Published:Updated:

புலம்பெயர்! - லாக்டெளன் கவிதை #MyVikatan

Representational Image
Representational Image ( Credits : ஓவியர் தமிழேந்தி )

புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் நோய் பிடித்தவனின் இரவு குறித்த வாசகரின் கவிதைகள்.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

புலம்பெயர்!

எதிர் காலத்தை

எதிர் நோக்கும்

ஏழைத் தந்தை

இந்த நிமிடம்

பசிக்கு

எது கிடைக்கும்

என்ற ஏக்கத்தில்

குழந்தை!

`சொந்த ஊர் திரும்ப ஏன் இவ்வளவு ஆர்வம்?' -புலம்பெயர் தொழிலாளியின் வேதனைப் பகிர்வு #MyVikatan
Representational Image
Representational Image
Pixabay

நோய் பிடித்தவனின் இரவு!

இரவு கடத்த

இயலாமல்

சூனியத்தோடு உறவாடி

சுயநினைவு மயங்கி

கனவுகள் எல்லாம்

கலங்கி கலைந்து

கரிய உருவம்

கானல்நீரில் நீந்திவர

அகண்ட பாலையில்

அனர்த்த உணர்வோடு

தகிக்கும் தாகத்தோடு

தடுமாறும் கால்கள்

வலி துடிக்க

விழித்தபோது

உடல் திரும்ப

உழன்று தோற்று

முட்டிக்கொண்ட வந்த

மூத்திரத்தை அடக்கி

விடியட்டும் என்று

விழி மூடி

இருளுக்குள் மூழ்க

நினைக்கும்

நோய் பிடித்தவனின்

நீளும் நெடிய இரவு

நரகத்தைவிட கொடியது

- செல்வின். A.J

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு