Published:Updated:

`பூமியின் கண்ணீர் மல்கிய கடிதம்!' - நெகிழ்ச்சிக் கவிதை #MyVikatan

Representational Image
Representational Image

பூமி நாள் குறித்து பொதுப்பணித் துறையின் நீர் ஆதார வளர்ச்சிக்குழும துணைத் தலைவர் முனைவர் இரா.இளங்கோவன் பகிர்ந்த கவிதை..

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

பசுமை வாழ்த்துகள்..

மானுடன் ஒருவரிடமிருந்து

சுட்டதே இந்த

பசுமை வாழ்த்துகள்

சொற்றொடர்

நன்றி!

கடிதம் சற்று நீளமானது.

ஆனால் அவசியமானது

ஏனெனில் அது என் `பூமியின் கடிதம்'.

ஒருவகையில் இந்தக் கொரோனாவுடன் தொடர்புள்ளது...

Representational Image
Representational Image

இன்று 22-04-2020 பூமி நாள்

இதுவும் எனக்கு தெரியாது..

மனிதர்களில் சிலர்

நான் வளமாக இருக்க

50 ஆண்டுகளுக்கு

முன் எடுத்த முடிவாம்

பல இலட்சம் கோடி ஆண்டுகள் முன்

எனது பிறப்பு..

என்னுள் உருவான கோடிக்கணக்கான உயிரினங்களில் மனிதரும் ஒன்று

கார்பன் சுழற்சி

நைட்ரஜன் சுழற்சிகளை

செவ்வனே செய்யும்

உயர்ந்த மலைகள்

அடர்ந்த காடுகள்

நீரும் உணவும் தரும்

சலசலக்கும் நீரோடைகள்

மெல்லிசை மிகுந்த ஆறுகள்

நீரியல் சுழற்சி தரும்

அகன்றும் ஆழமும்மிக்க கடல்கள்

Representational Image
Representational Image

இவைகளை பராமரிக்கும்

எனது உயிரினங்களும்

(மனிதர்கள் தவிர)

தாவரங்களுமே

என்றென்றும் என் பலம்..

கடந்த 100 ஆண்டுகளில்

மனிதர்களின் பேராசையால்

இல்லை இல்லை...ஆணவத்தால்

நாடுகளை அடக்க

எல்லைகளைக் கைப்பற்ற

அடிமையாக்க நடந்து வரும்

எண்ணற்ற போர்கள்..

மதங்கள் சாதிகள் தீவிரவாதம்

போட்டி பொறாமை வன்மம் என

நடந்த தாக்குதல்கள்...

நியாயமான வளர்ச்சி என்பதை

வெறிகொண்ட வளர்ச்சியாக மாற்றிய

சில ஆயிரமே ஆன

உலகப் பணக்காரர்களின் போட்டி...

வளங்களைச் சுரண்டுதல்

அழித்தல், மாசுபடுத்துதல்

பூர்வீக உயிரினங்களை

அகற்றி ஆக்கிரமித்தல்.. என

என்னைக் கொத்திக் குதறி வருகிறார்கள்

பிற உயிரினங்கள் என்னிடம் வந்து

கண்ணீர் மல்க மன்றாடுகின்றன...

மனிதர்களின் அக்கிரமங்களை நிறுத்த...

Representational Image
Representational Image

அவ்வப்போது

இவர்களை அடக்க

புயல், சீற்றம், சூறாவளி

சுனாமி, பூகம்பம், நிலச்சரிவு என

தாக்குதல் தொடுத்தேன்

பல லட்ச உயிர்களைக் கொன்றேன்

உடைமைகளை அழித்தேன்

எல்லாம் சில மாதங்களுக்குத்தான்

மீண்டும் மனிதர்கள்

முருங்கை மரத்தில்..

யோசித்தோம் என் சகாக்களுடன்

பொருள்சேர்க்கும் போட்டியில்

ஆயுதங்களின்றிப் பிற வழிகளை

கண்டு அடக்கும் யுத்திகளை

`உயிரி போர்' நடத்த

பல நாடுகள் முயல்வதாக

என் ஒற்றர்கள்மூலம் செய்தி...

எனக்கும் என் பணிகளை

செய்வதில் தடங்கல் பல..

திறன்மேம்பாடு புத்துணர்ச்சி

யோகா தியானம் பயிற்சிகள்

எங்களனைவருக்கும் தேவைப்பட்டன...

தேடினோம்..தேடினோம்...

கண்டறிந்தோம்

சீனாவில் வுகான் நகரில்

நுண்ணுயிர்க் கிருமி

ஆய்வுக் கூடத்தை உடைத்து

வெளி வரச்செய்தோம்..

Representational Image
Representational Image

சீனாவிலும் உலகம் முழுவதும்

லட்சக்கணக்கில்

மனித உயிர்களை மலிவாக

கொடுமையாகக் கொன்றது

கொரோனா வைரஸ்...

என் நுண்கிருமி..

நூறு ஆண்டுகளாகக் கேட்காதவர்கள்

நூறு நாட்களாய் அடங்கி ஒடுங்கி

செயல்களற்ற உலகத்தில் இன்று..

தொழில்கள் முடக்கம்

பயணங்கள் நிறுத்தம்

கேளிக்கைகள் மூடல்

அனைத்துக் கடைகளும்

அடைக்க..

அகன்ற உயர்ந்த அங்காடிகள்

ஆட்களின்றி...

மொத்த உலகமே

தன் இயங்கலை நிறுத்த..

Representational Image
Representational Image

பாவம்தான் அப்பாவி மனிதர்கள்

ஆனால் என்ன செய்ய

இவர்களும் அதி பயங்கர

நுகர்வு, கேளிக்கை என

என் வளங்கள் அழிவதைப்பற்றி

கவலைப்படாதவர்களாகவும்..

தன் சந்ததிகளுக்கானவையே

என் இயற்கை வளங்கள்

என்பதையும் காற்றில் பறக்கவிட்டு

பணம் பணம் சொத்து சொத்து என

திரிந்தவர்கள்தானே...

ஓய்வில் `போதி' கிடைத்திருக்கும்

ஆனால் அன்றாடஉழைப்பாளிகள்

வறியவர்கள் ஆதரவு இல்லாதோர்

அவஸ்தை கஷ்டம்தான்

ஆனால் அவர்கள் தங்களை

எப்படியும் காப்பாற்றிக்கொள்வார்கள்

ஏனெனில் ..

“இழப்பதற்கு எதுவும் இல்லை”

தங்கள் உயிரைத்தவிர

என் உயிரினங்கள் எல்லாம்

ஆனந்த நடனத்தில்

கிறீச் கிறீச் என வட்டமிட்டு

கூட்டமாகப் பறக்கும் பறவைகள்

தெளிந்த தெளிந்த பெரிய சிறிய நதிகளில் ஏரிகளில்

சூரிய ஒளியை தரிசிக்கவும்

தூயக்காற்றை சுவாசிக்கவும்

மேலெழுந்து கர்ணம் போடும்

நீர்வாழ் உயிரினங்கள்..

Representational Image
Representational Image

மாசற்ற அண்டம்

பச்சை போர்த்திய மரங்கள்

மனிதர்கள் இல்லா காடுகளில்

உலா வரும் உயிர்ச்சூழல் காக்கும்

வனவிலங்குகள்..

எல்லாவற்றிக்கும்மேல்

மனிதர்களே

தங்கள் வீடு குடும்பம் உறவுகள் எனக்

கொஞ்சிக் கழிக்கும் காலம்

பொற்காலமே...

எல்லாம் நன்மைக்கே..

ஒன்று இழந்தால் ஒன்று நன்மை

இந்தப் பயிற்சி யோகா

புத்துணர்ச்சிக் காலம் எனக்கும் என்பிற உயிரினங்களுக்கும் வெற்றியே..

இனி மனிதர்கள் வாழ்க்கை..

கொரோனாவை அழிக்க

திரவங்கள் கண்டறியலாம்

ஆரோக்கியமிக்க உணவுகளை உண்டு

Representational Image
Representational Image

எதிர்ப்பு சக்திகளை வளர்க்கலாம்

தன் குழந்தைகளுக்கு என்னைப்பற்றி

அதாங்க அழகான பூமியைப்பற்றி

போதிக்கலாம்

அனைத்து உயிரினங்களும்

உயிர்ச்சூழல் காப்பதில்

ஆற்றும் பங்கை அளவலாவலாம்..

தொழில்கள் இயங்கலாம்

பயணங்கள் இருக்கலாம்

பெரும்கடைகள் காற்று வாங்கலாம்

அவசியமானவை

அத்தியாவசிய நுகர்வுகளைமட்டுமே

நுகரலாம்..

ராசயன மருந்தில்லாத

இயற்கை உழவை அதிகரிக்கலாம்

தங்கள் குழந்தைகளை

பூச்சிகளை, பறவைகளை

யானைகளை, புலிகளை

பூமியை, கடலை, இயற்கையை

படிக்கவும் ஆய்வு செய்யவும்

அனுப்பலாம்...

என்னையும் என் சகாக்களையும்

மதிக்கலாம் ... (பேராசைதான்)

Representational Image
Representational Image

இன்னும் சில வருடங்களுக்கு

கொரோனா குறித்து ஆய்வுகள்

நடக்கலாம்

எப்படியோ

மனிதர்களுக்குக் கெடுதல்செய்து

எனக்குப் புத்துணர்வு பயிற்சி...

மன்னிப்பு கோருகிறேன்

ஒரே செய்திதான்

உயிர்ச்சூழல் உள்ள

ஒரே கோளம் நான் மட்டுமே..

பூமி கோளமும்

என் வளங்களும் மட்டுமே

மனிதர்களை வாழ வைக்கும்

நான் இல்லையேல்

உயிரினங்கள் இல்லை

மனிதர்களும் இல்லை

நான் வளமுடன் வாழ்ந்தால்

மனிதர்களின் சந்ததிகள்

மகிழ்வுடனும்

ஆரோக்கியத்துடனும் வாழ்வார்கள்

வாழ விடுங்கள்

வாழுங்கள்!

-முனைவர் இரா.இளங்கோவன்

துணைத் தலைவர், நீர் ஆதார வளர்ச்சிக்குழுமம், பொ.ப.து

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு