Published:Updated:

"ஜெய்பீம் படம் சர்ச்சையானது ஒரு அரசியல். அதை அதிக காலம் நீடிக்கச்செய்தது மற்றொரு அரசியல்" - அமீர்

இயக்குனர் அமீர்

ஆதிக்க சாதி மனநிலையில் உள்ளவர்கள் ஒடுக்கப்பட்டவர்களின் வலியை மனம் திறந்து பேச ஒருபோதும் தயாராக இல்லை.

"ஜெய்பீம் படம் சர்ச்சையானது ஒரு அரசியல். அதை அதிக காலம் நீடிக்கச்செய்தது மற்றொரு அரசியல்" - அமீர்

ஆதிக்க சாதி மனநிலையில் உள்ளவர்கள் ஒடுக்கப்பட்டவர்களின் வலியை மனம் திறந்து பேச ஒருபோதும் தயாராக இல்லை.

Published:Updated:
இயக்குனர் அமீர்

ஆனந்த விகடன் யூடியூப் சேனலுக்காக பேச்சாளர், கல்வியாளர், எழுத்தாளர் என பன்முகம் கொண்ட பேராசிரியை பர்வீன் சுல்தானா, பல்துறை ஆளுமைகளைச் சந்தித்து உரையாடி வருகிறார். `கதைப்போமா with பர்வீன் சுல்தானா’ என்ற பெயரிலான அந்த நிகழ்வில் தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான அமீரை சந்தித்து அண்மையில் உரையாடினார்.

நீண்ட அந்த உரையாடலில் இருந்து சில துளிகள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒரு படைப்பாளியாக இன்று சினிமா அதிக அளவில் வணிகமயமாகிவிட்டது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

"ஒரு கலை எப்போது சந்தைக்கு வருகிறதோ அப்போதே அது வணிகமாகிவிடுகிறது. பொருளை முதலீடு செய்து லாபத்தை ஈட்ட வேண்டும் என்றாலே அது வணிகம்தானே. ஓவியத்திற்கும் அதேதான், புத்தகதிற்கும் அதேதான். இதில் சினிமாவிற்கு மட்டும் என்ன விதிவிலக்கு. இன்றைய காலத்தில் மருத்துவமும் ஒரு வணிகம்தான்.

இயக்குனர் அமீர்
இயக்குனர் அமீர்

இந்த ஓடிடி-யின் வரவையெல்லாம் நான் விஞ்ஞானத்தின் வளர்ச்சியாகவே பார்க்கிறேன். இங்கு இருந்து கொண்டு அதற்கு எதிராக கூக்குரல் வேண்டுமானால் எழுப்பலாம். அதை நம்மால் தடுக்க முடியாது. அதோடு சேர்ந்து பயணப்படுபவனே புத்திசாலி. நான் ஏற்கனவே ஒரு நேர்காணலில் இவ்வாறு கூறியிருக்கிறேன். ஒரு பொருளை தயாரிப்பவன் அதை எந்த சந்தையில் போய் விற்க வேண்டும் என்பதை மிக சரியாக தீர்மானிக்க வேண்டும். பொருளை தயாரிக்கும் அனைவருமே அதை திரையரங்கில் தான் போய் விற்பேன் என்றெல்லாம் ஆசைப்படக்கூடாது. அந்த காலமெல்லாம் கடந்துவிட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சந்தை மாற்றமடைந்து கொண்டே இருக்கிறது. அதற்கேற்றவாறு நாமும் மாற வேண்டும். குறைசொல்ல கூடாது. நீங்கள் ஆயிரம் சொல்லுங்கள் இன்று ஆண்ட்ராய்ட் போன் இல்லாமல் யாரும் வாழ முடியாது. அதேபோல தான் திரையரங்கிற்கான பார்வையாளர்கள் மற்றும் அது தரும் சந்தோசம் என்பது வேறு. அது ஒரு பண்டிகைக்கான மனநிலை. எல்லா நாளையும் பண்டிகை ஆக்க நினைக்கக்கூடாது அப்படி ஆக்கவும் முடியாது. அதனால் பொருளை தயாரிப்பவர்கள் சரியான பார்வையுடன் இருக்க வேண்டும்.

இயக்குனர் அமீர்
இயக்குனர் அமீர்

சமீப காலங்களில் சாதி ரீதியிலான திரைப்படங்கள் அதிகம் வெளியாகின்றன. இதை பற்றிய உங்கள் பார்வை என்ன?

"இதை நான் இரண்டு விதமாக பார்க்கிறேன். முதலில் உங்களின் இந்த கேள்வி ஆதிக்க சாதி மனநிலையில் இருந்து எழுந்ததாக கூறவேண்டும் . உங்களை அல்ல உங்களின் இந்த கேள்வியை மட்டும் . ஏனென்றால் சாதியை பற்றிய படங்கள் எல்லா காலத்திலும் வந்துக்கொண்டே தான் இருக்கிறது . சின்ன கவுண்டர், தேவர் மகன் போன்ற திரைப்படங்கள் வந்தபோது இதுமாதிரியான கேள்வியை யாரும் எழுப்பவில்லை. ஆனால் இன்று ஒடுக்கப்பட்டவர்களை பற்றிய திரைப்படங்கள் வரும்போது மட்டும் இந்த கேள்வி வருகிறது.

இனி எத்தனை வருடங்களுக்கு அவர்கள் கீழேயே இருப்பார்கள். அவர்களுக்கான நேரம், அவர்களுக்கான மேடை கிடைக்கும் போது அதை வெளிப்படுத்தத்தானே செய்வார்கள். மேலும் அதை அவர்கள் செய்யாமல் வேறு யாரு செய்வார்கள். ஆதிக்க சாதி மனநிலையில் உள்ளவர்கள் ஒடுக்கப்பட்டவர்களின் வலியை மனம்திறந்து பேச ஒருபோதும் தயாராக இல்லை. அதே நேரத்தில் சாதி இல்லாத சமூகத்தை தான் நாம் கற்றுக்கொடுக்க வேண்டுமே தவிர உன் சாதியை விட என் சாதி உயர்ந்தது என்று பெருமை பேசக்கூடாது."

ஜெய் பீம் திரைப்படத்தை ஒரு பிரிவினர் மட்டும் கடுமையாக எதிர்த்தார்கள். அதை பற்றிய உங்கள் பார்வை?

"அதை நான் அரசியலாகத்தான் பார்க்கிறேன். அத்திரைப்படம் எடுக்கப்பட்டது ஒரு அரசியல். அது சர்ச்சையானது ஒரு அரசியல். அதை அதிக காலம் நீடிக்கச்செய்தது மற்றொரு அரசியல். எல்லாவற்றிலும் அரசியல் இருக்கிறது. எல்லோருக்குள்ளும் அரசியல் இருக்கிறது. நான் தனிப்பட்ட முறையில் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை. அதை சர்ச்சை ஆக்கவேண்டாம் என்று நினைத்திருந்தால் இரண்டாவது நாளிலேயே முடித்திருக்கலாம். முடிக்க வேண்டும் என்ற எண்ணம் அந்த தரப்பினருக்கு இல்லை. அந்த திரைப்படத்தை பற்றி என்னால் அவ்வளவுதான் சொல்லமுடியும்".

முழு வீடியோவின் லிங்க் இதோ
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism