Published:Updated:

``பொறுப்பேற்று பறந்துசெல்லும் இளைஞன்..!’’ - நெகிழ்ச்சி கவிதை #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

வெளிநாட்டு வாழ்க்கை குறித்து தன் அனுபவத்தை பகிரும் இளைஞர்..!

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

இளைஞனின் கனவு

றெக்கைமுளைத்த பறவை

இனிதாய்ப் பறக்கும்

எல்லையற்ற வனத்தில்

கவலை ஏதுமின்றி...

பறக்கும் வானில்

ஆயிரம் பறவையுண்டு

ஒவ்வொன்றுக்கும் ஒரு

தனித்துவ முண்டு...

Representational Image
Representational Image
Pixabay

சுதந்திரப் பறவையாய்

பறக்க நினைக்கும்

ஒவ்வொரு இளைஞனுக்கும்

தனித்திறமை யுண்டு...

றெக்கைமுளைத்த பறவையாய்

இளமையோடு பறக்கநினைக்கும்

இளைஞனின் தேடலில் வெளிநாடு

இன்றியமையாத ஒன்று...

`எங்கே மனிதன்..?’ - ஆதங்கக் கவிதை #MyVikatan

முதல் பயணம்

போறயிடம் பத்திரமானு

பொழுது போனபின்னும்

உறங்காம சேதியறிய

காத்திருக்கும் என்தாயி...

ஊறுபோயி இறங்கியதும்

செல்போனில் சேதிசொல்றேன்

ஆறுதலா நீயும்இப்போ

உறங்கு தாயி...

Representational Image
Representational Image
Lee Soo hyun on Unsplash

வானம்பாத்து காத்திருந்த

நாத்துபோல அண்ணாந்து

வானத்தையே பாத்திருக்கும்

வாக்கப்பட்டு வந்தபுள்ள...

மழைபோல சேதிவந்து

சொல்லும் புள்ள நீ

எப்போதும் பத்திரமா

இருக்க என்னெஞ்சுக்குள்ள...

தண்ணீரின் சுவையறிந்த

மாமாவின் மீசைக்கு

கண்ணீரின் சுவையும்

புதிதானதோ நான்

பயணம் சொல்லும்போது...

அத்தையின் பாசம்

வச்சுக்கொடுத்த காசுல

எப்பேதும் வீசும்...

விமான பிரயாணம்

சொந்தபந்தங்களைத் தூரம்விட்டு

சோகங்கள்பேசும் கண்ணீர்விட்டு

கவலையெல்லாம் மறைத்துவிட்டு

கனவைமட்டும் சுமந்துகொண்டு

தடைகளைத்தாண்டி பறப்பதற்கு

தயாராகும் விமானத்தில்

நாமும் பயணிப்போம்...

மேகத்தில் மிதக்கும்

விமானம் போல

நானும் மிதக்கிறேன்

எதிர்பார்ப்புடன்...

Representational Image
Representational Image
Pixabay

மீண்டும் குழந்தையாய்

வயதின் கால்நூற்றாண்டில்

மீண்டும் பிறக்கிறேன்

அந்நிய நாட்டில்...

தவழ நேரமில்லை

நடக்கவே ஆரம்பிக்கிறேன்

புது ரோட்டில்...

என்னைப்போல ஆயிரமாயிரம்

குழந்தைகள் வெவ்வேறு வயதில்

அத்தனை குழந்தைகளும்

ஒன்றிணைந்தோம் தாயின்மொழியில்...

தட்டுத்தடுமாறி பேசுகிறேன்

புரியா புதுமொழியில்

தவறுசெய்தால் ஏசுகிறான்

நான்அறியா அவன்மொழியில்...

தாய்மொழி அருமை

பேச வேண்டிய இடத்தில்

பேசத்தெறிந்த ஊமையாய்

நிற்கும்போது அறிந்தேன்...

Representational Image
Representational Image
Pixabay

முடிவில்லா பயணம்

ஆண்டுபல ஓடுது

அனுபவம் கூடுது

காசுபணம் ஏறுது

குடும்பமும் பெருகுது

இன்பமோ துன்பமோ

செல்போனிலே போகுது...

ஓடும் நீர்கூட

ஓரிடத்தில் சேர்ந்திருக்கும்

மாதத்தில் ஒருநாள்

சந்திரனும் ஓய்வெடுக்கும்...

நாடுவிட்டு நாடுசெல்லும்

பறவைக்கு இளைப்பாற

இடமேதும் உண்டோ...

பொறுப்பேற்று பறந்துசெல்லும்

இளைஞனுக்கு முடிவுற்ற

பயணமேதும் உண்டோ...

- செ.அபு

காரைக்குடி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு