Published:Updated:

``சுத்தி சுத்தி வந்தேன்ங்க..!’’ - ஒரு நாள் மருத்துவமனை அனுபவம் #MyVikatan

Representational 
Image
Representational Image ( Pixabay )

கையுறை அணிந்திருந்ததால், ஆண்ட்ராய்ட் போனை பயன்படுத்த இயலவில்லை... வார்டில் போவோர் வருவோரை வேடிக்கை பார்த்துக்கொண்டே மூன்று மணி நேரத்தைக் கடந்து மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்றோம்...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

சார் எக்ஸ்கியூஸ் மீ,


சொல்லுங்க மேடம், எந்த டிபார்ட்மென்ட் ?


டாக்டர் அர்ஜுன் நாராயணன், ருமட்டாலஜி டிபார்ட்மென்ட்,


பேஷண்ட் ஐடி சொல்லுங்க...


4659872h,


பேரு மாதவனா மேடம்?


ஆமாங்க சார்...

நாலாவது மாடில பிளாக் C, ரூம் நம்பர் 12, லஞ்ச் முடிஞ்சதும் 2.30 மணிக்கு டாக்டரை பார்க்கலாம் ...

ரொம்ப நன்றி சார், என்று கடிகாரத்தைப் பார்க்க மணி முற்பகல் 11.30 எனக்காட்டியது...

இன்னும் மூணு மணி நேரம் காத்திருக்கணும் என்றேன் என் கணவரை முறைத்துக்கொண்டே

லாக்டவுன் டைம்ல இவ்வளவு கூட்டம் இருக்காது, சீக்கிரம் டாக்டரை பார்த்துடலாம்ன்னு நெனச்சேன் பானு, கோவிச்சுக்காத ப்ளீஸ்...

கையுறை அணிந்திருந்ததால், ஆண்ட்ராய்ட் போனை பயன்படுத்த இயலவில்லை... வார்டில் போவோர் வருவோரை வேடிக்கை பார்த்துக்கொண்டே மூன்று மணி நேரத்தைக் கடந்து மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்றோம்...

Representational 
Image
Representational Image

பின்னர் நான்காவது தளத்திலிருந்து தரை தளத்தில் உள்ள காண்ட்டினுக்கு மிகுந்த பசியுடன் நுழைந்தோம்...சாப்பாட்டைக் கண்டு பல மாதங்கள் ஆனது போல, இருவரும் மீல்ஸை ஒரு கட்டு கட்டினோம்..

பானு நீ போய் அடுத்த மாசம் அட்மிசனுக்கும், லேப் டெஸ்ட்டுக்கும் பணத்தை கட்டிட்டு வந்திடு, நான் செகண்ட் புளோர்ல நெப்ரோ டிபார்ட்மென்ட்ல வெயிட் பண்றேன்......

நீங்க தனியா போக வேண்டாம், உங்களை அங்க உக்கார வெச்சுட்டு அப்புறம் நான் போறேன்...

நெப்ரோ வார்டில் கிட்டத்தட்ட நூறு பேருக்கும் மேல் அமர்ந்திருந்தனர்...

என்னங்க இது இத்தனை பேர் இருக்காங்க...

அநேகமா விடிஞ்சிடும்ன்னு நினைக்கிறேன் பானு ..

சரி வெயிட் பண்ணுங்க சீக்கிரம் வந்துடறேன்...

மீண்டும் நான்காம் தளத்திற்கு வந்து எட்டு பேரை கடந்து ஒரு வழியாக கவுன்ட்டரை நெருங்கி பணத்தை செலுத்தி விட்டு ரசீதை வாங்கிப் பார்த்தேன்…

சார் அட்மிஷனுக்கு பதிலா ஓபி க்கு பில் போட்டிருக்கீங்க?

ஆமா மேடம், டாக்டர் ஓபிக்கு தான் எழுதி கொடுத்திருக்கார் ..இல்ல சார் நாங்க அடுத்த மாசம் அட்மிஷன் ஆகணும், ஓபி இல்ல...

அப்படின்னா டாக்டர் கிட்ட போய் அட்மிஷன் ஸ்லிப் வாங்கிட்டு வாங்க....

டாக்டர் அறையின் முன் ஏராளமானோர் காத்துக் கொண்டிருந்தனர்....

அரை மணி நேரம் கழித்து, டாக்டரை சந்தித்து, ஓபியை கேன்சல் செய்து விட்டு அட்மிஷன் ஸ்லிப்பை வாங்கிக்கொண்டு பணம் செலுத்தும் இடத்திற்கு வந்து சேர்ந்தேன்...

சார் டாக்டர் அட்மிசன் ஸ்லிப் குடுத்துட்டாரு, ஓபியை கேன்சல் பண்ணிட்டு அட்மிஷனுக்கு பணம் கட்ட சொன்னார்..

சாரி மேடம் ஓபியை கேன்சல் பண்ண முடியாது.... அட்மிஷனுக்கு வேணா பணம் கட்டிருங்க...

சார் அப்போ அந்த 1299 ரூபாய் திருப்பி தர மாட்டீங்களா?

முதல் மாடில ஜி 121 கவுன்ட்டர் போய் கேளுங்க மேடம்....

ஜி 121க்கு விரைந்தேன்.. கேஷியர்க்கும் எனக்கும் இடையில் கிட்டத்தட்ட இருபது பேர் இருந்தனர்...

திருப்பதியில் தரிசனத்திற்கு நிற்கும் பக்தனை போல காத்திருந்தேன்... ஒரு மணி நேரத்திற்குப் பிறகு,

மேடம் அட்மிசன் பீஸ் பத்தாயிரம் , எட்டாயிரத்து முந்நூறு மட்டும் குடுத்திருக்கீங்க...

நடந்தவற்றை மூச்சு விடாமல் விவரிக்க,

அட்மிஷனுக்கு மட்டும் இங்க பணம் கட்டுங்க ... ரீஃபண்ட் வாங்க ஏ பிளாக்ல சி 11 க்கு தான் போகணும்

அடக்கடவுளே என மனதிற்குள் நொந்து கொண்டே, பணத்தை செலுத்தி விட்டு தரை தளத்தில் உள்ள மருந்தகத்தை அடைந்தேன்...

Representational 
Image
Representational Image

ஒன்றரை மணி நேரம் வரிசையில் நின்று மூன்று பேர் இருக்கும் நிலையில்,

செக்யூரிட்டி, ``மேடம் C22க்கு போங்க, இந்த கவுன்ட்டர் கிளோஸ் பண்றோம்'' என்றார்..

கடுப்புடன் c22க்கு சென்று பணத்தை செலுத்தி விட்டு, பெறப்பட்ட மருந்து மாத்திரைகளை சரி பார்த்த பொழுது ஒரு மாத்திரை மட்டும் விட்டுப்போய் இருந்தது...

மேடம் இதுல metoprolol டேப்லெட் இல்ல.

அப்படியா மேடம், பில் போடும் போது மிஸ் பண்ணிட்டாங்க போல... ஒரு பில் போட்டுட்டு வந்துடுங்க...

அது ஒரு பால்பாய்ண்ட் பேனா காலம்..! -  90s கிட்ஸ் பக்கங்கள்   #MyVikatan

மறுபடியும் வரிசையில் நின்று பணத்தை செலுத்தி விட்டு மருந்துகளை வாங்கிவிட்டு திரும்பும் போது மணி இரவு ஏழு ....

செக்யூரிட்டியிடம் ஏ பிளாக் எங்கே என விசாரித்து விட்டு ஏ பிளாக்கை நோக்கி விரைந்து சென்றேன்...

சி 11 கவுன்ட்டரில் இருந்தவர், மேடம் அப்பாயிண்ட்மெண்ட் சார்ஜ் ரூ.290 போக மீதி 1009 ரூபாய் மட்டும் தான் திருப்பி தருவோம் என்றார்.....

சரி குடுங்க என்றேன் அதீத களைப்பில்...

மேடம் A12 ல போய் கலெக்ட் பண்ணிக்குங்க....

அது எங்க சார் இருக்கு?

ஃபர்ஸ்ட் புளோர்ல போங்க மேடம்...

அடப்பாவிகளா இந்த சுத்து சுத்த விடறீங்க என்று மனத்திற்குள் புலம்பிக் கொண்டு ஆயிரத்து ஒன்பது ரூபாய்க்கு மீண்டும் அரை மணி நேரம் காத்திருந்து பெற்றுக் கொண்டு திரும்புகையில், அலைபேசி அழைத்தது...

மாதவனிடமிருந்து மட்டும் பதினோரு அழைப்புகள் வந்திருந்தது...

அலைபேசியை எடுத்து டயல் செய்ய முற்படுகையில் மீண்டும் மாதவனிடம் இருந்து மீண்டும் அழைப்பு வர,

``பானு எங்கடி இருக்கே? நானும் தொடர்ந்து கால் பண்ணிட்டே இருக்கேன்...’’

Representational 
Image
Representational Image

``இதோ அஞ்சே நிமிஷத்துல வந்துடறேன், லிப்ட் கிட்ட வந்துட்டேன்..’’

``நீ ஒண்ணும் இங்க வர வேண்டாம்...நானே கீழ வரேன்..’’

``சரி வாங்க வெயிட் பண்றேன்...’’

பிறகு ,

``நெப்ரோ டாக்டரை பார்க்க வேண்டாமா?’’

``அதுக்கு இன்னும் ரெண்டு நாளாகும் போல இருக்கு.. கூட்டம் குறையவே இல்ல...’’

``இப்போ என்ன செய்யறது?’’

``நாம கிளம்பலாம்,பசங்களை வேற வீட்ல தனியா விட்டுட்டு வந்திருக்கோம்...’’

``சரி சரி... வந்தது வந்தீங்க,அப்படியே, மூட்டுவலி டாக்டர் கிட்ட எனக்கும் ஒரு அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிட்டு வந்திருக்கலாம் இல்லையா?’’

``ஏன் பானு என்னாச்சு, காலையில வரும்போது நல்லாதானே இருந்தே?’’

``இப்போ உங்களுக்குப் புரிய வைக்கற நிலைமையில நான் இல்ல, போய் காரை எடுத்துட்டு வாங்க....நேரம் காலமே ஊரு போய் சேருவோம்...’’


அன்புடன்

நித்யா இறையன்பு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு