை. இம்முறை கோடை விடுமுறையும் முடிந்தது நீளும் கொரோனாவின் ஊரடங்கு முடியக் காத்துக்கொண்டே இருக்கிறோம் அம்மா வீடு செல்ல...!

- N.சங்கீதா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு