Published:Updated:

10 செகண்ட் லாக்டெளன் கதைகள்! - வாசகர் பகிர்வு #MyVikatan

Representational Image
Representational Image

லாக்டெளன் எதார்த்தங்களை உணர்த்தும் ஒரு வரிக் கதைகள்..

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

# தன்மானம்:

இலவச உணவுப் பொட்டலம் வாங்கச்சென்ற அனைவருமே வெறுங்கையுடன் திரும்பினர், புகைப்படம் எடுத்ததால்!

Representational Image
Representational Image
Pixabay

# முரண்:

'எப்பதான் ஸ்கூல் திறப்பாங்களோ...' என அம்மாவிடம் புலம்பியது குழந்தை!

# தனிமனித இடைவெளி:

பணத்திற்கும் தமக்குமான இடைவெளி காலங்காலமாய்த் தொடர்வதன் காரணம் புரியாமல் குழம்பினார், விவசாயி!

Representational Image
Representational Image
Vikatan Team

# தேவை:

அனைவருமே வீட்டில் இருப்பதால் 'ஆன்லைனில் திருடுவது எப்படி' எனக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தான் திருடன்!

# மாயை :

மனிதர்களின் நோய்கள் எல்லாம் தொலைந்துபோனதன் காரணம் புரியாமல் கவலையில் ஆழ்ந்தார், தனியார் மருத்துவமனை நிர்வாகி!

Representational Image
Representational Image

# கவலை:

'இரவு உணவுக்கு புதுமையாக என்ன செய்வது' என்ற சிந்தனையுடன் யூ-டியூபை ஓப்பன் செய்தார் பாட்டி!

# தாராளமயம்:

பிச்சைக்காரர் அமர்ந்திருந்த மரத்தடியில், 'இங்கு உணவுப் பொருள்கள் வழங்கப்படாது' என்ற அறிவிப்புப்பலகை தொங்கியது!

Representational Image
Representational Image
Photo by Shail Sharma on Unsplash

# விளம்பரம்:

வயிற்றைக் கழுவ வாய்ப்பில்லாத தொழிலாளி, கைகழுவச் சொன்ன அறிவிப்பை கவலையோடு பார்த்தார்!

# தொடர் பணி:

செல்போனும் ரிமோட்டும் மின்விசிறியைப் பார்த்து சற்று ஆறுதலடைந்தன!

Representational Image
Representational Image

# தரம்:

டெம்போவில் வீதிக்கு வந்த காய்கறிகள், பணக்கார வீட்டிற்குள் நுழையத் தயங்கின!

-அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு