Published:Updated:

`கொரோனா விளையாடல்..!' - ஜாலிக் கவிதை #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

திருவிளையாடல் படத்தில் நாகேஷ் மற்றும் சிவாஜி அவர்கள் பேசும் வசனங்களை, கொரோனா காலத்துக்கு ஏற்ற மாதிரி மாற்றியிருக்கிறார் நம் வாசகர்..

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

பிரிக்க முடியாதது...

போலீசும் லத்தியும்

பிரியக் கூடாதது

மூக்கும் மாஸ்க்கும்

சேர்ந்தே இருப்பது

இளைஞர்களும் சுத்துவதும்

சேராது இருப்பது

மக்களும் விதிகளும்

பார்க்கக் கூடாதது

கும்பலும் கும்மாளமும்

பார்க்கக் கூடியது

சட்டமும் வட்டமும்

Representational Image
Representational Image

வரக்கூடாதது

காய்ச்சலும் இருமலும்

வரக்கூடியது

போண்டாவும் குலோப்ஜாமும்

போகக்கூடாதது

வெளியவும் சுற்றவும்

போகக் கூடியது

கிச்சனும் பாத்ரூமும்

செய்யக்கூடாதது

கை குலுக்குவதும் கட்டிப்பிடிப்பதும்

செய்யக்கூடியது

கை கழுவுவதும் வீட்டிலிருப்பதும்

ஆடக்கூடாதது

போலீஸிடம் நாடகம்

ஆடக்கூடியது

சீட்டும் தாயமும்

போடக்கூடாதது

தோப்புக்கரணம்

போடக் கூடியது

மாஸ்க்

Representational Image
Representational Image

கனவில்

பிரியாணி

நனவில்

தக்காளி சாதம்

வீட்டிற்குள்ளே

தண்டனை

வெளியே

மரணம்.

-அசோக் குமார்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு