Published:Updated:

“அமீரின் வாழ்க்கையில் பாலா என்பவர் யார்?”- நினைவுகள் பகிரும் இயக்குநர் அமீர்.

இயக்குநர்  அமீர் சுல்தான்
News
இயக்குநர் அமீர் சுல்தான்

பாலாவைச் சந்திக்கும் முன்னதாக நான் யார் என்பதை விட சினிமாவுக்கு முன்னதாக நானும் பாலாவும் யார் என்ற கேள்வியே சரியானதாக இருக்கும்

ஆனந்த விகடன் யூடியூப் சேனலுக்காக பேச்சாளர், கல்வியாளர், எழுத்தாளர் என பன்முகம் கொண்ட பேராசிரியை பர்வீன் சுல்தானா, பல்துறை ஆளுமைகளைச் சந்தித்து உரையாடி வருகிறார். ‘கதைப்போமா with பர்வீன் சுல்தானா’ என்ற பெயரிலான அந்த நிகழ்ச்சியில் தமிழ்த் திரையுலகின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான அமீர் சுல்தானை சந்தித்து அண்மையில் உரையாடினார்.

நீண்ட அந்த உரையாடலில் இருந்து சில துளிகள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
இயக்குனர் அமீர் சுல்தான்
இயக்குனர் அமீர் சுல்தான்

எளிமையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்த நீங்கள் சினிமாவுக்குள் எப்படி நுழைந்தீர்கள்?

மதுரையில் பிறந்தவன் நான். ஒரு பூங்காவோ, கடற்கரையோ எதுவும் அங்கு கிடையாது. அந்த ஊரின் ஒரே பொழுதுபோக்கு சினிமா. சிறு வயதில் இருந்து பல சினிமாக்கள் பார்த்து வளர்ந்தேன். மேலும் நினைவு தெரிந்த நாளில் இருந்து என் அம்மா தான் பார்த்த திரைப்படத்தின் கதையை என்னிடம் கூறுவார். அவர் அப்படி கதை கூறி முடித்தால் பார்க்காத படத்தையே பார்த்து முடித்தது போல ஒரு எண்ணம் வந்துவிடும். அப்படத்தின் கதையின் மட்டும் கூறாமல் அவர்களின் சொந்த கருத்துக்களையும் அக்கதையோடு சேர்த்து நீதி போதனைகளை எனக்கு வழங்குவார்.

இப்படி பார்த்து கேட்டு என்னை அறியாமலேயே நான் சினிமாவுக்குள் போய் விட்டேன் என்று சொல்லலாம். நான் சினிமா கற்றுக்கொண்டதே திரையிலிருந்தாதானே தவிர தரையில் அல்ல. சினிமாவில் பணிபுரிந்து அதில் வேலை செய்யும் தொழில்நுட்ப கலைஞர்களிடம் இருந்து கற்று கொண்டதைவிட திரையில் நான் பார்த்த படங்களை மூலமாகவே அதிகமாக கற்றுக்கொண்டேன். ஒவ்வொரு படம் இன்னொரு படத்திலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது. அதை ஒவ்வொரு இயக்குநரும் எந்தெந்த விதத்தில் அணுகுகிறார்கள் என்று நானாகவே கவனிக்கத் தொடங்கினேன்.

இயக்குனர் அமீர் சுல்தான்
இயக்குனர் அமீர் சுல்தான்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இவ்வாறு எல்லாற்றையும் தாண்டிய ஒரு தனி ஆர்வம் சினிமா மீது எனக்கிருந்தது. அதற்காக எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செலவிடலாம், எத்தனை தூரம் வேண்டுமானாலும் செல்லலாம் என்று எண்ணம் என்னிடம் என்றும் இருந்ததுண்டு. ஆனால் இன்று இருப்பதுபோல 70-களில் சினிமா மீது மக்களிடையே எந்த மரியாதையும் இருக்கவில்லை. “நீ சினிமா பார்த்து நாசமாய் போகப்போகிறாய்” என்கிற அவச்சொல்தான் நான் அதிகமாக கேட்ட ஒன்று. ஆனால் இவை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. மேலும் என் சினிமா ஆர்வத்திற்கு காரணமாய் என் அம்மாவை குறைகூறினார்கள்.

என்னுடைய 14 வயதிலேயே அப்பா இறந்துவிட்டதால் வீட்டின் கடைசி பிள்ளையான என்னிடத்தில் அப்போது ஒரு வெறுமை ஏற்பட்டது. அந்த காலங்களில் என் தனிமையை போக்க திரையரங்குகளே பேருதவியாக இருந்தன. டிக்கெட் பணத்திற்கான என் அம்மா கூறும் அனைத்து வேலைகளையும் செய்வதுண்டு. ஆன்மிகம் என்பது பின்னாட்களில் சேர்ந்த ஒன்றே. திரையரங்குகளையே என்னுடைய முதல் குருவாக நான் சொல்வேன்.

அமீரின் வாழ்க்கையில் பாலா என்பவர் யார்?

பாலாவைச் சந்திக்கும் முன்னதாக நான் யார் என்பதை விட சினிமாவுக்கு முன்னதாக நானும் பாலாவும் யார் என்ற கேள்வியே சரியானதாக இருக்கும். என் சொந்த அண்ணனுடைய வகுப்பறை தோழனே பாலா. சிறிய வயதில் இருந்தே நானும் பாலாவும் மிக நெருங்கிய நண்பர்கள் குடும்பரீதியாகவும் கூட.

தொடக்ககாலத்தில் என்னைவிட பாலாவுக்கு சினிமா ஆர்வம் என்பதும் குறைவு தான். அவரை முழுமையாக தெரிந்தவன் என்ற முறையில் என்று கூறுகிறேன். ஆர்வம்தான் குறைவே தவிர அவர் அறிவில் குறைவு என்று நான் சொல்லவில்லை. கல்லூரி படிப்பையெல்லாம் நிறைவு செய்து அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தோம். அப்போது சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு செல்லலாம் என்று முடிவு செய்தார் பாலா. ஆர்வம் குறைவாக இருந்தாலும் அதற்கான முதல் படியை எடுத்து வைத்தவர் பாலா. ஆனால் எனக்கு அந்த எண்ணம் இருக்கவில்லை. பின்னர் நானும் அவரும் சென்னைக்கு கிளம்பி வருகிறோம். என்னுடைய உறவினர் ஒருவரின் உதவியோடு பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியில் சேர்கிறார். அவரை சேர்த்துவிட்டு நான் மீண்டும் மதுரைக்கே வந்துவிடுகிறேன்.

சினிமாவுக்காக மீண்டும் சென்னை பயணித்தது, நண்பன் பாலாவிடமே உதவி இயக்குனராக சேர்ந்தது பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஆகியவற்றின் முழுமையான வீடியோ கீழுள்ள லிங்க்கில்.