Published:Updated:

"ஜெயலலிதா கலந்துகொண்ட கடைசி அரசு விழாவில் நடந்ததை மறக்க முடியாது"- மனம் திறக்கும் தமிழிசை

தமிழிசை சௌந்தரராஜன்

இங்கு பல பேர், `நாங்கள்தான் தமிழ் மொழியைத் தோளில் சுமந்துகொண்டிருக்கிறோம். அதை விட்டுவிட்டால் கீழே விழுந்து விடும்' என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

"ஜெயலலிதா கலந்துகொண்ட கடைசி அரசு விழாவில் நடந்ததை மறக்க முடியாது"- மனம் திறக்கும் தமிழிசை

இங்கு பல பேர், `நாங்கள்தான் தமிழ் மொழியைத் தோளில் சுமந்துகொண்டிருக்கிறோம். அதை விட்டுவிட்டால் கீழே விழுந்து விடும்' என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Published:Updated:
தமிழிசை சௌந்தரராஜன்

தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரியின் துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுடன் பேராசிரியர் பர்வீன் சுல்தானா நிகழ்த்திய நேர்காணல் இதோ...

தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்

"இந்தி பேசுபவர்கள் தமிழ் தெரியாமல் தமிழகத்தில் வந்து வேலை பார்க்கும் போது, தமிழர்கள் இந்தி தெரியாமல் வடஇந்தியாவில் சென்று வேலை பார்க்க முடியாதா?"

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எனக்கு தமிழ்மீது ஆர்வமும், ஆங்கிலப் புத்தகம் படிக்கும் பழக்கமும் உண்டு. ஒருவேளை எனக்கு இந்தி தெரிந்திருந்தால், தமிழ் மொழியின் பெருமையை இந்தியா முழுவதும் சென்று சேர்த்திருக்க முடியுமோ? என்று நான் பலமுறை நினைத்ததுண்டு. ஒரு மொழியைக் கற்றுக்கொள்வது நம் வாய்ப்புகளைத்தான் பெருக்கும். நான் ஒரு நாள் இந்தி பிரசார சபாவிற்கு சென்றிருந்தேன். அங்கு 30 தமிழ் மாணவர்கள் இந்தி பயின்று கொண்டிருந்திருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் ஒரு புகழ்பெற்ற கார் நிறுவனத்தில் இரண்டு லட்சம் ரூபாய்க்கு வேலை கிடைத்தது. அவர்களுக்கு அத்துறை குறித்த திறமையும் இருந்தது. ஆனால் இந்தி தெரியாத ஒரே காரணத்தால், அனைவரது வேலையும் பறிபோனது. இப்போது நான் உங்களிடம் இந்த கேள்வியினை முன்வைக்கிறேன். 'இந்தி தெரியணுமா? வேண்டாமா?' ஒரு மொழி அதிகமாக கற்றுக்கொள்ளும்போது, அதில் என்ன குறை இருக்கிறது? முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவிற்கு பல மொழிகள் தெரியும். ஆதலால் இன்னொரு மொழியைக் கற்றுக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

"ஆனால் இந்தியைக் கட்டாயப்படுத்துகிறார்களே?"

தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்

நான் 'இந்தி' என்று சொன்னாலே, அதைத் திணிப்பு என்று எடுத்துக் கொள்கிறார்கள். இங்கு யாரும் எதையுமே கட்டாயப்படுத்த முடியாது. உங்களுக்கு தோசைதான் பிடிக்கும் என்றால், இட்லியை வாயில் திணிக்க முடியுமா? 'இன்னைக்கு தோசை இல்லப்பா, இட்லிதான் இருக்கு. இதை கொஞ்சம் சாப்பிடு' என்று அம்மா சொன்னால் அது கட்டாயப்படுத்துவதாக ஆகுமா? அதை தான் நாங்களும் சொல்கிறோம். ஆனால் அறிவுரைகளை அறிவுரைகளாக எடுத்துக்கொள்ளாமல், அதைக் கட்டாயமாக எடுத்துக்கொள்வதுதான் இங்கு பிரச்னை உண்டாகிறது. நீங்கள் இன்னொரு மொழியைக் கற்றுக்கொண்டால் உங்கள் வாய்ப்புகள் பிரகாசமாகும் என்றுதான் கூறுகிறோம். இங்கு பல பேர் நாங்கள் தான் தமிழ்மொழியைத் தோளில் சுமந்துகொண்டிருக்கிறோம். அதை விட்டுவிட்டால் கீழே விழுந்து விடும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பாரதியார் காசிக்கு சென்றிருக்கிறார். காந்தியுடன் உரையாடி இருக்கிறார். பல மொழிகளை அவர் கற்றுக்கொண்டாலும், அவருக்கு தமிழ் மீதிருந்த ஆர்வம் இம்மியளவு குறைந்ததா? அவர் இரத்தத்தில் கலந்த மொழி சத்தத்தில் குறைந்தது என்று சொல்ல முடியுமா? அதனாலேயே 'யாமறிந்த மொழிகளிலே' என்று பாடினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒரு பெண் அரசியல் ஆளுமையாக உருவாவதென்பது மிகவும் சவலான விஷயம். தற்போது அதை நீங்கள் நிகழ்த்திக் காட்டியிருக்கிறீர்கள். உங்களைப் போலவே அரசியலில் ஜொலித்த ஆளுமைகள் சோனியா காந்தி, ஜெயலலிதா, கனிமொழி, மம்தா பானர்ஜி இவர்கள் மீதான உங்கள் பார்வை என்ன?

சோனியா காந்தி : ஒரு இத்தாலிய பெண்ணாக இருந்தாலும், இந்திய காங்கிரசை தூக்கி நிறுத்தியவர் சோனியா காந்தி. ஆனால், தன் கட்சியிலேயே மற்றவர்களைப் பெரிதும் வளர விடாமல் ஒரு தனி ஆளுமையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறாரோ என்ற கருத்தும் அவர்மீது இருக்கிறது.

தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்

ஜெயலலிதா : அந்த இரும்புப் பெண்மணியை நேரடியாக எதிர்த்த ஒரு துரும்பு பெண்மணி நான். அந்த வாய்ப்பு பலருக்கும் கிடைக்காது. நான் தலைவரானவுடன் ஒரு வாழ்த்துச் செய்தியை எனக்கு அனுப்பினார். சென்னை மெட்ரோ ரயில் நிலையம் திறப்பு விழாவின்போது, அதை திறந்து வைக்க வெங்கய்யா நாயுடு வந்திருந்தார். அப்போது ஜெயலலிதாவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவரால் நேரில் வரமுடியவில்லை. காணொலி காட்சியில் விழாவினை பார்த்துக் கொண்டிருந்தார். அது ஒரு அரசு விழாவென்பதால் நான் மேடைக்கு செல்லாமல் பிளாட்பாரத்தில் இருக்கும் இருக்கையில் அமர்ந்திருந்தேன். அதைப் பார்த்துவிட்டு அவர் உடனே கலெக்டரை அனுப்பி என்னை மேடையில் அமர வைக்கச் சொன்னார். நான் மறுத்தும், அவர் முடியாது என்று சொல்லிவிட்டார். அதுதான் அவர் கலந்துக்கொண்ட கடைசி அரசு நிகழ்வு. கடைசி நாள், கடைசி நிகழ்வில் கீழே இருந்த ஒரு பெண்ணை மேடையில் அமர்த்திவிட்டு இறந்திருக்கிறார் அவர்.

கனிமொழி: அரசியலில் எனக்கு இருக்கும் சவாலான போட்டியாளர்களுள் இவரும் ஒருவர். அரசியலில் மிகவும் உறுதியாக மற்றும் மென்மையான போக்கைக் கடைப்பிடிப்பவராக அவரை நான் பார்க்கிறேன். அவரிடம் நான் பெரிதும் பழகியது கிடையாது. குடும்பப் பிண்ணனி இருந்தாலும் இல்லையென்றாலும் ஒருவர் முன்னுக்கு வந்து நிலைத்து நிற்பது கடினம்தானே. அந்த வகையில் அவரை நான் ஒரு பெரிய ஆளுமையாகவே பார்க்கிறேன்.

மம்தா பானர்ஜி : அவர் தெருக்களில் இறங்கிப் போராடக்கூடிய ஒரு நபர்தான். ஆனால் அப்போராட்டத்தை அளவுக்கு மீறி கொண்டு செல்கிறாரோ என்று நினைக்கிறேன்.

"நீங்கள் மருத்துவத் துறையைச் சேர்ந்தவர். நீட் தேர்வு எழுதாமல் மருத்துவம் படித்தீர்கள். ஆனால் இப்போது நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் மருத்துவம் படிக்க முடியும் என்ற தற்போதைய சூழ்நிலையினை எப்படிப் பார்க்கிறீர்கள்?"

"நான் அரசாங்கக் கல்லூரியில் படித்தவள். தனியார் மருத்துவக் கல்லூரியில் வேலை பார்த்தவள். இது இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் எனக்குத் தெரியும். நல்ல மதிப்பெண் பெற்று அரசுக் கல்லூரியிலும், நிறைய பணம் இருப்பதால், 50 சதவிகிதம் மட்டும் மதிப்பெண் எடுத்து இந்தத் துறைக்கு வந்தவர்களும் எனக்கு நன்கு தெரியும். இப்போது நீட் தேர்வால் அப்படி யாராலும் வர முடியாது. ஒரு திறமையான மாணவர் மட்டுமே வர முடியும். ஐ.ஏ.எஸ் அதிகாரியாக ஒருவர் ஆக வேண்டுமென்றால், அதற்கென தனித் தேர்வு எழுத வேண்டியிருக்கிறது. ஒரு காவல் துறை அதிகாரி ஆவதற்கு தனித் தேர்வு எழுத வேண்டியிருக்கிறது. அதுபோலத்தான் தற்போது மருத்துவத் துறைக்கு நீட் தேர்வு. இதில் நிச்சயமாக வாய்ப்புகள் மறுக்கப்படுவதில்லை. எல்லோரும் இதன் ஒரு பக்கத்தை மட்டும்தான் பார்க்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டுமே நீட் வேண்டாமென்று சொல்கிறோம். ஆகவே, தமிழகத்தில் உள்ள மாணவர்கள் மற்ற தேர்வுகளை எதிர்கொள்ள தயாராகும் அளவிற்கு அவர்களின் திறமையை மேம்படுத்துங்கள். கல்வி நிலையை மேம்படுத்துங்கள். தளராது திறமையை வளர்த்து உட்கார்ந்து படித்தால், முடிவெடுப்பவர்களின் மகள் மட்டுமல்ல முடிவெட்டுபவர்களின் மகள்கூட டாக்டர் ஆகலாம்."

5. சினிமா படங்கள், பாடல்கள் கேட்பதுண்டா?

ஆரம்பத்தில் இருந்தே நான் சினிமா பார்க்க மாட்டேன். என் கணவரும் மகளுமே அப்படி தான். ஆனால் பாடல்கள் கேட்கும் பழக்கம் உண்டு. அதிலுள்ள வரிகளின் மீது எனக்கு ஈர்ப்பு அதிகம். நா முத்துக்குமார், வாலியின் ஆகியோர் பாடல்கள் அனைத்தும் பிடிக்கும். கண்ணதாசன் கேள்வியே கிடையாது. ஆரம்ப காலத்தில் இருந்தே அவரை எனக்கு பிடிக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism