Published:Updated:

நீ என்னவெல்லாம் பண்ணியிருக்கத் தெரியுமா..? - கொரோனா கவிதை #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

கொரோனாவைப் பற்றி அமெரிக்க தமிழர் எழுதிய கவிதை..

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

சாமிக்கும் இங்கே

சங்கடங்கள் நேர்ந்திடிச்சி!

பூட்டாத கதவங்களைப்

பூட்டும்படி ஆயிடிச்சி!

மேகங்களை மறைச்சிருந்த

வேண்டாத புகையெல்லாம்

ஓடியே போயிடிச்சி!

ஒலகம் தூய்மை ஆயிடிச்சி!

விண்ணுக்கும் ராக்கட்

விடத்தெரிஞ்ச மனுஷனுக்கு

மண்ணுக்கு மேலிங்கு

மனுஷங்க சாவுறதை

நிறுத்தத் தெரியவில்லே!

நிலைமையிங்கு சரியில்லே!

ஏழை பணக்காரன்

என்கின்ற பேதமெல்லாம்

கொரோனாக் கிட்டயில்லே!

கும்பிட்டாலும் விடுவதில்லே!

இத்தாலி ஸ்பெயின்

இங்கிலாந்து அமெரிக்காவும்

தோத்துப் போயிடிச்சி!

தோள் கொடுத்திடுச்சி இந்தியா!

வீட்டை விட்டு வெளியிடத்தில்

வீணாகச் சுற்றுவதை

கொரோனா குறைச்சிடுச்சி!

குடும்பத்தை நெருக்கிடிச்சி!

பாட்டுப்பாடி வீட்டுக்குள்ளே

பக்குவமா வாழறதை

பழக்கப் படுத்திடிச்சி!

பலபேரைப் பழக்கிடிச்சி!

நல்ல கெட்ட மனுஷங்களை

நாலுபேரு அறிஞ்சிடவே

கொரோனா உதவிடிச்சி!

கொடூரமாய்ப் பரவிடிச்சி!

அத்தனை விமானங்களும்

ஆங்காங்கே தரையிறங்கிடிச்சி!

மீண்டும் பறந்திடவே

மிகு வேட்கை கொண்டிடுச்சி!

Representational Image
Representational Image
Pixabay

தூணிலும் துரும்பிலும்

துயர் துடைக்கும் கடவுளுண்டு

என்று யாம் படித்ததுண்டு!

இப்பொழுது நீயோயிங்கு

கைப்பிடி சுவர் காகிதப்பைகளிலும்

இருப்பதாயச் சொல்ல

எவரும் அவை தொடுவதில்லை!

அன்றாடம் உழைத்துழைத்து

அயராது வியர்வை சிந்தும்

ஏழைகளை மனதில் வைத்து

இறங்கிவிடு கொரோனாவே!

உந்தன் பெரும்பசிக்கு

உலகின் பல லட்சம் உயிர்

விருந்தாகி விட்ட பின்னும்

விரட்டித் தொடர்தல் முறையில்லை!

பூமியை விட்டு விட்டு

புறப்படு மாற்றுக் கிரகம்!

அங்கேயும் மனிதருண்டா?

ஆராய்ந்து சொல்லிவிடு!

குட் பை! கொரோனாவே!

குவலயத்தை வாழவிடு!

-விஜய்,

மெக்லீன்,அமெரிக்கா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு