Published:Updated:

மல்லாங்கிணறு சுமதி தமிழச்சியானது இப்படித்தான்!- பர்வீன் சுல்தானா நேர்காணலில் தமிழச்சி தங்கபாண்டியன்

பேராசிரியர்.தமிழச்சி தங்கபாண்டியன்
News
பேராசிரியர்.தமிழச்சி தங்கபாண்டியன்

ஒரு தமிழ்ப் பெண்ணாக தமிழைத் தாய் மொழியாகப் பேசுவதில் பெருமை உடைய எனக்கு பின்னாட்களில் என் எழுத்திற்கென்று புனைபெயர் வேண்டும் என்ற எண்ணம் எழுகிறது.

ஆனந்த விகடன் யூடியூப் சேனலுக்காக பேச்சாளர், கல்வியாளர், எழுத்தாளர் என பன்முகம் கொண்ட பேராசிரியை பர்வீன் சுல்தானா, பல்துறை ஆளுமைகளைச் சந்தித்து உரையாடி வருகிறார். ‘கதைப்போமா with பர்வீன் சுல்தானா’ என்ற பெயரிலான அந்த நிகழ்வில் திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர்.தமிழச்சி தங்கபாண்டியனை சந்தித்து அண்மையில் உரையாடினார்.

பேராசிரியர்.தமிழச்சி தங்கபாண்டியன்
பேராசிரியர்.தமிழச்சி தங்கபாண்டியன்

நீண்ட அந்த உரையாடலில் இருந்து சில துளிகள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நீங்கள் ஒரு ஆங்கில பேராசிரியர். ஆனால் உங்களின் பெயரோ தமிழச்சி. இது எப்படி?

திராவிட இயக்கப் பின்புலமும், ஆசிரியர்களாக பணிபுரிந்த என் பெற்றோர்களால் ஏற்பட்ட தமிழ் இலக்கிய சூழல் ஆகிய இரண்டையும் இதற்கான காரணங்களாகக் கூறுவேன். தென் தமிழ்நாட்டின் கடைக்கோடியில் மல்லாங்கிணறு என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்த பெண் நான். தந்தை பெரியார்மீது தீவிர பற்றுதல் கொண்டவர் என் தந்தை. ஒரு தமிழ்ப் பெண்ணாக தமிழைத் தாய் மொழியாகப் பேசுவதில் பெருமை உடைய எனக்கு பின்னாட்களில் என் எழுத்திற்கென்று புனைபெயர் வேண்டும் என்ற எண்ணம் எழுகிறது. கலைஞர் கைதாகி சிறையில் இருந்தநேரத்தில் ‘எழுதுகோலை எடு தலைவா’ என்ற கவிதை ஒன்றை எழுதினேன். அக்கவிதையை ஒரு புனைபெயரில் வெளியிடலாம் என்று எனக்கு தமிழச்சி என்னும் பெயரினை முதன்முதலில் வைக்கிறார் அவர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘ நீங்கள் தமிழச்சி என்று பெயர் வைத்திருக்கிறீர்கள், அப்படியானால் நாங்கள் தமிழச்சி இல்லையா?’ என்று என்னிடம் நிறைய பேர் கேட்பதுண்டு. அது ஒரு எளிய கிராமத்து தமிழ் பெயர். எனவே அதை தாராளமாக வைத்துக்கொள்ளுங்கள் என்று நான் சொல்வேன். ஒரு கிராமத்து தமிழ்ப் பெண் என்ற அடையாளத்தோடு என்னை தமிழச்சி என்று அழகாக அழைத்தார் தலைவர்.

பேராசிரியர்.தமிழச்சி தங்கபாண்டியன்
பேராசிரியர்.தமிழச்சி தங்கபாண்டியன்

பின்னர் அரசியலில் இளைஞர் அணி மாநாட்டில் கொடி ஏற்றியபோது தங்கபாண்டியன் என என் தந்தை பெயரையும் பின்னால் சேர்த்துக்கொண்டேன். இப்படித்தான் சுமதி என்று என் அப்பா வைத்த பெயர் தமிழச்சி தங்கபாண்டியன் என்றானது.

பெண் என்பவள் சர்தேச அளவில் தனித்துவிடப்பட்டவளாக இருக்கிறாள். பெண் என்று வந்துவிட்டால் நாடு, மொழி என்று வேறு எதற்காவதும் நீங்கள் விட்டுக்கொடுத்ததில்லை. பெண்ணை பற்றிய உங்களின் புரிதலைக் கூறுங்கள்.

உலகின் எந்த மூலையைச் சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் அவளை நான் ஒரு வனப்பேச்சியாகவே பார்ப்பேன். எதற்குள்ளும் அடங்காத கட்டற்ற சுதந்திரத்தின் குறியீடாக அவள் இருக்கவேண்டும் என்பதே என் ஆசை. பெண் என்பவள் பிறப்பதில்லை, அவள் உருவாக்கப்படுகிறாள். ஏனென்றால் ஒரு பெண் தான் பிறந்த பிறகு இப்படித்தான் நடக்கவேண்டும், அப்படித்தான் உட்காரவேண்டும் என்று அந்தந்த நாடுகளுக்கேற்றவாறு பண்பாட்டுத் திணிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது.

உதாரணத்திற்கு பொதுவாழ்க்கைக்கு வரும் எந்த ஆணிடமும் ‘நீங்கள் எப்படி குடும்பத்தையும் பொதுப்பணியையும் ஒரே நேரத்தில் கவனிக்கிறீர்கள் ’ என்று யாரும் கேட்பதில்லை. ஆனால் ஒரு பெண்ணிடம் கேட்பார்கள். “நீங்கள் என்ன MP-ஆன பிறகு விதவிதமான வாட்ச் அணிகிறீர்கள், பூ வைத்து கொள்கிறீர்கள்” என்று என்னிடம் பலரும் கேட்பதுண்டு. இவ்வாறு ஒரு சிறிய விஷயத்திலிருந்து தொடங்கி அனைத்திலும் பெண் என்பவள் ஆணிலிருந்து வேறுபட்டவளாகவே பார்க்கப்படுகிறாள்.

உலகின் எந்த மூலையிலிருந்தாலும் சரி தனக்கு பிடித்த ஒன்றை செய்ய ஒரு பெண் இவை அனைத்தையும் உடைத்து வெளியே வர வேண்டும்.

முழு வீடியோ ஆனந்த விகடன் யூடியூப் சேனலில்..!