Published:Updated:

"ஜெயலலிதா நினைத்திருந்தால் எத்தனையோ நல்ல விஷயங்களைச் செய்திருக்கலாம்!" - தமிழச்சி தங்கபாண்டியன்

பேராசிரியர் தமிழச்சி தங்கபாண்டியன்
News
பேராசிரியர் தமிழச்சி தங்கபாண்டியன்

அப்படிப்பட்ட ஒரு அப்பத்தா மாதிரியாகவோ ஒரு வேலு நாச்சியார் கதாபாத்திரத்தில் நடிக்க கூப்பிட்டுருந்தால் நான் நிச்சயம் சென்றிருப்பேன்

ஆனந்த விகடன் யூடியூப் சேனலுக்காக பேச்சாளர், கல்வியாளர், எழுத்தாளர் என பன்முகம் கொண்ட பேராசிரியை பர்வீன் சுல்தானா, பல்துறை ஆளுமைகளைச் சந்தித்து உரையாடி வருகிறார். ‘கதைப்போமா with பர்வீன் சுல்தானா’ நிகழ்ச்சியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் தமிழச்சி தங்கபாண்டியனைச் சந்தித்து அண்மையில் உரையாடினார். நீண்ட அந்த உரையாடலில் இருந்து சில துளிகள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றிய உங்களின் மனப்பதிவு என்ன ? சோனியா காந்தியைப் பற்றியும் கூறுங்கள்.

ஜெயலலிதாவை பற்றி கூறவேண்டும் என்றால் ஒரு நடன மங்கையாக, ஒரு கலைஞராக அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். இன்னும் கூறவேண்டுமென்றால் அவர்கள் மறைந்தபோது நானும் இந்திரகுமாரி அம்மாவும் அவருக்கு மரியாதை செய்துவிட்டு வந்தோம். அப்போது அவரைப் பற்றிய பதிவு ஒன்றைக்கூட பதிவிட்டிருந்தேன். ஒரு பெண்ணாக எதோ ஒரு புள்ளியில் அவருடன் தொடர்புடையவளாகத்தான் என்னை உணர்கிறேன்.

பேராசிரியர். தமிழச்சி தங்கபாண்டியன்
பேராசிரியர். தமிழச்சி தங்கபாண்டியன்

ஆனால் இவ்வளவு திறைமைகளுடைய அவர் எதேச்சதிகாரியாக, ஜனநாயகத்திற்கு புறம்பாக நடந்துகொண்டதற்குப் பதிலாக எத்தனையோ நல்ல விஷயங்களைச் செய்திருக்கலாம் என அவரிடத்தில் எனக்கு பல விமர்சனங்கள் உள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சோனியா காந்தியிடம் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவரின் தைரியமும் உறுதித் தன்மையும் எனக்கு மிகவும் பிடித்த விஷயங்கள். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் மறைவிற்குப் பிறகு மீண்டெழுந்து அக்கட்சியையும் ஆட்சியையும் நிலை நிறுத்திய விஷயமாகட்டும், தான் பிரதமராகாமல் அதற்கு முழு தகுதி உடைய மன்மோகன் சிங்கை அமர வைத்த பெருமிதம் ஆகட்டும்.

பேராசிரியர். தமிழச்சி தங்கபாண்டியன்
பேராசிரியர். தமிழச்சி தங்கபாண்டியன்

அவரின் அச்செயலை நான் அரசியல் என்றும் சொல்லமாட்டேன் தியாகம் என்றும் சொல்லமாட்டேன். ஒரு இந்தியரைத் திருமணம் செய்து கொண்டு இந்நாட்டிற்கு வந்து தன்னை ஒரு முழுமையான இந்தியராக வாழும் அவர் செய்த அச்செயலை நான் பெருமிதமாகவே பார்க்கிறேன்.

நீங்கள் நன்றாக நடனம் ஆடுவீர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், நாடக நடிகையாகவும் உங்களை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். சினிமாவில் நடிக்க வேண்டும் என்று என்றைக்காவது தோன்றியதுண்டா?

சினிமாவில் நடிக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது கிடையாது. ஆனால் மிக உண்மையான சக்தி வாய்ந்த கதாபாத்திரம் குறிப்பாக தென்மேற்கு பருவக்காற்றில் சரண்யா பொண்வண்ணன் ஏற்று நடித்த பெண் பாத்திரம் போன்றவற்றில் நடிக்க வேண்டும் என்று நினைத்ததுண்டு. அவரின் அக்கதாபாத்திரம் என் அப்பத்தாவை எனக்கு நியாபகப்படுத்தியது. என் அப்பத்தாதான் எனக்கு ஓர் முன்மாதிரி என்று சொல்வேன். ஏனென்றால் அப்படி ஒரு உண்மையான பெண் கதாபத்திரத்தை, வாழ்வோடு ஒட்டி நிற்கின்ற பெண்ணை இப்போதுள்ள தமிழ் சூழலில் திரையில் காண்பது அரிது. அப்படிப்பட்ட ஒரு அப்பத்தா மாதிரியாகவோ, ஒரு வேலு நாச்சியார் கதாபாத்திரத்திலோ நடிக்க கூப்பிட்டுருந்தால் நான் நிச்சயம் சென்றிருப்பேன். மத்தபடி திரைக்கதை எழுதுவது, பாடல் மற்றும் வசனம் இயற்றுவதில் தான் எனக்கு ஈடுபாடு.

ஆனால் நாடக அரங்கம் என்று வந்துவிட்டால் அது முற்றிலும் மாறுபட்ட ஒன்று. அங்கே முழுக்க முழுக்க நடிக்க வேண்டும் என்று மட்டுமே ஆசை. ஏனென்றால் அரங்கம் என்பது ஒரு பெண்ணுக்கு ஒரு சுதந்திர உடல்வெளியை கொடுக்கின்ற ஓர் இடம். ஒரு அரங்கத்துக்குள் நீங்கள் சென்று விட்டால் ஆண் உடல் பெண் உடல் என்ற பேதம் எல்லாம் கிடையாது. இதுதான் நாடகத்திற்கான முதல் பயிற்சி. அதில் ஒரு பெண் அனுபவிக்கின்ற சுதந்திரம் என்பது வார்த்தைகளில் அடங்காதது. ஆகவே அரங்கினுள் நடிகையாகவும் சினிமாவில் எழுத்தாளராகவும் இருக்கவே எனக்கு ஆசை.

முழு வீடியோ ஆனந்த விகடன் யூடியூப் சேனலில்..!