Published:Updated:

கண்ணுக்குத் தெரியும் கடவுள்கள்! #MyVikatan

Representational Image
Representational Image

வாசகரின் கொரோனா குறித்த கவிதை...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

நாட்டுக்குள்ளும்

வீட்டுக்குள்ளும்..

உயிர் தின்னும்

அந்த பூதத்தை

நுழையவிடாமல்

தடுத்துக்கொண்டிருக்கும்

வெள்ளுடை பூண்ட

எங்கள் எல்லை சாமிகளே...!

Representational Image
Representational Image

பணக்கார தேசங்கள்

என்று பட்டியலிட்டவர்கள் எல்லாம்

பாதிப்பின் பட்டியலில்

இன்று உச்சியில் இருக்கிறார்கள்..!

நம்மை ஏழை பூமி என்று

ஏளனம் செய்தவர்கள் எல்லாம்

இன்று ஆச்சரியம் அகலா விழிகளுடன்

அசந்து போய்நிற்கின்றார்..!

மருத்துவ உலகமே

இவை எல்லாம்

உங்களின் மகத்தான அர்ப்பணிப்பு..

உங்கள் மனிதகுல அரவணைப்பு..!

இரவு பகலாய்

24 மணி நேரமும்

தேசத்தின்

எல்லா நுழைவாயில்களிலும்

எல்லைப் பாதுகாப்பு படைபோல்

உங்கள்

கொள்ளை நோய் தடுப்பு

பாதுகாப்புப் படை..!

ஸ்டெத்தாஸூம், தெர்மா மீட்டரும் ஏந்திய

எங்கள் மருத்துவ ராணுவமே

உங்களுக்கு ராயல் சல்யூட்..!

Representational Image
Representational Image

பெற்ற பிள்ளையும்

உற்ற உறவும்

ஒதுங்கி நிற்கும்போதெல்லாம்

கவச உடை தரித்து நீளும்

உங்கள் கருணைக் கரங்களுக்கு

எங்கள் கனிவான வணக்கங்கள்..!

தன்னுயிர் பேணா

பிற உயிர் காக்கும்

மருத்துவ உலகமே..!

உங்களின்

தன்னலமற்ற தியாகத்தால்தான்

இங்கு சுடர்விடுகின்றன

பல உயிர்களின் தீபங்கள்..!

மருத்துவம் சொல்லும்

மகத்தான அறிவுரைகளை

மறக்காமல் ஏற்போம்..

ஏனெனில் அவர்களின் வார்த்தைகள்

வரம் பெற்றவை..நம்மை வாழவைப்பவை..!

Representational Image
Representational Image

கொரோனாவுக்குப் பயந்து

கோயில்களுக்கே

பூட்டுப் போடப்பட்டு வரும் நிலையில்

வாசல் கதவுகளை திறந்துவைத்து

வரவேற்று

ஆண்டவன்போல் காத்திருக்கிறது

நம் அரசு மருத்துவமனைகள்..!

Representational Image
Representational Image

இனிமேலாவது ..

நீங்கள் கடந்து செல்லும் வழியில்

எங்கேனும் அரசு மருத்துவமனையின்

சிப்பந்திகளை,

செவிலியர்களை,

மருத்துவர்களை

கண்ணுற நேரிட்டால்

கையெடுத்து வணங்குகள்..!

ஏனெனில் அவர்கள் மட்டுமே

கரோனாவிலிருந்து

நம்மை காக்கும்

நம் கண்ணுக்குத் தெரியும் கடவுள்கள்..!

-பழ.அசோக்குமார்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு